Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்­மின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்­மின்      

 

வடக்கு முஸ்­லிம்­கள் வெளியேற்­றப்­பட்டு 23 வருடங்கள் கடந்­துள்ள இன்­றைய நிலையில் தனக்குக் கிடைத்­து­ள்ள வட மாகாண சபை உறுப்­பினர் பத­வியை பயன்­ப­டுத்தி அம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை சாத்­தி­ய­மாக்­கு­வதே தமது முதல் பணி­யாக இருக்கும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் போனஸ் உறுப்­பி­ன­ராக நிய­மனம் பெற்று அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்­மின் தெரி­வித்­தார்.
 
வட மாகாண சபை உறுப்­­பி­ன­ராகப் பத­வி­யேற்ற பின்னர் விடிவெள்ளிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டார்.
 
 நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மா­று:
 
நேர்­கா­ணல்: எம்.பி.எம்.பை­றூஸ்
 
விடி­வெள்ளி:  ஜாமிஆ நளீ­மியா பட்­ட­தா­ரி­யா­கவும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ள­ரா­கவும் இருந்த நீங்கள் திடீ­ரென அர­சி­யலில் பிர­வே­சித்­ததும் வட மாகாண சபை உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டதும் எப்­படி?  
 
அஸ்மின் நளீமி: வட மாகாண சபைத் தேர்­தலில் நான் போட்­டி­யிட்­டது எதிர்­பார்த்­தி­ராத ஒன்­றுதான்.  2010 இல் வடக்கில் முஸ்­லிம்கள் மீள் குடி­யே­று­வ­தற்­கான சூழல் தோன்­றி­ய­போது நானும் அங்கு மீளக்­கு­டி­யே­றி­ய­துடன் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் குறித்த வேலைத் திட்­டங்­க­ளிலும் பங்­கேற்றேன்.  
 
கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளாக யாழ். மாவட்­டத்தில் மட்­டு­மன்றி மன்னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களின் மீள் குடி­யேற்றம் அபி­வி­ருத்தி போன்ற விட­யங்­களில் அவ­தானம் செலுத்­தினேன். இத­ன­டிப்­ப­டையில் யாழ். மாவட்ட முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான சிவில் சமூக முன்­னெ­டுப்பு, யாழ். கிளி­நொச்சி முஸ்லிம் சம்­மே­ளனம் ஆகிய அமைப்­புகள் மூல­மாக இந்த வேலைத்­திட்­டங்கள் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனாலும் இந்த மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் எமக்­கி­ருந்த தடை இரு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நல்­லு­ற­வே­யாகும். 
 
rn
rn தமிழ்ச் சமூகம் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை எப்­படி பார்க்­கி­றது. தமிழ் சமூகம் இதற்கு தடை­யாக இருக்­குமோ ஆகிய ஐயப்­பா­டுகள் முஸ்­லிம்கள் மத்­தியில் இருந்­தன. இது தொடர்பில் தமிழ் சமூ­கத்­தி­ட­மி­ருந்து காத்­தி­ர­மான பதில்கள் எதுவும் கடந்த இரண்­டரை வருட காலத்தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதன் கார­ண­மாக பல பாத­க­மான விளை­வு­க­ளையும் நாம் கண்டோம்.  
 
rn
rn குறிப்­பாக வடக்­கி­லுள்ள தமிழ் ஊட­கங்கள்  முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை விரும்­பாத வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­தன. அரச அதி­கா­ரிகள் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தார்கள். யாழ். மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற பதிவு செய்­வதில் கூட இவர்கள் தடை­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தார்கள். மன்­னாரில் நிலமை வேறு­வி­த­மாக இருந்­தது, தமிழ் சமூ­கத்­துடன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் அள­விற்கு முஸ்லிம் சமூகம் வழி­ந­டாத்­தப்­பட்­டது. இரு தரப்­பிலும் தமது சொந்த நிகழ்ச்சி நிரலை நிறை­வேற்றும் எண்ணம் கொண்­ட­வர்கள் இருந்­தி­ருக்­கின்­றார்கள், அவர்கள் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் இரு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நல்­லி­ணக்கம் என்­பது குறித்து தீர்க்­க­மான பார்­வைகள் இருக்­க­வில்லை.
 
