Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் தீவிரமடையும் இராஜதந்திர நகர்வுகள்

Featured Replies

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபு தொடர்பாக மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
un-human-rights-council_1.jpg
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபுக்கு ஆதரவு தேடும் படலங்களும் அதற்கு எதிராக உறுப்பு நாடுகளின் ஆதரவை தேடும் படலங்களும் ஜெனிவாவில் எதிரும் புதிருமாக இடம்பெற்றுவருகின்ற நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
 
இராஜதந்திர நகர்வுகள்
 
அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இலங்கை தரப்பிலும் இராஜதந்திர நகர்வுகள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையி்ல் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வரைபு தொடர்பான இராஜதந்திர நகர்வுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.
 
இந்நிலையிலேயே இன்றைய தினம் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், மெசடோனியா, மொன்டேக்னரோ மற்றும் மொரிஷியஷ் ஆகிய நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபு தொடர்பான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
உறுப்பு நாடுகள் பங்கேற்பு
 
மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரின் உப நிகழ்வாக நடத்தப்படும் இந்தக் கலந்துரையாடலில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணை வரைபு தொடர்பான கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்கவுள்ளன.
 
இலங்கை எதிர்க்கும்
 
குறிப்பாக இந்தக் கலந்துரையாடலில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை அவசியமற்றது என்றும் அது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் கூறவுள்ளனர்.
 
மேலும் பிரிட்டன் உள்ளிட்ட சில மேற்கு நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பான பிரேரணையை வலுப்படுத்துமாறு இந்த உப நிகழ்வில் வாதிடவுள்ளனர் என கூறப்படுகின்றது.
 
வெள்ளிக்கிழமை உப கூட்டம்
 
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை தொடர்பில் ஆராயும் உப கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
 
இந்த கூடடத்தில் கலந்துகொண்டிருந்த கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்திருந்தன.
 
இலங்கைக்கு ஆதரவான நாடுகள்
 
எனினும் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வெனிசூலா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்தன. இது இவ்வாறு இருக்க வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இந்தியப் பிரதிநிதி எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரவிநாத ஆரியசிங்க பிரசன்னம்
 
இலங்கையின் சார்பில் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த இலங்கையின் ஜெனிவாவுக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
குறித்த பிரேரணை வரைபானது இலங்கையின் இறைமை ஒருமைப்பாடு உள்ளிட்டவற்றை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாக பிரேரணை கொண்டுவரப்படவேண்டிய அவசியமில்லை என்றும் ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையானது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் ஏற்கனவே நிராகரித்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
 
சுமந்திரன் ஜெனிவா விஜயம்
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வரைபு தொடர்பான இராஜதந்திர நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று ஜெனிவா பயணமாகியுள்ளார்.
 
ஜெனிவா சென்றுள்ள சுமந்திரன் எம்.பி. அங்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபை வலுப்படுத்தவதற்கு முயற்சிக்கப்போவதாக கூறியுள்ளார்.
 
அமைச்சர் சமரசிங்கவும்ஜெனிவா விரைவு
 
இதேவேளை ஜெனிவாவுக்கான இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமை விவகாரங்கள் குறித்த விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க நேற்று முன்தினம் இரவு ஜெனிவா விரைந்துள்ளார்.
 
அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பல்வேறு வகையான அமர்வுகளில் கலந்துகொண்டு இலங்கையின் சார்பில் உரையாற்றவுள்ளார்
 
அமைச்சர் நிமால் 15 இல் விஜயம்
 
நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வாவும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் 17 ஆம் திகதி ஜெனிவா கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார்.
 
தூதுக்குழுவின் ஏனைய பிரதிநிதிகள்
 
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளதுடன் கூட்டத் தொடர்களில் பங்கேற்றுவருகின்றார். இலங்கை தூதுக்குழுவில் ஜனாதிபதியின் உதவி செயலாளர் சந்திம விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி பாதுமா மபூசா, மேலதிக சொலிசிட்டர்களான ஜயநத ஜயசூரிய மற்றும் ஷவிந்திர பெர்னாண்டோ, பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான ஏ.எச்.எம். டி. நவாஸ் மற்றும் நெரின் ஆர். புல்லே, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் சசிகலா பிரேமவர்தன உள்ளிட்டவர்கள் இடம்பெறுகின்றனர்.
 
இவர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். தூதுக்குழுவில் இடம்பெறுகின்ற பிரதிநிதிகளான அரச உயர்மட்ட அதிகாரிகள் சிலர் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளதுடன் மறறும் சிலர் எதிர்வரும் நாட்களில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளனர்.
 
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் நிமால் சிறிபால டி. சில்வாவும் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 130 ஆவது வருடாந்த மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
நவிபிள்ளையின் வருடாந்த அறிக்கை
 
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணை பொறிமுறையை நிறுவவேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.
 
இலங்கையில் உள்ளக பொறிமுறை தோல்விகண்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணையை பொறிமுறையானது சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று நம்புகின்றேன் எனவும் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டிருந்தார்.
 
பீர்ஸ் - நவிபிள்ளை சந்திப்பு
 
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை வெளிவிவகார அமைச்சரும் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுக்குழுவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடந்த வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
 
விசேடமாக இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் நவநீதம் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இந்த சந்திப்பின்போது தமது அதிருப்தியை அமைச்சர் பீரிஸ் வெளியிட்டுள்ளார் .
 
இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இலங்கை தொடர்பில் மனித உரிமை பேரவை மற்றும் சில நாடுகளின் பொருத்தமற்ற செயற்பாடுகள் நல்லிணக்க செயற்பாடுகளை கடுமையான நிலைக்கு கொண்டுசெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பிரிட்டன் தொடர்ந்து வலியுறுத்தல்
 
அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன மற்றும் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கோரிக்கைக்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் தொடர்ச்சியாக இலங்கை விவகாரம் குறித்து கருத்துக்களை வெளியிட்டுவருகின்றது
 
மன்னிப்புச் சபை
 
மேலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையின் படி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதே மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணை பொறிமுறையை இலங்கையில் நிறுவவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இலங்கை குறித்த பிரேரணை
 
மனித உரிமைப் பேரவையில் இலஙகைக்கு எதிரான மூன்றாவது பிரேரணையை சமர்ப்பித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகத்தன்மைமிக்க சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
 
அத்துடன் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட ஆலோசனையும் தொழில்நுட்ப உதவியும் வழங்கவேண்டும் என்றும் இலங்கையானது பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்தழைப்புடன் செயற்படவேண்டும் என்றும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
விமர்சனங்கள்
 
இந்தப் பிரேரணை வலுவற்றது என்று சில தரப்புக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.