Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?

அன்பே உந்தன் பேரைத்தானே

விரும்பிக் கேட்கிறேன்..!

போகும் பாதை எங்கும் உன்னைத்

திரும்பிப் பார்க்கிறேன்..!

என்னையே திறந்தவள் யாரவளோ?

உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?

வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..

மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..

மேகமே மேகமே அருகினில் வா..

தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

(அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

(அன்பே)

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா

கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா

கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் oxyGN நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்

உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்

தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்

தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

(அன்பே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனிமலை மேகங்கல் பொழிகின்ற குளிரினில்

திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா

மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று

மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு

ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு

கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு

பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு

பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு.. ஒரு பாட்டு..

பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....

(பாட்டு)

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு - அதை

எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு

தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு

தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு

(பாட்டு)

தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு - பெற்ற

தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு

பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு

பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு

(பாட்டு)

உறவு பார்த்து வருவதில்லை

உருவம் கண்டு பிறப்பதில்லை

நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு - நம்

இருவருக்கும் தெரிந்ததுதான்

காதலென்னும் பாட்டு

(பாட்டு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது

இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா

கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா

குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்

மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்

குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே

மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே

கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை

விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை

இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில் இலை மேலே

தூங்கும் பனி நீரே

தூங்கும் பனி நீரை

வாங்கும் கதிரோனே

(மூங்கில்)

தோளுடன் தோள் சேர்த்து - நிதமும்

சுகம் பெறும் மரங்களிலே

வாயுடன் வாய் சேர்த்து - கொஞ்சி

வாழ்ந்திடும் பறவைகளே

(மூங்கில்)

எனக்கொரு சிறகில்லையே - ஏங்கும்

இளமைக்குத் துணையில்லையே

குளிருக்கு நெருப்பில்லையே - பெண்ணின்

குணத்துக்கு மணம் இல்லையே

(மூங்கில்)

அன்றொரு நாள் வந்தான் - அவனை

இன்று வரை காணேன்

பறவை எனும் தோழி - அவனைப்

பார்த்தால் வரச்சொல்லடி

(மூஙில்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)

அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்

நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்

பகலில் ஒரு வெண்ணிலா...

பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா

இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா

விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா

நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதோ

கனவே கை சேர வா

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்

எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் மனடுக்குள் டாம் டூம் டிம் (2)

பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்

நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு

வாழ்வே வாழ்பவர்க்கு

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா...ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத்

திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

உனை வேறு கைகளில் தரமாட்டேன்

நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்

நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து எனை உடுத்து

நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன

ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

மழையில் நீ நனைகயில் எனக்குக் காய்ச்சல் வரும்

வெயிலில் நீ நடக்கயில் எனக்கு வேர்வை வரும்

உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று

ரோஜா...ரோஜா...ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

இளையவளின் இடையொரு நூலகம்

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்

இடைவெளி எதற்கு சொல் நமக்கு

உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்

என்னை ஏந்தக் கூடாடென கையோடு சொல்லாது புல்லங்குழல்

நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே

விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே

எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே

உனைவிட வேறு நினைவுகள் ஏது

ரோஜா...ரோஜா...ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)

ரோஜா...ரோஜா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்!

விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு!

அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய்

என் பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்.. :lol:

அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய்

என் பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்

கன்னத்தில் முத்தமிட்டு கதைகள் பல சொல்லி விட்டு

கன்னத்தில் முத்தமிட்டு கதைகள் பல சொல்லி விட்டு

கண்ணயற தாலாட்ட கையிருந்தும் மகனில்லை

இன்னொருவர் சொந்தமென்று இருக்கின்ற மன்னவனே

உன்னைத் தான் ஈன்றவளே என்ன தவம் செய்தாளோ..!! :wub:

அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய்

பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்.. :wub:

முன்பு நான் தவமிருந்து

முன்னூறு நாள் சுமந்து

பின்பு என் மடியில் வந்து பிறந்தவன் பிரிந்து விட்டான்

தாய் மனம் குளிர வைக்க

தரணியில் வந்தவனின்

வாய் மொழி கேட்கவில்லை

வண்ண முகம் பார்க்கவில்லை.. :wub:

தாய் மனம் குளிர வைக்க

தரணியில் வந்தவனின்

வாய் மொழி கேட்கவில்லை

வண்ண முகம் பார்க்கவில்லை

காய்த்தும் காய்க்காத கிளை போல் நானிருந்தேன்

நீயாகப் பார்த்தென்னை தாயாக மாற்றி விட்டாய்

நீயாகப் பார்த்தென்னை தாயாக மாற்றி விட்டாய்... :lol:

அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய்

பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ஆஆ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை

மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை

இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நான் அல்லவா

கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீணல்லவா

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆஅ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆ

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா

தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா

என் உடலில் ஆசை என்றால் என்னை நீ மறந்து விடு

என் உயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

நீ என்பதும் எதுவரை எதுவரை

நான் என்பது எதுவரை எதுவரை

நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்

வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை

சாவென்பதும் ஒருமுறை ஒருமுறை

காதல் வரும் ஒருமுறை ஒருமுறை தான்.. :wub:

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது

கண்களிலே உன் கண்களிலே

பொய்க்காதல் நாடகம் ஏனடி

அன்பினிலே மெய் அன்பினிலே

ஓர் ஊமைக் காதலன் நானடி

நீயா பேசியது நீயா பேசியது

நீயா பேசியது நீயா பேசியது!! :lol:

நீ என்பதும் எதுவரை எதுவரை

நான் என்பது எதுவரை எதுவரை

நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்

வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை

சாவென்பதும் ஒருமுறை ஒருமுறை

காதல் வரும் ஒருமுறை ஒருமுறை தான்!! :wub:

ஓ.... எதோ நான் இருந்தேன் என்னுளே காற்றாய் நீ கிடைத்தாய்

காற்ரை மொழிபெயர்த்தேன் அன்பே சோல் மூச்சை ஏன் பறித்தய்

இரவிங்கே பகலிங்கே தோடுவானம் போனதெங்கே...

உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் மாரி எங்கே

உருகினேன் நான் உருகினேன் என் உயிரில் பாதி கருகினேன்.. :lol:

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது....

வேரில் நானழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை

வேஸம் தரிக்கவில்லை முன்னாளில் காதல் பழக்கமில்லை

உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றமில்லை

பிரிவென்றால் உறவுண்டு அதனாலே மாற்றமில்லை

மறைப்பதல் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா.. :wub:

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது

கண்களிலே உன் கண்களிலே

பொய்க்காதல் நாடகம் ஏனடி

அன்பினிலே மெய் அன்பினிலே

ஓர் ஊமைக் காதலன் நானடி

நீயா பேசியது நீயா பேசியது

நீயா பேசியது நீயா பேசியது... :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ஆஆ

கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை

மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை

இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நான் அல்லவா

கண்ணெடுத்தும் பாராமல் கலஙுவதும் வீணல்லவா

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆஅ

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா

தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா

என் உடலில் ஆசை என்றால் என்னை நீ மரந்து விடு

என் உயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆ

ஆசை அன்பு இழைகளினாலே

நேசம் என்னும் தறியினில்

நெசவு நெய்தது வாழ்க்கை.. :wub:

(ஆசை)

வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளை போலவே

எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே

மனக் கண்கள் அந்தக் கனவே காணுதே

நாம் காணும் இன்பம் நிழலாய்த் தோணுதே.. :wub:

(ஆசை)

எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே

அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே

அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே

அது உன்னைப் போல சிரிப்பை மூட்டுதே... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

என்னைக் கண்டு..

உன்னைக் கண்டு?

