Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு விதித்தனர் பா.ஜ., - எம்.பி.,க்கள்

Featured Replies

 
Tamil_News_large_991402.jpg
 

கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய அரசும், வங்கதேசத்தவர் ஊடுருவலை, 'தேசிய பிரச்னை' என, நேற்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அசாமின், 14 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஏழு இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது; காங்கிரஸ், மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,வின் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இருந்தது, 'அசாமில், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என்பது தான்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, வடகிழக்கு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்ட, நரேந்திர மோடி, றுவங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவேன்' என, அறிவித்தார். அதனால் தான், இதுவரை இல்லாத வகையில், பா.ஜ.,வுக்கு வடகிழக்கு மாநிலங்களில் அதிக, எம்.பி.,க்கள் கிடைத்தனர். இதனால், தேர்தல் வாக்குறுதி படி, இந்த விவகாரத்தை, அசாம் மாநில, பா.ஜ., கையில் எடுத்துள்ளது. றுவங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என, பா.ஜ., அறிவித்துள்ளது; இதற்கு, மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உள்ளது.பல ஆண்டுகளாக, சட்டவிரோதமாக குடியேறியுள்ள, லட்சக்கணக்கான வங்கதேசத்தவர், வெளியேறுவார்களா அல்லது விரட்டி அடிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

சுப்ரீம் கோர்ட் கவலை



சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் முன்னர் தலையிட்டுள்ளது. வங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கத் தவறிய, வடகிழக்கு மாநிலங்களை கண்டித்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், றுவங்கதேசத்தவர் ஊடுருவல் பிரச்னை, நம் நாட்டின் மீது எடுக்கப்படும் படையெடுப்பு' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.ரேஷன் கார்டுஅண்டை நாட்டிலிருந்து சட்ட விரோதமாக குடியேறிய வர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத, அசாம், திரிபுரா போன்ற மாநில அரசுகள், ஊடுருவியவர்களுக்கு ரேஷன் கார்டு, அங்கீகார அட்டை போன்ற பல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இதனால், கட்டுப்பாடின்றி நாள்தோறும் ஏராளமானோர் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
 

பிரச்னைக்கு காரணம் என்ன?



*உலகின் ஏழ்மை நாடுகளில் ஒன்றான, வங்கதேசத்திலிருந்து, பிழைப்புக்காக, தினமும் ஆயிரக்கணக்கான வங்க தேசத்தவர், அண்டை நாடான நம் இந்தியாவின், அசாம் மற்றும் திரிபுரா 
மாநிலங்களில் ஊடுருவி வருகின்றனர்.
*அசாமில் மட்டும், 20 லட்சம் வங்கதேசத்தவர் உள்ளதாக கூறப்படுகிறது.
*இந்த கும்பலுடன், இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற நினைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், நேபாளம் வழியாக, வங்கதேசம் சென்று, அங்கிருந்து, இந்திய மாநிலங்களுக்குள் நுழைந்து, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.
*இவ்வாறு அதிக எண்ணிக்கையில் ஊடுருவும் வங்கதேசத்தவர், அசாமின் பூர்வபழங்குடியினத்தவரான, 'போடோ' இன மக்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களுடன், போடோ பழங்குடியினர் மோதலில் ஈடுபடுவதால், அடிக்கடி கலவரம் நிகழ்கிறது.
*வங்கதேசத்திற்கும், இந்திய மாநிலங்களுக்கும் நீண்ட எல்லை இருப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், வடகிழக்கு மாநிலங்கள் தடுமாறுகின்றன; சில மாநிலங்கள், அரசியல் காரணங்களுக்காக கட்டுப்படுத்த தவறுகின்றன.
 

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மோடி



அசாம் மாநில காங்கிரஸ் அரசு, சட்டவிரோத குடியேறியவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது; அதற்காக, காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை, கண்டும் காணாமல் உள்ளது. இந்த மாநிலத்தின் பெருமையாக விளங்கும் காண்டாமிருகங்களை காப்பாற்ற தவறிவிட்டது, காங்கிரஸ் அரசு. வங்கதேசத்தவரை காப்பாற்ற, காண்டாமிருகங்களை பலி கொடுக்கிறது. 

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில், சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் ஊடுருவிய வங்கதேசத்தவர் விவகாரம், தேசிய பிரச்னை. எனவே, இதை தேசிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது, அரசியல் அல்லது எங்கள் கட்சி பிரச்னை அல்ல.
கிரண் ரிஜிஜு,மத்திய உள்துறை இணையமைச்சர் ,அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்

அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விரட்டும் பணியை, பா.ஜ., இளைஞர் அணியினர், இன்னும், 15 நாட்களில் மேற்கொள்வர். இதன் முதற்கட்டமாக, 'அசாமை விட்டு வெளியேறுங்கள்' என, வேண்டுகோள் விடுக்கப்படும். இதற்காக, 15 நாட்கள் காத்திருப்போம். அதன்பின், வீடுவீடாக சோதனை நடத்துவோம். வேலை அளிக்க வேண்டாம் என மக்களை வலியுறுத்துவோம்.
காமாஹ்யா பிரசாத் தாஷா,பாரதிய ஜனதா எம்.பி.,

அசாமிலிருந்து வங்கதேசத்தவரை ?வளியேற்றும் எங்கள் நடவடிக்கை பற்றி, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மத்திய அரசும், இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. அதனால், வங்கதேசத்தவரை விரட்டியே தீருவோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களாக தானாக வெளியேறினால் நல்லது; இல்லையேல், வெயேற்றுவோம்.
சர்பானந்தா சோனோவால்,மத்திய அமைச்சர், அசாம் மாநில, பா.ஜ., தலைவர் 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=991402

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.