Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 IPL 7 செய்திகளும்... கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

மீண்டும் அசத்துமா ராஜஸ்தான்

ஆமதாபாத்: இன்றைய ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் அணியின் வெற்றி நடை தொடரும் என எதிர்பார்க்ப்படுகிறது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று குஜராத்தில் உள்ள ஆமதாபாத்தில் நடக்கும் 30வது லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 7 போட்டியில் பங்கேற்று 5ல் வென்று நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை சிறப்பாகவே உள்ளது. துவக்க வீரர்கள் ரகானே, கருண் நாயர் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. இதில் கடந்த இரண்டு போட்டியில் கருண் அதிரடியாக (73*,44) விளையாடினார். இது இன்றும் தொடரலாம்.

வாட்சன் அசத்தல்:

அடுத்த இடத்தில் களம் காணும் சாம்சன் இளம் நட்சத்திரமாக திகழ்கிறார். வாட்சன் அணியை திறம்பட நடத்துகிறார். தவிர, கடந்த போட்டியில் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய இவர் 3 விக்கெட் வீழ்த்தியது பலம். இக்கட்டான நிலையில் கைகொடுக்க ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். ஆனால், கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பின்னி கோட்டை விடுகிறார். இன்று இவர் எழுச்சி காண வேண்டும்.

டாம்பே ஜாலம்:

தனது 42 வயதிலும் எதிரணியை ‘சுழலில்’ சிக்க வைப்பதில் டாம்பே கில்லாடி. இன்றும் இவரை சமாளிப்பதுதான் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய தலைவலி. தொடர்ந்து சொதப்பி வரும் வேகப்பந்துவீச்சாளர் சவுத்திக்கு இன்றும் இடம் கிடைப்பது சந்தேகம்தான். மற்றபடி பால்க்னர், பாட்யா கைகொடுக்கலாம். கோல்கட்டா அணியை கலங்கடித்த இந்த கூட்டணி இன்றும் மிரட்டலாம்.

பின்ச் நம்பிக்கை:

ஐதராபாத் அணி 6ல் விளையாடி 4ல் தோற்று தடுமாறி வருகிறது. அணியின் பின்ச் நல்ல அடித்தளம் அமைக்கிறார். இவருக்கு சமீபத்தில் ‘பார்முக்கு’ திரும்பிய கேப்டன் ஷிகர் தவானின் பங்களிப்பும் கிடைக்கிறது. தவிர, பின்ச், வார்னர் ஜோடி கைகோர்த்தால் ரன் குவிப்பில் ஈடுபடலாம். ‘ஆல்–ரவுண்டர்’ சமியின் பங்களிப்பும் இருந்தால் நல்லது.

ஸ்டைன் பலம்:

வேகத்தில் மிரட்ட ஸ்டைன் புயல் தயார். ஆனால், கடந்த போட்டியில் பெங்களூரு அணியினர் இவரின் பந்தையும் விளாசினர். இதனால் இன்று கடின பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தவிர புவனேஷ்வர், இஷாந்த், இர்பான் என்ற மூவர் கூட்டணி உள்ளனர். சுழலில் கரண் சர்மா விக்கெட் வீழ்த்தலாம்.

http://sports.dinamalar.com/2014/05/1399482376/rajasthanipl.html

  • Replies 147
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இடம் மாறும் ஐ.பி.எல்., பைனல்
மே 07, 2014.

மும்பை: ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனல், மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின், ‘பிளே ஆப்’ போட்டிகளை எங்கு நடத்துவது என, குழப்பம் நிலவுகிறது. கடந்த ஆண்டு பைனலுக்கு முன்னேறிய அணி என்ற அடிப்படையில், சென்னையில் வரும் மே 27, 28ல் இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகள் (‘தகுதி சுற்று 1’, ‘எலிமினேட்டர்’ ) நடக்கவுள்ளன.

 

இந்த போட்டிகளை சென்னையில் இருந்து மும்பை, பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்ற இருப்பதாக  சில நாட்களுக்கு முன்  செய்தி வெளியானது.

இப்போது சென்னைக்குப் பதில், மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிகளை, ஐ.பி.எல்., நிர்வாகம் மாற்றுகிறது.

 

அதாவது, வான்கடேயில் மே 30ல் நடக்க இருந்த ‘தகுதிச்சுற்று 2’வது போட்டி, நிர்வாக காரணங்களுக்காக, கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவுக்கு (சி.சி.ஐ.,) சொந்தமான, மும்பை, பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

 

தவிர, ஜூன் 1ல் வான்கடேயில் நடக்கவுள்ள பைனலையும், சி.சி.ஐ.,க்கு மாற்ற இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

காரணம் என்ன:மும்பை, பெங்களூரு அணிகள் மோதிய லீக் போட்டியின் (மே 6) போது, ரசிகர்கள் பெரும் கூச்சலிட்டனர். இதேபோல, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் (மே 3) போதும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.

 

தவிர, கடந்த 2011ல் உலக கோப்பை பைனல் நடந்த போதும், மும்பை கிரிக்கெட் சங்கம், டிக்கெட் விற்பனை உட்பட பல விஷயங்களில் குளறுபடிகளை நிகழ்த்தியது.

இதுபோன்ற காரணங்களால், ஜூன் 1ல் நடக்கவுள்ள பைனலையும் மாற்றும் திட்டத்தில் பி.சி.சி.ஐ., உள்ளதாம்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1399482028/iplfinalplace.html

  • தொடங்கியவர்

பொலார்ட், ஸ்டார்க் ஆகியோருக்கு அபராதம்
 

 

மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணிக்கும் இடையில் வான்கடே விளையாட்டரங்கில் செவ்வாயன்று நடைபெற்ற போட்டியின்போது பலத்த வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட கீரொன் பொலார்ட், மிச்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி பொது மத்தியஸ்தர் அண்டி பைக்ரொஃவ்டினால் இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

இண்டியன் ப்றீமியர் லீக்கிற்கான ஒழுக்க விதிகளை மீறியதாக இரண்டு வீரர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

இதனை அடுத்து பொலார்டுக்கு போட்டிக் கட்டணத்தில் 75 வீதமும் ஸ்டார்க்குக்கு 50 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள்ள 20 ஓவர்களை வீசத் தவறியமைக்காக மும்பை இண்டியன்ஸ் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, றோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

 

ரோஹித் ஷர்மா இரண்டாவது தடவையாக இந்தத் தவறை இழைத்ததால் அவருக்கு இந்திய நாணயப்படி 24 இலட்சம் ரூபாவும் விராத் கோஹ்லிக்கு 12 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது. (என்.வீ.ஏ.)
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5413#sthash.j8p31TUE.dpuf

  • தொடங்கியவர்

ராஜஸ்தான் அதிர்ச்சித் தோல்வி:வீணானது வாட்சன் ‘ஹாட்ரிக்’
மே 07, 2014.

ஆமதாபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில், பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டத்தினால், ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. வாட்சனின் ‘ஹாட்ரிக்’ வீணானது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின், இரண்டாவது கட்ட போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. இதில் நேற்று ஆமதாபாத்தில் நடந்த 30வது லீக் போட்டியில், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின.