rn
rn   இவ்­வா­றான பிரச்­சி­னைக்­கு­ரிய சூழ­லில்தான் வட­மா­காண சபைத் தேர்தல் குறித்த அறி­விப்­புகள் வெளி­வரத் தொடங்­கின.  
 
rn
rn  தேர்தல் நடக்­குமா, நடக்­காதா என்ற கேள்­விகள் எழுப்­பப்­பட்டுக் கொண்­டி­ருந்த சம­யத்­தில்தான் நாம் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் என்ற வகையில் தேர்தல் நடந்தால்  அதனை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டோம்.  மட்­டு­மன்றி முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்­சி­களின் வட மாகாண முக்­கி­யஸ்­தர்­க­ளு­டனும் இது பற்­றிய கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டோம். அவர்கள் ஊடாக மேற்­கு­றித்த கட்­சி­களின் உயர் மட்­டங்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. துர­திர்ஷ்­ட­மாக இரு கட்­சி­களும் வட­மா­காண சபைத் தேர்­தலைப் பயன்­ப­டுத்தி முஸ்­லிம்­க­ளு­டைய மீள்­கு­டி­யேற்­றத்தை சாத்­தி­ய­மாக்­கு­வது தொடர்பில் சாத­க­மான பதில்­களை எமக்குத் தர­வில்லை.  
 
rn
rn   இந்த நிலை­யில்தான் நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் தலை­மை­யி­லான அர­சியல் கூட்­ட­மைப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் தேர்­த­லுக்கு முன்­ன­ரான கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்­தி­யது. நீதிக்கும் சமா­தா­னத்­திற்­கு­மான முன்­ன­ணியின் உறுப்­பினர் என்ற வகையில் நானும் அதில் பங்­கேற்றேன். அதில் வட மாகாண முஸ்­லிம்­க­ளு­டைய அபி­லா­ஷைகள் குறித்து விரி­வாக பேசப்­பட்­டது. அதனை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தா­கவே கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் தயா­ரிக்­கப்­பட வேண்டும் என நாம் அந்த சந்­திப்பில் வலி­யு­றுத்­தினோம். 
 
rn
rn  இதன்­போ­துதான் மன்னார் மாவட்­டத்­திலும் யாழ். மாவட்­டத்­திலும் ஏன் இரு முஸ்லிம் வேட்­பா­ளர்­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பட்­டி­யலில் நிறுத்தக் கூடாது? இதன் மூல­மாக வட மாகாண முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யுமே? இது விட­யத்தில் நாம் சாத­க­மான மனோ­நி­லை­யில்தான் இருக்­கிறோம் என த.தே.கூட்­ட­மைப்பு எம்­மிடம் தெரி­வித்­தது. இந்த அழைப்­பை­ய­டுத்து நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் தலை­மை­யி­லான எமது கூட்­ட­ணிக்குள் இடம்­பெற்ற பல சுற்று கலந்­து­ரை­யா­டல்­களின் பிற்­பா­டுதான் நான் இத் தேர்­தலில் கள­மி­றக்­கப்­பட்டேன்.
 
rn
rn  இது ஒரு எதிர்­பா­ராத நிகழ்வு என்­கின்ற போதிலும் சமூ­கத்­திற்கு மிகத் தேவை­யான ஒரு தரு­ணத்தில் மிகவும் பொருத்­த­மான ஒருவர் இந்த இடத்­திற்கு வர வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்­டதன் அடிப்­ப­டை­யில்தான் எனது அர­சியல் பிர­வேசம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது.
 
rn
rn விடி­வெள்ளி: நீதிக்கும் சமா­தா­னத்­திற்­கு­மான முன்­ன­ணியும் (எப்.ஜே.பி) நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்­கமும் என்ன விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இணைந்து செயற்­ப­டு­கின்­றன? இது வட மாகாண சபை தேர்­தலை மாத்­திரம் மையப்­ப­டுத்­திய கூட்­டி­ணைவா?
 
