Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதிப் புனரமைப்பால் தொல்லை: முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

140307150606_mullaitheevu_protest_agains

வீதிப் புனரமைப்பு வேலைகளால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி வாழ் மக்கள் கூறுகின்றனர்.

 

இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்படுகின்ற சில அபிவிருத்திப் பணிகளால் பொதுமக்களுடைய தேவைகள் நிறைவேறுவதற்கு பதிலாக வசதியீனங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் வீதிப் புனரமைப்பு உட்பட பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் முப்பது வருடங்களாகப் புனரமைக்கப்படாத ஒரு முக்கிய வீதி புனரமைக்கப்பட்டு புதிதான நிர்மாணம் செய்யப்பட்டுள்ள போதிலும், மல்லாவி நகர வர்த்தகர்களுக்கும் பொதுமக்களக்கும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறி வெள்ளியன்று அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.

"மல்லாவி கடைவீதி ஊடான பிரதான வீதி நான்கு நாலரை அடி உயரம் உயத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டிருப்பதனால், கடைகளுக்கு மக்கள் செல்ல முடியாதுள்ளது. கடைவீதிக்கு வருபவர்கள் தங்களுடைய சைக்கிள்கள் உட்பட வாகனங்களை நிறுத்தவும் முடியாது. அதற்கான இடம் கிடையாது. உயர்த்தப்பட்டுள்ள வீதியில் இருந்து கடைகள் பள்ளத்தில் இருப்பதனால், கடைகள் ஒரத்தில் புதிய சிறிய வீதி அமைக்கப்படுகின்றது. இதில் கடைகளுக்குத் தேவையான பொருட்களை வாகனங்களில் கொண்டு சென்று இறக்கவும் முடியாதுள்ளது." என மல்லாவி வர்த்தகர் சங்கத் தலைவர் வேலாயுதபிள்ளை பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

140307150658_mullaitheevu_protest_agains

புனரமைப்பு வேலை நடக்கும் சாலை

இந்த வீதியின் உயரத்தைக் குறைத்து முன்பு இருந்த வீதியின் மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரத்தில் இருவழிப்பாதை அமைத்துத் தரவேண்டும் என்பதே எமது கோரிக்கை என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த வர்த்தகராகிய ஜெகதீஸ்வரன் விஜயலக்சுமி கூறினார்.

இந்த எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் தெரிவித்திருந்த ஆலோசனைகள் அதிகாரிகளினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று வர்த்தகர்கள் பலரும் தெரிவித்தனர்.

இந்த வீதிப் பிரச்சினை குறித்து பதிலளித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், இந்த வீதி அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலேயே இதுபற்றி தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் ஏற்பட்டுள்ள வசதியீனங்கள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்குரிய மாற்று ஒழுங்குகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140307_roadworkprotest.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.