Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 IPL 7 செய்திகளும்... கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

சென்னை அணியின் வெற்றி தொடருமா: மும்பையுடன் இன்று மோதல்
ஏப்ரல் 24, 2014.

 

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வௌிப்படுத்தி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய சென்னை அணி காத்திருக்கிறது. 

    

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை அணி, ‘நடப்பு சாம்பியன்’ மும்பையை எதிர்கொள்கிறது.     

 

பஞ்சாப் அணியிடம் வீழ்ந்த சென்னை அணி, டில்லி, ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்த டுவைன் ஸ்மித் (66, 50 ரன்கள்) இன்றும் அசத்தலாம். இவருக்கு பிரண்டன் மெக்கலம் ஒத்துழைப்பு தந்தால் சிறந்த துவக்கம் கிடைக்கும். ‘மிடில்–ஆர்டரில்’ சுரேஷ் ரெய்னா, டுபிளசி கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். கேப்டன் தோனி அதிரடியாக ரன் சேர்த்தால் நல்லது. ராஜஸ்தானுக்கு எதிராக ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய ரவிந்திர ஜடேஜா இன்றும் கைகொடுக்கலாம்.

 

வேகப்பந்துவீச்சில் ஈஷ்வர் பாண்டே, மோகித் சர்மா, பென் ஹில்பெனாஸ் நம்பிக்கை அளிக்கின்றனர். ராஜஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட் கைப்பற்றிய ரவிந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலம் இன்றும் எடுபடலாம்.  இவருக்கு அஷ்வின் ஒத்துழைப்பு தந்தால் சுழலின் பலம் வலுப்பெறும்.    

 

சாதிப்பாரா ரோகித்: ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி, கோல்கட்டா, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்த சோகத்தில் உள்ளது. மும்பை அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப பேட்டிங், பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த இரண்டு போட்டியிலும் மும்பை அணி சொற்ப ரன்கள் (122, 115 ரன்கள்) மட்டுமே எடுத்தது. மைக்கேல் ஹசி, ஆதித்யா தாரே ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்க வேண்டும். அம்பதி ராயுடுவின் (48, 35 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடரலாம். ‘மிடில்–ஆர்டரில்’ கேப்டன் ரோகித் சர்மா, போலார்டு, கோரி ஆண்டர்சன் அதிரடி காட்டினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

 

வேகப்பந்துவீச்சில் ஜாகிர் கான், லசித் மலிங்கா நம்பிக்கை அளிக்கின்றனர். துல்லியமாக பந்துவீசும் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். பிரக்யான் ஓஜா ரன் வழங்குவதை கட்டுப்படுத்தினால் நல்லது.    

 

இதுவரை...     

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, மும்பை அணிகள் 15 முறை மோதின. இதில் சென்னை 6, மும்பை 9 போட்டிகளில் வெற்றி பெற்றன.

பவுலிங் செய்ய ஆர்வம்

சென்னை அணியின் ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா கூறுகையில்,‘‘ பேட்டிங் செய்வதை விட, பவுலிங் செய்வதையே அதிகம் விரும்புவேன். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் மந்தமாக இருந்தது. தவிர, பந்தும் நன்றாக சுழன்றது. இதனால், சரியான இடத்தில் பவுலிங் செய்து, விக்கெட் வீழ்த்தினேன். இது இன்றும் தொடரும் என, நம்புகிறேன்,’’ என்றார்.

 

100வது போட்டி

ஐ.பி.எல்., அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா (102 போட்டி) முதலிடம் வகிக்கிறார். இவரை அடுத்து சென்னை அணி கேப்டன் தோனி, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தலா 99 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இன்றைய போட்டியின் மூலம், இவர்கள் இருவரும் ஐ.பி.எல்., அங்கில் 100 போட்டியில் விளையாடிய வீரர்கள் என்ற பெருமை பெற காத்திருக்கின்றனர்.

 

கெவின் பீட்டர்சன் வருவாரா     

துபாயில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், டில்லி, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல்., அரங்கில் இவ்விரு அணிகள் இரண்டு முறை மோதின. இரண்டு போட்டியிலும் டில்லி அணி தோல்வி அடைந்தது. பெங்களூருவிடம் தோல்வி அடைந்த டில்லி அணி, கோல்கட்டாவை வீழ்த்தி எழுச்சி கண்டது.

பின், சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மூன்று போட்டியிலும் விளையாடாத கேப்டன் கெவின் பீட்டர்சன் இன்று களமிறங்குவார் எனத் தொிகிறது. இவரது வருகையால் டில்லி அணியின் பேட்டிங் பலமடையும். ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்த ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் அணி இன்று எழுச்சி பெறாவிட்டால், ‘ஹாட்ரிக்’ தோல்வியை தழுவ நேரிடும்.

 

http://sports.dinamalar.com/2014/04/1398350406/ChennaiMumbaiIPLCricket.html

  • Replies 147
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வார்னர் அதிரடி ஆட்டம்: ஐதராபாத் அணி வெற்றி
ஏப்ரல் 25, 2014.

 

துபாய்: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வார்னர் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்., தொடரின் முதல் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று நடந்த இதன் லீக் போட்டியில் ஐதராபாத், டில்லி அணிகள் மோதின. டில்லி அணிக்கு காயத்திலிருந்து மீண்ட கேப்டன் பீட்டர்சன் திரும்பினார். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

 

ஐதராபாத் அணிக்கு தவான் 33 ரன்கள் எடுத்தார். பின் இணைந்த பின்ச், வார்னர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய இருவரும் அரை சதம் கடந்தனர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. பின்ச் (88), வார்னர் (58) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை துரத்திய டில்லி அணிக்கு குயின்டன் (48), முரளி விஜய் (51)  சிறப்பான அடித்தளம் அமைத்தனர். கேப்டன் பீட்டர்சன் (16), தினேஷ் கார்த்திக் (15) நிலைக்கவில்லை. டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் மட்டும் எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398428104/AaronFinchcricket.html

  • தொடங்கியவர்

சென்னை அணி வெற்றி
ஏப்ரல் 24, 2014.

துபாய்: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்.,லீக் போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்., தொடரின் முதல் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

 

மும்பை அணிக்கு மைக்கேல் ஹசி 1 ரன் மட்டும் எடுத்தார். ஆதித்யா (23), கோரி ஆண்டர்சன் (39) ஓரளவு கைகொடுத்தனர். ரோகித் சர்மா (50) அரை சதம் அடித்தார். மோகித் சர்மா வேகத்தில் போலார்டு (12), ராயுடு (1), ஹர்பஜன் சிங் (0) அடுத்தடுத்து வெளியேறினர். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. கவுதம் (6), ஜாகிர் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் 29 ரன்கள் எடுத்தார். பிரண்டன் மெக்கலம் அரை சதம் கடந்தார். ரெய்னா 1 ரன் மட்டும் எடுத்தார். டுபிளசி 20 ரன்களில் கிளம்பினார். சென்னை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2014/04/1398350406/ChennaiMumbaiIPLCricket.html

 

  • தொடங்கியவர்

சென்னைக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி:தொடரும் மும்பை சோகம்
ஏப்ரல் 24, 2014.

 

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி, மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே டில்லி, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த தொடரின் 13வது லீக் போட்டியில், சென்னை அணி, ‘நடப்பு சாம்பியன்’ மும்பையை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

ரோகித் அரைசதம்:

சென்னை அணியின் துடிப்பான பந்துவீச்சில் மும்பை அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. மைக்கேல் ஹசி (1),  ஆதித்யா தாரே (23) நிலைக்கவில்லை. பின் இணைந்த கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த போது ஆண்டர்சன் (39) ‘ரன்–அவுட்’ ஆனார். ஹில்பெனாஸ், ரெய்னா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ரோகித், ஐ.பி.எல்., அரங்கில் 19வது அரைசதம் அடித்தார். இவர், 41 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் அம்பதி ராயுடு  (1), போலார்டு (12), ஹர்பஜன் சிங் (0) அவுட்டானார்கள். ஹில்பெனாஸ் வீசிய கடைசி ஓவரில் ஜாகிர் கான் ஒரு சிக்சர் அடித்தார்.

 

மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. கவுதம் (7), ஜாகிர் கான் (7) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் மோகித் சர்மா 4, ஹில்பெனாஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

நல்ல துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. இவர்கள் மும்பை பந்துவீச்சை சிதறடித்தனர். ஓஜா வீசிய 3வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசிய ஸ்மித், ஜாகிர் கானின் 4வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரண்டன் மெக்கலம், ஜாகிர் (2), கோரி ஆண்டர்சன் (3) பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த போது, ஓஜா ‘சுழலில்’ ஸ்மித் (29) அவுட்டானார்.

 

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (1), ஹர்பஜனிடம் சரணடைந்தார். தொடர்ந்து அசத்திய மெக்கலம், ஐ.பி.எல்., அரங்கில் தனது 7வது அரைசதம் அடித்தார். பின் மெக்கலம், டுபிளசி ஜோடி இணைந்து போராடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த போது, ஹர்பஜன் ‘சுழலில்’ டுபிளசி (20) வெளியேறினார்.

 

சென்னை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரண்டன் மெக்கலம் (71), கேப்டன் தோனி (14) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் ஹர்பஜன் 2, பிரக்யான் ஓஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஏற்கனவே கோல்கட்டா, பெங்களூரு அணிகளிடம் வீழ்ந்த மும்பை அணி, தொடர்ந்து மூன்றாவது தோல்வி பெற்றது.

ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் மோகித் சர்மா வென்றார்.

 

தோனி ‘100’

நேற்று, சென்னை அணி கேப்டன் தோனி, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தங்களது 100வது ஐ.பி.எல்., போட்டியில் விளையாடினர். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். முதலிடத்தில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா (103 போட்டி) உள்ளார்.

* இது, கேப்டனாக தோனியின் 100வது போட்டி. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் 100 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவரை அடுத்து கில்கிறிஸ்ட் (74), காம்பிர் (66) உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/04/1398350406/ChennaiMumbaiIPLCricket.html

  • தொடங்கியவர்

ஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி
ஏப்ரல் 26, 2014.

