Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் இராணுவத்தின் வசமுள்ள வீடுகளை விடுவிக்கக் மக்கள் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சியில் இராணுவத்தின் வசமுள்ள வீடுகளை விடுவிக்கக் மக்கள் கோரிக்கை! குளோபல் தமிழ் செய்தியாளர்:-
15 மே 2014
 

நடத்தப்படட்ட இருந்த ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது:

vanni%20news%20round%20up_CI.jpg

மீள்குடியேற்றப்பட்டு ஐந்து வருடங்களை கடந்துள்ளபோதும் இராணுவத்தினர் கையகப்படுத்திய தமது வீடுகளை இன்னமும் திருப்பித் தரவில்லை என்று கூறி கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தயாராகினர். 

கிளிநொச்சி திருநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் அலுவலகத்திலிருந்து கிளிநொச்சி கச்சேரிவரை செல்ல இருந்த குறித்த ஆர்ப்பாட்டம் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரிடம் பிரச்சினையை எடுத்துரைக்குமாறு மக்களை பொலிசார் அழைத்து வந்தனர்.

இதன்போது நகர்ப்பகுதியில் உள்ளபோதும் இதுவரையில் தமக்கு வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் சட்டத்திற்கு முரணா வகையில் காணிகள் பகரிந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உரிய வகையில் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என்று குறிப்பிட்டார். 

விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் சில வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளனஎன்றம் அக்காலத்தில் காணி தொடர்பாக உரிய வகையில் ஆராயப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே கிளிநொச்சி நகரை அண்டிய சில இடங்களுக்கு வீட்டுத்திட்டம் இன்னமும் வழங்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 


கிளிநொச்சி நகர்ப் பகுதியான பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள வீடுகளை விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இன்னொரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த பல வருடங்களாக தமது நிலப் பகுதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தபோதும் இராணுவாத்தினர் இன்னமும் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறவில்லை என்று மக்கள் குறிப்பிட்டனர். 

இதனால் தாம் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகவும் பரவிப்பாஞ்சான் மக்கள் குறிப்பிட்டனர். 

குறித்த இடங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாகவும் மக்களின் நிலங்கள் மக்களுக்கே வழங்கப்படும் என்றும் பரவிப்பாஞ்சான் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106921/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.