Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘நினைவோடு வழியும் கண்ணீரின் கதைகள்’நூல் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(தமிழ் பெண்கள் அபிவிருத்தி மன்றத்தின் 2014 சரவ்தேச மகளிர்தின வெளியீடு)
 
2009 மே மாதம் முதல் பகுதியில் ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்ட அறிக்கையுடன் முடிவிற்கு வந்தது ஈழத்தமிழரின் முப்பது (30)வருடகால விடுதலைப் போராட்டம்.
 
யுத்தம் முடிவிற்கு வந்ததா?
 
நாட்டிற்குப் போய் 4 நாள் நின்றுவிட்டு றாலும் கணவாயும் சாப்பிட்டு விட்டு கருப்பணியும் கள்ளும் குடித்துவிட்டு 'அங்கு இப்ப பறவாயில்லை' என்று கூறி ஈழமண்ணிற்கு பிரயாணிகளாய் போய் திரும்பிய சிலரின் யாழை மையமாக வைத்து கூறப்படும் இக்கருத்துக்கு அப்பால்; பூதாகரமாக வளர்ந்;து நிற்கும் யுத்தத்தின் நிழல்கள் யுத்தத்தின் எச்சங்கள் கூறும் உண்மைகள் மனிதர் எல்லோரையும் உலுக்கிப்போட வல்லவை என்பதை உரத்துக்கூறும் குமுறல்கோர்வையே 08.03.2014அன்று வெளியாக இருக்கும் 'நினைவோடு வழியும் கண்ணீரின் கதை' என்ற நூல். இந்த நூலின் பிரதியைப் படித்தவன் என்ற வகையிலும் அதனுள் எழுத்துவடிவத்தில் உயிரோடு எழுந்துநிற்கும் பெண்போராளிகளின் உணர்ச்சி குமுறல்களை புரிந்துகொண்டவன் என்ற ரீதியிலும் ஓர் மனித உரிமைச் செயற்பாட்டாளன் என்ற கோணத்திலுமாய் நான் படித்து பரிதவித்து புரிந்துகொண்டதை வைத்து கூறுகிறேன் ஒவ்வொரு தமிழ்மகனும் இன உணர்வாளனும் விசேடமாய் பெண்ணுரிமை வாதிகளும் நிச்சயமாய் படிக்கவேண்டிய ஒரு நூலாகும்.
 
Final_Cover-cmyk3.jpg
 
'நினைவோடு வழியும் கண்ணீரின் கதை' உண்மையில் மே 18 2009 உடன் ஆயுதங்கள் மௌனித்தாலும் யுத்தம் மௌனிக்கவில்லை. முப்பது (30) வருட யுத்தத்தை 'ஆயுதங்களை மௌனிக்கிறோம்' என்ற இரு சொற்களுடன் ஒரு பேளையில் அடைத்து விடலாம் என்று யாரும் நினைத்தால் அது கூ10ரியனை கருக்கலில் இருகை கொண்டு மறைத்துவிடலாம் எனும் கூற்றுக்கு ஒப்பானதாகும்.
 
போர் முடிந்தது எனவே புலம்பெயர ;ஈழத்தழிர்களின் பணிகளும் மௌனிக்கலாம் என்று நினைக்கும்; ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல் இது. ஏனெனில் ஆயுதங்கள் மௌனித்தாலும் களமுற்று கருகியவர்களை புதைத்தாலும் களமுற்றதால் ரணமுற்று வெண்புண்ணின் வடுக்கள் ஆறாமல் போரில் தொலைத்தோரின் சோகங்கள் ஆறாமல் நடைபிணமாய் உலவும் ஆயிரம் ஆயிரம் போரின் எச்சங்களில் ஒரு துளியாக ஒரு குறியாக பெண்போராளிகளின் துயரப்பதிவாக எம்முன் எழுந்து நிற்கிறது இப்பதிவு.
 
சூனியத்தில் கடவுளை தேடுபவன்போல சுமையான உலகில் வாழ்க்கையின் சுகங்களைத் தேடும் அனைவருமே சுகங்களைத் துறந்து ஒரு இனத்தின் விடுதலைச் சுமையைத் தோழில் வலிந்து ஏற்றிக் களமாடி தளர்ந்த இளம் பெண்களின் மற்றும் தாய்மார்களின்; உணர்வோட்டங்கள் பலரின் படுத்துவிட்ட பச்சாத்தாபங்களை பிச்சுக் கிழறி புரிதலிற்கு வெளிச்சம்போட வல்லன.
 
மேலை நாட்டு முக்கிய சதுக்கங்களிலும் நுழைவாயில்களிலும் உயர்ந்து பரந்து கிடந்த புலிக்ககொடிகள் படுத்தத்துடன் எங்கள் தாயகத்தின் பணிகளும் ஓய்ந்துவிட்டன என்று நினைக்கும் ஒவ்வொரு தமிழ் உணர்வாளனுக்கும் ' நீ படுத்துவிட்டதால் தூங்காது யுத்தம் யுத்தத்தின் எச்சங்களை எதிர்கொண்டு அவை சீரமைக்கப்படாத வரையிலும் யுத்தத்தின் எச்சங்கள் எங்களைத் துரத்திக்கொண்டே இருக்கும் என்ற உண்மையை தங்களது எழுத்துக்களிலும் வரிகளிலும் ரணமும் ரத்தமுமாய் சோகமும் சஞ்சலமுமாய் எடுத்து வியம்புகின்றனர் இந்த நூலின் கதாநாயகிகள்.
 
மண்ணுக்காய் யுத்தம் நடத்தும் முன்பு மனிதம் மத்தியில் புரையேறிக்கிடக்கும் மாற்றுக்கொடுமைகளை வேரறுத்துவிட்டு மண்ணுக்காய் யுத்தம் நடத்துங்கள் என்று கன்னத்தில் அறைந்தாற்போல் கூறும் மாற்றுக்கருத்து கொண்ட கோர்வை இந்நூலாகும்.
 
விடுதலைக்கான போரில் ஆணுடன் தோழுடன் தோழ் நின்று எதிரியை வெல்லப் புறப்பட்ட எம்சகோதரிகள் வாழ்வே சூறையாடப்பட்டு எரிமலைவாய்க்குன்றாய் சிதைந்த பெண்களின் சுட்டெரிக்கும் கேள்விக்குறிகள் இவை. போராட்டத்தை வாழ்க்கையாக்கிக் கொண்ட பெண்களின் வாழ்வே போராட்டமாய் யுத்தமுடிவில் மாறிய உண்மையின் கோரவகள்.
 
தமிழர்கள் யுத்தமுடிவில் முள்வேலிகளின் பின்னே இராணுவச் சித்திரவதைகளின் உள்ளே அவனின் பாலியல் கொடூரஙகளின் உள்ளே சிக்கிய பெண்போராளிகளை கப்பல் கொண்டு வேண்டாம் காருண்யம் கொண்டாவது காக்கத்தவறிய சோகவரலாற்றை மாற்ற புலம் பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் என்பதனை இந்த நூல் கண்ணீரோடு பதிவு செய்துள்ளது.
 

நூலைப்பெற்றுக்கொள்ள தொடர்புகளுக்கு :-

 

Tamil Information Centre

Thulasi

Bridge End Close

Kingston Upon Thames KT2 6PZ

(United Kingdom)

Telephone:  +44 (0)20 8546 1560

Fax:             +44 (0)20 8546 5701

E-mail:       admin.ccd@sangu.org

 
 

Edited by shanthy

நல்லதுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதுங்க.

ஆமால்ல...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.