 

அபுதாபி: பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. அபுதாபி இன்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

பெங்களூரு அணிக்கு தாக்வாலே(0), பார்த்திவ் (1) அடுத்தடுத்து அதிர்ச்சி தந்தனர். ரிச்சர்ட்சன் வேகத்தில் யுவராஜ் (3), டிவிலியர்ஸ் (0) கிளம்பினர். ஸ்டார்க் (18), கேப்டன் கோஹ்லியும் (21) விரைவில் திரும்பினர். மற்றவர்கள் சொதப்ப, பெங்களூரு அணி 14.5 ஓவரில் 70 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகியது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக தாம்பே 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ரகானே 23 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 8 ரன்களில் அவுட்டானார். சாம்சன் (2) நிலைக்கவில்லை. வாட்சன் 24 ரன்களில் கிளம்பினார். முடிவில், ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398513465/watsoncricketipl.html

  • தொடங்கியவர்

பஞ்சாப் அணிக்கு நான்காவது வெற்றி: கோல்கட்டா ஏமாற்றம்
ஏப்ரல் 25, 2014.

 

அபுதாபி: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், பஞ்சாப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளை வீழ்த்திய பஞ்சாப் அணி, தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

 

அபுதாபியில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. கோல்கட்டா அணியில் வினய் குமார் நீக்கப்பட்டு பியுஸ் சாவ்லா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் கவுதம் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.     

மேக்ஸ்வெல் ஏமாற்றம்:

பஞ்சாப் அணிக்கு புஜாரா (8) மோசமான துவக்கம் கொடுத்தார். மார்கல் வீசிய 4வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த விரிதிமன் சகா (14), காலிஸ் பந்தில் அவுட்டானார். கடந்த போட்டிகளில் கலக்கிய மேக்ஸ்வெல் இம்முறை 15 ரன்களுக்கு மார்கல் ‘வேகத்தில்’ போல்டாகி ஏமாற்றினார். காலிஸ் வீசிய 9வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசிய டேவிட் மில்லர் (14), பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ சிக்கினார்.

சுழல் ஜாலம்:

நிதானமாக ஆடிய சேவக், நரைன் பந்தில் சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் 14வது ஓவரை வீசிய பியுஸ் சாவ்லா, கேப்டன் ஜார்ஜ் பெய்லி (11), சேவக் (37) ஆகியோரை அவுட்டாக்கி ‘இரட்டை அடி’ கொடுத்தார். நரைன் வீசிய 19வது ஓவரின் முதலிரண்டு பந்தில் அக்சர் படேல் (7), மிட்சல் ஜான்சன் (0) அவுட்டானார்கள். மூன்றாவது பந்தை பாலாஜி தடுத்தாட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. ஆனால் 4வது பந்தில் பாலாஜி (0) பெவிலியன் திரும்பினார்.

பஞ்சாப் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்தது. ரிஷி தவான் (19), சந்தீப் சர்மா (2) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் பியுஸ் சாவ்லா, சுனில் நரைன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

 

காம்பிர் சொதப்பல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு மணிஷ் பாண்டே (8) ஏமாற்றினார். மூன்று முறை ‘டக்–அவுட்டான’ கேப்டன் காம்பிர், நேற்று ஒரு ரன் எடுத்து அவுட்டானார். பாலாஜி ‘வேகத்தில்’ காலிஸ் (9) வெளியேறினார். ரிஷி தவான், பாலாஜி பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த கிறிஸ் லின் (13) நிலைக்கவில்லை. அடுத்து தந்த யூசுப் பதான் (3) சொதப்பினார். பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய ராபின் உத்தப்பா (19) ‘ரன்–அவுட்’ ஆனார். அக்சர் படேல் ‘சுழலில்’ பியுஸ் சாவ்லா (0) சிக்கினார். ஜான்சன் பந்தில் சுனில் நரைன் (6) போல்டானார்.

 

ஜான்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சூர்யகுமார் யாதவ் (34), சந்தீப் சர்மாவிடம் சரணடைந்தார். உமேஷ் யாதவ் (2) ஏமாற்றினார். கோல்கட்டா அணி 18.2 ஓவரில் 109 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’டாகி தோல்வி அடைந்தது. மார்னே மார்கல் (4) அவுட்டாகாமல்  இருந்தார். பஞ்சாப் சார்பில் சந்தீப் சர்மா 3, ஜான்சன், அக்சர் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

http://sports.dinamalar.com/2014/04/1398445911/maxwellpunjab.html

 

  • தொடங்கியவர்

மீண்டும் மிரட்டுமா சென்னை
ஏப்ரல் 26, 2014.

 

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன

.

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கின்றன. சார்ஜாவில் இன்று நடக்கும் 17வது லீக் போட்டியில் சென்னை அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

 

சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் வாணவேடிக்கை காட்டுவதால், துவக்கத்தில் பிரச்னை இல்லை. ‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா நிலைத்து நின்று விளையாட வேண்டும். டுபிளசி, கேப்டன் தோனி இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கின்றனர். ‘ஆல்–ரவுண்டர்’ ஜடேஜா சிறப்பாக செயல்படுவதால், தொடர்ந்து நான்காவது வெற்றியை சுலபமாக பதிவு செய்யலாம்.

 

மோகித் அசத்தல்:

மும்பை அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வீழ்த்திய மோகித் சர்மா மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஹில்பெனாஸ், ஈஷ்வர் பாண்டேவும் உள்ளனர். பந்தை சுழற்ற அஷ்வின், ஜடேஜா தயாராக இருக்கின்றனர். 

 

ஐதராபாத் அணி மூன்று போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. கேப்டன் ஷிகர் தவான், பின்ச், வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பது பலம். பந்துவீச்சில் அசத்த ஸ்டைன், புவனேஷ்வர், அமித் மிஸ்ரா உள்ளனர்.

 

இதுவரை...

இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டியிலும் சென்னை அணியே வென்று, ஆதிக்கம் செலுத்துகிறது.

 

மும்பை சோகம் தீருமா

சார்ஜாவில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் மும்பை அணி  3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதற்கு மைக்கேல் ஹசி, ஆதித்யா தாரே தொடர்ந்து சொதப்புவதே காரணம். மற்றபடி கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோகித் சிறப்பாக செயல்படுகின்றனர். பின் வரும் போலார்டு அதிரடிக்கு மாற வேண்டும். கடந்த போட்டியில் பந்துவீச்சில் ஹர்பஜன் மட்டுமே ஆறுதல் தந்தார். மலிங்கா, ஜாகிர் கான் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும்.

டில்லி அணி 4ல் விளையாடி 1 மட்டுமே வென்றுள்ளது. துவக்க வீரர்கள் குயின்டன், முரளி விஜய் நல்ல அடித்தளம் அமைக்கின்றனர். இவர்கள் இன்றும் இதை தொடர்ந்தால் நல்லது. கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட கேப்டன் பீட்டர்சன்(16), தினேஷ் கார்த்திக் (15) கடந்த போட்டியில் ஏமாற்றினர். இவர்கள் இன்று பொறுப்புடன் விளையாட வேண்டும்.

பந்துவீச்சில் ஷமி செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இப்பட்டியிலில் நதீம், உனத்கத், சுக்லாவும் உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/04/1398531278/rainaiplchennai.html

  • தொடங்கியவர்

டில்லி அணி வெற்றி
ஏப்ரல் 27, 2014.

 

 

சார்ஜா: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்.,லீக் போட்டியில் டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, டில்லி அணிகள் மோதின. டில்லி அணியில் மனோஜ் திவாரிக்குப்பதிலாக கேதர் ஜாதவ் வாய்ப்பு பெற்றார். ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்

 

மும்பை அணிக்கு ரோகித் (4), ஆதித்யா தாரேவும் (8) ஏமாற்றினர். கோரி ஆண்டர்சன் 14 ரன்களில் திரும்பினார். ராயுடு (14) நிலைக்கவில்லை. உனத்கத் வேகத்தில் ஹசி (10) அவுட்டானார். கவுதம் (22) ஆறுதல் தந்தார். ஷமி பந்தை போலார்டு பவுண்டரிக்கு விரட்டினார். ஹர்பஜன் சிங் (10) காயத்தால் வெளியேறினார். மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. போலார்டு (32) அவுட்டாகாமல் இருந்தார்.

 

எளிய இலக்கை துரத்திய டில்லி அணிக்கு குயின்டன் (16), டுமினி (19) ஓரளவு கைகொடுத்தனர். முரளி விஜய் (40) நம்பிக்கை தந்தார். தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் நடையைக் கட்டினார். கேப்டன் கெவின் பீட்டர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில், டில்லி அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398601096/Unadkatipldelhi.html

  • தொடங்கியவர்

சென்னை அணி அசத்தல் வெற்றி
ஏப்ரல் 26, 2014.

 

சார்ஜா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 5  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில் நமன் ஓஜா நீக்கப்பட்டு, இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஐதராபாத் அணிக்கு தவான் (7), வார்னர் (0) சொதப்பினர். சிறப்பாக செயல்பட்ட பின்ச் 44 ரன்களில் அவுட்டானார். லோகேஷ் ராகுல் (25), வேணுகோபால் (13) அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் சமி (23*), கரண் சர்மா (17*) அதிரடியாக விளையாடினர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.

 

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித்(66), பிரண்டன் மெக்கலம்(40) ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ரெய்னா 14 ரன்களில் அவுட்டானார். டுபிளசி டக்–அவுட் ஆனார். ஜடேஜா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் தோனி ஒரு பவுண்டரி அடிக்க, சென்னை அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398531278/rainaiplchennai.html

  • தொடங்கியவர்

பலே...பஞ்சாப் சிங்கங்கள்! *தொடர்ந்து ஐந்தாவது வெற்றி * தொடரும் பெங்களூரு சோகம்

ஏப்ரல் 28, 2014.

துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் பஞ்சாப் அணியின் ஆதிக்கம் நீடிக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பெற்றது. பெங்களூரு ‘ஹாட்ரிக்’ தோல்வியை சந்தித்தது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

வந்தார் கெய்ல்:

பெங்களூரு அணியில் ஒருவழியாக இடம் பெற்ற கெய்ல், வழக்கம் போல் அதிரடி துவக்கம் தந்தார். மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் சேர்த்து மொத்தம் 20 ரன்கள் விளாசினார். அடுத்த ஓவரை வீசிய இளம் சந்தீப் சர்மா ‘வேகத்தில்’ மிரட்டினார். முதல் பந்தில் ‘ஆபத்தான’ கெய்லை(20) போல்டாக்கினார். 4வது பந்தில் விராத் கோஹ்லியை(4) சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றினார்.

‘ரீப்ளே’ பார்த்த போது பந்து ‘லெக்’ திசையில் சென்றது தெளிவாக தெரிந்தது. ஆனாலும், அம்பயர் பில்லி பவுடன் எல்.பி.டபிள்யு., கொடுத்ததால் விரக்தியுடன் நடையை கட்டினார் கோஹ்லி.

மிட்சல் ஜான்சன், தன்பங்கிற்கு டகவாலேயை, ‘டக்’ அவுட்டாக்கினார். தொடர்ந்து அசத்திய சந்தீப் சர்மா, பார்த்திவ் படேலையும் (2) அவுட்டாக்க, பெங்களூரு அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின் யுவராஜ் சிங், டிவிலியர்ஸ் இணைந்து போராடினர். இதற்கு பலன் கிடைக்கவில்லை. டிவிலியர்ஸ் (17), மார்கல் (15) அடுத்தடுத்து கிளம்பினர். சற்று தாக்குப் பிடித்த யுவராஜ் சிங், அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும் எடுத்தது. டிண்டா (2), வருண் ஆரோன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

திணறல் துவக்கம்:

சுலப இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு புஜாரா(10), சகா(2) ஏமாற்றினர். இத்தொடரில் ரன் மழை பொழிந்த மேக்ஸ்வெல்(6), இம்முறை தாக்குப்பிடிக்கவில்லை. இவர், ஆரோன் பந்தில் ஸ்டார்க்கின் அசத்தல் ‘கேட்ச்சில்’ அவுட்டாக, பஞ்சாப் அணி 7.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்து திணறியது.

சேவக் பாவம்:

பின் சேவக், மில்லர் சேர்ந்து அசத்தினர். ஆல்பி மார்கல் ஓவரில் மில்லர் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். இந்த நேரத்தில் போட்டியின் 13வது ஓவரை விசிய சாகல் இரட்டை ‘அடி’ கொடுத்தார். முதல் பந்தில் மில்லரை(26) பெவிலியனுக்கு அனுப்பினார். 6வது பந்தில் அம்பயரின் தவறான தீர்ப்பில் சேவக்(32) வெளியேறினார். ‘ரீப்ளேவில்’, பந்து, பேட்டில் படாதது தெரிந்தது. இதையடுத்து மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், கேப்டன் பெய்லி(16*), ரிஷி தவான்(23*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.

பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை பஞ்சாப் அணியின் சந்தீப் சர்மா வென்றார்.

http://sports.dinamalar.com/2014/04/1398705207/RoyalChallengersBangaloreKingsXIPunjabIPLDubai

  • தொடங்கியவர்

‘டை’..‘சூப்பர் ஓவர்’.‘டென்ஷன்’:ராஜஸ்தான் ‘பவுண்டரி’ வெற்றி

ஏப்ரல் 28, 2014.

அபுதாபி: கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டியில் உச்சக்கட்ட பரபரப்பை காண முடிந்தது. இரு அணிகளும் ஒரு ‘இன்ச்’ கூட விட்டுக் கொடுக்காமல் போராட, போட்டி ‘டை’ ஆனது. அடுத்து நடந்த ‘சூப்பர் ஓவரும்’ சமன் ஆக, முடிவு பவுண்டரிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. இதில், அதிக பவுண்டரி அடித்த ராஜஸ்தான் ‘திரில்’ வெற்றி பெற்றது. வெல்ல வேண்டிய போட்டியை கோல்கட்டா அணி கோட்டை விட்டது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட லீக் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன், பேட்டிங் தேர்வு செய்தார்.

ரகானே அரைசதம்:

ராஜஸ்தான் அணி மீண்டும் துவக்கத்தில் திணறியது. கருண் நாயர்(1), வினய் குமார் ‘வேகத்தில்’ போல்டானார். மார்னே மார்கல் ஓவரில் 4 பவுண்டரி அடித்த சாம்சன் (20) நிலைக்கவில்லை.

மறுமுனையில் தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே, அரைசதம் எட்டினார். வாட்சன் 33 ரன் எடுத்தார். கடைசி ஓவரில் ரகானேவும் (72) கிளம்பினார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஸ்மித் (19), பால்க்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

காம்பிர் நம்பிக்கை:

எட்டிவிடும் இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா (3), காலிஸ் (13) ஏமாற்றினர். மணிஷ் பாண்டே (19) நீடிக்கவில்லை. இம்முறை சற்று நம்பிக்கை தந்த காம்பிர் 45 ரன்கள் எடுத்தார்.

பால்க்னர் வீசிய அணியின் 19வது ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் 31 (19 பந்து) அவுட்டானார். 4, 5வது பந்தில் உத்தப்பா, வினய் குமார் ‘டக்’ அவுட்டாக, போட்டியில் ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

போட்டி ‘டை’:

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன, ரிச்சர்ட்சன் வீசிய முதல் பந்தில் சாகிப் பவுண்டரி அடித்தார். 2வது பந்தில், 2வது ரன்னுக்கு ஆசைப்பட்ட சாவ்லா (0), ரன் அவுட்டானார். அடுத்த 3 பந்தில், உதிரி உட்பட 4 ரன்கள் கிடைத்தன. கடைசி பந்தில் சாகிப் 2 ரன்கள் எடுக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுக்க, போட்டி ‘டை’ ஆனது.

‘சூப்பர் டை’:

வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது. முதலில் களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு, பால்க்னர் மீண்டும் தொல்லை கொடுத்தார்.

முதல் பந்தில் சூர்யகுமார் (1) ரன் அவுட்டானார். அடுத்த இரு பந்தில் 2 ரன் கிடைத்தது. 4வது பந்தில் மணிஷ் பாண்டே ஒரு சிக்சர் அடித்தார். கடைசியில் சாகிப் (2) அவுட்டாக, கோல்கட்டா அணி ஒரு ஓவரில் 11 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

மீண்டும் ‘சமன்’:

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், ஸ்மித் களமிறங்கினர். சுனில் நரைன் வீசிய இந்த ஓவரில் முதல் 3 பந்தில் 4 ரன்கள் கிடைத்தன. அடுத்த பந்தில் வாட்சன் ஒரு பவுண்டரி விளாசினார். 5வது பந்தில் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்மித் 2 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி ஒரு ஓவரில் 11 ரன்கள் எடுக்க, மீண்டும் ‘டை’ ஆனது.

பவுண்டரி அதிகம்:

இதையடுத்து, ‘டுவென்டி–20’ விதிப்படி, இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் ராஜஸ்தான் 18, கோல்கட்டா 12 பவுண்டரிகள் அடித்திருந்தன. இதனால், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

‘சூப்பர் ஓவர்’ எப்படி

‘டுவென்டி–20’ போட்டியில் ஆட்டம் ‘டை’ ஆகும் பட்சத்தில், தலா ஒரு ஓவர் கொண்ட ‘சூப்பர் ஓவர்’ முறையில் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்படும்.

* இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி, முதலில் களமிறங்கும்.

* இரு அணியிலும் தலா 3 வீரர்கள் ‘பேட்டிங்’ செய்வர்

* இரு விக்கெட்டுகளை இழந்து விட்டால், அந்த அணியின் இன்னிங்ஸ் முடிந்து விடும்.

* ‘சூப்பர் ஓவரிலும்’ போட்டி ‘டை’ ஆனால், இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் (‘சூப்பர் ஓவர்’ உட்பட) கணக்கிடப்படும். இதில் அதிகம் உள்ள அணி வென்றதாக அறிவிக்கப்படும்.

* இதுவும் சமமாக இருக்கும் பட்சத்தில், முதல் 20 ஓவரில் அடித்த பவுண்டரிகள் மட்டும், கணக்கிடப்பட்டு வென்ற அணி முடிவாகும்.

* இதுவும் சமமாக இருந்தால், ‘சூப்பர் ஓவரின்’ கடைசி பந்தில் அதிக ரன் எடுத்த அணி வென்றதாக அறிவிக்கப்படும்.

முதன் முறையாக...

* ஐ.பி.எல்., தொடரில் இதற்கு முன் நான்கு போட்டிகள் ‘டை’ ஆகின. கடந்த 2009ல் ராஜஸ்தான்–கோல்கட்டா, 2010ல் பஞ்சாப்–சென்னை, 2013ல் ஐதராபாத்–பெங்களூரு, பெங்களூரு–டில்லி அணிகள் மோதிய போட்டிகள் ‘டை’ ஆனது.

* நேற்று ஐந்தாவது முறையாக போட்டி ‘டை’ ஆனது. தவிர, முதன் முறையாக, ‘சூப்பர் ஓவர்’ சமன் ஆக, பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி முடிவானது.

ஐந்தாவது ‘டை’

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில், ‘சூப்பர் ஓவர்’ முறையில் இதுவரை ஐந்து போட்டிகளின் முடிவுகள் எட்டப்பட்டன.

* இவை அனைத்திலும், ‘சூப்பர் ஓவரில்’ எடுத்த ரன்கள் அடிப்படையில் தான் முடிவு கிடைத்தது.

http://sports.dinamalar.com/2014/04/1398703865/KolkataRajasthaniplcricket.html

  • தொடங்கியவர்

மும்பைக்கு 5வது தோல்வி
ஏப்ரல் 29, 2014.


துபாய்: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் சோகம் நீடிக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை பெற்றது. போலார்டு போராட்டம் வீணானது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தன. நேற்று துபாயில் நடந்த கடைசி லீக் போட்டியில் ஐதராபாத், ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின.

ஹசி நீக்கம்:

 

தனது 27வது பிறந்தநாள் கொண்டாடிய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘டாஸ்’ வென்று ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். தொடர்ந்து சொதப்பிய மைக்கேல் ஹசிக்குப் பதில், பென் டன்க் சேர்க்கப்பட்டார்.