rn
rn அஸ்மின் நளீமி: 2003 இல் சமூக அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான மன்றம் எனும் பெய­ரில்தான் எப்.ஜே.பி.யின் அர­சியல் வேலைத்­திட்­டங்கள் தொடங்­கப்­பட்­டன. சமூ­கத்­தி­னு­டைய அர­சியல் போக்­குகள் பற்றி அலசி ஆராய்­கின்ற ஒரு கலந்­து­ரை­யாடல் மன்­ற­மா­கவே அது ஆரம்­பத்தில் இருந்­தது. பின்­னர்தான் அது எப்.ஜே.பி. எனப் பரி­ணாமம் பெற்­றது. அந்­த­வ­கை­யில்தான் இலங்­கையில் முஸ்­லிம்கள் மத்­தியில் அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்ற ஒரே கருத்­தோட்­டத்தைக் கொண்ட அர­சியல் சக்­தி­க­ளி­டையே எவ்­வாறு உடன்­பாட்டைக் கொண்டு வர முடியும் என்று எப்.ஜே.பி. சிந்­தித்­தது. அந்த வகை­யில்தான் மூன்று அமைப்­புகள் இதில் முதற்­கட்­ட­மாக அடை­யாளம் காணப்­பட்­டன. நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம், நீதிக்கும் சமா­தா­னத்­திற்­கு­மான முன்­னணி, ஆய்­வுக்கும் கலந்­து­ரை­யா­ட­லுக்­கு­மான நிலையம் ஆகி­ய­னவே இந்த 3 அமைப்­பு­க­ளு­மாகும். இந்த 3 அமைப்­பு­களும் கடந்த ஜூலையில் சந்­திப்பு ஒன்றை நடத்­தினோம். அது எமது அமைப்­பு­களின் எதிர்­கால செயற்­பா­டு­களை எவ்­வாறு ஒன்­று­பட்டு முன்­னெ­டுப்­பது என்­பது பற்றி ஆராய்­கின்ற ஒரு கலந்­து­ரை­யா­ட­லா­கவே இருந்­தது.
 
rn
rn  இந்தக் கால கட்­டத்­தில்தான்  வட மாகாண தேர்தல் பற்­றிய அறி­விப்­பு­களும் வெளி­வந்­தன. என­வேதான் எமது முத­லா­வது செயற்­திட்­ட­மாக ஏன் இந்தத் தேர்­தலை பயன்­ப­டுத்தக் கூடாது எனச் சிந்­தித்­ததன் விளை­வா­கத்தான் இம் மூன்று அமைப்­பு­க­ளி­டையே எழு­தப்­ப­டாத ஓர் உடன்­பாட்டின் அடிப்­ப­டையில் இக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. அந்த உடன்­பாட்டின் அடிப்­ப­டை­யில்தான் இத் தேர்­தலை எம்மால் எதிர்­கொள்ளக் கூடி­ய­தா­க­வி­ருந்­தது. எதிர்­கா­லத்தில் இந்த அமைப்­புகள் அனைத்தும் இணைந்­த­தாக ஓர் அர­சியல் கட்­சியை உரு­வாக்­கு­வதா? அல்­லது தொடர்ந்தும் கூட்­ட­மைப்­பாக செயற்­ப­டு­வதா என்­பது பற்­றி­யெல்லாம் கலந்­து­ரை­யாடி பல காத்­தி­ர­மான முடி­வு­களை எடுப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கின்­றன. எமது கூட்­ட­மைப்பின் இது­வரை கால செயற்­பா­டுகள் மிகவும் நம்­பிக்­கையும்  பரஸ்­பர விட்டுக் கொடுப்பும் புரிந்­து­ணர்வும் கொண்­ட­தா­கவே உள்­ளன. எதிர்­கா­லமும் அவ்­வாறே இருக்கும் என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கி­றது.
 
rn
rn  விடி­வெள்ளி: உங்கள் கூட்­டணி மு.கா., அ.இ.மு.கா, தே.கா. போன்ற முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இணக்­கப்­பா­டு­களை எட்­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கின்­ற­னவா?
 
