Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

!!!சயனைடு!!!

Featured Replies

!!!சயனைடு!!! இப்படம் கன்னடத்தில் வெளியாகி சக்கைப் போடு போடுகிறதாம்.... தமிழில் விரைவில் வெளியாக உள்ளது.

சிவராசன், சுபாவின் இறுதி நாட்களை சித்தரிக்கும் திரைப்படம்

20060903170901cyanidemovie_316.jpg

இப்படம் முதலில் கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டது

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படும் சிவராசன், சுபா மற்றும் அவர்களது சகாக்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் சயனைட் எனும் புதிய தமிழ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பாடல்கள், மரத்தைச் சுற்றும் காதலர்கள், ஒரேயடியில் பலரை அடித்து வீழ்த்தும் கதாநாயகன், பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் இவையெல்லாம் இல்லாமலேயே ஒரு திரைப்படத்தை துணிச்சலாக தயாரித்து வெளியிடுகிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ரமேஷ். முதலில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டது சயனைட்.

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது சென்னை திரைப்படக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரமேஷ் அப்போது நடந்த பல்வேறு பரபரப்புக் காட்சிகளை நேரில் பார்த்திருககிறார். பெங்களூரில் சிவராசன் குழுவினரின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது அவரது ஆவலை மேலும் தூண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, கொலையாளிகளுககு புகலிடம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலையான ரங்கநாத் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்கிறார் ரமேஷ்.

ராஜீவ் கொலையுண்ட சில மாதங்களிலேயே தமிழ் திரைப்பட இயக்குநர் செல்வமணி, அக்கொலையினை மையமாக வைத்து தயாரித்த குற்றப்பத்திரிகை என்ற படம் இன்னமும் காங்கிரஸ்காரர்கள், சென்சார், நீதிமன்றங்கள் என்று உதைபந்தாக உருண்டுகொண்டிருக்கிறது, வெளியான பாடில்லை.

இந்நிலையிலேயே கன்னடத்தில் மிக கவனமாக தயாரித்து, அனைவரும் பார்கக அனுமதிக்கும் யூ சான்றிதழ் பெற்று திரையிட்டு கர்நாடக மாநிலத்தில் பரவலான வரவேற்பை பெற்றிருப்பதன் பின்னணியிலேயே மொழி மாற்றம் செய்யப்படுகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவரான கார்த்திகேயனின் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவரான நாசர்.

அவர் சயனைட் எவரையும் ஏற்றவோ, தூற்றவோ இல்லை, இது ஒரு ஆவணப்படம் என்கிறார்.

கத்திமேல் நடக்கும் சாகசத்தை இயககுநர் ரமேஷ் சரியாகவே செய்திருப்பதாகத்தான் பலரும் கருதுகின்றனர்.

-பீபீசீ தமிழ்

20060903181754cyanidemovie_416.jpg

சயனைட் அறிமுகம் ஒலி வடிவில்

சயனைட் எவரையும் ஏற்றவோ,

தூற்றவோ இல்லை, இது ஒரு ஆவணப்படம்

- நாசர்.

828200682923PMcynide3.jpg

ஒரு படம்தான் சுட முடிஞ்சுது...!

சுபாவாக நடித்த மாளவிகா கல்கி பேட்டியில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறியிருக்கிறார்.... எப்படித்தான் இவரை அந்த கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களோ?

:shock: :shock:

தீவிரவாதிகள் எனும் சொற்பதம் அவ்வளவு கெடுதலானது அல்ல... பயங்கரவாதிகள் எண்று சொல்லாத போது...!

கொள்கையில் தீவிரமாக இருந்த பெரியார் கூட ஆயுதம் ஏந்தாவிட்டாலும் தீவிரவாதியாக பலராலும் வர்ணிக்கப்பட்டவர்...!

தீவிரவாதி என்ற சொல்லுக்கும் போராளி என்றச் சொல்லுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.... நாங்கள் பெரியாரை சமூகப் போராளி என்றே இன்றுவரை குறிப்பிடுகிறோம்.....

பெரியார் சமூக போராளிதான் ஆவாலும் அவரின் சிரத்தையும் தீவிரமும் அவரை பிடிக்காதவர்களால் அப்படி சொல்ல வைத்து இருக்கிறது... எங்களுக்கு அவரை பிடிக்கும் என்பதால் அப்படி எல்லாம் சொல்ல முடிவதில்லை...!