 

வார்னர் அரைசதம்:

ஐதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான் (6), பின்ச் (16) இருவரும் ஜாகிர் கான் வேகத்தில் சிக்கினர். அடுத்து லோகேஷ் ராகுல், வார்னர் இணைந்து, ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தனர்.

 

14வது ஓவரில் இருந்து அப்படியே அதிரடிக்கு மாறியது இந்த ஜோடி. போலார்டு பந்தை சிக்சருக்கு விரட்டிய வார்னர், அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து ஆண்டர்சன் பந்தில் சிக்சர் அடித்த இவர், 65 ரன்னுக்கு அவுட்டானார். டேரன் சமி, 10 ரன்கள் எடுத்தார். தாக்குப்பிடித்த லோகேஷ் ராகுல் (46) அரைசத வாய்ப்பை இழந்து திரும்பினார்.

 

ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. இர்பான் பதான் (1), நமன் ஓஜா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரோகித் ஏமாற்றம்:

கடின இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு, ‘பெர்த் டே’ வீரர் ரோகித் சர்மா (1) ‘ஷாக்’ கொடுத்தார். பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஆண்டர்சன் 1 ரன் எடுத்தார். அறிமுக வீரர் பென் டன்க் (20) ஏமாற்றினார்.

 

போலார்டு போராட்டம்:

பின் போலார்டு, அம்பதி ராயுடு சேர்ந்து சற்று போராடினர். அமித் மிஸ்ராவின் 3வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என விளாசினார் போலார்டு. மறுமுனையில் அம்பதி ராயுடு (35) கைவிட்டார்.

 

இருப்பினும், மனம் தளராத போலார்டு, அமித் மிஸ்ரா ஓவரில் 3 சிக்சர் உட்பட 27 ரன்கள் எடுக்க, நிலைமை தலை கீழானது. தாரே (7), ஹர்பஜன் (1) நிலைக்கவில்லை.

கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. இர்பான் பதான் அசத்தலாக பந்துவீசினார். முதல் பந்தில் போலார்டு (78) போல்டாக, மும்பை கதை முடிந்தது. மும்பை அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தது. கவுதம் (4), ஜாகிர் கான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஐந்தாவது தோல்வி

ஐ.பி.எல்., வரலாற்றில், கடந்த 2008ல் மும்பை அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்றது. 2009, 2011ல் தொடர்ந்து மூன்று தோல்வியை சந்தித்து, பின் மீண்டது.

இப்போது தான் முதன் முறையாக மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக வீழ்ந்துள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398791483/rohitmumbai.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். இரண்டாம் கட்டப் போட்டி இந்தியாவில் நாளை

 

ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கிய ஐ.பி.எல். 7ஆவது தொடரின் முதற்கட்ட போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தை தொடர்ந்து, இரண்டாவது கட்டப்போட்டிகள் இந்தியாவில் நாளை ஆரம்பமாகவுள்ளன.
இந்தியாவில் இடம்பெற்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். தொடருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. கடந்த மாதம் 16ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகிய இந்தப் போட்டிகள், மொத்தம் 20 போட்டிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் நேற்றுடன் முடிவடைந்தன.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை முதல் இந்தியாவில் இரண்டாம் கட்டப்போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

நாளை ராஞ்சியில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

 

http://www.virakesari.lk/articles/2014/05/01/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88

  • தொடங்கியவர்

சென்னை 104/2 12.2 ஓவரில்

  • தொடங்கியவர்

சென்னைக்கு 5வது வெற்றி: ஜடேஜா ‘சுழல்’ ஜாலம்: கோல்கட்டா ஏமாற்றம்
மே 01, 2014.
 

 

 

ராஞ்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி, கோல்கட்டா அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது. ‘சுழல்’ ஜாலம் காட்டிய ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான இரண்டாம் கட்டப் போட்டிகள் இந்தியாவில் துவங்கியது. ராஞ்சியில் நேற்று நடந்த தொடரின் 21வது போட்டியில், சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின.

 

மழை குறுக்கீடு:

மழை காரணமாக போட்டி துவங்குவதில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமானது. பின் தலா 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

சாகிப் துல்லியம்:

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி துவக்கம் கொடுத்தது. சாகிப் அல் ஹசன் வீசிய 3வது ஓவரில் சிக்சர் அடித்த டுவைன் ஸ்மித் (16), அதே ஓவரில் அவுட்டானார். பின் இணைந்த மெக்கலம், சுரேஷ் ரெய்னா ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. சாகிப், சுனில் நரைன் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த மெக்கலம், வினய் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரெய்னா, பியுஸ் சாவ்லா வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு  பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த போது, சாகிப் ‘சுழலில்’ ரெய்னா (31) சிக்கினார்.

 

மெக்கலம் அரைசதம்:

தொடர்ந்து அசத்திய மெக்கலம், வினய் குமார் வீசிய 9வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். காலிஸ் பந்தில் சிக்சர் அடித்த மெக்கலம், ஐ.பி.எல்., அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 40 பந்தில் 56 ரன்கள் (2 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த போது ரசல் ‘வேகத்தில்’ வெளியேறினார். கடைசி நேரத்தில் இணைந்த கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

 

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. தோனி (22), ஜடேஜா (17) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் சாகிப் 2, ரசல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

‘ஹாட்ரிக்’ நழுவல்:

சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் கவுதம் காம்பிர் (6) ‘ரன்–அவுட்டாகி’ ஏமாற்றினார். அடுத்து வந்த காலிஸ் (4), அஷ்வின் பந்தில் அவுட்டானார். ஆட்டத்தின் 6வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா இரட்டை ‘அடி’ கொடுத்தார். முதல் பந்தில் மணிஷ் பாண்டேவை (1) அவுட்டாக்கிய ஜடேஜா, இரண்டாவது பந்தில் சாகிப் அல் ஹசனை (0)

வெளியேற்றினார். மூன்றாவது பந்தை ராபின் உத்தப்பா தடுத்தாட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

 

உத்தப்பா ஆறுதல்:

‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (8) நிலைக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மனம் தளராமல் போராடிய மற்றொரு துவக்க வீரர் உத்தப்பா, மோகித் வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இவர், 38 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் சரணடைந்தார். அடுத்து வந்த ரசல் (1), மோகித் சர்மாவிடம் சரணடைந்தார். அதிரடியாக ஆடிய யூசுப் பதான், ஹில்பெனாஸ் வீசிய 16வது ஒவரில் மூன்று சிக்சர் விளாசினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டன. மோகித் சர்மா வீசிய 17வது ஓவரில் பியுஸ் சாவ்லா (1), யூசுப் பதான் (41) அடுத்தடுத்து அவுட்டானார்கள். கடைசி பந்தை சுனில் நரைன் தடுத்தாட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. இந்த ஓவரில் மொத்தம் 4 ரன்கள் மட்டும் கிடைத்தது. கோல்கட்டா அணி 17 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சுனில் நரைன் (1), வினய் குமார் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

சென்னை சார்பில் ஜடேஜா 4, மோகித் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருதை ரவிந்திர ஜடேஜா வென்றார்.

மூன்று பேர்...மூன்று அரைசதம்

கோல்கட்டாவுக்கு எதிராக அபாரமாக ஆடிய சென்னை அணியின் பிரண்டன் மெக்கலம் (67, 71*, 56), இத்தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை சகவீரர் டுவைன் ஸ்மித் (66, 50, 66), பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் (95, 89, 95) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.

அதிக விக்கெட்

 

வேகப்பந்துவீச்சில் அசத்திய சென்னை அணியின் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இத்தொடரில் அதிக விக்கெட் (6 போட்டி, 11 விக்கெட்) வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் சிறந்த பவுலருக்கான ‘பர்பிள்’ நிற தொப்பியை தன்வசப்படுத்தினார். இவரை அடுத்து மற்றொரு சென்னை அணி வீரர் ரவிந்திர ஜடேஜா (6 போட்டியில் 10 விக்கெட்) 2வது இடத்தில் உள்ளா

http://sports.dinamalar.com/2014/05/1398952585/ChennaiKolkataDhoniGambhirIPLCricket.html

 

  • தொடங்கியவர்

அப்பாடா..மும்பை அணி வெற்றி: பஞ்சாப் அணிக்கு முதல் அடி
மே 03, 2014.

 

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் ஒருவழியாக முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்தது. நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பவுலிங்கில் சொதப்பிய பஞ்சாப் அணி, முதல் தோல்வியை பெற்றது.

            

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது கட்ட போட்டிகள் இப்போது நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின.            

 

‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சேவக் ஏமாற்றம்: பஞ்சாப் அணியின் ‘சீனியர்’ வீரர் சேவக், ஒரு ரன்னுக்கு ரன் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஜாகிர், பம்ராக் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய புஜாரா (19), ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தார்.            

 

மேக்ஸ்வெல் அதிரடி: வழக்கம் போல வந்தவேகத்தில் விளாசினார் மேக்ஸ்வெல். ஆண்டர்சன், ஹர்பஜன் மற்றும் பம்ராக் என, ஒருவரையும் இவர் விட்டு வைக்கவில்லை.            

மலிங்கா ஓவரில் சிக்சர், பவுண்டரி என, அடுத்தடுத்து விரட்டிய மேக்ஸ்வெல், 27 பந்தில் 45 ரன்கள் எடுத்து, ஹர்பஜன் ‘சுழலில்’ சிக்கினார்.           

சகா அரைசதம்: வழக்கத்துக்கு மாறாக சற்று வேகம் காட்டிய சகா, போலார்டு ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். இவர், ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது அரைசதம் எட்டினார். பெய்லி (15), மில்லர் (16) நிலைக்கவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. சகா (59) அவுட்டாகாமல் இருந்தார்.   

       

துவக்கம் மோசம்: சவாலான இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு, இம்முறையும் சரியான துவக்கம் கிடைக்கவில்லை. சந்தீப் சர்மா ‘வேகத்தில்’ டன்க் (5), ராயுடு (8) வெளியேறினர்.கவுதம் 33 ரன்கள் எடுத்தார். பின் கேப்டன் ரோகித் சர்மாவுடன், ஆண்டர்சன் இணைந்தனர்.   

