Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்க சகல மட்டங்களிலும் நடவடிக்கை! – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்க சகல மட்டங்களிலும் நடவடிக்கை! – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார். 
[Thursday, 2014-02-13 07:59:11]
nimal-130214-150.jpg

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கு சகல மட்டங்களிலும் பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு ஜெனீவா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:-

  

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. நாம் வெற்றியீட்டுவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மட்டங்களில் அவற்றை முன்னெடுத்து வருகிறோம். இது மிகவும் உணர்வுபூர்வமான விவகாரமாகும். இலங்கையை வெல்ல வைப்பதற்கு பாரிய அளவிலான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது முயற்சியின் பலன் எதிர்காலத்தில் தெளிவாக தெரிவும். ஜெனீவா மனிதஉரிமை மாநாட்டின் பாரதூரத்தை நாம் உணர்ந்தே செயற்பட்டு வருகிறோம்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்தி குறித்தும் அதற்கு உதவும் இலங்கை தரப்பினர் குறித்தும் தெளிவாக அறிந்தே எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, எமக்கு எதிரான போலி பிரசாரங்களுக்கு பதில் வழங்கவும் பல்வேறு மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜெனீவா விவகாரத்தை ஒதுக்கி வைத்து செயற்படாமல் ஒருங்கிணைந்த முன்னெடுப்பாக தேவையான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அமைச்சர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பேச்சு நடத்தி வருவதற்கு மேலதிகமாக எமது நிலைப்பாட்டையும் எமது தரப்பு நியாயங்களையும் உரியமுறையில் சர்வதேச சமூகத்துக்கு முன்வைத்து வருகிறோம்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளுமாறு கோருவதற்கு முன்னர் தமது நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றியும் தாம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்த குற்றச் செயல்கள் குறித்தும் தான் அமெரிக்காவும் பிரிட்டனும் விசாரணை நடத்த வேண்டும். வேறு நோக்கங்களுக்காகவே இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படுகிறது. எமது நாட்டை ஸ்தம்பிதமடையச் செய்யும் முயற்சிகளை ஏற்க முடியாது. இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்ற கருத்தை மாற்றி உண்மை நிலையை உணர்த்துவதற்கு ஆவண செய்துள்ளோம்.

வட மாகாண தீர்மானத்தினால் இலங்கைக்கு புதிதாக எந்த அழுத்தமும் ஏற்படாது. தமிழ் டயஸ்போராக் குழுக்களே வட மாகாண சபையை ஆட்டுவிக்கிறது. வடபகுதி மக்கள் எம்முடனே பேச முன்வரவேண்டும். தந்தை இங்கிருக்க வேறு நாட்டிலுள்ள சிறிய தந்தையுடன் பேசுவது உகந்ததல்ல. வட மாகாண சபையை அழிப்பதற்கே இவர்கள் முயல்கின்றனர்.வட மாகாண சபையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. நாம் சமாதானத்தின் கரங்களை நீட்டுகையில், அவர்கள் கையை கடித்து விடுகிறார்கள் என்றார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103525&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.