பெரியாரை பிடிக்காதவர்களின் ஆக்கங்களின் அவரை பற்றிய வாதங்களில் அவரை ஒரு கொலைகாறன் றேஞ்சுக்கு வர்ணிப்பதை கண்டு இருக்கின்றேன்... ஏதோ அவர்களின் திருப்திக்காக செய்கிறார்கள் எண்றுவிட்டு விடவேண்டியதுதான்...!

நன்றி....

ஒரு ஈழத்தமிழருக்கு பெரியார் பற்றிய புரிதல் இந்த அளவுக்கு இருப்பது குறித்து மகிழ்ச்சி.....

பெரியாரைப் பொறுத்தவரை முற்பட்ட சமூகத்தில் பிறந்து அந்த சமூகத்திற்கு எதிராகவே ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடினார்... அது தான் அவரது சிறப்பு....

சுபாவாக நடித்த மாளவிகா கல்கி பேட்டியில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறியிருக்கிறார்.... எப்படித்தான் இவரை அந்த கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களோ?

இதில் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை லக்கிலுக்.

நீங்கள் இந்தப் படத்தில் ஒரு தீவிரவாதியாக நடிக்கிறீர்கள் என்று இயக்குனர் மாளவிகாவிடம் கதை சொல்லும் போது சொல்லியிருக்கலாம்.

அதே பாணியில் அவர் பேட்டியிலும் கூறியிருக்கலாம்!?

அப்படிப் பார்த்தால் கதாநாயகனாக தமிழகத்தில் நடிப்பவர்கள் எல்லோரும்

அப்படி வாழ்பவர்களாக இருக்க வேண்டும்?

வில்லனாக நடிக்கிறேன் என்றால்

அவர் நிஜத்தில் வில்லன் என்று அர்த்தமல்ல.

உதாரணத்துக்கு நம்பியார்!

இது கூட புரியாம

என்னா லக்கிலுக்? :D

நன்றி....

ஒரு ஈழத்தமிழருக்கு பெரியார் பற்றிய புரிதல் இந்த அளவுக்கு இருப்பது குறித்து மகிழ்ச்சி.....

பெரியாரைப் பொறுத்தவரை முற்பட்ட சமூகத்தில் பிறந்து அந்த சமூகத்திற்கு எதிராகவே ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடினார்... அது தான் அவரது சிறப்பு....

இலங்கையில் பெரியார் கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்!

நல்ல காலம் கட்சிகள் தொடங்கவில்லை!

உதாரணத்துக்கு என் பெரியப்பா டாக்டர் கோவூர்

பெரியாரின் நெருங்கிய நண்பர்.

http://members.tripod.com/~Arumugam/kovoor.htm

http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm

http://www.puzha.com/puzha/selfpublish/1018683478.html

  • தொடங்கியவர்

http://img168.imageshack.us/img168/1544/cyeni24080624js6.jpg%7Boption%7D

சயனைட் எவரையும் ஏற்றவோ, தூற்றவோ இல்லை, இது ஒரு ஆவணப்படம் என்கிறார் நாசர்.

  • தொடங்கியவர்

'cyeni24080624js6.jpg'

'cyeni24080624js6.jpg'

படங்களுக்கு நன்றி tamilmobile

இலங்கையில் பெரியார் கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்!

நல்ல காலம் கட்சிகள் தொடங்கவில்லை!

உதாரணத்துக்கு என் பெரியப்பா டாக்டர் கோவூர்

பெரியாரின் நெருங்கிய நண்பர்.

http://members.tripod.com/~Arumugam/kovoor.htm

http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm

http://www.puzha.com/puzha/selfpublish/1018683478.html

ஆரம்பத்தில இருந்தே பாக்கிறன் யாழ்களத்துக்கை குண்டுகள் வீசுறதில உங்களை விட்டால் யாரும் இல்லை எண்ட நிலைக்கு வந்திட்டுது போல கிடக்கு...