         

போலார்டு அபாரம்: அக்சர் படேல் வீசிய போட்டியின் 13வது ஓவரில், ஆண்டர்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என, 20 ரன்கள் விளாச, மும்பை அணிக்கு லேசான நம்பிக்கை பிறந்தது. இந்த நேரத்தில் ரோகித் சர்மா (39), ஆண்டர்சன் (35) அவுட்டாக மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், போலார்டு, தாரே நம்பிக்கை கொடுத்தனர். ஜான்சன் வீசிய போட்டியின் 19வது ஓவரில், போலார்டு ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்க, வெற்றி உறுதியானது.            

பின் சந்தீப் சர்மா வீசிய பந்தை போலார்டு சிக்சருக்கு அனுப்ப, மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது. போலார்டு (28), தாரே (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜாகிர் கான் காயம்     

நேற்று தனது 4வது ஓவரை வீசிய மும்பை வீரர் ஜாகிர் கான், தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார். இதையடுத்து, 3 பந்துக்கும் மேல் பவுலிங் செய்ய முடியவில்லை. மீதமுள்ள ஓவரை போலார்டு வீசினார்.      

தொடரும் அசத்தல்     

கடந்த 2013ல் நடந்த ஆறாவது ஐ.பி.எல்., தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில், மும்பை அணி பங்கேற்ற 8 லீக் போட்டிகளிலும், வெற்றி பெற்று அசத்தியது.      

இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்சில் பங்கேற்ற 5 போட்டியில் தொடர்ந்து தோற்ற மும்பை அணி, மீண்டும் சொந்த மண்ணில் வெற்றி பெற்று, தோல்விப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மும்பை மண்ணில் தொடர்ந்து 9வது வெற்றியை பதிவு செய்தது.

http://sports.dinamalar.com/2014/05/1399132060/MumbaiPunjabCricketIPLRohitSharmaFirstVictory.html

 

  • தொடங்கியவர்

ராஜஸ்தான் ராயல் வெற்றி: டில்லி அணி ஏமாற்றம்
மே 03, 2014.

 

 

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய ராஜஸ்தான் அணி, டில்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.

டில்லி, பெரோஷா கோட்லா மைதான

த்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.                             

விஜய் ஏமாற்றம்: டில்லி அணிக்கு முரளி விஜய் (13) ஏமாற்றினார்.  டாம்பே ‘சுழலில்’ கேப்டன் கெவின் பீட்டர்சன் (14), குயின்டன் (42) சிக்கினர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (12) சோபிக்கவில்லை.

பின் டுமினி, கேதர் ஜாதவ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்த போது டுமினி (39) அவுட்டானார். ரிச்சர்ட்சன் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஜாதவ், அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.  

               

டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. ஜாதவ் (28)அவுட்டாகாமல் இருந்தார்.

 

கருண் கலக்கல்: சுலப இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ரகானே(12) ஏமாற்றினார். சஞ்சு சாம்சன், 34 ரன்களுக்கு வெளியேறினார். பின் கருண் நாயர், ரஜத் பாட்யா சேர்ந்து அசத்தினர். டில்லி பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். பாட்யா 16 ரன்களுக்கு அவுட்டானார். தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த கருண், அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த வாட்சன், அதிவிரைவாக ரன் சேர்க்க, வெற்றி எளிதானது. உனத்கட் வீசிய பந்தை கருண் பவுண்டரிக்கு அனுப்ப, ராஜஸ்தான் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண்(73), வாட்சன்(16) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ராஜஸ்தான் அணியின் கருண் நாயர் வென்றார்.

 

http://sports.dinamalar.com/2014/05/1399137836/RajasthanDelhiIPLCricket.html

  • தொடங்கியவர்

‘வின்னர்’ டிவிலியர்ஸ: பெங்களூரு அணி அசத்தல்

மே 03, 2014.

பெங்களூரு: ஏழாவது ஐ.பி.எல்.,தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் டிவிலியர்ஸ் 89 ரன்கள் விளாச, பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி ஏமாற்றம் அளித்தது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான இரண்டாம் கட்டப் போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த 24வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

வார்னர் அரைசதம்:

ஐதராபாத் அணிக்கு பின்ச்(13), லோகேஷ் ராகுல் (6) ஏமாற்றினர். டிவிலியர்ஸ் அசத்தல் ‘கேட்ச்சில்’ ஷிகர் தவான் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். சமி (8) ஏமாற்றினார். டிண்டா ஓவரில் இரண்டு சிக்சர் விளாசிய வார்னர் அரை சதம் எட்டினார். நமன் ஓஜா (15) நிலைக்கவில்லை. வார்னர் 61 ரன்களில் (4 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டானார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. இர்பான் (4), கரண் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

கெய்ல் அதிரடி:

பெங்களூரு அணி புவனேஷ்வர் குமார் ‘வேகத்தில்’ துவக்கத்தில் திணறியது. இவர் வீசிய 2வது ஓவரில் பார்த்திவ் (3), கோஹ்லி (0) அவுட்டாகினர். இர்பான் வீசிய 5வது ஓவரில் அதிரடி காட்டிய கெய்ல் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் பறக்கவிட்டார். கரண் சர்மாவின் ‘சுழலில்’ கெய்ல் (27) வெளியேறினார். ரோசோவ் 14 ரன்களில் நடையைக் கட்டினார்.

டிவிலியர்ஸ் மிரட்டல்:

இதன் பின் இணைந்த டிவிலியர்ஸ், யுவராஜ் சிங் ஜோடி அசத்தியது. யுவராஜ் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தனது அதிரடியை தொடர்ந்த டிவிலியர்ஸ், சமி ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார். போட்டியின் 19வது ஓவரை ஸ்டைன் வீசினார். இதில் டிவிலியர்ஸ் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க அரங்கம் அதிர்ந்தது.

கடைசி ஓவரில் 6 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டன. பதான் வீசிய முதல் பந்தில் ஸ்டார்க் (5)ரன் அவுட்டானார். பின் டிவிலியர்ஸ் ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடிக்க, பெங்களூரு அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் (89, 6 பவுண்டரி, 8 சிக்சர்), ஹர்சல் படேல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

டிண்டா ‘100’

ஐதராபாத் அணியின் லோகேஷ் ராகுலை அவுட்டாக்கிய பெங்களூரு அணியின் டிண்டா ‘டுவென்டி–20’ அரங்கில் 100வது விக்கெட்டை கைப்பற்றினார். இதுவரை 92 போட்டியில் விளையாடியுள்ள இவர் 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், ‘டுவென்டி–20’ போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 53வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் மலிங்கா (250), தென் ஆப்ரிக்காவின் அல்போன்சா தாமஸ் (235), பாகிஸ்தானின் அசார் மகமூத் (224) உள்ளனர்.

குப்பைத்தொட்டியில் பந்து

நேற்றைய போட்டியின் 10வது ஓவரில் ஐதராபாத் அணியின் இர்பான் வீசிய பந்தை, டிவிலியர்ஸ் சிக்சருக்கு பறக்க விட்டார். இது, எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்த குப்பைத்தொட்டியில் விழுந்தது. பின் இதிலிருந்து பந்தை எடுத்தனர்.

http://sports.dinamalar.com/2014/05/1399124371/BangaloreHyderabadIPLCricket.html

  • தொடங்கியவர்

கோல்கட்டாவுக்கு டாட்டா காட்டிய டாம்பே: ராஜஸ்தான் திரில் வெற்றி
மே 05, 2014.

 

ஆமதாபாத்: பிரவீண் டாம்பே ‘ஹாட்ரிக்’ சாதனையில் தகர்ந்த, கோல்கட்டா அணி கடைசி நேரத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

 

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மீண்டும் மோதின.      

‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் ‘சீனியர்’ காலிசிற்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டு டென்டஸ்காட்டே, பியுஸ் சாவ்லாவுக்கு பதிலாக  உமேஷ் யாதவும் களமிறங்கினர்.

      

கருண் நம்பிக்கை: ராஜஸ்தான் அணிக்கு ரகானே, கருண் நாயர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த போது ரகானே (30) அவுட்டானார். உமேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கருண், 44 ரன்கள் எடுத்தார்.     

 

சாம்சன் (37), வாட்சன் (31) சற்று கைகொடுத்தனர். ஸ்மித் (3), பின்னி (11) கடைசி ஓவரில் அவுட்டான போதும், ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.

இரண்டு அரைசதம்: சற்று கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு, இத்தொடரில் முதன் முறையாக ‘சூப்பர்’ துவக்கம் கிடைத்தது. உத்தப்பா, காம்பிர் அரைசதம் அடித்தனர்.      

 

திடீர் திருப்பம்: முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த போது கோல்கட்டா வெற்றி உறுதி என்ற நிலை இருந்தது. இந்நிலையில், வாட்சன் திடீர் திருப்பம் தந்தார்.      

இவரது 3வது ஓவரில் முதல் பந்தில் காம்பிர் (54) அவுட்டானார். 3வது பந்தில் உத்தப்பா (65) நடையை கட்டினார். 5வது பந்தில் ஆன்ட்ரூ ரசல் (1) கிளம்ப, கோல்கட்டா அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.      

 

டாம்பே ‘ஹாட்ரிக்’: அடுத்து வந்த டாம்பே, தன்பங்கிற்கு கோல்கட்டாவை ‘புரட்டி’ எடுத்தார். இவரது 4வது ஓவரின் முதல் பந்தில் மணிஷ் பாண்டே (0) ‘டக்’ அவுட்டானார். அடுத்த பந்தில் ‘அபாய’ யூசுப் பதான் (0) அவுட்டாக்கினார். 3வது பந்தில் டென் டஸ்காட்டேயை (0) அவுட்டாக்கி, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.      

திடீர் வெற்றி: வெறும் 2 ரன்கள் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்த கோல்கட்டா அணி, தோல்வியை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், 6 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. சாகிப் (21 ரன், 14 பந்து), பந்துகளை வீணடித்த சூர்யகுமார் (9 ரன், 17 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.  

    

கோல்கட்டாவுக்கு எதிரான முதல் போட்டியில் ‘சூப்பர் ஓவரில்’ வென்ற ராஜஸ்தான் அணி, நேற்று திடீரென எழுச்சி பெற்று, மீண்டும் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக டாம்பே தேர்வு செய்யப்பட்டார்.

