Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று சந்திப்பு! - எதிர்கால நடவடிக்கை குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று சந்திப்பு! - எதிர்கால நடவடிக்கை குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு. 
[Tuesday, 2014-04-29 08:53:36]
TNA-290414-150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் நாளை திருகோணமலையில் இரா.சம்பந்தன் தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர். இந்தசந்திப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம், கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் தென்னாபிரிக்கா பயணம், ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை இலக்கு வைத்துத் தொடரும் அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட சம கால நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

  

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் முதன்முதலாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியாவில் ஒன்றுகூடி முதலாவது சந்திப்பை நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர் இரண்டாவது கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இந்தநிலையில் மூன்றாவது கூட்டம் கடந்த 19 ஆம் திகதி யாழ்.மாவட்டத்திலேயே மீளவும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=108305&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.