Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைசெய்த 16 அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தடைசெய்த 16 அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை:-
09 மே 2014
 ruwan-wanigasooriya_CI.jpg
இலங்கையில்  பயங்கரவாத  அமைப்புகளாக  அடையாளப்படுத்தி  தடைசெய்யப்பட்டுள்ள  16 அமைப்புகள்  மற்றும் 424 தனிப்பட்டவர்கள்  தொடர்பிலான  விபரங்கள் இராஜதந்திர  ரீதியில்  தூதரகங்கள்  ஊடாக  சம்பந்தப்பட்ட  நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்  ஊடக மையத்தின்  பணிப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான  பிரிகேடியர்  ருவன் வணிகசூரிய  தெரிவித்தார்.
 
பாதுகாப்பு  மற்றும் நகர அபிவிருத்தி  அமைச்சின் ஊடக  மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்  இதனைத் தெரிவித்தார். மேலும்  அவர் கூறியதாவது ;
 
"இலங்கையில் பயங்கரவாத  அமைப்புகளாக இனங் கண்டு தடைசெய்யப்பட்டுள்ள  அமைப்புகள் மீதான  தடையை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென  கனடா தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 16 அமைப்புகளில்  விடுதலைப்புலிகள்  அமைப்பும் உள்ளடங்குகின்றது.  இந்த அமைப்பை  ஏற்கனவே கனடா அரசு தடை செய்திருந்தது. இந்நிலையிலேயே இக்கருத்தையும் தெரிவித்திருக்கின்றனர்.
 
இவ்விடயத்தை கருத்தில் கொள்ளாமல்  இக்கூற்றைத் தெரிவித்தனரா எனத் தெரியவில்லை. எனினும் இவ்வமைப்பு தொடர்பில்  கனடா அரசு உரிய  நடவடிக்கை எடுக்குமென நம்புகின்றோம். பயங்கரவாதம்  என்பது இலங்கைக்கு  மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் அச்சுறுத்தலான விடயமாகவும் உள்ளது.
 
இதேபோல  விடுதலைப்புலிகள்  அமைப்பு  புலம்பெயர்ந்த  தமிழர்களின்  உதவியுடன் தொடர்ந்து செயற்பட்டு  வருவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் இவ்வமைப்பு  தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியிலும் இவ்வமைப்பை  அச்சுறுத்தலான அமைப்பென்றே கருத்தில் கொள்கின்றனர். வேறெந்த  நாடும் இவ்விடயம் தொடர்பில்  இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை" என  குறிப்பிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.