Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலன்தருமா கூட்டமைப்பின் குழுக்கள்? செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலன்தருமா கூட்டமைப்பின் குழுக்கள்? செல்வரட்னம் சிறிதரன்

03 மே 2014

பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலமுள்ள ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவி வருக்கின்றது. கூட்டமைப்பு இறுக்கமான ஓர் அரசியல் அமைப்பாக இல்லையே என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் யுத்தம் முடிவுக்கு வந்த காலம்தொட்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

நான்கு அல்லது ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கென்று தனியான சின்னம் கிடையாது. யாப்பு கிடையாது. ஒரு கட்டமைப்பென்பதே கிடையாது. கூட்டமைப்பு என்று கூடி பேசுவார்கள். விவாதிப்பார்கள். கடுமையாக மோதிக்கொள்வார்கள். தீர்மானங்களைக் கூட நிறைவேற்றுவார்கள். ஆனால் சந்திப்புக்கள் பற்றிய எதையும் ஆவணமாகப் பேணுகின்றார்களா என்பது சந்தேகமே. சந்தேகம் என்ன, இதுகால வரையிலும் அவ்வாறான ஒரு நடைமுறை பேணப்பட்டு வந்ததாகத் தகவலே கிடையாது.

அது மட்டுமல்ல. ஒரு கூட்டத்தில் அல்லது சந்திப்பில் பேசப்பட்ட ஒரு விடயம் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் தொடர்ந்து ஆராயப்பட்டிருப்பதாகவோ, அதனை விடாப்பிடியாகத் தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி பேசப்பட்டாகவோ விவாதிக்கப்பட்டதாகவோ தகவல்கள் இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. கூடிப் பேசியதும், பேசிய அனைத்தும் காற்றில் போய்விட எல்லோரும் எழுந்து போய்விடுவார்கள். தீர்மானிக்கப்படுகின்ற தீரமானங்கள் கூட சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதுமில்லை. செயற்படுத்துவது பற்றி அக்கறை கொள்வதுமில்லை. இதுதான் நடைமுறையாக இருந்து வந்திருக்கின்றது. இருந்து வருகின்றது.

நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறும்போது அல்லது முக்கியமாக ஏதேனும் நடைபெறவிருக்கும்போது, அதைப்பற்றி முன்கூட்டியே ஆராய்வதுமில்லை. தீர்மானிப்பதுமில்லை. திட்டமிடுவதுமில்லை. இதற்கு அவசியமான – ஒரு கட்சிக்குரிய கட்டமைப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக ஒரு தேர்தல் வரும்போது அல்லது தமிழ் மக்களின் மனித உரிமைகள் விவகாரம், பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் விடயம் போன்றவைகள் பற்றி;, கூட்டமைப்பினர் முன்கூட்டியே சந்தித்து அதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்புகளையும் செய்ததாகவும் தெரியவில்லை.

எல்லாமே இறுதி நேரத்தில் அவசர அவசரமாகக் கூடிப்பேசி ஏதோ ஒரு தீரமானம் எடுக்கப்பட்டதாக ஊடகங்களுக்குத் தகவல் வெளியிடுகின்ற கைங்கரியமே நடைபெற்று வந்திருக்கின்றது. அதேநேரம் அந்தத் தீர்மானத்தின்படி நடந்து கொண்டதாகத் தகவல்கள் வெளிவந்ததே கிடையாது என்பதைம் குறிப்பி;டத்தான் வேண்டும்.

பாராட்டத் தக்க மாற்றம்

கூட்டமைப்பின் இவ்வாறான போக்கில், இப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மூன்றாவது முறையாக ஜெனிவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ஐநாவின் விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீரவு காணும் விடயத்தில் அனுசரணையாளராக அல்லது மத்தியஸ்தராக தென்னாபிரிக்கா செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்து முன்வந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் சுமார் எட்டு மாதங்களுக்குப் பின்னர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பி;ன் ஒருங்கிணைப்பு குழு கூடி தீர்மானங்களை மேற்கொண்டிருக்கி;ன்றது. இதனையடுத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் கூடிப்பேசி சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கென குழுவொன்றை அமைத்திருக்கின்றது.

நீண்டகால இடைவெளியின் பின்னர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடியதும், தொடர்ந்து கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் - அதனை எப்படி குறிப்பிடுவது என்று தெரியவில்லை - கூட்டமைப்பின் பொதுச்சபையா அல்லது முக்கியஸ்தர்கள் சபையா, அதற்கு என்ன பெயர் என்று தெரியாது, ஆனால் கூட்டமைப்பின் கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு அடுத்ததாக மூன்றாவது தடவையாக இந்தக் கூட்டம் திருகோணமலையில் கூடியிருக்கின்றது. இந்த இரணடு கூட்டங்களும் இன்றைய காலகட்டத்த்pல் முக்கியமானவை. முக்கியமான விடயங்கள் பற்றி பேசப்பட்டிருக்கின்றது. முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்

அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது பாரட்டத்தக்கது. இதனைத் தொடர்ந்து காலக்கிரமத்தின் அடிப்படையில் முன்னெடுத்தால் அது போற்றத்தக்காக இருக்கும்.