 

காம்பிர் ‘300’

நேற்று பிரவீன் டாம்பே பந்தை, எல்லைக் கோட்டுக்கு விரட்டிய கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் தனது 300வது பவுண்டரியை பதிவு செய்தார். இதையடுத்து, ஐ.பி.எல்., அரங்கில் இந்த இலக்கை எட்டிய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். அடுத்த மூன்று இடங்களில் சச்சின் (295), சேவக் (279), டிராவிட் (268) உள்ளனர். ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் (2,090) குவித்த சென்னை வீரர் ரெய்னா, 251 பவுண்டரி தான் அடித்துள்ளார்.     

* நேற்று 21 வது அரைசதம் அடித்த காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் முதலிடத்தை பெற்றார். அடுத்து கெய்ல், ரோகித் சர்மா, ரெய்னா தலா 20 அரைசதம் அடித்துள்ளனர்.      

121/0... 123/6

கோல்கட்டா அணியின் ஓபனிங் அருமையாக இருந்தது. பினிஷிங் தான் மோசமாக அமைந்தது. 121/0 என்ற நிலையில் இருந்து 123/6 என தள்ளப்பட்டது. அதாவது 2 ரன்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து, தோல்வியை தழுவியது.

 

* ஐ.பி.எல்., வரலாற்றில் ‘சேசிங்கில்’ முதல் விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கும் மேல் எடுத்து,  தோற்ற முதல் அணியானது கோல்கட்டா.

2 பந்தில் ‘ஹாட்ரிக்’           

நேற்று போட்டியின் 16வது ஓவரை வீசிய ராஜஸ்தான் வீரர் பிரவின் டாம்பே, முதல் பந்தை ‘வைடாக’ வீசினார். இதில் மணிஷ் பாண்டே, ‘ஸ்டம்பிங்’ முறையில் அவுட் ஆனார். ‘வைடு’ என்பதால் இப்பந்து உதிரியில் சேர்ந்தது. டாம்பே முறைப்படி வீசிய அடுத்த இரு பந்தில் யூசுப் பதான், டஸ்காட்டே அவுட்டாக, 2 பந்தில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த இரண்டாவது வீரரானார்.     

இதற்கு முன், ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் (2010, சாம்பியன்ஸ் லீக்) இலங்கை உள்ளூர் வயம்பா அணி வீரர் இஸ்ரு உதனா, சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்கு எதிராக, இதுபோல, 2 பந்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றினார்.

 

* இது ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் முதல் ‘ஹாட்ரிக்’ சாதனையாக அமைந்தது. ஒட்டுமொத்த ஐ.பி.எல்., வரலாற்றில் இது 12வது ‘ஹாட்ரிக்’ ஆக அமைந்தது.  

* இதற்கு முன் 2008ல் சென்னையின் பாலாஜி (எதிர்–பஞ்சாப்), நிடினி (எதிர்–கோல்கட்டா), டில்லியின் அமித் மிஸ்ரா (எதிர்–டெக்கான்) என, 3 பேர் இந்த சாதனை படைத்தனர்.      

* 2009ல் பஞ்சாப்பின் யுவராஜ் சிங் (பெங்களூரு, டெக்கான்) 2 முறை, டெக்கானின் ரோகித் சர்மா (பஞ்சாப்) இச்சாதனையை எட்டினர்.      

* 2010ல் பெங்களூருவின் பிரவீண் குமார் (ராஜஸ்தான்), 2011ல் டெக்கானின் அமித் மிஸ்ரா (பஞ்சாப்), 2012ல் ராஜஸ்தானின் சண்டிலா (பஞ்சாப்), 2013ல் கோல்கட்டாவின் சுனில் நரைன் (பஞ்சாப்), ஐதராபாத்தின் அமித் மிஸ்ரா (பஞ்சாப்) ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1399302884/TambeRajasthanKolkataIPLCricket.html

  • தொடங்கியவர்

தோனி சிக்சர்: சென்னை அணிக்கு 6வது வெற்றி: மீண்டும் வீழ்ந்தது டில்லி
மே 04, 2014.

 

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது. சிக்சர் மழை பொழிந்த ஸ்மித், 79 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு கைகொடுத்தார்.            

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட லீக் போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. நேற்று டில்லியில் நடந்த போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 

     

கார்த்திக் அபாரம்: டில்லி அணிக்கு குயின்டன் டி காக்(24), அதிரடியான துவக்கம் கொடுத்தார். கேப்டன் கெவின் பீட்டர்சனை (0), மோகித் சர்மா போல்டாக்கினார். மோகித் சர்மா, ஜடேஜா பந்துகளில் சிக்சர் அடித்த,  தினேஷ் கார்த்திக் (51), அரைசதம் அடித்து அவுட்டானார். அஷ்வின் சுழலில் சுக்லா, ‘டக்’ அவுட்டானார். முரளி விஜய் (35) நிலைக்கவில்லை. பின்வரிசையில் டுமினி, மோகித் சர்மா ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரி அடித்தார். தன் பங்கிற்கு ஜாதவ், இவரது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்தார். கடைசி 3 ஓவரில் இந்த ஜோடி 44 ரன்கள் சேர்க்க, டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. டுமினி (28), ஜாதவ் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.          

  

துவக்க நம்பிக்கை: சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் கொடுத்தது. பார்னல் பந்தில் பவுண்டரி அடித்த மெக்கலம், ஷமி ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். உனத்கத் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த ஸ்மித், நதீம் பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார். இருப்பினும், முதல் 10 ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இந்நிலையில், மெக்கலம் (32) கிளம்பினார்.           

 

ஸ்மித் அரைசதம்: பின் ஸ்மித்துடன் இணைந்த ரெய்னா, சுக்லா ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார். அசத்தலை தொடர்ந்த ஸ்மித், ஷமி மற்றும் சுக்லா பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி, இத்தொடரில் நான்காவது அரைசதம் எட்டினார்.            

 

திடீர் ‘டென்ஷன்’: மறுபுறம், உனத்கத் ஓவரில் 2 பவுண்டரி, பார்னல் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என, ரெய்னா விரட்ட, சென்னை அணிக்கு லேசான நம்பிக்கை பிறந்தது. ஷமி வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என, ஸ்மித் விளாசினார்.            

இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 44 பந்தில் 86 ரன்கள் சேர்த்த போது, ஸ்மித் 79 ரன்னுக்கு (51 பந்து, 8 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாக, ‘டென்ஷன்’ ஏற்பட்டது.            

தோனி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. உனத்கத் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ரெய்னா, 1 ரன் எடுத்தார். பின் ‘பினிஷிங்கில்’ கைதேர்ந்த தோனி ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, சென்னை அணி 19.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.            

 

ரெய்னா (47), தோனி (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக டுவைன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.

அதிக வெற்றி     

டில்லி அணிக்கு எதிராக அதன் சொந்தமண்ணில் விளையாடிய 5 போட்டிகளில், 4வது வெற்றியை (ஒரு தோல்வி), சென்னை அணி நேற்று பதிவு செய்தது.      

* சென்னை அணிக்கு எதிராக, மூன்றாவது முறையாக 175 அல்லது அதற்கும் மேல் ரன்கள் எடுத்தும் தோற்றது. இவை அனைத்தும் டில்லி சொந்தமண்ணில் நடந்தது சோகம்.      

24 சிக்சர்     

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இதுவரை அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் சென்னையின் ஸ்மித் (24 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் பஞ்சாப்பின் மேக்ஸ்வெல் (19 சிக்சர்) உள்ளார்.      

ஜடேஜா ‘50’     

நேற்று முரளிவிஜயை அவுட்டாக்கிய சென்னை அணியின் ரவிந்திர ஜடேஜா, ஐ.பி.எல்., அரங்கில் 50 வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை 85 போட்டிகளில், 168.2 ஓவர்கள் பவுலிங் செய்து, இந்த இலக்கை எட்டியுள்ளார்.      

* முதல் மூன்று இடங்களில் மும்பையின் மலிங்கா (112), ஐதராபாத்தின் அமித் மிஸ்ரா (99), கோல்கட்டாவின் வினய் குமார் (90) உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1399221492/jadejacricketchennai.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல் இருந்து முரளி ஓய்வு
செவ்வாய்க்கிழமை,

ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். டுவென்டி டுவென்டி தொடர்களான ஐ.பி.எல், பிக் பாஷ், கரிபியன் டுவென்டி டுவென்டி போன்ற தொடரிகளில் விளையாடி தனக்கு அலுத்துப் போனதன் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக முரளி தெரிவித்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பினனர் தனக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லை என்பதனால் தான் இந்தப் போட்டிகளில் விளையாடியதாகவும் இந்த தொடரே தன் இறுதித் தொடராகவும் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வங்கடே மைதானத்தில் விளையாடும் போட்டியே இறுதிப் போட்டியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே மைதானத்திலேயே முரளி தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். 2011ஆம் ஆண்டு இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்து இருந்தாலும் உலக ட்வென்டி ட்வென்டி தொடரில் இலங்கை அணி இந்திய அணியை வெற்றி கொண்டது தனக்கு சந்தோசம் தருவதாகவும் முரளி தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/109476-2014-05-06-15-51-12.html

  • தொடங்கியவர்

பழிதீர்க்குமா சென்னை அணி: இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்
மே 06, 2014.
 

 

கட்டாக்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் பஞசாப்பிடம் சந்தித்த தோல்விக்கு இம்முறை சென்னை அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று ஒரிசாவின் கட்டாக்கில் நடக்கும் 29வது லீக் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப்பை சந்திக்கிறது.

சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் தோல்வியடைந்து, மற்ற 6ல் தொடர்ந்து வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

 

இத்தொடரில் ரன் மழை பொழியும் டுவைன் ஸ்மித் (335), பிரண்டன் மெக்கலம் (281) மீண்டும் வலுவான துவக்கம் தரலாம். ரெய்னா நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். வழக்கம்போல ‘பினிஷிங்’ பணியை கச்சிதமாக முடிக்க கேப்டன் தோனி உள்ளார். மற்றபடி டுபிளசி, மன்ஹாஸ், ரவிந்திர ஜடேஜா சுதாரித்துக் கொண்டால் நல்லது.