யோசிக்காதேங்கோ.... கோவூர் உங்களின் பெரியப்பா எண்ற செய்திதான்... பெரிய மனோதத்துவ நிபுணர்கள் வரிசையில் இங்கையில் நன்கு அறியப்பட்ட மனிதர்.... எனது அம்மாவுக்கு அவரை நன்கு தெரியும் எண்று கூறுவார்...( அவருக்கு அம்மாவை தெரியுமா எண்டு கேட்டுடாதேங்கோ.. அதை நான் அம்மாவைதான் கேக்க வேணும்... :wink: :lol::lol: )

ஆரம்பத்தில இருந்தே பாக்கிறன் யாழ்களத்துக்கை குண்டுகள் வீசுறதில உங்களை விட்டால் யாரும் இல்லை எண்ட நிலைக்கு வந்திட்டுது போல கிடக்கு...

யோசிக்காதேங்கோ.... கோவூர் உங்களின் பெரியப்பா எண்ற செய்திதான்... பெரிய மனோதத்துவ நிபுணர்கள் வரிசையில் இங்கையில் நன்கு அறியப்பட்ட மனிதர்.... எனது அம்மாவுக்கு அவரை நன்கு தெரியும் எண்று கூறுவார்...( அவருக்கு அம்மாவை தெரியுமா எண்டு கேட்டுடாதேங்கோ.. அதை நான் அம்மாவைதான் கேக்க வேணும்... :wink: :):D )

:D:D:D:D

இதில் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை லக்கிலுக்.

நீங்கள் இந்தப் படத்தில் ஒரு தீவிரவாதியாக நடிக்கிறீர்கள் என்று இயக்குனர் மாளவிகாவிடம் கதை சொல்லும் போது சொல்லியிருக்கலாம்.

அதே பாணியில் அவர் பேட்டியிலும் கூறியிருக்கலாம்!?

அப்படிப் பார்த்தால் கதாநாயகனாக தமிழகத்தில் நடிப்பவர்கள் எல்லோரும்

அப்படி வாழ்பவர்களாக இருக்க வேண்டும்?

வில்லனாக நடிக்கிறேன் என்றால்

அவர் நிஜத்தில் வில்லன் என்று அர்த்தமல்ல.

உதாரணத்துக்கு நம்பியார்!

இது கூட புரியாம

என்னா லக்கிலுக்? :)

அண்ணே!

இது உங்கள் பார்வை.... அந்தப் பேட்டியில் அவர் நான் நடித்தது சுபா கேரக்டர் என்றாலும் பிரபாகரனின் மனநிலையை என் மனதுக்குள் கொண்டு பிரபாகரனாகவே நடித்தேன் என்று கூறியிருக்கிறார்.... இப்பவாவது அவர் சொன்ன கருத்து எவ்வளவு அபத்தமானது என்று புரிகிறதா? :D

என்னைப் பொறுத்தவரை சாதாரணத் திரைப்படங்களில் எந்த கேரக்டர்களில் வேண்டுமானால் எப்படிப்பட்டவர்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம்.... இதுபோன்ற படங்களில் பிரச்சினையை நன்கு உள்வாங்கிக் கொண்டவர்களே நடிக்க வேண்டும்.... மாளவிகா எப்படி நடித்திருக்கிறார் என எனக்குத் தெரியாது.... ஆனாலும் நடித்து முடித்தபின் இதுபோல பேட்டி கொடுத்தது எனக்கு ஏற்புடையது அல்ல....

கற்புநிலை குறித்து சர்ச்சைக்குரிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிப்பது கூட எனக்கு கொஞ்சமும் சம்மதமில்லாதது.... இதுகுறித்து தோழர் திருமா மற்றும் டாக்டர் ஐயா ஆகியோரின் நிலையை நான் வரவேற்கிறேன்.....

லக்கிலுக்

உங்கள மாதிரி நானும் சினிமா என்னண்ணு தெரியாம இருந்த காலத்தில நெனைச்சதுண்டு.

சினிமாவுக்குள்ள வந்ததுக்கப்புறமா நான் என் நிலையை மாத்திக்க வேண்டியதாயிடுச்சு.

நான்

நம்ம எம்.ஜீ.ஆர் ரசிகன்.

இன்னைக்கும்தான்.........

ஒரு ஆள் எப்படி இவ்வளவு பேரை சமாளிக்கிறார்ண்ணு அப்போ பிரமிச்சதுண்டு.

சினிமாவுக்குள்ள வந்ததும் படம் காட்டுறது புரிஞ்சுது.

