Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக இளைஞர் மாநாடு இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்! - துவக்கி வைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலக இளைஞர் மாநாடு இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்! - துவக்கி வைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த. 
[Tuesday, 2014-05-06 09:39:17]
World-Youth-060514-150.jpg
உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை 11.30 மணியளவில் இந்த மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கவுள்ளார். இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி அஹமட் அல்ஹெந்தாவி ஆகியோர் விசேட பிரதிநிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
நேற்று மாலைவரை 15 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் விவகார அமைச்சர்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளதாக உலக இளைஞர் மாநாட்டின் பேச்சாளர் தெரிவித்தார்.ஆப்கானிஸ்தான், சீசல்ஸ், பங்களாதேஷ், பல்கேரியா, சீனா, நைஜீரியா, டொங்கா, ரினிடேட், சாம்பியா, பிஜி, நேபாளம், கியூபா, கெபோன், மியன்மார், அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் நேற்று இலங்கை வந்தனர்.இதேவேளை மாநாட்டின் நிகழ்வுகளை படம் பிடிக்கவும் செய்தி சேகரிப்பதற்காகவும் இந்திய ஊடகவியலாளர்கள் 5 பேர் இலங்கை வந்துள்ளனர்.168 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
 
இன்று காலை 7.30 க்கு கொழும்பிலிருந்து உலக இளைஞர் மாநாட்டு பிரதிநிதிகள் ஹம்பாந்தோட்டை புறப்பட்டுச் செல்வதுடன் காலை 11.30 க்கு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக இளைஞர் மாநாட்டின் ஆரம்ப வைபவம் ஆரம்பமாகிறது. பிரதமர் டி. எம். ஜயரட்ண, பிரதம நீதியரசர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வுள்ளனர்.இளைஞர் நகரமாக பிரகடனப்ப டுத்தப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை நகரம் மற்றும் மாநாட்டு மண்டப பகுதி உலக இளைஞர் மாநாட்டு சின்னங்களுடனும் கொடிகளுடன் கோலாகலமாக காட்சியளிக்கிறது.
 
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று ஆரம்பமாகும். ஜனாதிபதி அவர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்த பின்னர் உலக இளைஞர் மாநாட்டின் ஆரம்ப வைபவத்தின் போது ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்திருக்கும் அஹமட் அல் ஹெந்தாவி உரையாற்றுவார். இன்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு பகல் போசன விருந்துபசாரம் வழங்குவார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதிநிதிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.
 
இதனையடுத்து பிரதிநிதிகள் அனைவரும் ஹம்பாந்தோட்டையின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பார்வையிடுவார்கள். நாளை இரண்டாவது அமர்வுகள் கொழும்பில் நடைபெறும்.நேற்று மாலை பிரதிநிதிகள் தங்கியிருந்த ஹோட்டல்களில் அவர்களுக்கான மாநாடு தொடர்பான விசேட செயலமர்வுகள் நடைபெற்றது.இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ள கொழும்பு பிரகடனத்தின் விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளது.
 
அதேவேளை, உலக இளைஞர் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள செய்தியில் இலங்கை சமாதான யுகத்திற்குள் பிரவேசித்து இளைஞர்களின் குறிப்பிட த்தக்க பங்களிப்புகளுடன் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க வழியில் முன்னேறிவரும் ஒரு சூழ்நிலையில் இந்த மாநாடு நடைபெறுவது மிகவும் பொருத்தமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
 
இலங்கை இன்று அடைந்திருக்கும் இந்த சமாதான சூழ்நிலையானது மூன்று தசாப்தகால பயங்கரவாத மோதலுக்குப் பின்னர் அடையப் பெற்றதாகும்.கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலை காரணமாக எமது இளைஞர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்த அதே நேரம் அது அவர்களது முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருந்து வந்தது.
 
இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கு சொந்தமானது. இது அறிவின் நூற்றாண்டாகும் என இலங்கையின் தேசிய கொள்கை குறிப்பிடுகின்றது. இது நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் தேசிய அபிவிருத்தி பணிகளில் இளைஞர்களின் குரலுக்கு செவிமடுப்பதற்கான அழுத்தத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்தப் புதிய தொழில்நுட்ப முன்னேற்ற யுகத்தில் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் புத்தாக்கம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான புதிய சந்தர்ப்பங்களை உருவாக்குதல் ஊடாக நாட்டின் இளைஞர்கள் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
 
பல்வேறு நாடுகள் சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை பிரதிபலிக்கும் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றுகின்றனர் என்பதை நான் மிகுந்த திருப்தியோடு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் எமது சுதேச சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வித்தியாசமான இயலுமைக் கொண்டவர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களது தீர்மானங்கள் எதிர்வரும் தசாப்தங்களில் இளைஞர் தொடர்பான சர்வதேச மூலோபாயங்களுக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக அமையும்.
 
எல்லா வெளிநாட்டு பங்குபற்றுனர்க ளையும் நான் இலங்கைக்கு வரவேற்பதுடன் நீங்கள் எமது மக்களின் நட்புறவையும் உபசரிப்பையும் அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடாத்துவதற்கு பங்களிப்பு செய்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் பங்களிப்புகளை நான் பாராட்டுகிறேன்.இன்று உலகில் இளைஞர்களது பிரச்சினைகளை தீர்ப்பதிலும் அவர்களது நலனோம்புகையிலும் 2014ம் ஆண்டு சர்வதேச இளைஞர் மாநாடு முழுமையாக வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.http://seithy.com/breifNews.php?newsID=108774&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.