 

ஜடேஜா மிரட்டல்:

பவுலிங்கில் எதிரணியை திணறடிக்க ஜடேஜா காத்திருக்கிறார். இவரின் ‘சுழல்’ ஜாலம் இன்றும் எடுபடலாம். 7 விக்கெட் வீழ்த்தியுள்ள அஷ்வினின் பங்களிப்பு இன்னும் அதிகம் தேவை. ‘வேகத்தில்’ மிரட்டும் மோகித் சர்மா 12 விக்கெட் எடுத்திருப்பது பலம். இவருக்கு ஹில்பெனாசும் கைகொடுப்பார்.

பஞ்சாப் அணி 6ல் விளையாடி 5 போட்டியில் வாகை சூடியுள்ளது. கடைசியாக மும்பையிடம் தோல்வியை சந்தித்தது. புஜாரா, சேவக் ஜோடி சிறப்பான துவக்கமே தருகிறது. இது நிலையாக இல்லாதது பின்னடைவுதான். கடந்த போட்டியில் 59 ரன்கள் எடுத்த சகா நம்பிக்கை தருகிறார்.

 

மேக்ஸ்வெல் ஆதிக்கம்:

மேக்ஸ்வெல், மில்லர் தங்களது அதிரடி ஆட்டத்தால் அணியை துாக்கி நிறுத்துகின்றனர். இத்தொடரில் அதிக ரன்கள் (345) குவித்து மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார். இவர்கள் விஸ்வரூபம் எடுத்தால், சென்னைக்கு சிக்கல் ஏற்படலாம். கேப்டன் பெய்லி அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்.

‘வேகத்தில்’ பாலாஜி, சந்தீப் சர்மா, ஜான்சன், ரிஷி தவான் அசத்த வாய்ப்பு உள்ளது. ‘சுழல்’ பணியை அக்சர் படேல் கவனிப்பார்.

 

கோல்கட்டா– டில்லி பலப்பரீட்சை

டில்லியில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 தோல்வி அடைந்த கோல்கட்டா அணிக்கு கேப்டன் காம்பிர் தற்போதுதான் எழுச்சி அடைந்துள்ளார். கடந்த போட்டியில் அரை சதம் கடந்த இவர், இதை இன்றும் வெளிப்படுத்த வேண்டும். துவக்க வீரர் ராபின் உத்தப்பா, மனீஷ் பாண்டே நம்பிக்கை தருகின்றனர். நிலையான செயல்பாடு இல்லாததுதான் அணியின் பின்னடைவு.

 

டில்லி அணியும் 5 தோல்வி அடைந்து பரிதாப இடத்தில்தான் உள்ளது. சமீபத்திய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜய், குயின்டன் டி காக் ஓரளவுக்கு கைகொடுத்தனர். கேப்டன் பீட்டர்சன் எழுச்சி பெற வேண்டும். தினேஷ் கார்த்திக்கின் (51) அசத்தல் ஆட்டம் இன்றும் தொடரலாம். டில்லியிடம் ஏற்கனவே தோற்ற கோல்கட்டாவுக்கு பதிலடி தர வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/05/1399391965/dhonichennaiipl.html

  • தொடங்கியவர்

‘அனல்’ மோதலில் மும்பை வெற்றி: வீழ்ந்தது பெங்களூரு அணி
மே 05, 2014.

மும்பை:  பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக்  போட்டியில், மும்பை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. போலார்டு, ஸ்டார்க் ஆக்ரோஷமாக  மோதிக் கொண்டதால், போட்டியில் அனல் பறந்தது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின், இரண்டாவது கட்ட  போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. நேற்று மும்பை  வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில்,  மும்பை, பெங்களூரு அணிகள் மோதின.‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத்  கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். மும்பை அணியின்  ஜாகிர் கானுக்குப் பதில், பவான் சுயல் சேர்க்கப்பட்டார்.

 

டன்க் ஏமாற்றம்:

மும்பை அணிக்கு, கடந்த சில போட்டிகளில் ஏமாற்றிய  டன்க் (15) நேற்றும் சொதப்பினார். அம்பதி ராயுடு (9)  நீடிக்கவில்லை. ஆரோன், டிண்டா பந்துகளில் சிக்சர்  அடித்த கவுதம் 30 ரன்னில் வெளியேறினார்.

 

ரோகித் அரைசதம்:

ஆண்டர்சன் (6), வந்த வேகத்தில் திரும்பினார். பின்,  ரோகித் சர்மா, போலார்டு சேர்ந்தனர். முதலில் சற்று  நிதானம் காட்டிய இந்த ஜோடி, போகப் போக ஆவேச  ரன் குவிப்பை வெளிப்படுத்தியது. ஆரோன் ஓவரில் மூன்று சிக்சர் உட்பட மொத்தம் 24  ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, அரைசதம் கடந்தார்.  கடைசி ஓவரில் போலார்டு (43) ரன் அவுட்டானார்.  மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள்  குவித்தது. ரோகித் சர்மா (59) அவுட்டாகாமல்  இருந்தார்.

 

நல்ல துவக்கம்:

கடின இலக்கைத் துரத்திய பெங்களூரு அணிக்கு  கெய்ல், பார்த்திவ் ஜோடி நம்பிக்கை தந்தது. பவான்  சுயல் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி என, கெய்ல்  விளாச, மொத்தம் 28 ரன்கள் கிடைத்தது.

 

கெய்ல் ஏமாற்றம்:

ஹர்பஜன் சுழலில் பார்த்திவ் படேல் (26) போல்டான  போதும், இதே ஓவரில் கெய்ல், ஒரு பவுண்டரி, சிக்சர்  என, விரட்டினார். மறுமுனையில், கோஹ்லி  தன்பங்கிற்கு போலார்டு, ஹர்பஜன் பந்துகளில் சிக்சர்  அடித்தார்.

 

விக்கெட் சரிவு:

மீண்டும் பந்தை சுழற்றிய ஹர்பஜன், அபாயகரமான  கெய்லை (38) போல்டாக்கினார். இதனிடையே,  டிவிலியர்ஸ் (9), கோஹ்லி (35) என, இருவரும்  அடுத்த ஓவரில் அவுட்டாக, பெங்களூரு அணிக்கு  சிக்கல் ஏற்பட்டது. அடுத்து வந்த யுவராஜ் சிங் (6 ரன், 10 பந்து), ஸ்டார்க்  (5), ஹர்ஷால் (6) கைவிட்டனர். ரோசாவ் (24)  போராடிய போதும், வெற்றிக்கு உதவவில்லை.பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168  ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. டிண்டா (2), ஆரோன்  (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

இத்தொடரில் 5 தோல்விக்குப் பின் பஞ்சாப்பை வென்ற  மும்பை அணி, பெங்களூருவையும் சாய்த்து,  இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

 

10வது வெற்றி

வான்கடே மைதானம் மும்பை அணியின் கோட்டை  என்பது மீண்டும் நிரூபணம் ஆனது. கடந்த 2013ல்  இங்கு பங்கேற்ற 8 லீக் போட்டிகளிலும் வென்ற  மும்பை அணி, ஏழாவது தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி  இருந்தது. நேற்று பெங்களூரு அணியை வென்ற இந்த அணி,  இம்மைதானத்தில் தொடர்ந்து 10வது வெற்றியை பதிவு  செய்தது.

ஜாகிர் கான் ‘அவுட்’

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்த போது, தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார். இது குணமடையாததால், எஞ்சியுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில், பங்கேற்க மாட்டார்.

இதற்கு முன் சென்னை அணியின் ‘ஆல் ரவுண்டர்’ பிராவோ, தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

 

போலார்டு–ஸ்டார்க் மோதல்

 

நேற்று போட்டியின் 17வது ஓவரை பவுலிங் செய்த ஸ்டார்க், 4வது பந்தை ‘பவுன்சராக’ வீசினார். இதை அடிக்க முயன்று ஏமாந்த போலார்டை நோக்கி ஏதோ கூறினார் ஸ்டார்க். இதற்கு போலார்டு, போ...போ என்பது போல சைகை செய்தார்.

பின் மீண்டும் பவுலிங் செய்ய வந்த போது, போலார்டு விலகிக் கொண்டார். உடனே பந்தை போலார்டு கால் பகுதியை நோக்கி எறிந்து வெறுப்பேற்றினார் ஸ்டார்க்.

இதனால் ஆத்திரமடைந்த போலார்டு தனது பேட்டை, ஸ்டார்க் நோக்கி எறிந்தார். நல்லவேளையாக அவரது கை நழுவி, பேட் கீழே விழுந்தது.

உடனடியாக தலையிட்ட அம்பயர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். கடைசியில் போலார்டை ரன் அவுட் செய்து கொண்டாடினார் ஸ்டார்க்.

 

கோஹ்லி ‘4000’

நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் கோஹ்லி 22 ரன்கள் எடுத்தபோது, ‘டுவென்டி–20’ அரங்கில் 4000 ரன்களை எட்டினார். இதன் மூலம், ‘டுவென்டி–20’ போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 15வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (6039), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் (5985), டேவிட் ஹசி (5503) உள்ளனர். கோஹ்லி இதுவரை 149 போட்டியில் பங்கேற்று 4013 ரன்கள் குவித்துள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/05/1399301856/BangaloreMumbaiIPLCricketRohitSharma.html

  • தொடங்கியவர்

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா
மே 03, 2014.

 

மும்பை: சென்னையில் நடக்கும் ‘பிளே ஆப்’ போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.      

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), இரு லீக் போட்டிகள் நடக்கின்றன. மே 27, 28ல் ‘பிளே ஆப்’ போட்டிகள், அதாவது தகுதிச்சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் என, மொத்தம் இந்த ஆண்டு 4 போட்டிகள் மட்டுமே நடக்கவுள்ளன.      

 

போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட மூன்று காலரிகள் குறித்து  குறித்து தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் பிரச்னை உள்ளது. தவிர, இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதுபோன்ற காரணங்கள், கடந்த ஆண்டு ‘பிளே ஆப்’ போட்டிகள் கடைசி நேரத்தில் டில்லிக்கு மாற்றப்பட்டது.      

