Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் சீனாவின் சிஏடிஐசி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருகோணமலையில் சீனாவின் சிஏடிஐசி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி
 
23 ஜூலை 2014
 
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
china%20&%20srilanka_CI.jpg
திருகோணமலையில் சீனாவின் சிஏடிஐசி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான நோக்கம் என்ன? – ரணில்
 
 
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான நோக்கம் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சீனாவிற்கு விமான பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடமளிப்பதானது இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
1987ம் ஆண்டு இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு முரணான வகையில், திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுகின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் இறைமையை பாதிக்காத வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டுமென இந்த உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்டு வரும் சீன விமானங்களை பராமரிக்கும் நோக்கில் இந்த விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
 
இலங்கையிடம் 41 சீன உற்பத்தி விமானங்கள் காணப்படுவதாகவும், இவை அனைத்துமே பழையவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
தற்போது இந்த விமானங்களை சீனா உற்பத்தி செய்வது கூட இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இது வரை காலமும் இராணுவத்தின் பொறியியலாளர்கள் விமானப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில் திடீரென சீன விமான பராமரிப்பு நிலையமொன்றின் இலங்கை இராணுவ விமானங்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
திருகோணமலையில் சீனாவின் சிஏடிஐசி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி
 
திருகோணமலையில் சீனாவின் சிஏடிஐசி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இலங்கையிடம் 44 சீனா விமானங்கள் உள்ளன, அவற்றை பராமரிப்பதற்கு வருடமொன்றிற்கு ஒரு மில்லியன் செலவாகின்றது. அவை மிகப்பழைய விமானங்கள் சீனா கூட அவற்றை உற்பத்தி செய்வதில்லை.அவற்றின் இயந்திரங்களை கூட உள்ளுர் இயந்திரங்களாக மாற்றிவிட்டோம், இந்த நிலையில் ஏன் 5பில்லியன் கடனில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான தேவை என்ன என எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
 
மேலும் குறிப்பிட்ட விமான பராமரிப்பு நிலையம் இந்தியாவுடான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமா? சுஸ்மா சுவராஜை சந்தித்தவேளை அவர் அதுகுறித்து கேள்வி எழுப்பினாரா எனவும் ரணில் பாராளுமன்றத்தில் நேற்று விளக்கம் கோரினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.