ஒருங்கிணைப்பு குழுவின் தீர்மானங்கள்

திருகோணமலையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தி;ல் முக்கியமாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வது பற்றி ஆராயவும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமென குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமாகிய சித்தார்த்தன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றார்கள்.

அதேநேரம், இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை மாதாந்தம் நடத்துவது என்றும் குறிப்பாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று இந்தக் குழு கூடி நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் முடிவுகளை எடுக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதையும்விட விசேடமாக வெளிவிவகார விடயங்களைக் கையாள்வது தொடர்பில் அதாவது சர்வதேச மட்டத்தில் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்வதற்காகக் குழுவொன்றை அமைப்பது பற்றி இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்த்pல் ஆலோசனை முன்வைக்கப்பட்டு அடுத்தநாள் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தி;ல் அதற்கென எட்டு பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.

இது மட்டுமல்லாமல் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் செயற்பாடுகள் பற்றி சிறப்பாக வடமாகாண சபையின் நடவடிக்கைகள், அது இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலை, மாகாண சபையின் நிர்வாகம் தொடர்பில் அரசாங்சகத்தின் நிலைமைகள் என்பன குறித்து ஆராய்ந்து வடமாகாண சபையினரை வழிநடத்துவதற்காக மற்றுமொரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண சபையின் நடவடிக்கைகள் பல ஒருங்கிணைக்கப்பட்டதாக இல்லை என்பதும், வடமாகாண முதலமைச்சர் இன்னும் சிறப்பாகச் செயற்படுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இந்தக் கூட்;டத்தி;ல் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக கட்சியின் போக்குகள், நலன்கள் போன்ற விடயங்களை அவர் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்று இக்கூட்டத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் அவர் ஆற்றுகின்ற உரைகளில் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் தொடர்பிலும் இந்தக் குழுவில் கவனம் செலுத்தி ஆராயப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் வடமாகாண சபையை அரசாங்கம் கையாள்கின்ற விதம் குறித்து அக்கறை செலுத்தியுள்ள ஒருங்கிணைப்பு குழு, அதனை எவ்வாறு எதிர்கொண்டு வடமாகாண சபைக்குரிய அதிகாரங்களையும், சபைக்குரிய நிதி மற்றும் வளங்களையும், மாகாண சபைகளுக்கான உத்தேச வழிகாட்டல் அல்லது ஆலோசனை குழுவை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது.

இன்றைய அரசியல் நிலைமைகள், ஜெனிவா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள், தென்னாபிரிக்காவின் உதவியுடனான அரசியல் தீர்வுக்கான முயற்சிகள், இந்த இரண்டு விடயங்களையும் எவ்வாறு கூட்டமைப்பு கையாள வேண்டும் என்பது பற்றியும் ஒருங்கிணைப்பு குழு விரிவாக ஆராய்ந்திருக்கின்றது. இந்தக் கூட்டம் ஐந்து மணித்தியாலங்கள் நடைபெற்றிருந்த போதிலும், அதில் கலந்து கொண்டிருந்த உறுப்பினர்களில் சிலர் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளாமல் மௌனம் சாதித்ததாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. இருந்தபோதிலும், வழமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு, பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர் முடிவுகள் எதனையும் எடுக்காமல் எழுந்து செல்வதே வழமையாக இருக்கின்ற நிலையில் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆக்கபூர்வமான முடிவுகள் எடுககப்பட்டிருக்கின்றன. இது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று நம்பலாம்.

கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் ஆர்வம் ஏன்?

துமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தனியானதோர் அரசியல் கட்சியாகத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பி;ன் கூட்டங்களில் வற்புறுத்தப்பட்டு வந்தது. ஆயினும் கூட்டமைப்பி;ன் தலைமை நிலையில் இருப்பவர்கள் இதுவிடயத்தில் ஆர்வமற்றவர்களாக இருந்ததன் காரணமாகவே பதிவு நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவி;ல்லை என்ற விமர்சனமும் இருந்து வருகின்றது.

இந்தத் தயக்கத்திற்குகான காரணம் பற்றியும் பலவிதமான கருத்துக்கள் வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டிருந்தன. துமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக உள்ள தமிழரசுக் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காட்டி வருகின்ற ஆர்வம் காரணமாகவே கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் இழுத்தடிப்பு இருந்தது என்பது முக்கியமான கருத்தாகும்.