 

‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஷேன் வாட்சன், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

தவான் நம்பிக்கை:

ஐதராபாத் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், பின்ச் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரிச்சர்ட்சன், குல்கர்னி ஓவர்களில் தலா இரண்டு பவுண்டரி அடித்தார் ஷிகர் தவான்.

20 பந்தில் 33 ரன்கள் எடுத்த ஷிகர் தவானை, வாட்சன் தனது முதல் ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாக்கினார்.

 

அசத்தல் பவுலிங்:

இதன் பின் ராஜஸ்தான் பவுலர்கள், எழுச்சி பெற்றனர். பின்ச் (9), லோகேஷ் ராகுல் (18), ரஜத் பாட்யா வேகத்தில் வெளியேறினர். வார்னர் (6), பிரவின் டாம்பே சுழலில் சிக்கினார். நமன் ஓஜாவும் (17) நீடிக்கவில்லை.

 

வாட்சன் ‘ஹாட்ரிக்’:

மீண்டும் பவுலிங் செய்ய வந்த வாட்சன், தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில், ஹென்ரிக்சை (9) வெளியேற்றினார். அடுத்த பந்தில் கரண் சர்மா ‘டக்’ அவுட்டாக, வாட்சன் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

 

ஸ்டைன் (9), அமித் மிஸ்ரா (0)  ரன் அவுட்டாகினர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டும் எடுத்தது. இர்பான் பதான் (21) அவுட்டாகாமல் இருந்தார். ராஜஸ்தான் சார்பில் வாட்சன், ரஜத் பாட்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

எளிய இலக்கு: எட்டிவிடும் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  புவனேஷ்வரின் முதல் ஓவரில், ரகானே ‘டக்’ அவுட்டானார். கருண் நாயர் (12), ஸ்டைன் வேத்தில் சிக்கினார்.

 

புவனேஷ்வர் அபாரம்:

சாம்சனை (16), கரண் சர்மா போல்டாக்கினார். கைகொடுப்பார் என்று நம்பப்பட்ட வாட்சன், 11 ரன்கள் மட்டும் எடுக்க, 41 ரன்னுக்கு, 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பின் இணைந்த பின்னி, ஸ்டீவன் ஸ்மித் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இந்நிலையில், பின்னி (12), வார்னரின் ‘சூப்பர் த்ரோவில்’ ரன் அவுட்டானார்.

ஸ்மித் (22), ஸ்டைனின் ‘சரண்’ அடைய, ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. புவனேஷ்வர் வீசிய போட்டியின் 18வது ஓவரில், பால்க்னர் (4), பாட்யா (4) ரிச்சர்ட்சன் (1) அவுட்டாகினர்.

 

கடைசியில் டாம்பேவும் (3) அவுட்டாக, ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில், 102 ரன்னுக்கு சுருண்டு, 32 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. குல்கர்னி (7) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார் 4, ஸ்டைன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

இரண்டாவது ‘ஹாட்ரிக்’           

நேற்று பவுலிங்கில் அசத்திய வாட்சன், தனது முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவானை அவுட்டாக்கினார். இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஹென்ரிக்சை வௌியேற்றிய வாட்சன், அடுத்த பந்தில் கரண் சர்மாவையும் அவுட்டாக்கி, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில், இது இரண்டாவது ‘ஹாட்ரிக்’. இதற்கு முன், கடந்த 5ம் தேதி கோல்கட்டா அணிக்கு எதிராக, ராஜஸ்தான் வீரர் பிரவின் டாம்பே, இச்சாதனை நிகழ்த்தினார். தவிர, ஐ.பி.எல்., வரலாற்றில் இது 13வது ‘ஹாட்ரிக்’ ஆக அமைந்தது.     

 

*  ராஜஸ்தான் சார்பில் 2012 ல் சண்டிலா (பஞ்சாப்), இந்த ஆண்டு பிரவின் டாம்பே (கோல்கட்டா), தற்போது வாட்சன் என, மூன்று பேர் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்துள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1399482376/rajasthanipl.html

  • தொடங்கியவர்

ச்சத்தக்கவர் மேக்ஸ்வெல்: பாராட்டுகிறார் சேவக்
மே 08, 2014.

 

கட்டாக்: ‘‘எதிரணிக்கு அச்சம் தருவதில், என்னையும், கெய்லையும் விட சிறந்தவர் மேக்ஸ்வெல் தான்,’’ என, சேவக் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல். ஐ.பி.எல்., தொடரில் கடந்த ஆண்டு மும்பை அணியில் ரூ. 5.31 கோடிக்காக விளையாடினார். மொத்தம் 3 போட்டிகளில் 36 ரன்கள் மட்டும் எடுக்க, 16 போட்டிகளில் களமிறக்கப்படவில்லை.

 

இதையடுத்து, இந்த ஆண்டு ஏலத்தில் பஞ்சாப் அணி ரூ. 6 கோடிக்கு மேக்ஸ்வெல்லை வாங்கியது. அணி மாறிய அதிர்ஷ்டமோ என்னவோ, மேக்ஸ்வெல் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில், 27 சிக்சர்கள் உட்பட 435 ரன்கள் குவித்துள்ளார்.

 

இவரது அசத்தல் கைகொடுக்க, பஞ்சாப் அணி 6 வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர் சேவக் கூறியது:

எதிரணிக்கு பேரழிவு ஏற்படுத்துவதில் என்னையும், வெஸ்ட் இண்டீசின் கெய்லையும் விட, மேக்ஸ்வெல் தான் அபாயகரமான வீரர். இவர், பயிற்சியின் போது கோல்ப் தான் அதிகம் விளையாடுவார். கிரிக்கெட் குறித்து கவலைப் பட்டதாக தெரியவில்லை. கடினம் தான்:

 

இப்போதுள்ள ‘பார்ம்’ தொடர்ந்தால், மீதமுள்ள போட்டிகளிலும் இவரை கட்டுப்படுத்துவது கடினம். எந்த பவுலர், பீல்டர் என்பதெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

சிறுவர்கள் புத்தகத்தில் விளையாடும் கிரிக்கெட்டில், பவுண்டரி, சிக்சர் என, மாறி மாறி வரும். அதுபோல, இவரும் சிக்சர், பவுண்டரி என, தொடர்ந்து விளாசுகிறார். மொத்தத்தில் இவரது பேட்டிங்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

 

அபாய ஜோடி:

மேக்ஸ்வெல், மில்லர் களத்தில் நிலைத்து விட்டால், எதிரணிக்கு பவுலிங் செய்வது சிக்கலாகி விடும். ஒருவர் பந்தை அடிக்காமல் விட்டுவிட்டால், மற்றொருவர் சிக்சர் அடித்து விடுகிறார்.

