Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை.

 
weinendes-auge.jpg

13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான்.

அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடுத்தது.

எந்தக் கவலையும் இல்லாது புனிதபூமியின் அணைப்பில் வாழ்ந்த பிள்ளைகள் 2009 யுத்த முடிவின் பின்னர் திசைக்கொன்றாய் பிரிந்து போனார்கள். முகாம் வாழ்வு யாருமற்றுப் போனதான பயம் எல்லாமே கூடியது. எனினும் தனியே போராடித் தன் வாழ்வை வெல்லும் தைரியத்தை தானே வளர்த்துக் கொண்டான்.

மீள் குடியேறி வன்னி மண் இழந்து போன வசந்தத்தின் கருகல்களிலிருந்து மீளத்துடித்த பொழுதில் அவனும் பிறந்த ஊருக்குப் போனான். அடுத்த வாழ்வுக்கு அவனிடம் வழியில்லை. இனிமேல் அவனது வாழ்வை உயர்த்த அவனது கல்வியைத் தொடர்ந்தால் மட்டுமே வெளிச்சம் வருமென்பதை உணர்ந்தான்.

நெருப்பின் கொடிய சுவாலையின் வெப்பத்தில் எரிந்து போனாலும் மீளவும் எழுந்து நிற்கும் தைரியத்தை துணிவை அவனுக்கு விதைத்தது காலம். தானே படித்து முன்னேற வேண்டுமென்ற கனவை வளர்த்து படித்தான். தனது கல்வியைத் தொடரத்தானே உழைத்தான்.

கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தான். குடியிருக்க அவனுக்காக நிலமில்லை. ஆனாலும் வாடகை செலுத்தி தனக்கான தங்குமிடத்தை தெரிவு செய்தான். உழைத்துக் களைத்து வருகிறவனுக்கு தண்ணீர் கொடுக்க ஆளில்லாத போதும் தானே சமைத்து தன்னையே நம்பிய நம்பிக்கையின் ஆதாரம் அவனே.

பல்கலைக்கழகம் செல்லும் கனவோடு படித்தான். அவனது கனவு நனவாகி பல்கலைக்கழக நுளைவும் கிடைத்தது. தனது கல்விக்காக யாரையும் உதவுங்கள் என காத்திருக்காமல் தானே வேலைசெய்து படிக்கத் தொடங்கினான். ஆறுமாதங்கள் தான் தற்போது முடிகிறது.

என்னால் முடியுமென்ற நம்பிக்கையில் படிக்கத் தொடங்கியவனுக்கு திடீர் திடீரென உடல் இயலாமல் போகிறது. இரத்த வாந்தி வருகிறது. சிலவேளைகளில் எழுந்து நிற்க இயலாதபடி உடல் ஓய்ந்து விடுகிறது. காரணம் தேட முடியாது திரும்பவும் உடலை வருத்தும் வேலைகளைத் தேடித்தேடிச் செய்து கொண்டிருக்கிறான்.

இனியும் இயலாதென்ற வலியில் மருத்துவத்தை நாடிய போது அங்கேயும் பணமே முன்னுக்கு நின்று வரவேற்றது. பணமில்லையேல் வாழ்வு இல்லையென்ற உலகில் அவன் மட்டும் கருணையாக காசில்லாமல் எதையும் செய்ய முடியாது போனது.

குருதிப்புற்றுநோயின் தொடக்கம் என மருத்துவ அறிக்கைகள் சொன்னது. எனினும் மாற்ற முடியும் என்றது மருத்துவம். வாரம் தோறும் மருந்து எடுக்க 2500ரூபா , தங்குமிட வாடகை 1500ரூபா  , உணவு , கல்வி எல்லாவற்றையும் சமாளிக்க இனி இயலாதென்று உடல் சோர்கிறது.

உதவிகள் தேடி அமைப்புகள் நிறுவனங்களை நாடுகிறான். எல்லோரும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவனது வலிமிகு நாட்களை இழுத்தடித்துக் கொண்டே போகிறார்கள். இறப்பதற்கு முன்னம் தனது கல்வியை முடித்துக் கொண்டு இறந்துவிடலாமென பாசக்கயிற்றோடு துரத்தும் நோயோடு போராடிக்கொண்டு இயன்ற நாட்களில் வேலை செய்து முடிந்த போது உணவை உட்கொண்டு கிடைக்கிற போது மருந்தையும் உட்கொண்டு தனது கல்வியை கற்று முடிக்கும் கனவோடு போராடத் தொடங்கினான்.

வர வர உடல்வலி அசதி களைப்பு எல்லாம் சேர்ந்து அவனது கல்வியையும் கைவிடும் நிலமையில் மனம் களைத்துவிட்டது.

வழியேதும் இல்லையென்று ஓய்ந்த போது அவன் வந்தான். மெடம் என்றான்.  அவனது நோய் அவனது கல்வி அவனது வாழ்வு பற்றி தொலைபேசியில் கதைக்கத் தொடங்கிய போது ஒரு நிறுவனத்தில் விண்ணப்பம் செய்யும் ஒருவன் போலவே பேசத் தொடங்கினான்.

தம்பி மெடம் வேண்டாமய்யா நீ இயல்பா பேசு. உனக்கு என்ன தேவை உன்னைப் பற்றிச் சொல்லு ?