தமிழரசுக் கட்சியென்பது தமிழ் மக்களின் பழம்பெரும் கட்சி. தமிழர்களின் உரிமைகளுக்காக அது நீண்டகாலமாகப் பாடுபட்டு வந்திருக்கின்றது. அதனுடைய கொள்கைகள் காலத்தையும் வென்று நின்று நிலைத்திருக்கின்றன. மோசமான ஒரு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், மென்போக்கிலான அரசியல் நடவடிக்கையில் இன்றைய சூழலில் பிரச்ச்pனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அந்தக் கொள்கைகளே பொருத்தமானவை என்ற ஓர் அரசியல் ரீதியான வாதமும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், ஆயுதமேந்திப் போராடிய கட்சிகளை அரசாங்கம் தீவிர நோக்கமுடையவை என்ற கண்ணோட்டத்தில் அரசம் சர்வதேச நாடுகளும் நோக்கி வருகின்றன. எனவே அமைதி வழியில் பேச்சுவார்த்தையொன்றின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு மிதவாத கொள்கைகளைக் கொண்ட தழிழரசுக் கட்சியும் அதன் போக்குமே மிகவும் பொருத்தமானது என்று தமிழரசுக் கட்சியின் தலலமையும் அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் ஆணித்தரமாக நம்புகின்றார்கள். எனவே, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திலேயே தங்கியிருக்கின்றது. குறிப்பாக தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீட்டுச் சின்னமே வென்றிருக்கின்றது. அவர்களின் மனங்களில் ஆழமாக அது பதிந்திருக்கின்றது. ஆகவே, வீட்டுச் சின்னத்திற்குரிய தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதே சாலச் சிறந்தது என்பது அவர்களின் நிலைப்பாடு. இதன் காரணமாகவே, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் பின்னடிப்பு செய்யப்பட்டிருந்தது என்பது அவதானிகளின் கருத்தாகும்.

ஒரு பேச்சுவார்த்தையென்று வரும்போது, ஆயுதமேந்திப் போராடிய கட்சிகளைச் சேர்ந்தவர்களை மறுதரப்பு – அது அரச தரப்பாக இருக்கலாம் அல்லது சர்வதேசமாக இருக்கலாம் அவர்களை ஒரு மாதிரியாகவே நோக்குவார்கள் என்ற கருத்தும் தமிழரசுக் கட்சியின் அபிமானிகளினால் முன்வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய ஒரு பின்னணியில் இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான எற்பாடுகளை மேற்கொள்வதற்காக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகப் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். மேற்கொண்டும் வருகின்றார்கள். ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சி; தன்னை வளர்த்;துக் கொள்வதற்காக முயற்சிப்பது என்பது தவறான காரியமல்ல. அவ்வாறு செய்யக் கூடாது என்ற நியதியும் கிடையாது.

ஆனால், கூட்டமைப்பையே தமது அரசியல் தலைமையாகக் கருதுகின்ற பெரும்பான்மையான மக்களிடம் இருந்து கூட்டமைப்பைத் தனிமைப்படுத்தி, தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது விரும்பத்தக்கதல்ல என்று கூட்டமைப்பின் மீது அபிமானமும். கொள்கைப் பிடிப்பும் உள்ளவர்கள் கூறுகின்றார்கள். கூட்டமைப்பென்பது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், உள்ளுர் அரச மட்டத்திலும், சர்வதேச மட்டத்தி;லும் தமிர்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற கட்சியாக – ஓர் அரசியல் அமைப்பாக நோக்கப்படுகின்றது.

அவற்றின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. ஆகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாகக் கட்டமைப்பதே புத்திசாலித்தனமாகும் என்பது அவர்களுடைய வாதமாகும். இத்தகைய வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இழுபறிபட்டிருந்த பதிவு நடவடிக்கைக்கே இப்போது குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக நோக்கப்பட்ட அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட்டில் அதன் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் ஆற்றிய உரை குறித்து அரச தரப்பினரும், சிங்களப் பேரினவாதத் தீவிர சக்திகளும் கூடிய கவனம் செலுத்தியிருந்தன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபகாரன் ஆற்றிய மாவீரர் தின உரைகளைப் போன்ற உருவ அமைப்பில் அந்த உரை அமைந்திருந்ததாகப் பலரும் அப்போது கருத்து வெளியிட்டிருந்தார்கள். இந்த உரையில் குறிப்பிட்ட ஓரிடத்தில் நாட்டில் பிரிவினைவாதத்தைப் பிரகடனப்படுத்துகின்ற வாக்கியம் அல்லது சொற்கள் இடம்பெற்றிருப்பதாகவும், எனவே பிரிவினைவாதத்தை அந்தக் கட்சி தூண்டுவதாகவும் குறிப்பிட்டு, இது நாட்டின் ஐக்கியத்திற்கு விரோதமானது என்ற வகையில் சிங்களக் கடும் போக்காளர்கள் கருத்து வெளியிட்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. மிதவாத கொள்கைகளைக் கொண்டதும், தமிழ் மக்களின் அரசியல் தந்தையென்றும் வர்ணிக்கப்படுகின்ற தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் செயற்பட்டு வந்தது என்ற பெருமையும் கொண்ட கட்சிக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கி;ன்றது.

