Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மண்முனை பாலத்திற்கூடாக பெரிய பாதிப்புக்கள் வரவுள்ளன: த.தே.கூ.

Featured Replies

0 COMMENTS

IMG_0339.JPG
 -வடிவேல்-சக்திவேல்

'மண்முனைப் பாலம் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை வைத்துக் கொண்டு எம்மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும். மண்முனை பாலத்திற்கூடாக பாதிப்புக்கள் பெரிதாக வரக் காத்திருக்கின்றது' என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு விஜயம்செய்து அக்கிராம மக்களின் குறைநிறைகளைக் கேட்டறியும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மிகவிரைவில் பாரியதொரு அச்சறுத்தல் எமக்கு வர இருக்கின்றது. எதிர்வரும் ஏப்பரல் மாதம் திறக்கபட இருக்கின்ற படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான இணைப்புப் பாலமான மண்முனைப்பாலம் திறக்கப்படுவதனால் காத்தான்குடி சிலவேளைகளில் படுவான்கரைக்குள் வரலாம் என்ற அச்சம் வந்துள்ளது.

ஏனெனில் தற்போது அரசாங்கத்திலே இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்மார் எமது படுவான்கரைப் பகுதியிலே காணிகளை வாங்குகின்றார்கள். எமது மக்களும் அவர்களுக்கு விற்பனை செய்யும் தொகையை விட பன்மடங்கு காசு வருகின்றதுதானே என நினைத்து அவர்களுக்கு விற்று விடுகின்றார்கள்.

இதனால் எதிர்காலத்தல் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள நேரிடுவது மாத்திரமின்றி ஒருவகையில் எமது இனத்திற்குத் துரோகம் செய்கின்றவர்களாக மாறிவருகின்றோம் என்பதனையும் மறந்து விடக்கூடாது.

அவ்வாறு எமது பிரதேசத்தினுள் வேறு இனத்தவர்கள் நிரந்தரமாக்கப் படுவார்களேயானால் நாளடைவில் எம்மக்கள் மெல்ல மெல்ல வேறு இனத்திற்கு மாறிவிடுவார்கள்.

இவற்றினால் எமது கலை, கலாசாரங்கள் சீரழியும், கால்நடைகள் அதிகளவில் அழிவடையும் எனவே எம்மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவற்றில் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊர்ச் சட்டங்களை உருவாக்கி அமுல்;படுத்துங்கள். இல்லாவிட்டால் நாங்கள் சீரழிந்து போய்விடுவோம். காத்தான்குடியில் ஒரு தமிழ் குடும்பமும் இல்லை. ஏறாவூர் நகரில் ஒரு தமிழ் குடும்பபமும் இல்லை.  அதுபோல் ஓட்டமாவடியில் 112 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தனர். அர்கள் தற்போது அங்கு இல்லை. அவர்கள் தங்களது காணிகளை விற்று விட்டு வெளியேறிவிட்டனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

நான் கௌரவமாக பிச்சை எடுப்பேன்

இதேவேளை, 'இவ்வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளேன். நான் கௌரவமாகப் பிச்சை எடுப்பேன். அவ்வாறு எடுக்கப்படும் பிச்சையில்தான் இவ்வாறாக மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திருக்கின்றோம். இவ்வருடம் அதனை விட அதிகமான விதவைக் குடும்பங்களுக்கு மிளகாய் அரைக்கும் மில், நல்லின பசுமாடுகள், தையல் இயந்திரங்கள் போன்ற வாழ்வதார உதவிகளைப் புரிவதற்கு வெளிநாடுகளில் நான் கௌரவமாக பிச்சை எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

அதுபோல் வறிய மாவணரவ்களின் கற்றலுக்கு உதவுதல், பல்கலைக்கழகங்களில் கற்கும் வறிய மாணவர்களுக்கு உதவுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாட்ட இந்து இளைஞர் அமைப்பானது பல்கலைக்கழகங்களில் கற்கின்ற 79 வறிய மாணவர்களுக்கு மாதாந்தம் உதவி வழங்கி வருகின்றது. எனது தனிப்பட்ட நிதியில் 32 பேருக்கும் உதவி வழங்கி வருகின்றேன். இந்த செயற்பாடுகளை மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளேன்.

எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் செய்யக் கூடிய அனைத்தினையும் செய்யவுள்ளோம். யுத்த சூழல் காரணமாக அங்கவீனமாக்கப் பட்டவர்கர்களில் 40 பேருக்கு கடந்த வருடம் உதவினோம். இவ்வருடம் அதனை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
IMG_0363.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏறாவூர் நகரில் ஒரு தமிழ் குடும்பபமும் இல்லை.

40வருடங்களுக்கு முதல் ஏறாவூரில் ஒரு காளி கோவில் இருந்தது..அது இப்பவும் இருக்கின்றதா? யாராவது அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

40வருடங்களுக்கு முதல் ஏறாவூரில் ஒரு காளி கோவில் இருந்தது..அது இப்பவும் இருக்கின்றதா? யாராவது அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்....

அந்த கோவிலும் முஸ்லீம்களால் அழிக்கப்பட்டு முஸ்லீம் இடமாக மாறியதென நினைவு. 