rn
rn  அஸ்மின் நளீமி: எமது இந்த 3 அமைப்­பு­களும் பார்­வைக்கு சிறி­ய­வை­க­ளாக தெரிந்­தாலும் கொள்கை ரீதி­யாக மிகவும் பல­மா­னவை. இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற ஏனைய முஸ்லிம் அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வரை அவை கொள்கை சார்ந்­த­வை­யாக காணப்­ப­ட­வில்லை. மார்க்க, சமூக விழு­மி­யங்­களை காப்­பாற்­று­கின்ற நல்­லாட்சித் தத்­து­வத்தின் அடிப்­ப­டை­யி­லான விழு­மி­யங்­களை பாது­காக்­கின்ற அர­சியல் தரப்­பு­க­ளாக அவற்றை எம்மால் நோக்க முடி­ய­வில்லை. ஆனால் அவ்­வா­றான கொள்கை சார்ந்த, விழு­மிய அர­சி­யலை முன்­னெ­டுக்­கின்ற சக்­திகள் புதி­தாக உரு­வாகும் பட்­சத்தில் அல்­லது அவை இனங்­கா­ணப்­படும் பட்­சத்தில் அவற்­றுடன் இணைந்து எமது அர­சியல் பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கிறோம்.
 
rn
rn  விடி­வெள்ளி: உங்கள் கூட்­ட­ணிக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டையில் செய்து கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­படி போனஸ் ஆசனம் மூலம் உங்­களை கூட்­ட­மைப்பு வட மாகாண சபை உறுப்­பி­ன­ராக நிய­மித்து வாக்­கு­று­தியை காப்­பாற்­றி­யி­ருக்­கி­றது. ஏனைய உடன்­பா­டு­க­ளையும் கூட்­ட­மைப்பு நிறை­வேற்றும் என எதிர்­பார்க்­க­லாமா? 
 
rn
rn  அஸ்மின் நளீமி:  இந்த உடன்­ப­டிக்கை 8 அம்­சங்­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. இதில் எமக்கு போனஸ் ஆசனம் வழங்­கப்­ப­டு­வது பற்றி சாத­க­மாகப் பரி­சீ­லிக்­கப்­படும் எனும் அம்­ச­மா­னது இறு­தி­யாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த ஒன்­றாகும். அதற்கு முன்­ன­ராக ஏனைய 7 முக்­கிய அம்­சங்­களில் நாம் உடன்­பாட்டை எட்­டி­யி­ருக்­கிறோம். இது வட மாகாண சபைத் தேர்­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்ட உடன்­ப­டிக்கை என்­பதால் வட மாகாண முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே மேற்­படி 7 அம்­சங்­களும் அமையப் பெற்­றி­ருந்­தன. இந்த உடன்­ப­டிக்­கைக்கு அமை­வாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வடக்கு முஸ்­லிம்கள் குறித்து 3 முக்­கி­ய­மான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. 
 
rn
rn 1990 இல் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யது தவறு என்று அவர்கள் அதில் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்தத் தவ­றினை சீர் செய்­வ­தற்­காக வடக்கில் முஸ்­லிம்­களின் இருப்­பினை, அவர்­க­ளது பூர்­வீ­கத்தை உறு­திப்­ப­டுத்தி யிருக்­கி­றார்கள். அது­மட்டு மன்றி முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற வேண்டும் என்­ப­தற்­கான அழைப்­பினை அவர்கள் விடுத்­தி­ருக்­கி­றார்கள். மீள்­கு­டி­யேறும் முஸ்­லிம்­க­ளுக்குத் தேவை­யான சகல வச­தி­களும் தமிழ் மக்­க­ளுக்குச் சமாந்­தி­ர­மாக முஸ்­லிம்­க­ளுக்கும் வழங்­கப்­படும் என  அந்த அழைப்பில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்கள். அதே­போன்று இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு, நீண்ட காலத்தில் எட்­டப்­ப­ட­வி­ருக்­கின்ற அர­சியல் தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய பங்கு பற்­றியும் அவர்கள் மிக உறு­தி­யாக அதில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்கள். அந்த வகையில் எமது உடன்­ப­டிக்­கையின் முக்­கிய பல அம்­சங்கள் இப்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. எதிர்­கா­லத்தில் நல்­லாட்சித் தத்­து­வங்­களின் அடிப்­ப­டையில் வட மாகாண சபையின் செயற்­பா­டுகள் மிகவும் முன்­மா­தி­ரி­யா­கவும் வெளிப்­ப­டைத்­தன்மை கொண்­ட­தா­கவும் அமை­யப்­பெற வேண்டும் என்­பதும் எமது உடன்­பா­டு­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாகும். 
 
rn
rn அது­மட்­டு­மன்றி இரு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நல்­லி­ணக்கம் குறித்தும் அதனை மேலும் மேம்­ப­டுத்தத் தேவை­யான விட­யங்கள் குறித்தும் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. 
 