இதையும் விட தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு எதிராக வேவ்வேறாக ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரே தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமை எற்பட்டிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் இரு குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியிருக்கின்றது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று மனப்பூர்வமாக முடிவு செய்திருக்கலாம். ஆயினும் புறச் சூழல்களே அதனை அந்த நிலைமைக்குத் தள்ளியிருப்பதாகக் கருதுவதற்கும் இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

எவ்வறாயினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனைக் கட்டமைத்து வலுவான ஓர் அரசியல் அமைப்பாக உருவாக்குவதன் மூலம், தமிழ் மக்களின் குரல் அரசியல் தீர்வுக்கான அரங்குகள் மற்றும், பிரச்சினைகள் பேசப்படுகின்ற மன்றங்களில் ஓங்கி, உறுதியாக ஒலிப்பதற்கு வழியேற்படும் என்பதில் சந்தேகமில்லை.

வெளிவிவகாரங்களைக் கையாள்தல்

அதேநேரம், சர்வதேச அரங்குகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைச் சரியான முறையில் கையாள்வதற்கு வசதியாக வெளிவிவகாரங்களைக் கவனிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது.

ஐநாவின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, அது குறித்து தனது பங்களிப்பை வழங்குவதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜெனிவாவுக்குச் சென்றிருந்தார்கள். அவ்வாறு சென்றிருந்தவர்கள் கட்சி நடைமுறைகளுக்கமைவாக நடந்து கொள்ளவில்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு, அது குறித்தும், ஏனைய விடயங்கள் குறித்தும் திருகோணமலையில் நடைபெற்ற கூட்டங்களில் பேசப்பட்டிருக்கின்றது. விவாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் வெளி அரசியல் விவகாரங்களைக் கையாள்வதற்கு வசதியாக எட்டு பேர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரரேரணையையடுத்து, அது தொடர்பான செயற்பாடுகளை தமிழ் மக்களுக்குச் சார்பாக எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது, தென்னாபிரிக்காவின் உதவியில் மேற்கொள்ளப்படவுள்ள அமைதித் தீர்வுக்கான முயற்சி;களை எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்களை இந்தக் குழு கவனிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பல விடயங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்கள். இந்தச் சந்திப்புக்களின்போது உண்மையான கள நிலைமைகள் குறித்து கூட்டமைப்பினர் அங்குற்றவர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கின்றார்கள். அதேநேரம், அரசியல் தீர்வு தொடர்பிலும், அது குறித்த பேச்சுவார்த்தைகளிலும், அரசாங்கத் தரப்பினருடைய அக்கறையற்ற போக்கு பற்றியும் அவர்கள் விபரித்திருந்தார்கள்.

அதேநேரம் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில் தமிழ்ப் பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கியுள்ள நாளாந்த சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்தும் அவர்கள் விரிவாக எடுத்துக் கூறி, அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் விபரித்திருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த கூட்டமைப்பு குழுவினர் இந்த வெளிவிவகாரங்களைக் கையாளக் கூடியவர்களா, அவர்களால் எந்த அளவிற்கு அவற்றைக் கையாள முடியும், முடிவுகள் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால், அதனை மேற்கொள்வதற்கு அவர்களால் எந்த அளவில் முடியும் என்பது போன்ற கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகையதொரு பின்னணியிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளி;ல் வெளிவிவகாரங்களைக் கையாள்வதற்கான குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கும், தமிழ் மக்களின் வெளிவிவகாரங்களைக் கையாள்வதற்குமாக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அடிக்கடி சந்திக்க வேண்டும். அவசியமான விடயங்களைக் கலந்துரையாட வேண்டும். சரியான முறையில் அவற்றைக் கையாள வேண்டும். சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மாதாந்தம் கூடுவதற்குத் தீரமானிக்கப்பட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவும் சரியான முறையில் செயற்பட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், விடயங்களைக் கையாள்வதற்கு வழிகாட்ட வேண்டும். பலரும் இதனை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106404/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒருங்கிணைப்புக்குழு  நல்ல  முயற்சி

 

ஆனால் இந்த சொல்லை  இங்கு சிலருக்குப்பிடிக்காது........ :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.