என்னைப் பொறுத்தவரை 20, 30 என்று தான் ரன்கள் எடுக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் பெரியளவில் ஸ்கோர் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சேவக் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/05/1399563116/shewagcricketipl.html

  • தொடங்கியவர்

‘கில்லர்’ மில்லர் கலக்கல்: பஞ்சாப் அணிக்கு 7வது வெற்றி

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், பஞ்சாப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய டேவிட் மில்லர் அரைசதம் அடித்தார். பெங்களூரு அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது. இத்தொடரில் 7வது வெற்றியை பெற்ற பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த 7வது ஐ.பி.எல்., தொடருக்கான 31வது லீக் போட்டியில், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மில்லர் அபாரம்:

பஞ்சாப் அணிக்கு சேவக் (30), மன்தீப் சிங் (21) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. யுவராஜ் வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய மேக்ஸ்வெல் (25) நிலைக்கவில்லை. கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1) ஏமாற்றினார். பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்த மில்லர், ஸ்டார்க் வீசிய 13வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். ஹர்சல் வீசிய 16வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடித்த இவர், இத்தொடரில் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். விரிதிமன் சகாவும் தன்பங்கிற்கு ஒரு சிக்சர் அடிக்க, இந்த ஓவரில் அதிகபட்சமாக 26 ரன்கள் கிடைத்தது. மில்லர், 29 பந்தில் 66 ரன்கள் (3 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து, அவுட்டானார்.

விரிதிமன் சகா (17), அக்சர் படேல் (2), சிவம் சர்மா (4) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. மிட்சல் ஜான்சன் (16), பாலாஜி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சந்தீப் மிரட்டல்:

சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சந்தீப் சர்மா ‘வேகத்தில்’ தடுமாறியது. இவரது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கிறிஸ் கெய்ல் (4) அவுட்டானார். இரண்டாவது பந்தில் கீப்பர் சகாவின் சர்ச்சைக்குரிய ‘கேட்ச்சில்’ கேப்டன் கோஹ்லி (0) பெவிலியன் திரும்பினார். மூன்றாவது பந்தை சச்சின் ராணா தடுத்தாட ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. மற்றொரு துவக்க வீரர் பார்த்திவ் படேல் (13), சந்தீப் சிங்கிடம் சரணடைந்தார்.

டிவிலியர்ஸ் ஆறுதல்:

பாலாஜி வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசிய ராணா (18), அக்சர் படேல் பந்தில் போல்டானார். ஐ.பி.எல்., அறிமுக வீரர் சிவம் சர்மா ‘சுழலில்’ யுவராஜ் சிங் (3) நடையை கட்டினார். மேக்ஸ்வெல் வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய ஆல்பி மார்கல் (16), சிவம் சர்மாவிடம் சிக்கினார். பாலாஜி பந்தில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் விளாசிய டிவிலியர்ஸ், 25 பந்தில் அரைசதம் கடந்தார். பொறுப்பாக ஆடிய இவர், 26 பந்தில் 53 ரன்கள் (5 சிக்சர்) எடுத்து அவுட்டானார். ஹர்சல் படேல் (6) ஏமாற்றினார். மிட்சல் ஸ்டார்க் (29) ஆறுதல் தந்தார்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. வருண் ஆரோன் (17), சாஹல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் சர்மா 3, பாலாஜி, சிவம் சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

300வது சிக்சர்

யுவராஜ் வீசிய 8வது ஓவரில் சிக்சர் அடித்த மேக்ஸ்வெல், இத்தொடரின் 300வது சிக்சரை பதிவு செய்தார்.

102 மீ., துாரம்

ஹர்சல் படேல் வீசிய 16வது ஓவரின் 2வது பந்தை டேவிட் மில்லர் துாக்கி அடிக்க, அது மைதானத்தின் மேற்கூரைக்கு சென்றது. இதன் அளவு 102 மீ., துாரமாக கணக்கிடப்பட்டது.

முதலும்...முடிவும்

மிட்சல் ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை சேவக் பவுண்டரிக்கு விரட்டினார். இதேபோல ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை மிட்சல் ஜான்சன் பவுண்டரிக்கு விளாசினார். இதன்மூலம் முதலும், முடிவும் பஞ்சாப் அணிக்கு பவுண்டரியாக அமைந்தது.

மீண்டும் தோல்வி

துபாயில், கடந்த ஏப்., 24ம் தேதி நடந்த லீக் போட்டியில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது. நேற்று மீண்டும் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி, சொந்த மண்ணில் (சின்னசாமி மைதானம், பெங்களூரு) பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து ஏமாற்றியது.

http://sports.dinamalar.com/2014/05/1399564353/yuvrajipl.html

  • தொடங்கியவர்

பிரீமியர் கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி


மே 10,2014 18:50

புதுடில்லி: 7வது பிரீமியர் கிரிக்கெட் தொடரில் 32வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியும் டில்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்க 143 ரன்கள் எடுத்துள்ளது. இதன் பின்னர் ஐதராபாத் அணி களமிறங்கியது. போட்டியில் கடுமையாக மழை பெய்ததால் ஐதராபாத் அணி 5 ஓவரில் 43 ரன்கள் எடுக்க வேண்டும் என டக்வெர்த் லீயிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி 4.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில், டக்வெர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=972609

 

  • தொடங்கியவர்

மழையால் டில்லி காலி
மே 10, 2014.

 

புதுடில்லி:  ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி, ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறைப்படி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. இதையடுத்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில், பீட்டர்சனின் டில்லி அணி, ஷிகர் தவானின் ஐதராபாத் அணியை சந்தித்தது.

‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. டில்லி அணியில் முரளி விஜய், நதீம், பார்னல் நீக்கப்பட்டு, ராகுல் சுக்லா, மயங்க் அகர்வால், இம்ரான் தாகிர் சேர்க்கப்பட்டனர்.

 

பீட்டர்சன் நம்பிக்கை:

டில்லி அணிக்கு இம்முறை பீட்டர்சன், குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் கொடுத்தது. குயின்டன் 7 ரன்னுக்கு அவுட்டானார். கெவின் பீட்டர்சன் இம்முறை சற்று நம்பிக்கையுடன் விளையாடினார். புவனேஷ்வர் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த இவர், கரண் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.

தொடர்ந்து ஹென்ரிக்ஸ் ஓவரிலும் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். 19 பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சனை, அமித் மிஸ்ரா, தனது 100வது விக்கெட்டாக சாய்த்தார்.

 

மழை குறுக்கீடு:

தொடர்ந்து அசத்திய இவர், மயங்க் அகர்வாலையும் (25) கிளப்பினார். 13.1 ஓவரில் டில்லி அணி 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டது.

1 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மீண்டும் போட்டி துவங்கிய போதும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

 

தினேஷ் கார்த்திக் (39), லட்சுமி சுக்லா (21) இருவரும் ஹென்ரிக்ஸ் ஓவரில் அவுட்டாகினர். டுமினி 4, கேதார் ஜாதவ் 5 என, அவுட்டாக, டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்தது. ராகுல் சுக்லா (2) அவுட்டாகாமல் இருந்தார்.

 

மீண்டும் தொல்லை:

டில்லி அணிக்கு 15 ஓவர்களில் 117 ரன்கள் என இலக்கு மாற்றப்பட்டது. மறுபடியும் மழை வர, அடுத்து 12 ஓவர்களில் 97 ரன்கள் என, மாறியது இலக்கு. ஷிகர் தவான் (4) அவுட்டானதும், மீண்டும் மழை குறுக்கிட்டது.