என்னைக் கண்டு மௌனம் மொழி பேசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

இதை எண்ணி எண்ணி..

எண்ணி எண்ணி?

எண்ணி எண்ணி எந்தன் நெஞ்cஅம் ஏங்குதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே

எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆணெழிலே

ஆஆஆஆஆ

ஆஆஆஆஆ

கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே

எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆணெழிலே

கொஞ்cஇப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே

இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே நேரிலே

துள்ளியாடும் பெண்மானே எந்தன் வாழ்விலே

இன்ப தீபம் உன் ரூபம் தான் மா மயிலே

ஆஆஆஆஆ

துள்ளியாடும் பெண்மானே எந்தன் வாழ்விலே

இன்ப தீபம் உன் ரூபம் தான் மா மயிலே

வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே

ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே வாழ்விலே

இன்பம் ஏதும் இல்லையே ஆருயிரே

இருவரும்: ஆஆஆஆஆ

கன்னல் cஆறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ

என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை

கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா காயுது நேரம் நல்ல நேரம்

நெஞில் பாயுது காமன் விடும் ஆணம்

நிலா காயுது நேரம் நல்ல நேரம்

நெஞில் பாயுது காமன் விடும் ஆணம்

தோகம் வர்ல மாம்ம காக்க வைக்கலாமா?

ஆஅக்கிவச்ச சோத ஆரப்போடலாமா?

நிலா காயுது நேரம் நல்ல நேரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

தேன் தமிழ் போல் வான் மழை போல்

சிறந்து என்றும் வாழ்க

பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாடும்

தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும்

பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி

நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி

  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்

கொஞ்சும் சலங்கை கலீர் கலீரென ஆட வந்த தெயவம்

பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே

ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்து துள்ளிடவே

முழு நிலவென அழகு மலரென முகம் காட்டியே

பருவ மங்கை

வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்ததுபோல்

வாச மலரும் அன்பினாலே ப்ரேமை கண்டதுபோல்

கனிமொழியுடன் கருணை விழியுடன்

களிப்பூட்டவே கலை ஞான வடிவாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரே மகாராணி..................

தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது

நெஞ்சில் விளையாட

அங்கங்கள் எங்கெங்கோ

நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி

மாணிக்கத் தேரின் காணிக்கையாக

முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

தீராத ஆசை கோடானு கோடி

தேனாக ஓடும் தானாகத் தீரும்

தங்கத் தாமரை மொட்டு விரிந்தது

மஞ்சள் நீராட

சொல்லுங்கள் அங்கங்கே

நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி

---------------------------------------------------------------------------------------------------------------------

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின்

ராணி வேகவேகமாக வந்த நாகரிக ராணி'

உருவத்தைக் காட்டிடும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி நூனாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி நூனாவிலான்

யூ ஆர் வெல்கம்._cheerup_tickle__by_dutchie17.gif

  • கருத்துக்கள உறவுகள்

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் (2)

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் (2)

(பட்டத்து)

முள்ளில்லாடும் நெஞ்சம் கல்லில் ஊறும் கண்கள்

தங்கத் தட்டில் பொங்கும் இன்பத் தேன் போல் பெண்கள்

(முள்ளில்லாடும்)

சாட்டை கொண்டு பாடச் சொன்னால் எங்கே பாடும் பாடல்

தத்தித் தத்தி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள்

துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே

கதை முடிக்க நினைத்ததே

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

(பட்டத்து)

ஹோ

முத்தம் சிந்தும் முத்து முல்லை வண்ணச் சிட்டு

மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு

வேட்டை ஆடும் மானுக்கென்ன வெட்கம் இந்தப் பக்கம்

வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும் திட்டம் உண்டு திட்டம்

துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே

கதை முடிக்க நினைத்ததே

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

(பட்டத்து)

நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்

தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்

(நாடு)

வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது

துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே

கதை முடிக்க நினைத்ததே

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

(பட்டத்து)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்

புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்

இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.