Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

முந்நாளிலே கொண்ட பொல்லாப்பிலே

இந்நாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே

என் ஆசைத் தங்கமே நேசம் மாறுமா?

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

முடிவே இல்லாதது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்

இனிய கதை இது

என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்

எழுதும் புதுக்கதை இது

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா

அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

கவிதை தேடித்தாருங்கள்

இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்

தொலைந்த முகத்தை மனம் தேடுதே

வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்

மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்

துருவித் துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை

உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்

அமைதியில் நிறைந்திருப்பேன்

நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு

நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்

நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று

இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்

நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று

இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னலே நீ வந்ததேனடி - என்

கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன்

கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே

கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு

சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே

கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்

காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு

பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா

வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா - நான்

காத்திருந்தால் காதல் இன்னும் மீளுமில்லையா

கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்

காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா?

(உன் சமையல்..)

நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா?

நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா?

நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா?

(உன் சமையல்..)

நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா?

நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா?

நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா?

நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா?

நான் இதயம் என்றால் நீ உயிரா துடித்துடிப்பா?

(உன் சமையல்..)

நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா?

நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா?

நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா?

நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா?

நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா?

நீ...

நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா?

நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா?

நீ திரும்பி நின்றால் நான் நிக்கவா போய்விடவா?

நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா?

நீ காதல் என்றால் நான் சரியா தவறா?

உன் வலது கையில் பத்து விரல்... பத்து விரல்

என் இடது கையில் பத்து விரல்.... பத்து விரல்

தூரத்து மேகம் தூறல்கள் சிந்த

தீர்த்த மழையில் தீ குளிப்போம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து மாதம் சுமக்கவில்லை செல்லய்யா

னான் பத்தியமும் இருந்ததுன்டோ சொல்லய்யா

பத்து மாதம் சுமக்கவில்லை செல்லய்யா

னான் பத்தியமும் இருந்ததுன்டோ சொல்லய்யா

உன்னை தத்துப் பிள்ளை என்றழைக்க என்னய்யா

எனக்கு தைரியமும் போதவில்லை சின்னய்யா

உன்னை தத்துப் பிள்ளை என்றழைக்க என்னய்யா

எனக்கு தைரியமும் போதவில்லை சின்னய்யா

கன்டவர் கண்ணு படும் செல்லாத்தா

கன்னத்திலே கருப்புப் பொட்டு வைக்க சொல்லி சொல்லாத்தா

கன்டவர் கண்ணு படும் செல்லாத்தா

கன்னத்திலே கருப்புப் பொட்டு வைக்க சொல்லி சொல்லாத்தா

தங்க சிலம்பெடுத்து போடாத்தா

னல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா

தங்க சிலம்பெடுத்து போடாத்தா

னல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா

மாவடுவைக் கடிக்கவில்லை செல்லய்யா

சாம்பல் மண்ணை அள்ளித் தின்னதுன்டோ சொல்லய்யா

மாவடுவைக் கடிக்கவில்லை செல்லய்யா

சாம்பல் மண்ணை அள்ளித் தின்னதுன்டோ சொல்லய்யா

னான் மருந்து மாயம் காணவில்லை என்னய்யா

என்னை மாற்றி விட்டாய் பெற்றவளாய் சின்னய்யா

னான் மருந்து மாயம் காணவில்லை என்னய்யா

என்னை மாற்றி விட்டாய் பெற்றவளாய் சின்னய்யா

பட்டு சொக்கா வேட்டி எடுத்து கட்டாத்தா

அப்புறம் பாக்க வேணும் ஆயிரம் தான் கண்ணாத்தா

பட்டு சொக்கா வேட்டி எடுத்து கட்டாத்தா

அப்புறம் பாக்க வேணும் ஆயிரம் தான் கண்ணாத்தா

சுட்டிப் பயலை தொட்டிலிலே போடாத்தா

அழுதா புட்டிப் பாலைக் கரைccஇக் கொஞ்cஅம் ஊத்தாத்தா

சுட்டிப் பயலை தொட்டிலிலே போடாத்தா

அழுதா புட்டிப் பாலைக் கரைccஇக் கொஞ்cஅம் ஊத்தாத்தா

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்

என்னை நான் கொடுத்தேன்

என் ஆலயத்தின் இறைவன்

ஆலயத்தின் இறைவன்

(உன்னை)