 

பின் 5 ஓவரில் 43 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்ச் (4) விரைவில் அவுட்டானார். அடுத்து வந்த நமன் ஓஜா, இரண்டு சிக்சர் அடிக்க, ஐதராபாத் அணி 4.2 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து, ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறைப்படி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நமன் ஓஜா (13), வார்னர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

டில்லி அவ்ளோதான்:

இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 2ல் மட்டும் வென்ற (7 தோல்வி), டில்லி அணி 4 புள்ளிகள் மட்டும் பெற்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அடுத்த சுற்று வாய்ப்பு சந்தேகம் தான்.

 

அமித் மிஸ்ரா ‘100’

நேற்று பீட்டர்சனை வீழ்த்திய ஐதராபாத் அணி சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஐ.பி.எல்., அரங்கில் 100வது விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது பவுலர் என்ற பெருமை பெற்றார்.

இதுவரை மொத்தம் 83 போட்டிகளில் பங்கேற்று, 101 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மும்பை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, 114 விக்கெட் (80 போட்டி) சாய்த்து முதலிடத்தில் உள்ளார்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1399738915/dineshkarthikcricket.html

  • தொடங்கியவர்

Screenshot85_zpsd3714caa.png

 

 

Screenshot86_zps5c0eebae.png

 

  • தொடங்கியவர்

சென்னை அணி வெற்றி
மே 09, 2014.

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஹில்பெனாஸ் நீக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் சிம்மன்ஸ், பிரவீண் குமார் இடம் பெற்றனர். 

 

மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (38) நல்ல துவக்கம் தந்தார். கவுதம் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். ராயுடு அரை சதம் கடந்தார். அஷ்வின் ‘சுழலில்’ ரோகித் (19), போலார்டு (0) சிக்கினர். மோகித் பந்தில் ராயுடு (59) அவுட்டானார். ஆதித்யா தாரே (9) நிலைக்கவில்லை. முடிவில், மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.

சற்று கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் ஸ்மித். மெக்கலம் (13), அம்பயரின் தவறான தீர்ப்பில் திரும்பினார். அடுத்து ரெய்னாவும் (19 ரன், 11 பந்து) வெளியேறினார்.

 

பின் ஸ்மித், டுபிளசி ஜோடி இணைந்து. போலார்டு வீசிய போட்டியின் 10வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஸ்மித், ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார்.

திடீர் சரிவு:

மறுமுனையில், ஆண்டர்சன் பந்தை டுபிளசி சிக்சருக்கு விரட்ட, சென்னை அணி 14வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் 5வது அரைசதம் கடந்த ஸ்மித் (57), டுபிளசி (31) அடுத்தடுத்து அவுட்டாக, சென்னை அணிக்கு சற்று சிக்கல் ஏற்பட்டது. அடுத்து மலிங்கா ஓவரில் ஜடேஜா (6), மன்ஹாஸ் (1) அவுட்டாக, ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

 

தோனி ‘பினிஷிங்’:

 

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. போலார்டு வீசிய இந்த ஓவரை, ‘பினிஷிங்’ மன்னன் தோனி எதிர்கொண்டார்.முதல் பந்து உதிரியானது (‘வைடு’). பின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தோனி, அடுத்த இரு பந்தில் சிக்சர், பவுண்டரி என, விளாசி, வெற்றி தேடித்தந்தார். சென்னை அணி 19.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி (22), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1399656728/BrendonMcCullumcricket.html

 

  • தொடங்கியவர்

சென்னைக்கு ‘முதல்’ வெற்றி: தோனி ‘சிக்சரில்’ தகர்ந்தது மும்பை
மே 09, 2014.

மும்பை: ஐ.பி.எல்., வரலாற்றில், மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

 

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, மீண்டும் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஹில்பெனாஸ் நீக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் சிம்மன்ஸ், பிரவீண் குமார் இடம் பெற்றனர்.

 

ராயுடு அரைசதம்:

மும்பை அணிக்கு கவுதம் (9) துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். பத்ரீ ஓவரில் இரண்டு சிக்சர்கள் விளாசிய சிம்மன்ஸ் (38), ஸ்கோரை அதிகரிக்கும் முயற்சியில் வீழ்ந்தார். ஜடேஜா பந்துகளில் அவ்வப்போது சிக்சர் அடித்த அம்பதி ராயுடு, அரைசதம் எட்டினார்.

 

தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மா (19) அஷ்வின் சுழலில் சிக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், ‘அபாய’ போலார்டையும் ‘டக்’ அவுட்டாக்கினார்.

43 பந்தில் 59 ரன்கள் எடுத்தார் அம்பதி ராயுடு. மும்பை அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. ஆண்டர்சன் (18) அவுட்டாகாமல் இருந்தார்.

 

ஸ்மித் அபாரம்:

சற்று கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் ஸ்மித். மெக்கலம் (13), அம்பயரின் தவறான தீர்ப்பில் திரும்பினார். அடுத்து ரெய்னாவும் (19 ரன், 11 பந்து) வெளியேறினார்.

 

பின் ஸ்மித், டுபிளசி ஜோடி இணைந்து. போலார்டு வீசிய போட்டியின் 10வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஸ்மித், ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார்.

திடீர் சரிவு:

மறுமுனையில், ஆண்டர்சன் பந்தை டுபிளசி சிக்சருக்கு விரட்ட, சென்னை அணி 14வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் 5வது அரைசதம் கடந்த ஸ்மித் (57), டுபிளசி (31) அடுத்தடுத்து அவுட்டாக, சென்னை அணிக்கு சற்று சிக்கல் ஏற்பட்டது.

அடுத்து மலிங்கா ஓவரில் ஜடேஜா (6), மன்ஹாஸ் (1) அவுட்டாக, ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

 

தோனி ‘பினிஷிங்’:

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. போலார்டு வீசிய இந்த ஓவரை, ‘பினிஷிங்’ மன்னன் தோனி எதிர்கொண்டார்.

முதல் பந்து உதிரியானது (‘வைடு’). பின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தோனி, அடுத்த இரு பந்தில் சிக்சர், பவுண்டரி என, விளாசி, வெற்றி தேடித்தந்தார்.

சென்னை அணி 19.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி (22), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

முற்றுப்புள்ளி

கடந்த 2013 தொடரில் 8 போட்டி, இத்தொடரில் முதல் 2 போட்டி என, மொத்தம் 10 போட்டிகளில், வான்கடே மைதானத்தில் மும்பை அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. நேற்று சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து, மும்பை கோட்டை தகர்ந்தது.

 

ஏக்கம் தீர்ந்தது

கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் 2008, 2010, 2011, 2012, 2013 என, ஐந்து தொடர்களில், மும்பை வான்கடே மைதானத்தில், தோனி தலைமையிலான சென்னை அணி, மும்பை அணியை வீழ்த்தியது கிடையாது.

நேற்று முதன் முறையாக மும்பையை வென்ற சென்னை அணி, புதிய வரலாறு படைத்தது.

