Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில்- மனோ விசேட சந்திப்பு: அரசியல் நிலவரம், தேர்தல், கட்சி உறவு குறித்து கலந்துரையாடல்

Featured Replies

எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்தில் இன்று இடம்பெற்ற  இந்த சந்திப்பின் போது இன்றைய அரசியல் நிலவரம், எதிர்காலத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படும் தேர்தல்கள்,  இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உறவு ஆகிய பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
mano-ganesan-ranil-wickremasinghe.jpg
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
இந்த சந்திப்பின்போது, ஐதேக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில்  விக்கிரமசிங்க, உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தங்கள் கட்சி செயற்குழு எடுத்துள்ள தீர்மானத்தை தெளிவுபடுத்தினார். பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர், எதிர்கட்சிகளின் ஆதரவுடன் எதிரணி பொது வேட்பாளராக, ஆளும் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக ரணில் தெரிவித்தார்.
 
மகிந்த அரசுக்கு எதிரான பொது எதிர்க்கட்சி கூட்டணியை  உருவாக்கும் முயற்சிகளை அனைத்து பிரதான எதிர்கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்க போவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் நாட்டின்  பிரதான எதிர்கட்சிகளுடன் கலந்துரையாடல்களை கட்டம் கட்டமாக நடத்த எண்ணியிருப்பதாகவும், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மகிந்த அரசின் குடும்ப ஆட்சியை எதிர்த்து, தேர்தல்வரை காத்திருக்காமல்,  பொது எதிர்கட்சி கூட்டணி தெருப்போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும், அதற்காக அரசுக்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்று திரட்டப்பட வேண்டும் எனவும் ரணில் தெரிவித்தார். இந்த அடிப்படையில் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பொது எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெறுவதை தான் எதிர்பார்ப்பதாக ரணில் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச்செய்யும் முயற்சியில் ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையாக ஈடுபடவேண்டும் எனவும், நீண்ட காலமாக நிலவி வரும் உறவு இரண்டு கட்சிகளுக்கு இடையில் தொடர்ந்து நிலவ வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க  மேலும் தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் முகமாக தலைவர் மனோ கணேசன், மகிந்த அரசை வீழ்த்தும் அனைத்து எதிர்கட்சிகளையும் உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணி என்பது, நமது கட்சியினதும் எதிர்பார்ப்பு எனவும்,  இந்த கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியும் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்கவிடம்  தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் தமது கட்சி தூதுக்குழு, சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஜேவிபி ஆகிய கட்சி தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்களையும் மனோ கணேசன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விளக்கி கூறினார். 
 
பிரதான எதிர்கட்சியான ஐதேகவுடன் நமது கட்சியின் நீண்டகால பாரம்பரிய கூட்டணி உறவு தொடருவதையே நமது கட்சி விரும்புவதாகவும், ஆனால் இந்த கூட்டணி அரசியல் என்பதை ஐதேகவின் கீழ்மட்ட  தரப்பினர்  முறையாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். உள்ளூராட்சி மற்றும் மாகாண மட்ட தேர்தல்களில் நமது கட்சி தனித்து போட்டியிடுவதன் மூலமே மேல்மாகாணத்தில், தமிழ் வாக்கு வங்கி அரசு தரப்புக்கு செல்லாமல் எம்மால் தடுத்து நிறுத்த முடிந்தது எனவும் மனோ கணேசன் எடுத்து கூறினார். ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் ஆகியவற்றில் ஐதேகவுடன் இணைந்து செயற்படுவதில் முரண்பாடுகள் இருக்காது எனவும், குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதில் நமது கட்சி அர்ப்பணிப்புடன் செயல்படும் எனவும் தலைவர் மனோ கணேசன், எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தார்.       
 
virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.