பொன்னைத்தான் உடல் என்பேன் - சிறு

பிள்ளை போல் மனம் என்பேன்

கண்களால் உன்னை மணந்தேன் - தொட்ட

கைகளால் நான் மலர்ந்தேன்

உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்

(உன்னை)

எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் - ஒரு

கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்

சொல்லத்தான் அன்று துடித்தேன் - கொண்ட

நாணத்தால் அதை மறைத்தேன்

மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

(உன்னை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே (2)

தாய்மை எனக்கே தந்தவர் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (2)

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் உன்னிடம் என்னை

இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

ஆல மரத்தின் விழுதினைப் போலே அனைத்து நீயும் உறவு தந்தாயே (2)

வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை என்னும் ஆலயம்,

அன்பில் வந்த காவியம்

கண்ணில் நின்ற ஓவியம்

நேரில் நான்.. தாய் முகம் பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்

நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார் - அது

வேதன் விதியென்றோதுவார்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)

பாயும் மீன்களில் படகினைக்கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி

பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ணப்பூங்குயில் பாடினால் சந்திரோதயம்...

ஒரு கிளையின் காதில் நான் பாட

அதில் உயிரும் வந்து நடமாட

பாடவா பாடவா அலைகளை பாடவா

பாடவா பாடவா கரைகளை பாடவா

பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி

பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட

அலையடிக்கும் நீரில் அல்லி என்ன பாட

மழையின் துளி ஒன்று மயிலிறகில் விழுந்தால்

தோகைமயிலாடும் காட்சிகளும் கண்டேன்

மழையின் துளி ஒன்று பாறைகளில் விழுந்தால்

மௌனமே மிஞ்சும் காட்சிகளும் கண்டேன்

ரெண்டு பொருள் உண்டு என்ன பொருள் பாட

பாலைவனமெங்கும் பால்நிலவு போல் சிந்தி யார் பார்த்திட

துளித் துளி துளித் துளி மழைத் துளி - அது

தொடத் தொட சிலிர்த்தது மலர்க்கொடி

இந்த பூமிக்குத் தீர்ந்தது தாபம்

இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம் ?

ஆகா ஆகா ஆகா ஆகா..கா..

லலலா... லலலலா... லலலா.. லலலலா..

குகுகூம்... குகுகுகூம்... :lol:

நான் வாழ்வது வேறொரு உலகம்

அங்கு நீ இன்றி எனக்கது நரகம்

என்னை வாட்டுது வாலிப விரகம்

அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்

லலா.. லலா.. லலா.. லலா..ஆ.

ஆ..ஆ..ஆ..ஆ..லலலா லாலாலாலா

குகுகூம்... குகுகுகூம்... :wub:

(துளி)

இங்கு சில்லென வீசிடும் காற்று

என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு

உந்தன் கையெனும் போர்வையைப் போட்டு

கொஞ்சம் கதகதப்பை நீ ஏற்று :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

வாலிபமே வா வா

தேனிசையே வா வா

வாலிபமே வா வா

நேரிய வானம் யாவும்

பாடிய கானம் போகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்

வரம் தர வேண்டும் எனக்கது போதும்

உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து

முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துகுள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

*வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்...*

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (2)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (2)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று (2)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (2)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்

வரும் காலம் நலமாகவே

வரும் நாளை கொண்டாடுவோம்

பூங்குழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை நமதே

அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே இந்த நாளும் நமதே

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கணியாகும்

நமக்கென வழர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் நூல் வழி வந்து பாசமலர் கூட்டம்

ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று

பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே

நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி

எதையுமே தாங்கிடும் இதையம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கணியாகும்

நமக்கென வழர்ந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே

அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ பள்ளித்தாமரையே உன் பாதம் கண்டேனே

உன் பட்டுத் தாவணி சரியச் சரிய மீதம் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாமரை முகத்தோனே இராமா! இது

தருணமென்னைக் காக்க, நிறை மெய்யறிவே!

பிறன்மனைக் காசைப்பட்டு, அவர்தமக்கு அன்னமிட்டு,

பகலிரவு சரசமாடுவோரை யொறுக்க

தாமரை முகத்தோனே இராமா! இது

தருணமென்னைக் காக்க, நிறை மெய்யறிவே!

