Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெண்கள், சிறுமிகள் கைதுகள் ஓய்ந்தபாடில்லை–

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WAN

jail14_CI.jpg

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை என மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. எனினும், கடந்த சில வாரங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாகத் தெரிவித்து பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டனர்.

பெண்கள், சிறுமிகள் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட கோபி என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவி;த்தே பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கோபி என்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரும் அவரது சகாக்களும் நெடு;ங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எனினும், குறித்த கோபி என்பவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெணகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே பெண்கள் மற்றும் சிறுமிகள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா பயங்கரவாத தடைப் பிரிவு, கொழும்பு பயங்கரவாதத் தடைப்பிரிவின் 2ம் மற்றும் 4ம் மாடிகள் மற்றும் பூசா தடுப்பு முகாம் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சர்மிளா கஜதீபன் (26)

செல்வநாயகி ராசமலர்(62)

புவனேஸ்வரி குலசிங்கம் (52)

ஜெயகுமாரி பாலேந்திரன்

நிதர்சனா (28)

கணபதிப்பிள்ளை யோகராணி (61)

ரவீந்திரன் வதனி (22)

செல்வி லோகநாதன்

சசிதரன் தவமலர் (42)

சசிதரன் யதுர்சினி (16)

ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு அறிவித்துள்ளது.

பெண்கள் சிறுமிகள் கைது செய்யப்பட்ட போது உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கைதுகளின் போது பால் நிலை சார்பான சில சுகாதார மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் பெண்கள் என்ற ரீதியியில் கைதிகளின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் எனவும் அல்லது அவர்களை விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் யோகராணி கனகசபாபதி  நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105603/language/ta-IN/article.aspx

 

paavam enkula thamizh pengal angae. veera aanmakkal enna seidhu kondu irukirargal.

 

suranai atru ulagam muzhukka sidhari kidakum suyanala thamizhargal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.