Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

527957_458062284234551_450521684_n.jpg?o

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10865915_917189241627725_152633549472648

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2015 புதுவருட கொண்டாட்டங்கள்

10881678_560434704093004_839059070147481   10888359_560434904092984_760547788691768   10898039_560434780759663_555513307447367   10614349_560434954092979_617845535137276  11011_560435027426305_230705394946216470

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10155678_525362130940139_516094140861206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10882303_862039537150113_146900968263777

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.

இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.

முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது.

மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் டாக்டர் அல்மா பேக்கர். வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார்.

அன்றைய நாளில் 2250 ஸ்ரேர்லிங் பவுண்டு வரை பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது.

ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10411197_758564537570629_588188813613842

இவ் உலகில்..

மனிதனாக வாழ்வது பெரிதல்ல.

மனிதபிமானமுள்ள மனிதனாக 

வாழ்வது தான் பெரிய விடயம் !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Parveen Sultana Speech part 1, 2 - Perambalur Book Fair 2014

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10888636_10153064070563254_2753782165953

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்...

10888600_915275141819135_838575352187719

  • கருத்துக்கள உறவுகள்

10882303_862039537150113_146900968263777

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.

இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.

முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது.

மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் டாக்டர் அல்மா பேக்கர். வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார்.

அன்றைய நாளில் 2250 ஸ்ரேர்லிங் பவுண்டு வரை பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது.

ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

தகவலுக்கு, நன்றி யாயினி.

இதன் முன் இந்தச் செய்தியை... எங்குமே, வாசித்திருக்க இல்லை.

இதனை.... ஒரு தலைப்பாகவே, யாழ் இணையத்தில் பதிந்தால்.... பலரும் அறியக் கூடியதாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு, நன்றி யாயினி.

இதன் முன் இந்தச் செய்தியை... எங்குமே, வாசித்திருக்க இல்லை.

இதனை.... ஒரு தலைப்பாகவே, யாழ் இணையத்தில் பதிந்தால்.... பலரும் அறியக் கூடியதாக இருக்கும்.

யாராச்சும் விரும்பின் எடுத்து பதிந்து கொள்ளட்டும்..அதற்கு என்னிடத்தில் எந்த தடையும் இல்லை..ஆனாலும் நான் இணைப்பவை உண்மையா,பொய்யா என நம்பவும் வேண்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1458450_528284517314567_3174965202389131

1898 ஆம் ஆண்டு Morgan Robertson என்பவர்

ஒரு நாவல் எழுதினார்.

அதன் படி "70,000 டன் எடையுள்ள ஒரு கப்பல்

அட்லாண்டிக் கடலின்

வடக்குபகுதியை கடக்கும்போது நீரில்

மூழ்குகிறது. அதுவே அந்த கப்பலின் முதல்

மற்றும் இறுதி பயணமாகும்.அந்த விபத்தில் 2500

பேர் இறக்க நேரிடுகிறது. மேலும் அந்த

கப்பலின் பெயர் Titan."

1912-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் நாள் 66,000 டன்

எடையுடன் புறப்பட்ட ஒரு கப்பல் அவர் சொன்ன

அதே இடத்தை கடக்கும் பொது கடலில்

மூழ்குகிறது.

மேலும் அவர் சொன்னபடியே அந்த கப்பலின்

முதல் மற்றும் இறுதி பயணம் அதுவே. 1513 பேர்

இறந்த அந்த கப்பலின் பெயர் வேறு ஒன்றும்

இல்லை Titanic தான்.

சோகம் என்னவென்றால் இந்த கப்பலில் பயணம்

செய்து இறந்தவர்களில் ராபர்ட்சன்-ம் ஒருவர்.

வாசிக்கும் இடங்களிலிருந்து எடுத்து வருவது..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10885465_527022970774055_336478043405988

எவரெஸ்டை எட்டிப்பிடிக்க இன்னும்

ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பயணத்தை ரத்து செய்யலாமா? என்று எட்மண்ட்

ஹிலாரி யோசிக்கிறார்.

அப்போது டென்சிங் சொன்னான்,

“இல்லை தொடர்வோம். ஒருவேளை நாம்

வெற்றி பெற்றால், உலகத்தின் உயர்ந்த சிகரத்தில்

முதலில் கால் பதித்த

பெருமை நமக்கு கிடைக்கும்.

ஒரு வேளை நாம் தோல்வியுற்றால் உலகத்தின்

உயர்ந்த சிகரத்தில் முதலில் உயிர்நீத்த

பெருமை நமக்கு கிடைக்கும்” என்கிறான்.

சிலிர்ப்போடு பயணத்தை தொடர்ந்த இருவரும்

அடுத்தநாள் அதாவது 1953ஆம் வருடம் மே மாதம்

29ம் தேதி காலை 11 மணிக்கு இருவரும்

எவரெஸ்டை எட்டிப் பிடிக்கிறார்கள்.

முயற்ச்சி மற்றும் நம்பிக்கை இருந்தால்

சிகரத்தையும் எட்டி பிடிக்கலாம்

என்பதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்...