 

குழப்பமான தீர்ப்புகள்

நேற்று சென்னை–மும்பை அணிகள் மோதிய போட்டியில், அம்பயர்களின் பல தீர்ப்புகள் குழப்பமாகவே இருந்தன. பந்து ‘ஸ்டம்சை’ விட்டு நன்கு விலகிச் சென்ற நிலையிலும், பிரண்டன் மெக்கலத்துக்கு எல்.பி.டபிள்யு., தரப்பட்டது.

அடுத்து ரெய்னாவுக்கு, ‘ரீப்ளேயில்’ நீண்ட நேரம் பார்த்து  குழம்பிய அம்பயர், சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு தராமல், ‘அவுட்’ கொடுத்தார்.

தொடர்ந்து மலிங்கா பந்தில் ஜடேஜாவுக்கு, எல்.பி.டபிள்யு., அவுட் தர மறுக்கப்பட்டது

 

http://sports.dinamalar.com/2014/05/1399656728/BrendonMcCullumcricket.html

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணி வெற்றி
மே 10, 2014.

 

கட்டாக்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. கட்டாக்கில் இன்று நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின.‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

பஞ்சாப் அணிக்கு சேவக் (72) அரை சதம் கடந்து கைகொடுத்தார். மன்தீப் சிங் (0), சகா (15) அடுத்தடுத்து வெளியேறினர். மேக்ஸ்வெல் (14), மில்லர் (13) ஏமாற்றினர். பின் வந்தவர்களும் விரைவில் வெளியேற, பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் பெய்லி (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோல்கட்டா அணிக்கு ராபின் உத்தப்பா (46) அசத்தலாக செயல்பட்டார். காம்பிர் அரை சதம் கடந்தார். கோல்கட்டா அணி 18 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. காம்பிர் (63), மனீஷ் பாண்டே (36) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1399739392/maxwellpunjab.html

  • தொடங்கியவர்

காம்பிர் தந்தார் கம்பீர வெற்றி: சேவக் ஆட்டம் வீண்

மே 11, 2014.

கட்டாக்: ஐ.பி.எல்., லீக் போட்டியில், கேப்டன் காம்பிர் அரைசதம் அடித்து கைகொடுக்க, கோல்கட்டா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஏற்கனவே பஞ்சாப் அணியிடம் சந்தித்த தோல்விக்கு, சரியான பதிலடி கொடுத்தது. பஞ்சாப் சார்பில் 72 ரன்கள் விளாசிய சேவக் ஆட்டம் வீணானது.

கட்டாக்கில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சேவக் அபாரம்:

பஞ்சாப் அணிக்கு மன்தீப் சிங் (0) சகா (15) ஏமாற்றினர். காலிஸ் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் நான்கு பவுண்டரி விளாசிய சேவக், பொறுப்பாக ஆடினார். ‘அதிரடி’ மேக்ஸ்வெல் (14) இம்முறை தாக்குப்பிடிக்கவில்லை. மார்னே மார்கலின் 14வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்த சேவக், ஐ.பி.எல்., அரங்கில் தனது 16வது அரைசதம் அடித்தார். இவர், 72 ரன்களுக்கு, பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ போல்டானார்.

டேவிட் மில்லர் (13) விரைவில் வெளியேற, பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது. சுனில் நரைன் ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் மிட்சல் ஜான்சன் (14). பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜார்ஜ் பெய்லி (12) அவுட்டாகாமல் இருந்தார்.

சூப்பர் துவக்கம்:

சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு உத்தப்பா, காம்பிர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சந்தீப் சர்மா வீசிய 3வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த உத்தப்பா, ஜான்சன் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்சர், ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த போது, உத்தப்பா (46) அவுட்டானார்.

காம்பிர் அரைசதம்:

பின் இணைந்த காம்பிர், மணிஷ் பாண்டே ஜோடி பொறுப்பாக ஆடியது. அக்சர் படேல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் தனது 23வது அரைசதத்தை பதிவு செய்தார். கோல்கட்டா அணி 18 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் (63), மணிஷ் பாண்டே (36) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை காம்பிர் வென்றார்.

சபாஷ் கேப்டன்

கோல்கட்டா அணி கேப்டன் கவுதம் காம்பிர், இத்தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக ‘டக்–அவுட்’ ஆனார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய இவர், கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் (54, 69, 63 ரன்கள்) அடித்தார்.

http://sports.dinamalar.com/2014/05/1399826492/gambhircricketipl.html

  • தொடங்கியவர்

அதிசயம் நிகழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்மித், பால்க்னர் விளாசல்

மே 11, 2014.

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில், கடைசி 17 பந்தில் 65 ரன்கள் விளாசிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஸ்டீவன் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னரின் அதிரடி வெற்றிக்கு கைகொடுத்தது. ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய பெங்களூரு அணியின் யுவராஜ் சிங் (83 ரன், 4 விக்கெட்) ஆட்டம் வீணானது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

யுவராஜ் அபாரம்:

பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (4), கிறிஸ் கெய்ல் (19), விஜய் ஜோல் (16) ஏமாற்றினர். சிக்சர் மழை பொழிந்த யுவராஜ், ஐ.பி.எல்., அரங்கில் தனது 7வது அரைசதத்தை பதிவு செய்தார். யுவராஜ் 83 ரன்களுக்கு(38 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட்டானார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், பால்க்னர் வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் விளாசி, அரைசதம் கடந்தார். இவர் 58 ரன்களுக்கு(32 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல் (1), பார்த்திவ் படேல் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

கருண் அரைசதம்:

கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ரகானே (24) ஏமாற்றினார். யுவராஜ் ‘சுழலில்’ கேப்டன் வாட்சன் (1), ஸ்டூவர்ட் பின்னி (1) அவுட்டானார்கள். பொறுப்பாக ஆடிய கருண் நாயர் (56) அரைசதம் அடித்தார். சஞ்சு சாம்சன் (13) நிலைக்கவில்லை. இதையடுத்து 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

சூப்பர் ஜோடி:

இனி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ராஜஸ்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை காணப்பட்டது. இந்த நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னர் சேர்ந்து திருப்புமுனை ஏற்படுத்தினர். போட்டியின் கடைசி 4 ஓவர்களில் பெங்களூரு பந்துவீச்சை புரட்டி எடுத்த இவர்கள், சிக்சர் மழை பொழிந்தனர். டிண்டா வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்தார் ஸ்மித். ஆரோன் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசிய பால்க்னர், அணியை நம்ப முடியாத வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. ஸ்மித் (48 ரன், 21 பந்து, 4 சிக்சர், 4 பவுண்டரி), பால்க்னர் (41 ரன், 17 பந்து, 3 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் யுவராஜ் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை ராஜஸ்தான் அணியின் பால்க்னர் வென்றார்.