ரஜனி விஜயகாந் சரத்குமார் விஜய் .................... இப்பிடி எல்லாரும் என்னமா ஜமாய்த்து நீதியை நிலை நாட்டுறாங்கண்ணு படத்தில பாத்திருப்பீங்க.

இது கனவுலக படங்கள்.

பொய்யில மக்கள குசிப்படுத்துறதுக்கு எடுக்கிற படங்கள்.

இதெல்லாம் யதார்த்தமான படங்கள் இல்ல.

இதை நம்பி ஏமாறுறவங்க பாவம்.

கொஞ்சோண்ணு பிளாஸ்பெக்!

பாருங்க.........

இவங்கல்லாம்

கலைஞரை கைது செஞ்சப்போ என்ன செஞ்சாங்கண்ணு?...............

இவங்க எல்லாம் போலீஸ் ஸ்டேசன் கேட்டுக்கு வெளிய மூஞ்சியை தொங்கப் போட்டுக்கிட்டு அழாத குறையா டீவீக்கு பேட்டி கொடுத்தாங்க.

சரிண்ணா

கேட்ட உடைச்சுக்கிட்டு உள்ள போயி

அவ்வளவு போலீசையும் அடிச்சு உதைச்சு

கலைஞரை வெளியில கொண்ணாந்து

அம்மாவை வெளிய தள்ளிட்டு

ஐயாவை சீட்டில அமர வச்சிருக்கணும்.

பலர் வாயே திறக்கல்ல.

இதுதான் இவர்களது உண்மையான பலம்.

நிஜத்தில இவங்க வேறங்க.

நம்ம கெப்டன் விஜயகாந்

மக்கள் துரத்தினப்போ

ஓடியாந்தாரே................நியுஸ் மறந்துட்டீங்களா?

விடுதலைப் புலிகள் தொடர்பாக எனக்குள்ளும் சில கருத்து முரண்பாடுகள் உண்டு.

அதை அவர்களே அறிவார்கள்.

இருந்த போதும்

பிரபாகரன் மேல் மட்டும் எனக்கு அலாதியான ஒரு ஈடுபாடு உண்டு.

என் காலத்தில் என் சமுதாயத்தில் நான் பார்த்த நிஜ வீரன் பிரபாகரன்.

என் மனதில் இருப்பதும் இதுதான்.... குழந்தைப் பருவத்தில் இருந்தே பிரபாகரனின் வீரதீரத்தைச் சொல்லியே என்னை வளர்த்தார்கள்.... அப்படித்தான் என் தலைமுறையே தமிழகத்தில் வளர்ந்தது....

ராஜீவ் மரணத்துக்குப் பிறகு கூட பிரபாகரன் மீது எனக்கு இருக்கும் பிரமிப்பும், ஆச்சரியமும் இம்மியளவு கூட மாறவில்லை....

ஆனாலும் தீவிரவாதிகள் என்று கூறுவதை விட போராளிகள் என்று கூறினால் சரியான பதமாக இருக்கும்.... தீவிரவாதிகள் என்பதை ஆங்கிலத்தில் Terrorists என்றுதானே மொழி பெயர்க்கிறார்கள்.... அதே போராளி என்றால் Freedom Fighters என்கிறார்கள் அல்லவா?

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பட முடிகிறது.

இருந்தாலும் அதற்காக நாம் எல்லோர் மனதிலும்

நாம் விரும்பும் அனைத்தையும் திணிக்க முடியாது இல்லயா லக்கிலுக்.

அதெல்லாம் தானாக ஒரு மனிதனுக்குள்ள வரணும்!

ஐரோப்பாவுக்கு வர்ரதுக்கு முன்ன

எல்லா வெள்ளைக்காரங்களுக்கும் ஆங்கிலம்

தெரிஞ்சிருக்கும் எண்ணுதான் நினைச்சேன்.

அது இங்க வந்த பிறகு மாறிடிச்சு.

அதுக்கு காரணம் நாங்க வாழும் ஐரோப்பாவில

இங்கிலீசை வெறுத்தவங்களைத்தான் ஆரம்பத்தில பாத்தேன்.

ரொம்ப பேருக்கு இங்கிலீசே தெரியல்ல.

ஒருவனை கெட்டவன் என்கிறதை விட

அவன் பரவாயில்லை என்கிறது மேலில்லையா?

