Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோனா ஆற்றை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

Featured Replies

02-1%20copy(2).jpg

-ஏ.ஜே.எம்.ஹனிபா  

சாய்ந்தமருது தோனா ஆற்றை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு ஜேர்மன் நாட்டு நகரம் ஒன்றின் நிதியுதவியை பெறுவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது தோனா ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பில் திணைக்களத் தலைவர்களுடனான கூட்டம் கல்முனை மாநகரசபையில் திங்கட்கிழமை  (05) நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பல வருடங்களாக சுத்தப்படுத்தப்படாது துர்நாற்றம் வீசுகின்ற தோனா ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கு நாம் எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. எனது இந்த முயற்சிக்கு  ஒத்துழைத்த மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பருக்கும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூருக்கும் சாய்ந்தமருது மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

கரையோர பாதுகாப்பு திணைக்களம்; மூலம் கிடைத்துள்ள  நிதியில் ஆற்றைச் சுத்தப்படுத்த  ஆரம்பித்துள்ளோம். இது கூடிய விரைவில் நிறைவடையும் என்று நம்புகிறோம். அதேவேளை,  இதற்கு மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில்  மாநகரசபை மூலம் ஒதுக்கித் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும்,  சுத்தப்படுத்தப்படுகின்ற தோனா, மீண்டும் குப்பைகள் உள்ளிட்டவைகளால்  பாதிக்கப்படாமல் பாதுகாப்பதும் எதிர்காலத்தில் அதை மக்களின் பொழுதுபோக்கு இடமாக  அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதும் எமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 

என்னைப் பொறுத்தவரை இத்தோனாவை சுத்தப்படுத்துவதுடன் வேலை முடிந்துவிட்டது என்று எண்ணவில்லை. மாறாக, இதனை தொடர்ந்து பாதுகாத்து நவீன முறையில் அபிவிருத்தி செய்து மக்கள் பொழுதுபோக்கு இடமாக அழகுபடுத்துவதே எனது கனவாகும். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே இதனை நான் நோக்குகிறேன்.

இத்திட்டத்திற்கு பாரிய நிதி தேவைப்படும். அதை இந்த அரசாங்கத்திலிருந்தோ அல்லது அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களிலிருந்தோ பெறமுடியாது. இதற்கு ஒரே வழி யாதெனில், வெளிநாட்டில் முன்னேறிய நகரம் ஒன்றின் நிதியுதவியை நாடுவதேயாகும். அதற்கான முயற்சிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.

நமது கல்முனை மாநகரசபையை பல நகரங்களுடன் இணைத்து பல்வேறு பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நானும் முதல்வரும் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ஜேர்மன் நாட்டின் நியூ ரோம் பேர்க் நகருடன் கல்முனை மாநகர சபையை கூட்டிணைப்புச் செய்து அதன் ஊடாக சாய்ந்தமருது தோனா ஆற்றை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டு அதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.  

விரைவில் அங்கிருந்து ஓர் உயர்மட்டக் குழுவினர் இங்கு வந்து ஆய்வறிக்கைகளை தயாரிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து நாங்கள் குறித்த நகருக்கு சென்று ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதன் மூலம் கோடிக்கணக்கான நிதியை இத்திட்டத்திற்காக பெற முடியும் என்ற நம்பிக்கையை உங்களிடம் வெளிப்படுத்துகிறேன். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன்.

மேலும், சுத்தப்படுத்தப்படுகின்ற தோனாவை மீண்டும் கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றாமல் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு மாநகரசபை மாத்திரம் பொறுப்புச் சாட்டாமல், சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், பள்ளிவாசல் மரைக்காயர்கள் என அனைத்து தரப்பினரும் கரிசனை செலுத்த முன்வர வேண்டும்.

இத்தோனாவை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இன்றிலிருந்து மேற்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும். இதற்காக இங்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நாம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். இதற்காகவே நான் திணைக்களங்களின் தலைவர்கள் அனைவரையும் அவசரமாக அழைத்து இக்கூட்டத்தை நடத்துகிறேன். 

இது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குகின்ற அதேவேளை, தேவையான சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிஸார் முன்வர வேண்டும்.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகரசபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகர முதல்வரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.சத்தார், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.முஸ்தபா, ஆசியமன்ற நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

03%20copy(24).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.