rn
rn அந்­த­வ­கை­யில்தான் வட மாகாண முத­ல­மைச்­சரின் கீழ் வரும் மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்கம் போன்ற விவ­கா­ரங்­களின் முஸ்லிம் சமூ­க­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அறிக்­கை­யிடும் பொறுப்­புகள் எனக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக முத­ல­மைச்சர் தெரி­வித்­தி­ருக்­கிறார். அத்­துடன் பிரதி தவி­சா­ளரின் பொறுப்­புக்­க­ளையும் பகிர்ந்து கொள்­ளு­மாறு எனக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
 
rn
rn விடி­வெள்ளி: உடன்­ப­டிக்­கைக்கு அமை­வாக வட மாகாண சபை உறுப்­பினர் பதவி போனஸ் ஆசனம் மூலம் தரப்­பட வேண்டும் என ஏதேனும் அழுத்­தங்­களை வழங்­கி­னீர்­களா?
rn
rn அஸ்மின் நளீமி: நிச்­ச­ய­மாக இல்லை. எமது முஸ்லிம் அர­சியல் கூட்­ட­ணி­யா­னது இந்த நாட்­டிலே மிகவும் முன்­மா­தி­ரி­யா­ன­தொரு அர­சி­யலை செய்து காட்ட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றது. நல்­லாட்சித் தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். நாம் ஒரு­போதும் பத­வி­களை மையப்­ப­டுத்­திய அர­சி­யலை முன்­னெ­டுப்­பது கிடை­யாது. பத­வி­களைக் குறி­வைத்து நாம் அர­சி­ய­லுக்கு வரவும் இல்லை. தேர்தல் முடிந்து பெறு­பே­றுகள் வெளி­வந்த பின்­னரும் கூட த.தே.கூட்­ட­மைப்­பிடம் எமக்கு ஒரு ஆச­னத்தைத் தாருங்கள் என  எக்­கா­ரணம் கொண்டும் கேட்­டு­விடக் கூடாது எனும் உறு­தி­யான முடிவை  நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் தலை­மை­யி­லான எமது கூட்­டணி எடுத்­தி­ருந்­தது. எமது முஸ்லிம் கூட்­ட­ணி­யையும் அதன் கொள்­கைகள் மற்றும் செயற்­பா­டு­க­ளையும் த.தே.கூட்­ட­மைப்பு எப்­ப­டிப்­பார்க்­கி­றது? எமக்கு அவர்கள் என்ன பதிலைத் தரப் போகி­றார்கள்? அவர்­க­ளது கனவான் அர­சியல் எப்­படி இருக்கப் போகி­றது? என்­ப­வற்­றை­யெல்லாம் பொறுத்­தி­ருந்து பார்ப்­பது என நாம் தீர்­மா­னித்தோம். ஆனால்  கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனும் அதன் ஏனைய முக்­கி­யஸ்­தர்­களும் நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கு போனஸ் ஆசனம் வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் மிக உறு­தி­யாக இருந்­தார்கள். அத­ன­டிப்­ப­டையில் அவர்­க­ளாக முன்­வந்­துதான் இந்தப் பத­வியைத் தந்­தி­ருக்­கி­றார்கள். கூட்­ட­மைப்பின் ஏனைய உறுப்­பு­ரிமைக் கட்­சிகள் அனைத்தும் ஏக­ம­ன­தாக இந்த தீர்­மா­னத்தை எடுத்­தி­ருக்­கின்­றார்கள், ஒரு சிறு முரண்­பாடும் இங்கே ஏற்­ப­ட­வில்லை, ஏனைய கட்­சி­க­ளிடம் எதிர்­பார்க்க  முடி­யாத ஒரு முன்­மா­தி­ரி­யான செயற்­பா­டா­கத்தான் நாங்கள் இதனைப் பார்க்­கிறோம். 
 