  • கருத்துக்கள உறவுகள்

90 களில் கிழக்கில் பெருமளவிலான கிராமங்கள் முஸ்லீம் ஊர்காவற்படைகளால் திட்டமிட்ட வகையில் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டு கிராமங்கள் பறிக்கப்பட்டு தமிழர்கள் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம். கிழக்கின் போராளிகள் அதிகம் வடக்கில் இருந்த காலமும் அதுதான்.

அந்தப் போராளிகளின் இரத்த உறவுகள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டும் கிராமங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டும் இருந்த நேரத்தில் தங்களது கோபத்தை யாழ் முஸ்லீம்களில் திருப்பினால் நிலமை விபரீதமாகிவிடும் என்றதை உணர்ந்தே புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள். அன்று யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம்களை வெளியேற்றியது கூட அவர்களைக் காப்பாற்றவே செய்தார்கள்.

கிழக்கில் முஸ்லீம்களால் பறிக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட ஊர்களில் குறிப்பாக சம்மாதுறை இ மீனோடைக்கட்டு எனச் சில கிராமங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் மீனோடைக்கட்டு கிராமம் (மட்டக்களப்பு) முழுமையாக முஸ்லீம்களால் அழிக்கப்பட்டு முஸ்லீம் கிராமமாக மாற்றியது மட்டுமன்றி இந்துக்களின் அடையாளமாயிருந்த மிஞ்சிய ஒரு பிள்ளையார் கோவிலையும் அழித்தார்கள்.

இன்னொரு உதாரணம் :- 1990இல் காரைதீவில் 7இளம் பெண்களுக்கு நிகழ்ந்த ஒரு வரலாற்றுத் துயரத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். காரதீவில் அமைந்த ஒரு மாவீரரின் கல்லறையைச் சுற்றி முஸ்லீம்களால் பிடிக்கப்பட்ட அந்த ஏழு பெண்களும் அந்த மாவீரரின் கல்லறையைச் சுற்றிச் சுற்றி ஓடவைத்து மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்த 7சகோதரிகளின் உடன்பிறந்த சகோதரர்கள் ஆனையிறவுக் களமுனையில் சண்டையில் நின்றார்கள். யாழ்ப்பாணக் களமுனைகளில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த போராளிகள் நின்றார்கள். இப்போராளிகளின் மனநிலமை அன்று எப்படியிருந்திருக்கும் என்பதனை நினைத்துப் பாருங்கள். தனது சகோதரி ஒரு சமூகத்தால் மிகவும் மோசமாக மனித குலமே வெட்கிக்கும் வகையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிச்சாக அந்தக் குடும்பத்திலிருந்து போராட வந்த போராளி நிச்சயம் தனது சகோதரிக்கு நிகழ்ந்த அநீதிக்கு பழிவாங்கத் துடிப்பானா இல்லையா ? ஆனால் எந்தத் தமிழ் போராளியும் அத்தகைய பாலியல் கொடுமையை செய்யவில்லை. இந்தப் பண்பை எவருமே புரிந்து கொள்ளவில்லை. புலியே எதிரியாய் கொள்கையோடிருந்தவர்களாலேயே இத்தகைய வன்முறைகள் கூட இருட்டடிக்கப்பட்டது.

அம்பாறையில் பள்ளக்காடென்ற கிராமம் பற்றி அறிந்திருப்பீர்கள். இக்கிராமத்தில் 1990வரை தமிழ் முஸ்லீம்களே இருந்தார்கள். முஸ்லீம்களுக்கு நிகராக தமிழர்களுக்கு வயல் நிலங்களும் சொத்துக்களும் இருந்தது. 1990இல் முஸ்லீம்கள் இக்கிராமத்திலிருந்து தமிழர்களை அடையாளமின்றத் துரத்தினார்கள். தற்போது இக்கிராமத்தை சிங்களவர்கள் முழுமையாக கைப்பற்றியது மட்டுமன்றி புனிதபிரதேசமாக பிரகடனப்படுத்தி முஸ்லீம்களிடமிருந்து முழுமையாக பறித்துள்ளார்கள். அத்தோடு புத்தவிகாரையிலிருந்து ஒலிக்கிற மணியோசை கேட்கும் தூரம் வரை சிங்களவர்களின் நிலமென்று ஆட்சி செய்கிறார்களே ? இந்தப் பறிப்புக்கு யார் உரிமை கோர முடியும் ?

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் ஒருமுறைதான் வெளியேற்றினார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு நடந்த துயரத்துக்காக புலிகள் மன்னிப்புக் கோரினார்கள் வருந்தினார்கள். ஆனால் எத்தனையோ கொடுமைகளையும் படுகொலைகளையும் செய்து தமிழர்களின் கிராமங்களையும் பறித்த சமூகத்தின் ஒரு பொதுமகனோ அல்லது பள்ளிவாசல் தலைமையோ மூச்சும் காட்டவில்லை. இது மாபெரும் தவறென்று சொல்லவரவில்லை. இப்படித்தான் அந்த சமூக மனநிலைமை இருக்கிறது. மனங்களில் மாற்றங்கள் ஏற்படாதவரை ஒன்றிணைவும் சாத்தியமானதல்ல.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132047

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.