புதிய சாதனை

நேற்று பெங்களூரு அணியின் டிவிலியர்ஸ், யுவராஜ் சிங் ஜோடி 132 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. முன்னதாக 2012ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணியின் டிவிலியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது.

http://sports.dinamalar.com/2014/05/1399825505/yuvrajcricketipl.html

  • தொடங்கியவர்

ரன் அவுட் சர்ச்சை: ஐ.பி.எல். நடுவர் சஞ்சய் ஹசாரே நீக்கம் 

 

  மும்பை: ஐ.பி.எல். போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் ஹசாரே அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் மே 3-ந் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இடையிலான ஆட்டத்தின் போது டெல்லி கேப்டன் கெவின் பீட்டர்சனுக்கு ரன்-அவுட் கேட்டு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் மூன்றாவது நடுவரின் ஆலோசனை பெறாமலேயே வீரர்களின் அப்பீலை நடுவர் சஞ்சய் ஹசாரே நிராகரித்தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பீட்டர்சன் ரன்-அவுட் ஆகியிருப்பது தெளிவாக தெரிந்தது. இந்த தவறுக்காக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.in/news/sports/after-controversial-run-out-call-umpire-sanjay-hazare-removed-200692.html

Read more at: http://tamil.oneindia.in/news/sports/after-controversial-run-out-call-umpire-sanjay-hazare-removed-200692.html

  • தொடங்கியவர்

பொலார்ட், ஸ்டார்க் ஆகியோருக்கு அபராதம்
 

 

மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணிக்கும் இடையில் வான்கடே விளையாட்டரங்கில் செவ்வாயன்று நடைபெற்ற போட்டியின்போது பலத்த வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட கீரொன் பொலார்ட், மிச்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி பொது மத்தியஸ்தர் அண்டி பைக்ரொஃவ்டினால் இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


இண்டியன் ப்றீமியர் லீக்கிற்கான ஒழுக்க விதிகளை மீறியதாக இரண்டு வீரர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதனை அடுத்து பொலார்டுக்கு போட்டிக் கட்டணத்தில் 75 வீதமும் ஸ்டார்க்குக்கு 50 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள்ள 20 ஓவர்களை வீசத் தவறியமைக்காக மும்பை இண்டியன்ஸ் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, றோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ரோஹித் ஷர்மா இரண்டாவது தடவையாக இந்தத் தவறை இழைத்ததால் அவருக்கு இந்திய நாணயப்படி 24 இலட்சம் ரூபாவும் விராத் கோஹ்லிக்கு 12 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது. (என்.வீ.ஏ.)
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5413#sthash.lulkctlc.dpuf

  • தொடங்கியவர்

முதலிடத்துக்கு முன்னேறுமா சென்னை: இன்று ராஜஸ்தானுடன் மோதல்

மே 12, 2014.ராஞ்சி: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற சென்னை அணி காத்திருக்கிறது.     

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான இரண்டாம் கட்டப் போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது. ராஞ்சியில் இன்று நடக்கும் லீக் போட்டியில், சென்னை அணி, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.     

 

எட்டாவது வெற்றி: இதுவரை விளையாடிய 9 போட்டியில் 7 வெற்றி, 2 தோல்வி உட்பட 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் சென்னை அணி உள்ளது. ‘ரன்–ரேட்’ அடிப்படையில் 14 புள்ளிகள் பெற்ற பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது. இன்று ராஜஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில், 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறலாம். வான்கடே மைதானத்தில் மும்பை அணியின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைத்த உற்சாகத்தில் உள்ள சென்னை அணி, இன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் களமிறங்குகிறது. எனவே உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு தோனியின் படை சாதிக்கலாம்.     

 

ஸ்மித் நம்பிக்கை: சென்னை அணியின் பேட்டிங்கில் டுவைன் ஸ்மித் (396 ரன்கள்), பிரண்டன் மெக்கலம் (327 ரன்கள்) நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்கள் சிறந்த துவக்கம் கொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். ‘மிடில்–ஆர்டரில்’ டுபிளசி, கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டலாம்.     

 

இன்றைய போட்டியில் ரவிந்திர ஜடேஜா (11 விக்கெட்) ‘சுழலில்’ முக்கிய பங்குவகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு அஷ்வின் (10 விக்கெட்), சாமுவேல் பத்ரி ஒத்துழைப்பு தந்தால் கூடுதல் பலம். வேகப்பந்துவீச்சில் மோகித் சர்மா (15 விக்கெட்), பென் ஹில்பெனாஸ் (8 விக்கெட்) அசத்துகின்றனர். 

    

இரண்டாவது இடம்: இதுவரை விளையாடிய 9 போட்டியில் 6 வெற்றி, 3 தோல்வி உட்பட 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, இன்று சிறந்த வெற்றியை பதிவு செய்தால், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. கடைசியாக பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ரன்கள் என்ற இலக்கை 18.5 ஓவரில் ‘சேஸ்’ செய்து சிறந்த வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் ராஜஸ்தான் அணி இன்று களமிறங்குகிறது.     

 

பெங்களூருவுக்கு எதிராக அரைசதம் அடித்து சிறந்த துவக்கம் கொடுத்த கருண் நாயர் இன்றும் கைகொடுக்கலாம். இவருக்கு அஜின்கியா ரகானே ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கேப்டன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன் எழுச்சி கண்டால் நல்லது. பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி 17 பந்தில் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற ஸ்டீவன் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னர் ஜோடி இன்றும் மிரட்டலாம்.     

பவுலிங்கில் 42 வயதான பிரவீண் தாம்பே (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ரஜத் பாட்யா (9 விக்கெட்) ஒத்துழைப்பு அளிப்பது பலம். வேகப்பந்துவீச்சில் ரிச்சர்ட்சன் (9 விக்கெட்) ஆறுதல் தருகிறார். வாட்சன், பால்க்னர் உள்ளிட்ட ‘வேகங்கள்’ எழுச்சி கண்டால், சென்னையின் ரன் வேட்டையை தடுக்கலாம்.

பெங்களூரு–டில்லி பலப்பரீட்சை     

பெங்களூருவில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில், பெங்களூரு, டில்லி அணிகள் மோதுகின்றன. இதுவரை இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற டில்லியின் ‘பிளே–ஆப்’ கனவு முடிவுக்கு வந்தது. எனவே மீதமுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம். பெங்களூருவை பொறுத்தவரை 9 போட்டியில் மூன்றில் மட்டுமே வென்றுள்ளது. எனவே மீதமுள்ள 5 போட்டியிலும் சிறந்த வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. கடைசியாக மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ தோல்வி கண்ட பெங்களூரு அணிக்கு, கேப்டன் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ், யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கைகொடுத்தால் நல்லது.

 

http://sports.dinamalar.com/2014/05/1399908177/ChennaiRajasthanCricketIPLRaina.html

  • தொடங்கியவர்

மும்பை அணி வெற்றி
மே 12, 2014.
 

 

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.      

மும்பை, ஐதராபாத் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி, ஐதராபாத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். மும்பை அணியில் பிரவீண் குமாருக்குப் பதில், பிரக்யான் ஓஜா இடம் பெற்றார்.   

 

பின்ச் ஆறுதல்: ஐதராபாத் அணியின் ஷிகர் தவான் (11), லோகேஷ் ராகுல் (10) நிலைக்கவில்லை. பின்ச்அரைசதம் அடித்து (68) அவுட்டானார். போலார்டின் கடைசி ஓவரில் 18 ரன்கள் கிடைக்க, ஐதராபாத் அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. வார்னர் (55), நமன் ஓஜா (7) அவுட்டாகாமல் இருந்தனர். 