  • கருத்துக்கள உறவுகள்

இது போர்க்களமா இல்லை தீக்குளமா

விதி மாற்றிடும் காதல் புரியாதே (2)

தீயின் மனமும் நீரின் குணமும்

எடுத்துச் செய்தவள் நீ நீயா

தெரிந்தப் பக்கம் தேவதையாக

தெரியாப் பக்கம் பேய் பேயா

நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்

என்னைத் தின்றாய் பிழையில்லையா

வேலைவெட்டி இல்லாப் பெண்ணெ

வீட்டில் உனக்கு உணவில்லையா

இருவிழி உரசிட ரகசியம் பேசிட

இடிமழை மின்னல் ஆரம்பம்

பாதம் கேசம் நாபிக்கமலம்

பற்றிக்கொண்டதும் பேரின்பம்

தகதகவென எரிவது தீயா

சுடச்சுடவெனத் தொடுவது நீயா

தொடுதொடுவெனச் சொல்லடி மாயா

கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா

நண்பர் கூட்டம் எதிரே வந்தால்

தனியாய் விலகி நடக்கின்றேன்

நாளை உன்னைக் காண்பேனென்றே

நீண்ட இரவைப் பொறுக்கின்றேன்

இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட

இன்னும் என்ன செய்வாயோ

செப்படிவித்தை செய்யும் பெண்ணெ

சீக்கிரம் என்னைக் கொல்வாயோ

எந்தக் கயிறு உந்தன் நினைவை

இறுக்கிப் பிடித்து கட்டுமடி

என்னை எரித்தால் எலும்புக்கூடும்

உன்பேர் சொல்லி அடங்குமடி

படபடவென படர்வதும் நீயா

விடுவிடுவென உதிர்வதும் நீயா

தடதடவென அதிரவைப்பாயா

தனிமையிலே சிதறவைப்பாயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..

என் இமைகளை கழுவுது சொல் சொல் ..

இளமையில் இளமையில் ஜில் ஜில் ..

என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே ..

விழுந்தது உனது உருவம் .. ஒ ..

உதடுகளால் உனை படிப்பேன் ..

இருந்திடு அறை நிமிடம் ..

தொலைவதுபோல் தொலைவதுதான் ..

உலகில் உலகில் புனிதம்..

இறகே இறகே மயிலிறகே ..

வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..

தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..

கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..

விரல் தொட புருவமும் சிவந்தேனே ..

ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..

சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..

சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..

எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..

எழுதிய கணக்கு ..

எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..

இருதைய சுளுக்கு ..

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிறகே! மயிலிறகே!

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே!

விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்

நீதானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்!

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே!

விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து

உன் மடியினில் பாய்ந்தது வைகை!

மெதுவா...மெதுவா..மெதுவா...

இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து

என் பார்வையில் நீந்துது தென்றல்!

அதை நான் அதை நான் பிடித்து

மெல்ல அடைத்தேன் மனசிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!

வான் உள்ள வரை வாழும் பாடல்!

மயிலிறகாய்! மயிலகாய்!

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவாய்! மழை நிலவாய்!

விழியில் எல்லாம் உன் உலா...

உயிரை தொடர்ந்து வரும்

நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே!

தமிழா! தமிழா! தமிழா!

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!

கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!

உனக்கும் எனக்கும் விருப்பம்

அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!

ஊர் உறங்கட்டும்! உரைப்பேன் கேளு!

மயிலிறகே! மயிலிறகே!

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே!

விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்

நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்... மயிலிறகாய்

வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

வருடுகிறாய்....மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!

முல்லை மலர் பாதம் நோகும்உந்தன்

சின்ன இடை வளைந்தாடும்

வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்!

படுக்கையை இறைவன் விரித்தான் வரும்

பனித்திரையால் அதை மறைத்தான்

பருவத்தில் ஆசையைக் கொடுத்தான் வரும்

நாணத்தினால் அதை தடுத்தான்!

அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு அதில்

அழகிய மேனியின் நடிப்பு

படபடவெனத் துடிப்பு இன்று

பதுங்கியதே என்ன நினைப்பு!

திருமணம் என்றதும் அடக்கம் கண்கள்

திறந்திருந்தாலும் உறக்கம்

வருவதை நினைத்தால் நடுக்கம் பக்கம்

வந்துவிட்டாலோ மயக்கம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.