Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவழிப்பின் ஐந்து ஆண்டுகளும் தமிழ் தேசத்தின் எதிர்காலமும்: புதிய திசைகள்

Featured Replies

newdirections.jpg
நீண்ட நெடிய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றையும் பல தியாகங்களையும் தாங்கிய வண்ணம் புதிய ஒரு அரசியல் வழியை தேடி நிற்கிறது தமிழ் தேசம். மனித குலத்தின் பண்புகள் பெரும்பாலும் ஒத்தவையாக இருக்க; வேறு மொழி, வேறு இனம், வேறு பிரதேசம், வேறு கலாச்சாரம் என்கின்ற காரணங்களுக்காக தமிழ் தேசத்தவர் எத்தனை முறை விரட்டப்படுகின்றனர், ஒடுக்கப்படுகின்றனர், அழிக்கப்படுகின்றனர்.

இத்தருணத்தில் மக்களின் ஒடுக்குமுறைக்கெதிராக, தேசிய உரிமைக்காக போராடி மடிந்த அனைத்து போராளிகளுக்கும் எமது மரியாதையை செலுத்துவோம். இந்தக் கொடிய யுத்தத்தில் மடிந்த அனைத்து தமிழ், முஸ்லீம், மலையக, சிங்கள மக்களை நினைவு கூர்வோம்.

தமிழ் தேசம் என்பது தமிழர்கள், முஸ்லீம்கள் என்னும் தேசிய இன மக்களையும் மலையகத்தமிழர்கள், சிங்களவர்கள், என்னும் தேசிய சிறுபான்மையின மக்களையும் கொண்டது. கடந்த முப்பது ஆண்டுகால தமிழ் தேசியவிடுதலைக்கான போராட்டத்தில் அத்தேசத்தில் வாழும் தமிழரின் நலன் தவிர்ந்த மற்றைய மக்களின் உரிமை, நலன், தேவைகள் தொடர்பாக தமிழ் தலைமைகளிடம் தார்மீக கடமையோ அக்கறையோ காணப்படவில்லை. மாறாக முஸ்லீம் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு பேரினவாதத்தின் இனவழிப்பை தாமே நியாயப்படுத்திக் கொண்டனர்; களையெடுப்பு என்னும் போர்வையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மலையக மக்கள் தமிழ் தேசத்திலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கப்பட்டனர். பிரதேச வாதத்திற்கெதிரான போராட்டம் முன்னெடுக்கப் படுவதற்குப் பதிலாக பிரதேச வாதம் தேவையான போது குழு வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டது. சிங்கள மக்களையும் சிங்கள பேரினவாத அரசையும் ஒரே வகையினராக்கி எதிரிமுகாமில் தள்ளி பல சந்தர்ப்பங்களில் அம்மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

கடந்த கால தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட தலைமையானது தனது அழிவிற்கான காரணிகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. உலகில் போராடும் அனைத்து மக்களின் எதிரிகளான சர்வதேச அரசுகளுடன் நட்பை பேணியதன் மூலம் உலகில் போராடும் மக்களின் முழு ஆதரவை தமிழ் தேசம் இழந்திருந்தது. போராட்ட தலைமையென்பது சொந்த மக்களில், உலகில் போராடும் மக்களில் நம்பிக்கை வைக்கவில்லை. மக்களுக்கான அரசியலில் நம்பிக்கை வைக்கவில்லை; மாறாக, உலகில் உள்ள ஒடுக்குமுறை அரசுகள், அரசியல் தரகர்கள், இனவாதிகள் போன்ற சக்திகளில் நம்பிக்கை வைத்து அரசியல் நியமப்படி அழிந்தது.

தமிழ் தேசத்தின் எதிர்காலம் என்பது இலங்கையில் ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனமக்களுடன் தம்மை இணைத்துக்கொள்வதிலும் சிங்கள மக்களிலிருந்து வரும் நேச சக்திகளுடன் இணைந்து பொது எதிரிக்கெதிராக ஐக்கியப் படுவதிலுமே தங்கியுள்ளது. தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகவும், வாழ்நிலைகளுக்காகவும் போராடி வருவதுடன் தமிழ் தேசத்திற்குள்ளேயிருக்கும் முஸ்லீம் தேசிய இன மக்கள் இன்று எதிர் கொள்ளும் கடுமையான தேசிய ஒடுக்குமுறைக்கெதிராக குரல் கொடுப்பதும் அவர்களுடன் தோளோடுதோள் நின்று போராடுவதும் முதல் கடமையாகும். மலையக மக்களின் இன்றைய வாழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களுடன் கைகோர்த்துக் கொள்வதுடன் சிங்கள மக்களுடன் சாத்தியமான ஐக்கியம் பேணப்பட வேண்டும்.

தன்னளவில் ஜனநாயகமற்ற ஒரு தேசம் தனது ஜனநாயக உரிமைக்காக போராட முடியாது என்பதை தமிழ் தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். விடுதலை என்பதை உயர்ந்த பட்சக் கோரிக்கையாக வைத்திருப்பதன் காரணத்தால் இடைக்கால, தற்கால தீர்வுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்பதாக அர்த்தப்படமாட்டாது. தேசிய ஒடுக்குமுறையற்ற சமூக அமைப்பு உருவாகும் வரை தேசிய அடக்கு முறைக்கெதிரான போராட்டம் தொடரப்பட வேண்டும்.

தமிழ் தேசத்தில் ஜனநாயகத்தை உருவாக்கப்போராடுவதும், ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் உரிமைக்காகப் போராடுவதும், ஐக்கியப்படுவதுமே தமிழ் தேசிய விடுதலைக்காக போராடி மடிந்த போராளிகள், மக்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

புதிய திசைகள்

http://www.kural.co.uk/news/2014/fiveyearson

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.