Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமேடையில் மணமகள் சுட்டுக் கொலை : சோகத்தின் பின்னணி

Featured Replies

  • shot.jpg

போபாலில், பல்வேறு கனவுகளுடன் மணமேடை ஏறிய மணப்பெண்ணை, சொந்த அத்தை மகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவரான ஜெயஸ்ரீக்கும் (26) ரோஹித் என்ற முதுநிலை மருத்துவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று மணமேடையில் இருவரும் அமர்ந்திருந்த போது, ஜெயஸ்ரீயின் அத்தை மகன் அனுராக் (31) நாட்டுத் துப்பாக்கியால் மணமகளை சுட்டுக் கொன்றான். கையில் அட்சதையுடன் காத்திருந்த உறவினர்கள், வெடிகுண்டு சப்தத்தால் அதிர்ந்து போயினர்.

கைதான கொலையாளி அளித்த வாக்குமூலத்தில், தனது சொந்த மாமன் மகளான ஜெயஸ்ரீயை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், ஒரு சாதாரண பணியில் இருந்த என்னுடைய காதலை மருத்துவரான ஜெயஸ்ரீ ஏற்றுக் கொள்ளவில்லை.

இதற்கிடையே, அவருக்கு ஒரு மருத்துவரை மணம் பேசி முடித்தனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரை கொலை செய்ய முடிவு செய்து அதனை செய்து முடித்தேன் என்று கூறியுள்ளார்.

கொலை செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு துப்பாக்கியை கையில் பிடித்தவாறு போட்டோ எடுத்து அதனை பேஸ்புக்கில் போட்டு, "காத்திருந்து பாருங்கள்" (வெயிட் அன்ட் சீ) என்று போட்டிருப்பதையும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த திட்டமிட்ட படுகொலையால், ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் துவண்டு போயுள்ளனர்.

அனுராக் தனது மகளை காதலிப்பதையும், இந்த திருமணத்தை எதிர்ப்பதை அறிந்தும், எனது சொந்த தங்கையை திருமணத்துக்கு அழைக்கவில்லை. ஆனால், திடிரென இவன் திருமணத்துக்கு வந்ததும், உறவினர் என்று கருதி அனைவருமே அவனை தடுக்காமல் இருந்துவிட்டனர். இப்படி நடக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை என்று கதறுகிறார் ஜெயஸ்ரீயின் தந்தை.

http://www.dinamani.com/latest_news/2014/05/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-/article2217134.ece

article-2624296-1DB476AB00000578-541_634

http://www.youtube.com/watch?v=mWbV-RbB1WM

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.