என் மனசை ரொம்ப நாளா பாதிக்கிற ஒரு நிகழ்வு

அதை நான் இங்கே பகிர்ந்துக்கலாம்ண்ணு நெனைக்கிறேன்.

இது சரியான இடமாண்ணு கூட தெரியல்ல?

psycho.gif

நான் வேலை செய்யிற இடத்தில

ஒரு இலங்கை தமிழன் வேலை செய்யிறான்.

அவன் வானோலிகளில தன்னை பெரிய அறிவாளி

மனித நேயம் மிக்கவண்ணு காட்டிக்கிறது வழக்கம்.

பாவம்

அதை ரொம்ப பேர் நம்புறாங்க.

வேலை செய்யிற இடத்துல ஜனங்கங்களுக்கு குழி தோண்டுறதில

இவனை மாதிரி ஒருத்தனை என் வாழ்கையிலயே பார்த்ததில்ல.

நல்லவன் மாதிரி தெரியும் ஒரு நஞ்சு.

வேலை செய்யிற இடத்தில காப்பி கொடுக்கிறதும் இவன் வேலைகளில ஒண்ணு!

வேலை செய்யிறவங்களுக்கு இலவசமா காப்பி கொடுக்கணும்ணு எழுதாத மனிதாபிமானமான சட்டம்

ஒண்ணு இருக்கு...........

காப்பி கொடுக்கல்லண்ணு யாரும் தட்டி கேக்க முடியாது.

இவன் வேலை செய்யும் போது

அப்பிடி கொடுக்கிற காப்பியை கொடுக்காம

காப்பி மெசினை நிறுத்தி விடுவான்.

இல்லைண்ணா நிலத்தில கொட்டி விடுவான்.

பலரும் இது பத்தி சொல்லி வேதனைப்படுவாங்க.

நம்ம நாட்டுக்காரன் ஒருத்தன் இப்பிடி பண்ணுறானேண்ணு வெட்கமாயிருக்கும்.

நானும் பலமுறை சொல்லி பாத்துட்டேன்.

இன்னொருத்தன் வேதனைப்படுறதை பார்க்கிறதில ஒரு திருப்திண்ணே நினைக்கிறேன்.

நீ எல்லாம் நம்ம நாட்டில இருந்தா

உன் மக்களுக்கே சாப்பிடக் கொடுக்காம தடுக்கிற முதல் ஆளா நீதான் இருந்திருப்பேன்னு

சொல்லியிருக்கேன்.

நேத்து அவனுக்கு வேண்டிய ஒருவருக்கிட்ட இப்பிடி சொன்னேன்.

"அவன் ஒரு மனநோயாளி.

நல்ல மனநல மருத்துவரா பாத்து உடனடியா தெரபி ஏதாவது செய்யச் சொல்லு"ண்ணு.

இங்க தளத்தில கூட அவருக்கு வேண்டிய ஒரு நண்பர் இருக்கார்.

முடிஞ்சா நான் இணையத்தில எழுதியிருப்பதா சொல்லட்டும்!

ஒண்ணு

அவனா திருந்தணும்.

இல்ல வைத்தியர் உதவியோட திருந்தணும்.

இவங்கள எல்லாம் விட அந்த பொண்ணு எவ்வளவோ மேல் லக்கிலுக்.

சயனைட்' தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ராஜீவ் கொலை தொடர்பான திரைப்படம்

[10 - September - 2006] [Font Size - A - A - A]

-திருவாரூர் கணா-

அரசியல் தலைவர்கள் சிலரின் படுகொலைகளை உலகம் ஒரு போதும் மறக்காது. அமெரிக்க அதிபர்களாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஜோன் எஃப் கென்னடி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் எப்போதுமே நெஞ்சத்தைப் பதற வைக்கும்.

உலக நாட்டுத் தலைவர்களுடனும், ஐ.நா. சபையிலும் ரோஜா நிற முகத்துடன் உரையாற்றிய ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஷ்ரீ பெரும்புதூரில் இரத்தச் சகதியில் முகம் புதைத்து உயிரிழந்து பதினைந்து வருடங்கள் பறந்தோடி விட்டன. தனு என்ற பெண் விடுதலைப் புலியை மனித வெடி குண்டாகப் பயன்படுத்தி இதை நிகழ்த்தியவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு ஒற்றைக் கண் சிவராசன், சுபா மற்றும் உள்ள விடுதலைப் புலிகள் ஒரு லொறி மூலம் பெங்களூர் இந்திரா நகரில் சென்று பதுங்கினர்.

