Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஒலுவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

140418084330_oluvil_protests_464x261_bbc

ஒலுவில்லில் நடந்த ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்பாட்டத்தின் போது அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை இரவு அந்த பிரதேசத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றை அடுத்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் எதிரொலியாகவே வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி இந்த ஆர்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

வியாழனன்று இரவு வீடொன்றிற்குள் நுழைந்து பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் கடற்படை வீரரொருவரை உள்ளுர் மக்கள் மடக்கிப் பிடித்ததாகவும், அந்த தகவலறிந்து முகாமிலிருந்து அங்கு விரைந்து வந்த கடற்படையினரால் குறிப்பிட்ட படை வீரர் மீட்டுச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்தே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலைது ஏற்பட்டதாகவும் உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.இந்த சம்பவத்தையடுத்து நேற்று இரவு அந்த பிரதேசத்தில் உருவான பதட்ட நிலை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த அக்கரைப்பற்று காவல் துறையினரிடம் குறித்த நபரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் செரிந்து வாழும் பகுதியிலுள்ள குறித்த கடற்படை முகாமினால் மக்களின் இயல்பு நிலைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறும் அட்டாளைச்சேனை பிரதேச உள்ளுராட்சி சபை தலைவரான எம். ஏ. அன்சில், அந்த முகாம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரான குறிப்பிட்ட கடற்படை வீரர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் காவல் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/04/140418_oluvilprotests.shtml

 

குளித்த பெண்ணை பார்த்த கடற்படை வீரர் கைது

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை மறைந்திருந்து பார்வையிட்டதாகக் கூறப்படும் கடற்படை வீரரொருவரை வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

இக்கடற்படை வீரர், முகாமுக்கு அருகிலுள்ள வீடொன்றின் கிணற்றடியில் இப்பெண் வியாழக்கிழமை (17) இரவு குளித்துக்கொண்டிருந்தபோது  வேலியின் மறைவிலிருந்து பார்வையிட்டுள்ளார். இதன்போது வீட்டிலிருந்து வெளியில் வந்த வீட்டின் உரிமையாளர் இதனைக் கண்டு சத்தமிட்டார். இச்சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அயலவர்கள் கடற்படை வீரரை மடக்கிப்பிடித்து நையப்புடைந்துள்ளனர். 

இந்நிலையில்,  முகாமிலிருந்து கடற்படை வீரர்கள் குறித்த கடற்படை வீரரை  முகாமுக்கு கொண்டுசென்றனர். 

இதனைத் தொடர்ந்து, குறித்த கடற்படை வீரர் மீது  நடவடிக்கை எடுக்குமாறும் அவரை கைதுசெய்யுமாறும்  பிரதேச மக்கள் முகாம் முன்பாக ஒன்றுதிரண்டு ரயர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போது அங்கு பதற்றம் நிலவிய நிலையில் பொலிஸார்   வரவழைக்கப்பட்டனர். 

இந்நிலையிலேயே  குறித்த கடற்படை வீரரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். 

இக்கைதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து  கலைந்துசென்றனர்.

கைதுசெய்யப்பட்ட கடற்படை வீரதை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர். 

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/107222-2014-04-18-04-25-08.html

போராட்டம் தொடர்ந்து நடக்கவேண்டும்.

இஸ்லாமிய நாடுகளுக்கு செய்திகளை அனுப்பவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.