 

இதுதொடர்பான வழக்கை, வரும் மே 6ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்தது. இதனால், இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மே 27, 28ல் நடக்கும் இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகளை, மும்பை பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்ற இருப்பதாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல், சூசகமாக தெரிவித்தார்.      

காரணம் என்ன: கடந்த ஆண்டு இதுதொடர்பான பிரச்னையால், சென்னை–டில்லி அணிகள் மோதிய போட்டிக்கு, ஆட்டம் துவங்கும் சில மணி நேரத்துக்குப் பின் தான் அனுமதி கிடைத்தது.      

 

இம்முறையும் தாமதமாக அனுமதி கிடைத்தால், இங்குள்ள மூன்று காலரிகளின் 21 ஆயிரம் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் இழப்பு ஏற்படலாம். இதை தவிர்க்கவே, போட்டிகளை மாற்றும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

 

http://sports.dinamalar.com/2014/05/1399124113/ChennaiGroundIPLMatchesCricket.html

  • தொடங்கியவர்

பஞ்சாப்பிடம் சென்னை அணி ‘பஞ்சர்’: இரண்டாவது முறையாக வீழ்ந்தது

கட்டாக்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மீண்டும் சொதப்பிய சென்னை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேக்ஸ்வெல், 90 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணிக்கு கைகொடுத்தார்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின், இரண்டாவது கட்ட போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஒடிசாவின் கட்டாக்கில் நடந்த லீக் போட்டியில், சென்னை, பஞ்சாப் அணிகள், இத்தொடரில் இரண்டாவது முறையாக மோதின.

‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் வழக்கம் போல, மாற்றம் இல்லை. பஞ்சாப் அணியில் புஜாரா, பாலாஜி நீக்கப்பட்டு, மன்தீப் சிங், முரளி கார்த்திக் சேர்க்கப்பட்டனர்.

மேக்ஸ்வெல் மிரட்டல்:

பஞ்சாப் அணியின் மன்தீப் சிங் (3) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய சேவக் (30), ஹில்பெனாசிடம் ‘சரண்’ அடைந்தார்.

பின் மில்லர், மேக்ஸ்வெல் ஜோடி இணைந்தது. அஷ்வினின் 2வது ஓவரில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரி என, மொத்தம் 21 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல், 22வது பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு கைகொடுத்த மில்லர் (47) போல்டானார்.

இந்நிலையில், 38 பந்தில் 90 ரன்னுக்கு (8 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டான மேக்ஸ்வெல், சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கடைசி நேரத்தில் கேப்டன் பெய்லி, தன் பங்கிற்கு 6 பவுண்டரிகள், 2 சிக்சர் என, விளாசினார். முதல் 60 பந்துகளில் 69 ரன்கள் மட்டும் எடுத்த பஞ்சாப், கடைசி 60 பந்தில், 162 ரன்கள் எடுத்தது.

20 ஓவரில், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு, 231 ரன்கள் குவித்தது. பெய்லி (40), ஜான்சன் (11), அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கு:

எட்ட முடியாத ஸ்கோரை ‘சேஸ்’ செய்த சென்னை அணிக்கு, எதுவுமே சரியாக அமையவில்லை. டுவைன் ஸ்மித் (4) விரைவாக பெவிலியன் திரும்பினார். மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ரெய்னா, 35 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக களமிறக்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா (17), நிலைக்கவில்லை. மெக்கலம் (33) தேவையில்லாமல் ரன் அவுட்டானார்.

டுபிளசி ஆறுதல்:

தனிநபராக போராடிய டுபிளசி அரைசதம்(52) கடந்து ஆறுதல் தந்தார். மறுபக்கம் தோற்கப் போகும் போட்டி தானே என தோனி(23) படுமந்தமாக ஆடினார்.

சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் மட்டும் எடுத்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அஷ்வின் (11), மன்ஹாஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது தோல்வி:

இத்தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சென்னை அணி தோற்றது. இதன் பின் பங்கேற்ற 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. நேற்று மீண்டும் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.

‘போனி’ ஆகாத தோனி

நேற்று சென்னை கேப்டன் தோனியின் உத்திகள் எதுவுமே எடுபடவில்லை. ‘டுவென்டி–20’ அரங்கில் ‘நம்பர்–1’ பவுலரான சாமுவேல் பத்ரீயை சேர்க்கவில்லை. மாறாக அஷ்வின், ஜடேஜாவை மீண்டும் அணியில் சேர்த்தார். இவர்கள் பவுலிங் செய்த 6 ஓவரில் மட்டும், பஞ்சாப் அணி 75 ரன்கள் எடுத்தது.

* தவறான இடங்களில் பீல்டர்களை நிறுத்தி, எதிரணியின் ரன் குவிப்புக்கு காரணமாக இருந்தார்.

* அதிரடிக்கு பெயர் போன இவர், கடைசி ஒன்று, இரண்டு ரன்களாக எடுத்து வெறுப்பேற்றினார்.

‘புஷ்’ ஆன அஷ்வின்

பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மேக்ஸ்வெல்லிடம் ‘உதை’ வாங்கிய அஷ்வின் (4 ஓவர், 41 ரன்). நேற்றும் ஏமாற்றினார். 2 ஓவரில் 38 ரன்கள் கொடுத்து பவுலிங்கில் ‘புஷ்’ ஆன அஷ்வினை, அடுத்து பவுலிங் செய்யவே தோனி அழைக்கவே இல்லை.

இதுவே அதிகம்

சென்னை அணிக்கு எதிராக 231 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி, இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதன்மூலம் தனது சொந்த சாதனையை முறியடித்தது. முன்னதாக சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 206 ரன்கள் (ஏப்., 18, இடம்–அபுதாபி) எடுத்திருந்தது. இது, ஐ.பி.எல்., அரங்கில் 5வது சிறந்த ஸ்கோர். முதலிடத்தில் பெங்களூரு அணி (263 ரன்கள், எதிர்–புனே, 2013) உள்ளது.

மீண்டும் ஏமாற்றம்

அபுதாபியில் கடந்த ஏப்., 18ல் நடந்த போட்டியில், சென்னை அணி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற கடின இலக்கை மிகச் சுலபமாக பஞ்சாப் அணி ‘சேஸ்’ செய்தது. நேற்று மீண்டும் பேட்டிங்கில் அசத்திய பஞ்சாப் அணி, 231 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்தது. கடந்த முறை கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்த சென்னை அணி 187 ரன்கள் மட்டும் எடுத்து மீண்டும் தோல்வி அடைந்து ஏமாற்றியது.

http://sports.dinamalar.com/2014/05/1399391965/dhonichennaiipl.html

பதிலடி கொடுத்தது கோல்கட்டா: டில்லியை வீழ்த்தியது

புதுடில்லி: டில்லிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், காம்பிர் அரைசதம் அடித்து கைகொடுக்க, கோல்கட்டா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இத்தொடரில் முன்னதாக டில்லியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான இரண்டாம் கட்டப் போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது. டில்லியில் நேற்று நடந்த தொடரின் 28வது லீக் போட்டியில், டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. டில்லி அணியில் ஜெயதேவ் உனத்கத் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். கோல்கட்டா அணியில் ரசலுக்கு பதிலாக காலிஸ் இடம் பிடித்தார். இத்தொடரில் முதன்முறையாக ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

பீட்டர்சன் ஏமாற்றம்:

சூர்யகுமார், காலிஸ் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த குயின்டன் டி காக் (10), உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ வௌியேறினார். அடுத்து வந்த கேப்டன் கெவின் பீட்டர்சன் (6) ‘ரன்–அவுட்’ ஆனார். முரளி விஜய் (24) நிலைக்கவில்லை. காலிஸ் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்த தினேஷ் கார்த்திக் (36), சாகிப் அல் ஹசன் ‘சுழலில்’ சிக்கினார். லட்சுமி ரத்தன் சுக்லா (10) ஏமாற்றினார்.

டுமினி ஆறுதல்:

பின் இணைந்த டுமினி, கேதர் ஜாதவ் ஜோடி பொறுப்பாக ஆடியது. வினய் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜாதவ், நரைன் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அசத்திய டுமினி, நரைன், காலிஸ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார்.

டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. டுமினி (40 ரன், 28 பந்து), ஜாதவ் (26 ரன், 15 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் காலிஸ், உமேஷ் யாதவ், சாகிப் அல் ஹசன், சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

காம்பிர் அபாரம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் கவுதம் காம்பிர், ராபின் உத்தப்பா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி, நதீம் ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த உத்தப்பா, டுமினி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது, உத்தப்பா (47) அரைசத வாய்ப்பை இழந்து அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிய காம்பிர், இத்தொடரில் தனது 2வது அரைசதத்தை பதிவு செய்தார். சுக்லா, டுமினி பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய காம்பிர் (69), பார்னல் ‘வேகத்தில்’ பெவிலியன் திரும்பினார்.

பின் இணைந்த மணிஷ் பாண்டே, காலிஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. நதீம் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காலிஸ், வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே (23), காலிஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் பார்னல் 2 விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதை கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் வென்றார்.

இதுவே அதிகம்

கோல்கட்டா அணியின் காம்பிர் 69 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இத்தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பெற்றார். இவரை அடுத்து மும்பையின் ரோகித் சர்மா (59*), ராஜஸ்தானின் ஷேன் வாட்சன் (50), பெங்களூருவின் விராத் கோஹ்லி (49*), ஐதராபாத்தில் ஷிகர் தவான் (38), சென்னையின் தோனி (32), டில்லியின் கெவின் பீட்டர்சன் (26*), பஞ்சாப் அணியின் ஜார்ஜ் பெய்லி (17*) ஆகியோர் உள்ளனர்.

அதிக அரைசதம்

நேற்று அபாரமாக ஆடிய கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், இத்தொடரில் தனது 2வது அரைசதத்தை பதிவு செய்தார். இது, ஐ.பி.எல்., அரங்கில் இவரது 22வது அரைசதம். இதன்மூலம் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இவரை அடுத்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா (20), சென்னை அணியின் ரெய்னா (19) உள்ளனர்.

http://sports.dinamalar.com/2014/05/1399482277/gambhircricketipl.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.