rn
rn தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முஸ்­லிம்­களை எந்­த­ளவு தூரம் வர­வேற்­கி­றது? 90 இல் இடம்­பெற்ற வெளி­யேற்­றத்தை அவர்கள் எவ்­வ­ளவு தூரம் துன்­ப­க­ர­மா­ன­தொரு சம்­ப­வ­மாகக் கரு­து­கி­றார்கள்?என்­ப­வற்றின் அடை­யா­ள­மா­கத்தான் அவர்கள் இந்த போனஸ் ஆச­னத்தை முஸ்­லிம்­க­ளுக்குத் தந்­தி­ருக்­கி­றார்கள். இது இத­ய­சுத்­தி­யுடன் கூடிய நட­வ­டிக்­கை­யாகும். அந்­த­வ­கையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்த நட­வ­டிக்­கையை கௌர­வ­மா­கவும் நன்­றி­யு­ணர்­வு­ட­னுமே நாம் நோக்­கு­கிறோம்.
 
rn
rn விடி­வெள்ளி: உங்­க­ளுக்குத் தரப்­பட்ட போனஸ் ஆச­னத்தின் மூல­மாக 1990 ஆம் ஆண்டு முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­தற்கு பிரா­யச்­சித்தம் தேட கூட்­ட­மைப்பு முயற்­சிக்­கி­றது எனக் கரு­த­லாமா?
 
rn
rn அஸ்மின் நளீமி: இல்லை. இந்த ஆச­னத்தின் மூல­மாக பிரா­யச்­சித்தம் தேடு­வது என்­பதை விடவும் அதற்கு அப்பால் சென்று வடக்கு முஸ்லிம் சமூ­கத்­துடன் நல்­லு­றவை வலுப்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்­டில்தான் த.தே.கூட்­ட­மைப்பு இருக்­கி­றது. ஏனெனில் அண்­மையில் ஒரு கூட்­டத்தில் உரை­யாற்­றும்­போது வடக்கு முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­மைக்கு பரி­காரம் தேட வேண்டும். அவர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு நிலை­யா­ன­தொரு தீர்வு காணப்­பட வேண்டும் எனும் கருத்­தினை சம்­பந்தன் ஐயா குறிப்­பிட்­டி­ருந்தார்.
 
rn
rn என­வேதான் எதிர்­வரும் காலங்­களில் இந்த வட மாகாண சபை ஆட்சி அதி­கா­ரத்தின் ஊடாக முஸ்­லிம்­களின் இருப்பை உறு­திப்­ப­டுத்தி அந்த மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் விட­யத்தில் த.தே.கூ.காத்­தி­ர­மான செயற்­பா­டு­களை மேற்­கொள்ளும் என எதிர்­பார்க்­கிறோம்.
 
rn
rn விடி­வெள்ளி: முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் பற்­றிய உங்கள் பார்வை என்ன?
 
rn
rn அஸ்மின் நளீமி: உண்­மையில்  அவர் வட மாகா­ணத்­திற்கு மட்­டு­மல்ல முழு இலங்­கைக்கும் கிடைக்­கப்­பெற்ற ஒரு சிறப்­பான முத­ல­மைச்சர் என்றே நாம் கரு­து­கிறோம். அறிவு, அனு­பவ, ஆன்­மீகப் பின்­ன­ணிகள் கொண்ட மிக நல்ல மனிதர் அவர். தீர்­மா­னங்­களை எடுப்­பதில் நிதா­ன­மாக செயற்­ப­டு­பவர். தனது மாகாண சபையில் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் சக­ல­ரையும் பங்­கு­பற்றச் செய்து அனை­வ­ருக்கும் ஊடாக ஒரு விளைவை தோற்­று­விக்க வேண்டும் என எதிர்­பார்ப்­பவர் அவர். யாரு­டைய அழுத்­தங்­க­ளுக்கும் கட்­டுப்­ப­டாமல் மக்­களின் அபி­லா­ஷை­களை மாத்­தி­ரமே முன்­னி­றுத்தி அவர் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வதை நாம் நேர­டி­யா­கவே அவ­தா­னித்­தி­ருக்­கிறோம். எதி­ரி­களைக் கூட நண்­பர்­க­ளாகப் பார்க்­கின்ற, அவர்­களைப் புண்­ப­டுத்தக் கூடாது என்ற நல்ல பண்­பு­களைக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு மனி­த­ரா­கவே நாம் அவரைக் காண்­கிறோம்.
 
rn
rn விடி­வெள்ளி: கடும்­போக்­கு­டை­ய­வர்­க­ளாகக் கரு­தப்­படும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து அர­சியல் செய்­வதில் நீங்கள் ஏதேனும் சங்­க­டங்­களை எதிர்­நோக்­கி­னீர்­களா?
 
