Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உபாலி விஜேவர்தனவின் விமானம் காணாமல் போன இடத்திலேயே மலேஷிய விமானமும் காணாமல் போயுள்ளது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசேடமொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்

 

 

இலங்கையின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானம் காணாமல் போன பகுதிலேயே மலேஷிய விமானமும் காணாமல் போயுள்ளது. மலேஷிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் அண்மையில் காணாமல் போயிருந்தது. இந்த விமானத்தில் மொத்தமாக 239 பயணம் செய்திருந்தனர். இந்த விமானம் காணாமல் போன அதே பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானமும் காணாமல் போயிருந்தது. 

1983ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானம் காணாமல் போயிருந்தது. இந்த விமானத்தில் உபாலி விஜேவர்தனவுடன் மேலும் ஐந்து பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதனிலை செல்வந்தரான உபாலி விஜேவர்தன லியார்ஜெட் ரக விமானத்தில் பயணம் செய்திருந்தார். இரவு 8.41 மணிக்கு கொழும்பிலிருந்து இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானத்தில் உபாலி விஜேவர்தனவுடன், அவரது மலேஷிய சட்டத்தரணி எஸ்.எம். ரட்னம், உபாலி குழும பணிப்பாளர் ஆனந்த பெலி மொஹாந்திரம், விமானி நோயல் ஆனந்தப்பா, சக விமான சிட்னி சொய்சா, விமான சிற்பந்தி எஸ்.சேனாநாயக்க ஆகியோர் பயணம் செய்திருந்தனர்.

விமானம் புறப்பட்டு 11 நிமிடங்களில் விமானத்தை 27000 அடி உயரத்திற்கு உயர்த்த கட்டுப்பாட்டு நிலையத்திடம் விமானி ஆனந்தப்பா அனுமதி கோரி, அனுமதியைப் பெற்றுக்கொண்டார். விமானம் மணிக்கு 744 கிலோ மீற்றர் வேகத்தில் இந்து சமுத்திர கடற்பரப்பில் பறப்பதனை மலேஷிய ராடார் பதிவு செய்திருந்தது. இரவு 9.02 அளவில் விமானம் மணிக்கு 1352 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ததுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இதேவேளை, இந்தோனேஷியாவின் சிறிய மீனவக் கிரமமான டான்ஜீவாங் பெரின்ஜினைச் சேர்ந்த மீனவர்கள், கடலி;ல் ஏதோ வெடித்து சிதறுவதனை அவதானித்தனர். பாரிய சத்தமொன்றுடன் ஏதோவொரு பொருள் கடலில் வெடித்துச் சிதறுவதனை கண்டதாகத் தெரிவித்தனர். மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குறித்த மீனவர்கள் பாரிய வெளிச்சம் தென்பட்ட இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்தனர். அதிகாலையில் குறித்த இடத்தை நோக்கிப் பயணம் செய்தனர்.

வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து விமான சிறகு ஒன்றை போன்றே பொருள் ஒன்றையும், கதவு ஒன்றையும் ஒரு பக்கட் பானையும் மீனவர்கள் கண்டு எடுத்தனர். விமானக் கதவுகளில் இரத்தம் படிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மலாக்க நீரிணைப் பகுதியில் கடுமையான கடல் கொந்தளிப்பு காணப்பட்டதாகவும், 100 மைல் தொலைவில் விமானமொன்றின் டயர் மீட்கபபட்டதாகவும் நான்கு நாட்களின் பின்னர் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

எனினும் மீனவர்கள் குறிப்பிடுவதனைப் போன்று குறித்த பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு இருக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனால் விமானத்திற்கு என்ன நேர்ந்தது உண்மையில் விபத்துக்குள்ளானதா, அவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தால் எந்த இடத்தில் விபத்து இடம்பெற்றிருக்கும் போன்ற நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு இதுவரையில் எவராலும் விடை வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்வதற்காக ஏழு நாடுகள் ஆறு மாத காலம் விரிவான விசாரணைகளை நடத்தியிருந்தன. விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஏழு நாடுகளின் புனலாய்வு அதிகாரிகளும் இராணுவ வளங்களும் விசாரணைகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்க உளவு விமானம், இலங்கை விமானங்கள், இந்திய, அவுஸ்திரேலிய ரஸ்ய கப்பல்கள் மற்றும் விமானங்கள், மலேஷிய பெற்றோல் படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தி விமானம் தேடப்பட்டது. எனினும், விமானம் பற்றிய எவ்வித உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை.

இரத்தம் படிந்த பைபர் கிளாஸ் மற்றும் உபாலி விஜேவர்தனவின் மோதிரம் என சந்தேகிக்கப்படும் மோதிரம் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டன. இதேவேளை, உபாலி விஜேவர்தன உயிரிழந்து விட்டதாக அறிவிக்க இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் முன்வரவில்லை. உறுதியான ஆதரங்கள் இன்றி உபாலி இறந்து விட்டதாக அறிவிக்க முடியாது என தெரிவித்தனர். விமானம் ஏதேனும் தீவுகளில் விழுந்திருக்கலாம் சில வேளைகளில் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மிக முக்கியமான அரசாங்கப் பதவியொன்றில் உபாலி விஜேவர்தனவை அமர்த்தினார். ஜனாதிபதி ஜயவர்தனவின் மைத்துனரே உபாலி என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தப் பதவி வழங்கப்பட்டமைக்கு பிரதமர் ரணசிங்க பிரேமதாச எதிர்ப்பை வெளியிட்டார். உபாலியை கொல்லப் போவதாக பாராளுமன்றில் சூளுரைத்திருந்தார்.

எனவே, உபாலியின் விமானம் தலைமறைவானதற்கும் பின்னாள் ஜனாதிபதியான பிரேமதாசவிற்கும் தொடர்பு இருக்கலாம் என அந்தக் காலத்தில் வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. செல்வந்த குடும்பத்தில் பிறந்த உபாலி விஜேவர்தன 26 வயதிலேயே கோடீஸ்வரராக உருவெடுத்தார்.

கன்டோஸ் என்ற சிறிய கொக்லட் உற்பத்தி நிறுவனமொன்றின் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த உபாலி விஜேவர்தன, பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துரித கதியில் தடம் பதித்து வெற்றி வாகை சூடினார். இலங்கையில் மட்டுமன்றி பிராந்திய வலய நாடுகளிலும் தனது வர்த்தக நடவடிக்கைகளை உபாலி விஸ்தரித்திருந்தார்.

இதனால் அவருக்கு வர்த்தக ரீதியான எதிரிகள் இருந்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. எனினும், விமானம் விபத்துக்குள்ளானதா அந்த விமானத்தில் அவருடன் பயணித்தவர்களுக்கு என்னவாயிற்று, போன்ற தகவல்கள் இன்று வரையில் மர்மமாகவே காணப்படுகின்றது. 

இதேவேளை, அண்மையில் காணாமல் போன மலேஷிய விமானத்தின் பகுதிகள் என சந்தேகிக்கப்படும் சில பாகங்களை சீன செய்மதியொன்று கண்டு பிடித்துள்ளது. தென் சீன கடற்பரப்பில் குறித்த பொருட்கள் மிதப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீன செய்மதிகள் குறித்த பகுதியில் புகை காணப்பட்டதனையும் விமான பாகங்கள் மிதப்பதனையும் படம்பிடித்துள்ளதாகவும், இது குறித்த விமானத்தின் பாகங்களா என்பதனை உறுதிபடக் கூற முடியாது எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104206/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.