     

சிம்மன்ஸ் அபாரம்: சவாலான இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு கவுதம் (1) ஏமாற்றினார். அடுத்து சிம்மன்ஸ், அம்பதி ராயுடு இணைந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்த நிலையில், சிம்மன்ஸ் (68), அம்பதி ராயுடு (68) அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகினர். பின், ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடிக்க,      

மும்பை அணி 18.4 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, அசத்தல் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா (14), போலார்டு (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1399917640/AmbatiRayuduCricketMumbaiIPL.html

 

  • தொடங்கியவர்

சிக்கலில் பெங்களூர் ரோயல் சலென்ஞர்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லி - பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இப் போட்டியில் பெங்களூர் அணிக்கு அதிக சிக்கல் காத்திருக்கிறது.

பெங்களூர் அணி 9  போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. பிளே ஓப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் எஞ்சியுள்ள 5 போட்டியிலும் வெல்ல வேண்டிய நிலையில் அந்த அணி உள்ளது.

இதனால் இன்று கட்டாய வெற்றி நெருக்கடியில் பெங்களூர் அணி களம் இறங்குகிறது.

டெல்லி அணி 9 ஆட்டத்தில் 7 தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/05/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

  • தொடங்கியவர்

Screenshot87_zpscd802e7b.png

 

Screenshot88_zps30be55a9.png

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ராஞ்சியில் தோனி ஆட்சி: சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்தார்
மே 13, 2014.

 

ராஞ்சி: பரபரப்பான கடைசி ஓவரில் தோனி வழக்கம் போல சிக்சர் விளாச, சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளே– ஆப்’ சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. ராஜஸ்தான் அணி ஏமாற்றம் அளித்தது.

 

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட போட்டிகள் நடக்கின்றன. நேற்று ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.

 

சங்கர் அறிமுகம்:

‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் மிதுன் மன்ஹாஸ் நீக்கப்பட்டு, திருநெல்வேலியை சேர்ந்த விஜய் சங்கர், ஐ.பி.எல்., தொடரில் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

 

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், டிவாட்டியா, ரிச்சர்ட்சனுக்குப் பதில் அன்கித் சர்மா, யாக்னிக், கெவான் கூப்பர் இடம் பெற்றனர்.

வாட்சன் அரைசதம்:

ராஜஸ்தான் அணிக்கு இம்முறை வாட்சன், அன்கித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. மோகித் சர்மா ஓவரில் இரு பவுண்டரி அடித்த அன்கித் சர்மா, அஷ்வினின் முதல் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என, விளாசினார்.

 

27 பந்தில் 30 ரன்கள் எடுத்த இவரை, அஷ்வின் வெளியேற்றினார். சங்கர் ஓவரில் வாட்சன் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என, 19 ரன்கள் சேர்த்தார்.

நிலைமை தலைகீழ்:

இதன் பின் நிலைமை தலை கீழானது. ரகானே (4) ரன் அவுட்டானார். மோகித் சர்மா பந்தில் வாட்சன் (51 ரன்கள், 36 பந்து), போல்டானார்

கருண் நாயர் (8), கடந்த போட்டியில் மிரட்டிய ஸ்டீவன் ஸ்மித் (9), பால்க்னர் (1) நீடிக்கவில்லை. பின்னி (22), பாட்யாவும் (7) ஏமாற்ற, 20 ஓவர் முடிவில், ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

 

ஸ்மித் நம்பிக்கை:

சுலப இலக்கை ‘சேஸ்’ செய்த, சென்னை அணிக்கு மெக்கலம் (6), ரெய்னா (2) அதிர்ச்சி கொடுத்தனர். பால்க்னர் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த டுவைன் ஸ்மித், டாம்பே சுழலில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்து நம்பிக்கை கொடுத்தார். இவர் 44 ரன்னில் (35 பந்து) அவுட்டானார்.

 

தோனி, ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறக்கப்பட்ட அஷ்வின், 16 பந்தில் 14 ரன்கள் எடுத்து போல்டானார். அடுத்த சிறிது நேரத்தில் டுபிளசியும் (38) ‘பெவிலியன்’ திரும்ப, சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

 

தோனி ‘பினிஷிங்’:

சென்னை வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. பால்க்னர் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். ‘பினிஷிங்’ பணியை மீண்டும் கச்சிதமாக செய்த தோனி, அடுத்த பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். 3வது பந்தில் 2 ரன், 4வது பந்தில் 3 ரன்கள் எடுத்தார் தோனி.

முடிவில், சென்னை அணி 19.4 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. தோனி (26), ஜடேஜா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

இத்தொடரில் 10 போட்டிகளில் 8 வெற்றி பெற்று, 16 புள்ளிகள் பெற்ற சென்னை, முதல் அணியாக ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

 

மோகித் முதலிடம்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில், அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற வரிசையில் முதலிடத்தை பெற்றார் சென்னை அணியின் மோகித் சர்மா. இவர், 10 போட்டிகளில் 18 விக்கெட் வீழ்த்தி, ‘பர்பிள் கேப்’ பெற்றார்.

 

ஸ்மித் ‘29’

ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் (474), அதிக சிக்சர் (29) அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்.

இதில் இரண்டாவது இடத்திலுள்ள சென்னை அணியின் ஸ்மித் (440 ரன்கள்), நேற்று 2 சிக்சர் விளாசி, மேக்வெல்லின் அதிக சிக்சர் இலக்கை சமன் செய்தார்.

 

தொடரும் சாகசம்

தோனிக்கு எப்போதுமே கடைசி ஓவரில், வெற்றி பெறுவது என்றால் தான் பிடிக்கும் போல. பல்வேறு போட்டிகளின் முடிவுகள் இப்படித்தான் இருந்துள்ளன.

இந்த ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணிக்கு மொத்தம் கிடைத்த 8 வெற்றியில், 4 ல் கடைசி ஓவரில் தான் முடிவு கிடைத்தன.

இதில், டில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில், கடைசி ஓவரில் தோனி சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்தார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் இவர், பவுண்டரி அடித்து அசத்தினார்.

 

முதல் வெற்றி

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணி 140 முதல் 150 ரன்கள் வரையிலான இலக்கை, 12 முறை ‘சேஸ்’ செய்து 10 முறை வெற்றி பெற்றது.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டும், இரண்டு முறை இந்த இலக்கை எட்ட முடியாமல் வீழ்ந்தது. நேற்று முதன் முறையாக 149 ரன்கள் எடுத்து, ராஜஸ்தானை வென்றது.

http://sports.dinamalar.com/2014/05/1400001707/chennaiipldhoni.html

 

  • தொடங்கியவர்

சென்னை அணியில் டேவிட் ஹசி
மே 13, 2014.

 

மும்பை: காயமடைந்த பிராவோவுக்குப் பதில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் ஹசி, சென்னை அணியில் சேர்க்கப்பட்டார்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப்பை எதிர்கொண்டது. இதில் பீல்டிங் செய்த போது, டுவைன் பிராவோ இடது தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது.

