Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா விசாரணையில் ஆஜராக பாகிஸ்தான் வழக்கறிஞரை பணிக்கமர்த்தியது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா விசாரணையில் ஆஜராக பாகிஸ்தான் வழக்கறிஞரை பணிக்கமர்த்தியது சிறிலங்கா
மே 20, 2014
 
  மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த  பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி வழக்கறிஞர் ஒருவரை சிறிலங்கா அமர்த்தியுள்ளது.
 
ஐ.நா. விசாரணையை எதிர்கொண்டிருக்கும் சிறிலங்கா, அயிட்ஹா அஷான் என்ற சட்ட நிபுணரை தனது சார்பில் அமர்த்தியிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அஷன் கடந்தவாரம் கொழும்பில் இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடியிருந்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததையடுத்து அஷன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். முன்னாள் இராணுவ ஆட்சியாளர் முஷாரப் பயணம் செய்த விமானத்தை 1999 இல் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டை நவாஸ் ஷெரீப் எதிர்கொண்டிருந்த போது அவர் சார்பில் அஷன் ஆஜராகியிருந்தார். 
 
அதிகளவு உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வைக் கூட்டுமாறு கொழும்பிடம் அஷான் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு ஆதரவாக முறையில் மனித உரிமைகள் பேரவையில் 12 நாடுகள் வாக்களித்திருந்தன. இந்நிலையில் விசேட அமர்வுக்கு அழைப்புவிட மேலும் 4 நாடுகளின் ஆதரவே தேவைப்படுகின்றது என்ற நிலைப்பாட்டை அஷான் கொண்டிருக்கிறார். 
 
இந்த மாதிரியான அமர்வொன்றின் மூலம் சிறிலங்கா தனது தற்போதைய நிலைப்பாட்டைப் பயன்படுத்த முடியுமென்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.  கடந்த மார்ச்சில் ஜெனீவாவில் அமெரிக்கா தலைமையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை மீது உரிமைகள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான விசாரணைக் குழுவை ஐ.நா. அறிவிக்கவுள்ள நிலையில் அஷானின் ஆலோசனை கிடைத்திருக்கிறது.http://www.sankathi24.com/news/41641/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.