rn
rn அஸ்மின் நளீமி: நிச்­ச­ய­மாக இல்லை. சங்­க­டங்­களை விட சந்­தோ­சங்­கள்தான் எமக்குக் கிடைத்­தன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்­றாலே வித்­தி­யா­ச­மான கண்­கொண்டு பார்க்­கின்ற ஒரு போக்கு தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் இருக்­கி­றது. அவர்கள் பயங்­க­ர­வா­திகள், மோச­மா­ன­வர்கள் என்ற விம்பம் அந்த மக்கள் மத்­தியில் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் ஜன­நா­ய­கத்தை மதிக்­கின்ற ஒரு கட்­சி­யா­கவே நாம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பைப் பார்க்­கிறோம். அர­சி­யலில் நாம் பல முன்­மா­தி­ரி­யான விட­யங்­களை அவர்­க­ளி­ட­மி­ருந்து அவ­தா­னித்தோம். போஸ்­டர்கள் ஒட்­டு­கின்ற அர­சி­யலை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஓர் ஆரோக்­கி­ய­மான கலா­சா­ர­மாகப் பார்க்­க­வில்லை. ஒரு சில வேட்­பா­ளர்கள் போஸ்­டர்­களை ஒட்­டி­னாலும் முத­ல­மைச்சர் வேட்­பாளர் உட்­பட பலர் போஸ்­டர்கள் அச்­ச­டிக்­கவோ ஒட்­டவோ இல்லை. இதனை தேர்தல் ஆணை­யாளர் கூட குறிப்­பிட்டுச் சொல்­லி­யி­ருந்தார். மிகவும் எளி­மை­யான வகையில் மக்கள் சந்­திப்­புகள் நடத்­தப்­பட்­டன. ஆடம்­ப­ர­மான செல­வு­க­ளையோ வீண் விர­யங்­க­ளையோ அவர்கள் செய்­ய­வில்லை. தேர்தல் மேடை­களில் ஆளும் தரப்­புக்கும் சிங்­கள பேரி­ன­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­ட­னவே ஒழிய சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. அதில் அவர்கள் மிகக் கவ­ன­மா­கவும் தெ ளிவா­கவும் இருந்­தார்கள். எல்லா பிர­சாரக் கூட்­டங்­க­ளிலும் முஸ்லிம் மக்கள் பற்­றிய தமது நிலைப்­பாட்டை அவர்கள் முன்­வைத்­தார்கள். 
 
rn
rn எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சமூ­கத்தை அர­வ­ணைத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை அவர்கள் ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­னார்கள். இது முஸ்­லிம்­க­ளுக்கு சந்­தோ­ச­மான செய்­தி­யாகும். தேர்தல் மேடை­களில் முஸ்­லிம்­க­ளு­டைய கலா­சா­ரத்­திற்கு அவர்கள் மதிப்­ப­ளித்து நடந்து கொண்­டார்கள். குத்து விளக்கு ஏற்­று­வது போன்ற சந்­தர்ப்­பங்­களில் எமக்கு அழைப்பு விடுக்­காது கண்­ணி­ய­மாக நடந்து கொள்­வார்கள். 
 
rn
rn எல்லா மேடை­க­ளிலும் நிகழ்­வு­களை ஹம்து சல­வாத்­துடன் ஆரம்­பித்து ஹம்து சல­வாத்­துடன் முடிக்­கின்ற விட­யத்­தையும் அவர்கள் கண்­ணி­ய­மான ஒரு விட­ய­மா­கவே கரு­தி­னார்கள். 
 