 

இதிலிருந்து மீண்டு வர, ஆறு முதல் ஏழு வாரங்கள் தேவைப்படும் என்பதால், பிராவோ ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இவருக்குப் பதில், ஆஸ்திரேலிய அணியின் 36 வயதான டேவிட் ஹசி, சென்னை அணிக்காக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

ஆஸ்திரேலிய அணிக்காக 69 ஒருநாள், 39 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்ற ஹசி, 2008--–2010ல் கோல்கட்டா (23 போட்டி), 2011–13ல் பஞ்சாப் (36 போட்டி) அணிகளுக்காக பங்கேற்று, 1206 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹசி அணியில் இணைந்த செய்தியை, சென்னை அணி தனது ‘டுவிட்டர்’ இணையதளத்தில் வௌியிட்டது. இதற்கு பதில் தெரிவித்து ஹசி அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தியில், ‘வியக்கத்தக்க  செய்தி, இப்போது தான் கிடைத்தது. என்னால் காத்திருக்க முடியவில்லை,’ என, தெரிவித்துள்ளார்.

 

 

 

http://sports.dinamalar.com/2014/05/1400001848/davidhusseycricket.html

  • தொடங்கியவர்

யுவராஜ் அதிரடி: பெங்களூரு வெற்றி:வீழ்ந்தது டில்லி அணி

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யுவராஜின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லி அணி மீண்டும் வீழ்ந்தது.

பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மழை குறுக்கீடு:

டில்லி அணியில் லட்சுமி சுக்லாவுக்குப் பதில், முரளி விஜய் மீண்டும் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் ஆல்பி மார்கல், வருண் ஆரோன், டிண்டா நீக்கப்பட்டு முரளிதரன், சச்சின் ரானா, அபு நேசிம் இடம் பெற்றனர். மழை காரணமாக ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

சொதப்பல் துவக்கம்:

பெங்களூரு அணிக்கு கெய்ல் (22) நீடிக்கவில்லை.

கேப்டன் விராத் கோஹ்லி (10), ரன் அவுட்டானார். பார்த்திவ் படேல் (29) ஓரளவு கைகொடுத்தார். டிவிலியர்ஸ் 17 பந்தில், 33 ரன்கள் விளாசினார்.

சிக்சர் மழை:

பின் யுவராஜ் சிங், ரானா இணைந்தனர். இம்ரான் தாகிர் ஓவரில் யுவராஜ் சிங் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசினார். தொடர்ந்து மிரட்டிய இவர், ராகுல் சுக்லா வீசிய கடைசி ஓவரில், நான்கு சிக்சர் அடித்து, அரைசதம் எட்டினார்.

பெங்களூரு அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. 29 பந்தில் 68 ரன்கள் (9 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்த யுவராஜ் சிங், ரானா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

விஜய் ‘அவுட்’:

கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு முரளி விஜய்(1), குயின்டன் டி காக் (6) ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கெவின் பீட்டர்சன் 33 ரன்களுக்கு வெளியேறினார். தினேஷ் கார்த்திக்(1) ஏமாற்றினார்.

பின் டுமினி, கேதர் ஜாதவ் சேர்ந்து போராடினர். ஸ்டார்க் பந்தில் டுமினி(48) அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. ஜாதவ்(37) ரன் அவுட்டானார். டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

http://sports.dinamalar.com/2014/05/1400004129/yuvrajipl.html

  • தொடங்கியவர்

ஞ்சாப் அசத்தல் வெற்றி: பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்
மே 14, 2014.

 

ஐதராபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டாவது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது. பொறுப்பாக ஆடிய ஐதராபாத் அணி வீரர் நமன் ஓஜாவின் அரைசதம் வீணானது.           

ஐதராபாத்தில் நடந்த 7வது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில், ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.       

    

தவான் ஆறுதல்: ஐதராபாத் அணிக்கு ஆரோன் பின்ச், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது, சிவம் சர்மா ‘சுழலில்’ பின்ச் (20) போல்டானார். சந்தீப் சர்மா வீசிய ஆட்டத்தின் 5வது ஓவரில், ஒரு சிக்சர், 4 பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் (45), ரிஷி தவானிடம் சரணடைந்தார்.           

 

வார்னர் நம்பிக்கை: பின் இணைந்த நமன் ஓஜா, டேவிட் வார்னர் ஜோடி அபாரமாக ஆடியது. சிவம் சர்மா வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடித்த நமன் ஓஜா, அக்சர் படேல் வீசிய 16வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த வார்னர், அக்சர் படேலின் 18வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது, வார்னர் (44) ‘ரன்–அவுட்’ ஆனார்.       

    

ஓஜா அரைசதம்: சந்தீப் சர்மா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நமன் ஓஜா, அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் (0), இர்பான் பதான் (1) ஏமாற்றினர். தொடர்ந்து அசத்திய நமன் ஓஜா, சந்தீப் சர்மாவின் 19வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்தார்.   

        

ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. நமன் ஓஜா (79 ரன்கள், 36 பந்து, 7  சிக்சர், 4 பவுண்டரி), கரண் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் ரிஷி தவான் 2 விக்கெட் வீழ்த்தினார்.           

 

சபாஷ் சகா: சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு சேவக் (4) ஏமாற்றினார். பின் இணைந்த விரிதிமன் சகா, மனன் வோக்ரா ஜோடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. ஹென்ரிக்ஸ் வீசிய 6வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சகா, 22 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது சகா (54) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த வோக்ரா (47), ‘ரன்–அவுட்’ ஆனார்.          

 

மேக்ஸ்வெல் விளாசல்: அடுத்து வந்த மேக்ஸ்வெல், கரண் சர்மா வீசிய 8வது ஓவரில் மூன்று சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இவர், கரண் சர்மாவின் 12வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்தார். இவர், 22 பந்தில் 43 ரன்கள் எடுத்த போது அமித் மிஸ்ராவிடம் சிக்கினார். பின் இணைந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர் ஜோடி பொறுப்பாக ஆடியது. ஸ்டைன் வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய பெய்லி, புவனேஷ்வர் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.           

 

பஞ்சாப் அணி 18.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெய்லி (35), மில்லர் (24) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை பஞ்சாப் அணியின் விரிதிமன் சகா வென்றார்.

 

இரண்டாவது முறை     

நேற்று ஐதராபாத் அணி (205 ரன்கள்) நிர்ணயித்த இலக்கை எட்டிய பஞ்சாப் அணி (211 ரன்கள்), இத்தொடரில் இரண்டாவது முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்து, சிறந்த ‘சேஸிங்கை’ பதிவு செய்தது. முன்னதாக அபுதாபியில் நடந்த போட்டியில், சென்னை அணி (205 ரன்கள்) நிர்ணயித்த இலக்கை பஞ்சாப் அணி (206 ரன்கள்) ‘சேஸ்’ செய்தது.     

* இத்தொடரில் பஞ்சாப் அணி மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. சென்னை (231, 206 ரன்கள்), ஐதராபாத் (211 ரன்கள்) அணிகளுக்கு எதிராக இந்த இலக்கை எட்டியது.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1400086308/PunjabHyderabadCricketIPLSaha.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.