ஆனாலும் அவர்களால் பெங்களூர் பொலிஸிடமிருந்து தப்ப முடியவில்லை. அவர்கள் பதுங்கியிருந்த வீட்டை பொலிஸ் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இனி தப்பிக்க முடியாது என்று நினைத்த கொலையாளிகள் தங்கள் கழுத்திலிருந்த சயனைட் குப்பிகளை விழுங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

இந்த நிஜக் கதையை சினிமாத் தனம் எதுவுமில்லாமல் `சயனைட்' என்ற பெயரில் அப்படியே திரைப்படமாக எடுத்திருக்கிறார் கர்நாடகத்தைச்

சேர்ந்த டைரக்டர் ரமேஷ். இவர், ஏற்கனவே கன்னடத்தில் புது முகங்களை வைத்து `சந்தோஷம்' என்ற பெயரில் படமெடுத்து அவார்ட் தட்டிச் சென்றவர். இப்போது `சயனைட்' படம் கர்நாடகத்தில் ரிலீஸாகி 50 நாட்களுக்கு மேலாக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் இப்போது தமிழிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 25 ஆம் திகதி இப்படம் பத்திரிகையாளர்களுக்கும் சினிமா உலக பிரபலங்களுக்கும் சென்னையில் பிரத்தியேகமாக போட்டுக் காட்டப்பட்டது. கமலஹாசன், தங்கர் பச்சான், சீமான், அமீர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்கள் `சயனைட்'டைப் பார்த்து விட்டு உறைந்து போய்விட்டார்கள். அந்தளவுக்கு நேர்த்தியும் யதார்த்தமும் இழையோட ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியிருக்கிறார் டைரக்டர் ரமேஷ். இப்போது இந்த படத்தின் தமிழ் நாட்டு விநியோக உரிமையைப் பெற பிரபல தயாரிப்பாளர்களிடத்தில் போட்டி நிலவுகிறது.

`குற்றப் பத்திரிகை' என்ற பெயரில் ராஜீவ் காந்தி படுகொலையை அப்போதே சுடச் சுட படமெடுத்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. கடந்த 15 ஆண்டுகளாகப் போராடியும் இன்று வரை அந்தப் படம் குறித்த சர்ச்சை கோர்ட்டில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, `சயனைட்' படத்தை `யு' சேட்டிஃபிகேட்டுடன் ரசிகர்கள் பார்வைக்கு ரமேஷ் கொண்டு வந்திருப்பது ஆச்சர்யமான விடயம் தான். இது எப்படி சாத்தியம் என்று அவரிடமே கேட்டோம்.

"1991 இல் நான் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் `கோஸ்' படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராஜீவ் கொல்லப்பட்டார். இதைக் கேட்டதும் நானும் என் நண்பன் கமலநாதனும் பைக்கை எடுத்துக்கொண்டு ஜி.ஹெச்-சுக்குப் போனோம். ஷ்ரீபெரும்புதூரில் இறந்தவர்களின் சடலங்கள் அலங்கோலமாக அங்கே வைக்கப்படிருந்தன. எங்கும் அழுகுரல்கள், அந்தச் சம்பவம் என்னை ரொம்பவும் பாதித்தது. இதன்பிறகு 90 நாட்கள் கழித்து ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோரை பெங்களூரில் சுட்டுக்கொன்றனர் என்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ரெங்கநாத் என்றும் படித்தபோது, மேலும் அதிர்ச்சி. ஏனென்றால் எனக்கு பத்து வயது இருக்கும்போது என் அண்ணன் வீட்டுக்கு அருகில் மிருதுளா என்ற பெண் வசித்தார். அவரை அப்போது சேலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரெங்கநாத் அங்கிள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த கல்யாணத்துக்குக்கூட நான் போயிருக்கிறேன். எனவே, ரெங்கநாத் அங்கிளை ரொம்ப வருடமா தெரியும். ஜெயிலுக்குப் போன ரெங்கநாத் அங்கிள் 99 இல் விடுதலையானார். அவரிடம் ஷ்ரீபெரும்புதூர் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் குழுவினர் எப்படி பெங்களூர் வந்து செட்டிலானார்கள் என்ற கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதையே சினிமாவாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