rn
rn எமது முஸ்லிம் பிர­தி­நி­திகள் உரை­யாற்­றும்­போது தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து பெரும் வர­வேற்புக் கிடைக்கும். எமது உரை­களைக் கேட்­பதில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்­வத்தைக் காட்­டி­ய­தையும் எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது. இதற்­கப்பால், மன்னார் மாவட்­டத்தில் எங்­க­ளுக்­காக ஏனைய 7 தமிழ் வேட்­பா­ளர்­களும் பிர­சாரம் செய்­தார்கள் என்ற விட­யத்­தையும் இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். இப்­ப­டி­யான ஒரு கலா­சா­ரத்தை எந்த ஒரு தேர்­த­லிலும் நான் கண்­டி­ருக்­க­வில்லை. நாங்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வீட்டுச் சின்­னத்­திற்­காக மாத்­தி­ரமே பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டாலும் என்­னோடு போட்­டி­யிட்ட ஏனைய 7 தமிழ் வேட்­பா­ளர்­களும் எனது இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு பிர­சாரம் செய்­தார்கள்.  இப்­ப­டி­யெல்லாம் தமிழ் மக்கள் எம்மை ஆத­ரிப்­பார்கள் என நாம் எதிர்­பார்க்­கவே இல்லை. நடந்து முடிந்த 3 மாகா­ணங்­க­ளுக்­கு­மான தேர்­தல்­க­ளிலும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்டு மக்­க­ளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று சொன்ன ஒரே ஒரு கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மாத்­தி­ரம்தான்.
 
rn
rn அதே­போன்று கள்ள வாக்­க­ளித்தல், வாக்கு மோச­டி­களில் ஈடு­ப­டுதல் போன்ற விட­யங்­களில் த.தே.கூட்­ட­மைப்பு மிகவும் கண்­டிப்­பா­கவே இருந்­தது. 80 வீத­மான வாக்­க­ளிப்பை உறுதி செய்ய வேண்டும் என்­ப­தற்­காக வயோ­தி­பர்கள், நோயா­ளி­களைத் தூக்கிச் சென்று முறை­யாக வாக்­க­ளிக்கச் செய்­தார்­களே தவிர ஒரு­போதும் கள்ள வாக்­கு­களை அளிக்க முயற்­சிக்­க­வில்லை. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக நேர்­மை­யாக, உண்­மை­யாகச் செயற்­பட வேண்டும் என்று சொல்­லு­கின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமத சமூ­கத்தை தவ­றாகப் பயன்­ப­டுத்தி கள்ள வாக்­கு­களை அளிக்க முயற்­சித்­தார்கள் என்­பதும் இஸ்­லா­மிய வரை­ய­றை­க­ளுக்கு அப்பால் சென்று நடந்து கொண்­டார்கள். குறிப்­பாக முஸ்லிம் பெண்­களை பஸ்­களில் ஏற்றி வந்து கள்ள வாக்­கு­களை அளிக்கச் செய்யும் கேவ­ல­மான செயற்­பாட்­டிலும் இவர்கள் ஈடு­பட்­டார்கள் என்­பதும் கசப்­பா­யினும் உண்­மை­யே­யாகும்.
 
rn
rn நாங்கள் அந்த இடத்தில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த கார­ணத்­தி­னால்தான் கள்ள வாக்­க­ளிக்க வந்த முஸ்லிம் பெண்கள் மீது தமிழ் மக்கள் வன்­மு­றை­களைப் பிர­யோ­கிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொண்­டார்கள். இல்­லா­விட்டால் அங்கு மிக மோச­மா­ன­தொரு நிலைதான் ஏற்­பட்­டி­ருக்கும். 
 
rn
rn விடி­வெள்ளி: அப்­ப­டி­யானால் உங்­க­ளுக்குக் கிடைத்த 1009 வாக்­கு­களில் கணி­ச­மா­னவை தமிழ் மக்­களால் அளிக்­கப்­பட்­டவை எனக் கரு­த­லாமா?
 
rn
rn இல்லை. அப்­படிச் சொல்ல முடி­யாது. எமக்குக் கிடைத்த வாக்­கு­களில் சுமார் 700 வாக்­குகள் முஸ்லிம் மக்­களால் அளிக்­கப்­பட்­டவை என்­பது எமது அவ­தா­ன­மாகும். அதிலும் குறிப்­பாக நாம் வட மாகாணம் முழு­வதும் பிர­சா­ரத்தில் ஈடு­பட்டோம் என்ற வகையில் சுமார் 3000க்கும் அதி­க­மான முஸ்லிம் வாக்­குகள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது எமது உள்ளகக் கணிப்பீடாகும்.மிக நீண்ட காலத்திற்குப் பிறகு சுமார் 3000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் தமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சாதகமான ஒன்றாகவே நோக்குகிறது.

 

http://www.vidivelli.lk/morecontent.php?id=3227

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.