Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதவிவகாரங்களுக்கு தனி பொலிஸ் பிரிவு: சரத் பொன்சேகா எதிர்ப்பு, ஏட்டிக்குப் போட்டியாக முறைப்பாடுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதவிவகாரங்களுக்கு தனி பொலிஸ் பிரிவு: சரத் பொன்சேகா எதிர்ப்பு, ஏட்டிக்குப் போட்டியாக முறைப்பாடுகள். photo.png 

[Tuesday, 2014-04-29 09:03:35]
Sarath-Fonseka-290414-150.jpg

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனியாக பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்த வேண்டியதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஏதேனும் அமைப்பு அல்லது இயக்கங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டில் சட்டங்கள் காணப்படுகின்றன.பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பொலிஸாருக்கு அதிகாரமுண்டு.ஏதேனும் ஓர் சம்பவம் இடம்பெறும்போது அதற்கு தீர்வு காண அரசியல் நோக்கத்துடன் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டால், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

  

ஒவ்வொரு சேனாக்களையும் பாதுகாப்பதற்காக பொலிஸ் பரிவுக் உருவாக்கப்பட்டால் அதில் பயனில்லை. அதன் மூலம் மத நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் தற்போது உள்ள சட்டங்களை பொலிஸார் உரிய முறையில் அமுல்படுத்தினாலேயே பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுக்க முடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மத செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு 7, தர்மபால மாவத்தையிலுள்ள புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் ஏழாவது மாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட பொலிஸ் பிரிவை சமய வழிபாடுகளுடன் புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்தப் பொலிஸ் பிரிவுக்கு புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொடித்துவக்குவின் தலைமையில் 16 பேர் அடங்கிய பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் ஒன்பது பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இதில் அடங்குவர்.

மதவிவகாரங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பிணக்குகள் தொடர்பில் உடனடியாக இந்தப் பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் அது தொடர்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவின் 0112307674, 0112307694 என்ற தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது 0112307788 மற்றும் 0112307406 என்ற பக்ஸ் இலக்கங்களுடனோ தமது முறைப்பாடுகளைப் பதிவுசெய்து உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த புதிய பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதும், பௌத்த அமைப்புகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

 

police-unit-290414-150.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=108308&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.