Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்டர்போல் மூலம் 96 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! – 40 பேர் புலிச் சந்தேக நபர்களாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்டர்போல் மூலம் 96 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! – 40 பேர் புலிச் சந்தேக நபர்களாம். 
[Friday, 2014-04-18 10:03:55]
ajith-180414-150.jpg
புலி சந்தேகநபர்கள் உட்பட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடாக சிவப்பு எச்சரிகை அறிவிப்பு (Red Notice) விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். புலி சந்தேகநபர்கள் 40 பேரும், கொலை, போதைப்பொருள் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டுவரும் 56 பேரும் இந்த அபாய அறிவிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
  
புலி உறுப்பினர்களான விநாயகம், நெடியவன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெளிநாடு களில் வாழும் இலங்கையர்களுக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
இவர்களை இன்டர்போலின் உதவியுடன் வெளிநாடு களிலிருந்து கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட நாடுகளில் அவர்கள் இருந்தால் கைதிகளைப் பரிமாற்றும் திட்டத்தின் கீழ் அவர்களை இலங்கைக்கு அழைத்துவரப்படுவர். அதேநேரம், 2012ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் தமிழ்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கைக்குக் கொண்டு வருவது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இதேவேளை, பயங்கரவாதத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 44 பேர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர். கடந்த மார்ச் 5ஆம் திகதி பளை பிரதேசத்தில் பயங்கரவாதத்தை மீண்டும் ஊக்குவிக்கும் வகையிலான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்ட முயற்சித்த இருவர் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
 
இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளில் எல்.ரி.ரி.ஈயின் உள்நாட்டுத் தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேடுதல்களின் போது 67 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதுடன் 44 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 37 ஆண்களும், 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 
கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை தேடி நடத்தப்பட்ட தேடுதல்களின் போது மோட்டார்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணிவெடி கண்டறியும் கருவிகள் 3 உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்ணிவெடி அகற்றும் அமைப்பொன்றிலிருந்து காணாமல்போன 5 கண்ணிவெடி கண்டறியும் கருவிகளில் 3 கருவிகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.பயங்கரவாத செயற்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கும் நோக்கில் இவர்கள் செயற்பட்டார்கள் என்பது தெளிவாகப் புலனாகியுள்ளது. வடக்கிலுள்ள 99 வீதமானவர்கள் மீண்டுமொரு பயங்கரவாத சூழ்நிலை ஏற்படுவதை விரும்பவில்லை .
 
அதேநேரம், கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக கெப்பிட்டிகொல்லாவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சுட்டுக்கொல்ல ப்பட்டவர்களின் சடலங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மேலதிக சாட்சிகளை வழங்க விரும்புபவர்கள் கெப்பிட்டிகொல்லாவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.
 
பயங்கரவாதம் மீண்டும் புத்துயிர் பெறாமல் தடுப்பதற்கான பொறுப்பு பொலிஸாருக்கும், பாதுகாப்புத் துறைக்கும் இருப்பதால் அதற்கு அமைய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.http://seithy.com/breifNews.php?newsID=107748&category=TamilNews&language=tamil

சும்மா அவிக்கிறார்.

சிறி லங்கா சில்லறைகள் ஹொலிவூட் ரேஞ்சிற்கு படம் காட்டுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.