அப்போதான் ராஜீவ் காந்தி கொலையை மையப்படுத்தி எடுத்த `குற்றப்பத்திரிகை' படம் எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டிக்கொண்டு கடைசிவரை வரவேயில்லை என்பதையும் யோசித்துப் பார்த்தேன். அதனால், பக்காவாக கதை, திரைக்கதை தயார் செய்துகொண்டு கர்நாடகா சென்சார் போர்ட் சீஃப் ஆபீஸர் சந்திரசேகரிடம் காட்டினேன். அவர் சில தவறுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, குறை சொல்லவில்லை.

அடுத்து, சிவராசன் கேரக்டருக்கு ஆள் தேடினோம். `சர்க்கார்' படத்தில் அமிதாப்பச்சனுக்கு அடியாளாக வரும் ரவிகாளிதான் பொருத்தமான ஆள் என்று தேர்ந்தெடுத்து அவரைத் தொடர்பு கொண்டேன். `ராஜீவை கொன்ற சிவராசன் கரக்டரா, அய்யோ வேணாம். சாமி என்று மறுத்தார். அதன்பின் சேலஞ்சிங்கான கரக்டர் என்று விபரித்த பிறகு ஒப்புக்கொண்டார்.

சிவராசன் முதலில் தங்கியிருந்த ரெங்கநாத் வீட்டில்தான் படத்தை ஷூட் செய்தோம். ஒரு காட்சியில் வாழை மர நிழல் வீட்டில் படும் அதைப்பார்த்த சுபா (மாளவிகா), `நிழல் விழக் கூடாது' அது போராளிகளுக்கு ஆகாது.' என்று டயலாக் பேசுவார். அதுகூட நிஜமாகவே சுபா பேசிய வார்த்தைகள்தான். இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், படத்தில் ரெங்கநாத் கேரக்டரில் நடிப்பவர் சிவராசனிடம் `என்ன இருந்தாலும் நீங்க எங்க பிரதமரைக் கொன்றது தப்பில்லையா?' என தயங்கித் தயங்கிக் கேட்பார். ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, `உங்க மண்ணில் அதைச் செய்ததுதான் தப்பு. அதனால் நீங்கள் எங்கள் மீது கொண்ட மதிப்பையும் இரக்கத்தையும் நாங்கள் இழந்துவிட்டாம், என்று சொல்வான் சிவராசன் கேரக்டர். இது கூட உண்மையான வசனங்கள்தான்.

"சிவராசனை ஹீரோ ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறீர்களே?"

"நம் பிரதமர் ராஜீவ் காந்தியை அவர் படுகொலை செய்தது நூறு வீதம் தப்பான விடயம். அது மன்னிக்கக் கூடிய விடமயல்ல. ஆனால், எந்தவித சலனமும் இல்லாமல் ஒரு நாட்டின் பிரதமரைக் கொலை செய்யும் அளவுக்கு மன உரத்துடன் இருப்பவனின் குணாதிசயம் வியப்பானதுதானே. அதேசமயம், அவர்கள் மண்ணில் அவர்கள் போராடுவதை மதிக்கத்தான் வேண்டும்.

"இலங்கையில் புலிகள், இராணுவம் மோதிக் கொள்ளும் இந்தச் சூழலில் இப்படியொரு படம் தேவையா?"

"இலங்கையில் மீண்டும் இப்படியொரு போர்ச்சூழல் உருவாகும் என்று யார் நினைத்தார்கள்? நான், நான்கைந்து வருடமாவே சிறிது சிறிதாக யோசித்து செய்த ஸ்கிரிப்ட்டைத்தான் படமாக எடுத்திருக்கிறேன்" என்றார்.

http://www.thinakkural.com/news/2006/9/10/...s_page10456.htm

தகவலுக்கு நன்றி தல!

2006070702870101.jpg

director Ramesh

2006070702870102.jpg

Malavika plays Shubha

2006070702870103.jpg

Kempaiah

- Hindu

சயனைட்' தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ராஜீவ் கொலை தொடர்பான திரைப்படம்

திருவாரூர் கணா-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.