Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் அனந்தி – சுரேஸ், சுமந்திரனுடன் இணைந்து சந்திப்புகளை தொடங்கினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ananthy-geneva.jpg

ஜெனிவா சென்றுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

வடக்கு மாகாணசபையின் ஒப்புதலுடன், அனந்தி சசிதரன், நேற்றுமுன்தினம் திடீரென ஜெனிவா சென்றுள்ளார். 

அவர் நேற்று ஜெனிவாவில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார். 

வடக்கில் காணாமற்போனவர்களின் விவகாரத்தை அடிப்படையாக கொண்டே அனந்தியின் கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. 

தனது கணவன் உள்ளிட்ட காணாமற்போனவர்கள் தொடர்பான சான்றுகள் அடங்கிய ஆவணங்களையும் அவர் ஜெனிவாவில் சமர்ப்பித்துள்ளார். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுகளின் பக்க நிகழ்வாகவே, அனந்தியுடன் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர். 

ஜெனிவாவில் உள்ள பல்வேறு அமைப்புகளுடனும், அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் முடியும் வரை ஜெனிவாவில் தங்கியிருப்பார் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தாம் ஜெனிவா செல்லப் போவதில்லை என்று கூறியுள்ளார் .

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று அடுத்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெனிவா செல்லவுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140214109964

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.