Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூலகத்த எரிச்சவையள் காணி ஆவணங்களையும் எரிக்க துவங்கியிருக்கினம்? யாழ்ப்பாணத் தம்பி

Featured Replies

Army%20attack_CI.jpg

கடவுளே நல்லூரானே உனக்கு கண் இல்லையே? இப்பிடி எல்லாம் ஒரு மண்ணில அநியாயம் நடக்குதே! ஒரு நாள் இரண்டு நாளாh? ஒரு இடம் இரண்டு இடமா? ஒவ்வொரு நாளும் தமிழரின்ட காணியள பிடிக்க ஓயாமால் வாறாங்களே? எங்கட சனத்த நிம்மதியாய் இருக்க விடாம உப்பிடி அலைக்கிறாங்களே? இப்பிடி எல்லாம் தாத்தா திண்ணையில இருந்து புலம்பிக் கொண்டிருக்கிறார். 

நானும் வடிவா பாத்து வைச்சிருக்கிறன். 
 
ஏன் தெரியுமே? நாளைக்கு எனக்கும் உந்த நிலைதானே?
 
டெய்லி ஒரு காணிக்கு சுவிகரிப்பு நோட்டிசு அனுப்பத் திரியிறினம். எத வளைச்சுப் போடலாம் எண்டு திரியிறினம். ஒண்டக் கவனிச்சியளே? முந்தி சனங்கள் எங்கட காணியை தா எண்டு வலி வடக்கிலயும் அத மாதிரி இடங்களிலயும் போராட்டம் நடத்திச்சுதுகள். இப்ப இவன் எங்கட படலைக்குள்ளயே வந்திட்டான். 
 
குந்தியிருக்கவும் விட மாட்டினமாம்
 
ஆமிக் காம்பு அமைக்கிறத தவிர வேறு ஒரு நோக்கமும் இல்லாத சட்டம் ஒன்றை எங்கட மண்ணில நடைமுறைப்படுதியருக்கினம். ஓம் காணி சுவீகரிப்புச் சட்டமாம். அத வைச்சு எங்கட மண்ணை அபகரிச்சு திண்ணுற திட்டம் உவைக்கு. கேட்டால் சட்டமாம். உங்கட சட்டங்கள் எங்கள பயங்கரவாதி எண்டு குண்டு போடுற சட்டம்தானே. அது எங்கள அழக்கிற சட்டம்தானே. அது எங்கட மண்ணையும் அழிக்கும் அபகரிக்கும். ஓ.. அது அவையின்ட கண்டறியாத சட்டம். 
 
அதென்ன நீதியான சட்டமே? 
 
இப்ப இன்னொரு புதினம் இண்டைக்கு நடந்திட்டுது. அந்த மனுசி ஒப்பாரி வைச்சு அழுகுது. உதப் பாத்து எங்கட பாட்டிகொல்லைப் பக்கமாய் திட்டிக் கொண்டு போகுது. காணிக்குச் சொந்தகாரின்ட வீட்டில போய் காணிக்குரிய ஆவணங்கள எடுத்து எரிச்சுக்கிடக்காம். ஆமிய கேட்டார் இனந்தெரியாத நபர்களாம். உந்த இனந்தெரியாத நபர்கள் ஆர் எண்டும் அவையள் என்ன செய்வினம் எண்டும் தெரியும்தானே. 
 
அந்த காணிக்கார மனுசி அழுது குளறு. துடிக்குது. பாவம்.  
 
அடக்கோதாரி! ஆமி அபகரிக்கிற காணியின்ட ஆவணத்த மட்டும் ஏன் எரிக்கவேணும்? இப்பிடி எல்லாம் குள்ள நரி வேலையள் பாத்து எங்கட காணியள பிடிக்க நிக்கினம் எண்டால் உவையள் எப்பிடிப்பட்ட ஆக்கள்? இது எப்பிடியான காலம் எண்டு பாருங்கவன். யாழ்ப்பாண நூகலகத்தை எரிச்சதுக்கும் உதுக்கும் என்ன வித்தியாசம்? 
 
அத எரிச்சவை உத எரிப்பினம்தானே? 
 
எல்லாத்தையும் எரிக்கவும் அழிக்கவும் மட்டும்தான் தெரியும்!
 
எங்கட சனங்களே உங்கட காணி ஆவணங்கள் எல்லாத்தையும் கவனமாய் வைச்சிருங்கோ. நானும் எதப் பாதுகாக்கச் சொல்ல? கருவில இருக்கிற உங்கட குழந்தைய பள்ளிக்குப் போற சின்னஞ் சிறுமியள, காணி ஆவணங்கள, காணிய எல்லாத்தையும் கவனமாய் வைச்சிருங்கோ. 
 
கொலைகாரப் படையள் நிக்கிற மண்ணில ஆடு, மாடு, நாயள் எல்லாம் கவனம்! 
 
இனியும் என்ன நடக்கவேணும்? 
 

யாழ்ப்பாணத் தம்பி

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109724/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.