எனக்கு உறவென்று யாருமில்லை...வருத்தத்தில கொஸ்பிற்றலில் இருக்கேக்கையும் ஒருவரும் பாக்க வாறேல்ல....யாரும் இருந்தால் தானே என்னையும் பாக்க வருவினம்....! அவனது துயரங்கள் குழந்தைக்காலம் முதல் இன்று வரை அவனது போராட்டம் பற்றி நிறையவே சொல்லிக் கொண்டு வந்தான்.

எனக்கு படிக்க மட்டுமெண்டாலும் உதவுங்கோ அன்ரி. நான் படிச்சு முடிக்க வேணும். நான் படிச்சு முடிச்ச பிறகு என்னைப் போல அம்மா அப்பா சொந்தம் இல்லாத பிள்ளைகளுக்கு நான் உதவி செய்வன். என்னுடைய கனவு அதுதான்.

நீங்க ரெலிபோன் எடுக்கிறதுக்கு அரை மணித்தியாலம் முதல் தான் வந்தனான். இப்பதான் சமைக்கிறன். என்னாலை வேலை செய்ய முடியேல்ல ஆனாலும் இண்டைக்கு வேலைக்குப் போயிற்றுத்தான் வந்தனான். வெளியில சாப்பிடுறதெண்டா செலவு கூட அதாலை நான் தானன்ரி சமைச்சு சாப்பிடுறனான். அவன் சொல்லிக் கொண்டிருந்த போது இலங்கை நேரம் இரவு 9.40ஆகியிருந்தது.

பாசத்துக்காகவும் தன்னை நேசிக்கிற மனிதர்களுக்காகவும் அவன் நிறையவே ஏங்குகிறான். நோயில் விழுகிற போது தாங்க ஒரு தோழும் துயரில் சோர்கிற போது நாங்களிருக்கிறோம் என்று சொல்லி ஏந்தவும் உறவுகள் இல்லாது போகிற போது எல்லா உயிரையும் வதைக்கும் மனவலி அவனை உள்ளால் குடைந்து கோதாக்கி விட்டிருக்கிறது என்பதையே அவனது பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

அவனது துயரக்கதைகளை மாற்றி எனது குடும்பம் குழந்தைகள் பற்றி கதையை ஆரம்பிக்க அவன் கதையும் மாறியது. நீ யோசிக்காதை நீ படிக்கவும் உன்னுடைய கனவுகளை நிறைக்கவும் நாங்கள் இருக்கிறம். உன்னை மாதிரி உன்ரை வயசுக்கு கிட்ட எனக்கும் ரெண்டு பிள்ளையள் இருக்கினம். இனிமேல் உனக்கு அம்மா , அப்பா , தம்பி  , தங்கைச்சி என உறவுகளாக நாங்கள் இருக்கிறம்.

சில வினாடிகள் அவனிடமிருந்து பேச்சு வரவில்லை. நிக்கிறீங்களோ தம்பி....! ஓம்.....! அவன் குரல் உடையத் தொடங்கியது. கனபேர் என்னோடை கதைச்சவை...எல்லாரும் கதைச்சிட்டு பிறகு எடுக்கவேயில்லை....வளமை போல நீங்களும் கதைச்சிட்டு விட்டிடுவீங்களெண்டு தான் நினைச்சன்.

ஆனால் நீங்கள் கதைச்சது நம்பிக்கை வருது.

மெடம் என்றவன் பிறகு அன்ரியென்றான் இப்போது அம்மா என்கிறான். எத்தனையோ பிள்ளைகள் அவன் போல அம்மா என உரிமையோடு அழைப்பது போல அவனும் எனது குழந்தையாகிறான். மாதம் அவனுக்காக 60€அனுப்ப வேண்டும். மேற்கொண்டு அவனது மருத்துவத்துக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்;. இன்னும் மூன்றரை வருடங்கள் மிச்சமிருக்கும் அவனது பல்கலைக்கழக கல்வியை முடிக்கும் வரை அவனுக்கான உதவியை ஒழுங்கு செய்ய வேண்டும்.

தன்போல உறவுகளற்ற பிள்ளைகளை ஆதரவு கொடுத்து வாழ்வில் நம்பிக்கையோடு முன்னேற்றி உருவாக்கும் கனவோடும் வாழ்வை வாழவும் ஆசைப்படும் அவன் வாழ அவனைக் காக்க வேண்டும். மரணத்தின் நாளையும் மாற்றிப் போடும் சக்தி மிக்க மருத்துவம் மூலம் அவனைக் காக்க முடியும் எனது குழந்தையைக் காப்பாற்ற எனது குழந்தையின் வாழ்வை மீட்க உதவிகள் வேண்டும். உதவுங்கள் என உலகத்தின் அனைத்து மனிதாபிமானிகளையும் வேண்டுகிறேன்.

01.04.2014

Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

 
 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ் இளைஞனுக்கு பிரித்தானியாவிலிருந்து முகநூல் மூலம் அறிமுகமான அகல்யா ஒரு மாதத்திற்கான உதவியை வழங்க முன்வந்துள்ளார். அதுபோல கள உறவு சுபேஸ் தன்னால் முடிந்த உதவியை செய்ய முன்வந்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.