Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் கடத்தப்பட்டு, கருணா குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஊடகவியலாளர்! – ஆணைக்குழு முன் சாட்சியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் கடத்தப்பட்டு, கருணா குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஊடகவியலாளர்! – ஆணைக்குழு முன் சாட்சியம். 
[Friday, 2014-02-14 17:07:38]
selvadeepan-140214-150.jpg

வெள்ளவாயப் பகுதியில் வங்கி ஒன்றுக்கு பணப்பரிமாற்றம் செய்து விட்டு புத்தள வீதி ஊடாகப் பயணித்த போது, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தனது சகோதரன் சிவஞானம் பார்த்தீபன் இன்று வரை எங்கு உள்ளார் என்று தெரியாமல், தமது குடும்பம் தேடி அலைவதாக தினக்குரல் ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் சாட்சியம் அளித்துள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த அவர்-

  

மொனராகலை மாவட்டம் வெள்ளவாய பகுதியில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய எனது சகோதரன் 2008.08.21 திகதி காணாமல் போனார். அவர் நன்றாக சிங்களம் பேசக்கூடியவர். பலவருடங்களாக சிங்கள மக்களுடன் அதிகமாக பழகி வாழ்ந்த நிலையில் தான் தமிழ் இளைஞர் என்ற காரணத்துக்காக அண்ணா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை காணாமல் போயுள்ளார்.

அதேபோன்று என்னையும் வெள்ளவாயப் பகுதியில் வைத்து 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி வெள்ளைவானில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதமுனையில் கடத்திச் சென்றனர். அன்று அதிகாலை 3 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா அம்மானின் ஆயுதக் குழுவிடம் ஒப்படைத்தனர். அப்போது இனியபாரதி என்பவரே அக் குழுவிற்கு தலைமை தாங்கியவர். கடத்திச் சென்று சங்கிலியால் இருள்சூழ்ந்த இடத்தில் கட்டி வைத்தனர். பின் இனியபாரதி என்ற ஆயுததாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் உறுப்பினராக பணியாற்றியதாக கூறியே அவர்கள் விசாரணையை மேற்கொண்டனர். இவ்வாறு பல சித்திரவதைகளை மேற்கொண்டனர். 15 தினங்களுக்கு ஒரு தடவை குளிக்க அழைத்துச் செல்வரர்கள். அதுவும் கண்கள் கட்டப்பட்டு. 10 தினங்களுக்கு ஒரு தடவை விசாரணை என்ற பெயரில் அடி, உதைகளுடன் சித்திரவதைகள் இடம்பெறும். 79 ஆவது நாள் பல இலட்சம் ரூபா பணத்தை எனது உறவினர்களிடம் பெற்ற பின் பொலநறுவை ரயில்வே ஸ்ரேசனில் இரவு 8 மணியளவில் கண்கள் கட்டப்பட்டு விடுவித்தனர்.

எனது சகோதரன் காணாமற்போன பின் எமது குடும்பம் இன்றுவரை எதுவிதமான நன்மை காரியங்களுக்கும் செல்வதில்லை. எனது அம்மா தினந்தினம் எனது அண்ணாவை நினைத்து மன நோயாளி போன்று புலம்பி வருகின்றார். இன்று எமது குடும்ப வாழ்க்கையே தொலைத்துவிட்டு வேதனைகளுடனும் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறு கடத்தப்பட்டு காணாமற் போனவர்கள் யார்? தமிழ் இளைஞர் என்ற ஒரே காரணம் எங்களைப் போன்று எத்தனை அப்பாவிகள் பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகள் அனுபவித்து வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் இன்று எவ்வாறான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்ற வேதனை நான் அறிவேன்.

எனவே இந்த அரசாங்கம் சிறைகளில் வாடும் தமிழ் அப்பாவி இளைஞர், யுவதிகளை உடனடியாக பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். ஆதற்கு காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவ்வாறு காலத்திற்கு காலம் விசாரணை என்ற பெயரில் வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்துவரும் எங்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

நானும் சகோதரனும் கடத்தப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பாக யாழ் மனித உரிமை ஆணைக்குழு, வெள்ளவாய, புத்தல பொலிஸ் நிலையங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசியற் கட்சிகள் போன்ற அமைப்புக்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் இன்றுவரை எதுவிதமான தகவல்களையோ அல்லது நன்மைகளையோ எமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்தும் எமது வாழ்க்கை இருள் சூழ்ந்த நிலையில் வேதனைகளுடன் பல அச்சுறுத்தல்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம் என அவர் காணாமற் போனோரை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழு முன் சுட்டிக்காட்டினார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103613&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.