10487566_612870192190492_680975314787487

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10919422_413279458821818_828064856234816

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10407441_774445639305285_269607417530000

1601315_774445712638611_7517202775617091

05 Jan 2014 , BBC Tamil / ........வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்களான 6 வயதான பிருந்தா, 2 வயதான கிருஷாந்த் ஆகிய இரண்டு குழந்தைகளும் இராணுவ சப்பாத்து காலினால் மிதிக்கப்பட்டதாகவும் நாடடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழோசையிடம் கூறினார்.

இரண்டு குழந்தைகளும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குழந்தைகளின் வீட்டருகில் தையல் கடை வைத்திருப்பவரான மாமா முறை உறவினர் ஒருவர் குழந்தைகள் தாக்கப்பட்ட காரணத்தைக் கேட்டபோது, அவரையும் அந்தச் சிப்பாய் தலையில் தடியாலும் வாளி ஒன்றினாலும் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் சிறிதரன் கூறினார்.

அவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற இராணுவ அடக்குமுறையின் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இவ்வாறு சிறுவர்கள் மீதான இராணுவ தாக்குதல்கள் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ள போதிலும் அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள சிறிதரன், இது தொடர்பாக மனித உரிமைகள் அமைப்பு மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

......இது தொடர்பாக காவல்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெற வேண்டும் என்று குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டிருப்பததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

http://www.bbc.co.uk/…/…/01/150105_army_children_kilinochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10898040_1021118357903704_16683740878413

10806353_1021118861236987_78516292059171

பாரிசில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் தாக்கம் நம்மவர்களுக்கு தெரியவில்லை. இன்று லாசப்பல் பகுதியில் 'இதென்ன பெரிய விடயம் எங்கள் நாட்டில் தினசரி இப்படி எவ்வளவு படுகொலைகள் நடந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம்' என்கின்ற அடிப்படையில் தான் பலரும் இந்த விடயத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரான்சில் இன்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவருமே இனவாதத்துக்கும் அனைத்துவகை அடிப்படைவாதத்துக்கும் எதிரான காப்பரணாக இருந்து வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்து மக்களின் உண்மையான இருப்புக்காக குரல் கொடுத்தவர்கள் போராடியவர்கள்.

பிரான்சில் இன்று அகதி தஞ்சம் பெற்று ஏனைய மக்களுக்கு சமமான உரிமைகளை அனுபவிப்பவர்களுக்கு இன்று உயிர் நீத்த இவர்களைப் போன்றவர்களின் எழுத்துகளாலும் போராட்டங்களாலும் கிடைத்த அறுவடையைத் தான் அனுபவித்துக்கொண்டிறோம் என்ற உண்மை தெரிவதில்லை.

வன்னி இறுதியுத்தம் நடைபெற்ற போது அது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல.மாநிடத்துக்கு எதிhரான அடக்குமுறை யுத்தம் என்று உரத்து கூறியவர்கள் அவர்கள்.

அவர்கள் நீட்டிய நேசக் கரத்தை பற்றிக்கொள்ளும் குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத பிழைப்புவாத கூட்டம் ஒன்று நாங்கள் வேறு உயர் மட்டத்தில் அணுகுகிறோம் யுத்தத்தை நிறுத்துகிறோம் என்று பம்மாத்துவிட்டது நமது கடந்தகால வரலாறு.

சார்லி ஹெப்டோ ஊடகவியலாளர்களின் படுகொலை ஒடுக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு உள்ளான மாநிடத்தை நேசக்கும் அனைவரையும் உலுக்கியிருக்கிறது.

வன்னியில் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போது மனதை உலுக்கியதைப் போன்ற ஒரு உணர்வு-துயரம் என்னை வாட்டுகிறது.அந்த ஊடக தோழர்களுக்கு சமூகவிடுதலைப் போராளிகளுக்கு எனது வீரவணக்கம்.

10896879_808149985916780_297412222622034

சிவா சின்னப்பெடியின் பக்கத்திலிருந்து...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்....

10898083_583754561769360_217225475332226

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு முயன்றாலும் கடந்துவிட்ட

ஒரு நொடியையும் மீட்டெடுக்க முடியாது.

திட்டமிட்டு நேரத்தை செலவிடுவோம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10891879_529353957207623_812552367976518

எல்லாவற்றையும் மக்கச்செய்து அழித்துவிடும்

மண்,விதையை மட்டும் உயிர்ப்பிக்கச் செய்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கையில் தேர்தல் நடந்து முடிவிற்கு வந்திருக்கிறது என அறியக் கூடியதாக இருக்கிறது....கள்ள வோட்டுக்களுக்கும் பஞ்சம் இருக்காது...யார் வருவார்,யார் வரக்கூடாது என்ற விருப்பு,வெறுப்புக்களுக்கு மத்தியிலும்.மக்கள் தங்கள் பணியினை திறம்பட செய்திருப்பார்கள் என்று நம்புவோமாக...ஒவ்வொருவர் மத்தியிலும் மிகவும் வித்தியாசமான உணர்வுகள் இருப்பதை அறியக் கூடியதாகவும் இருக்கிறது.பிறந்திருக்கும் புது ஆண்டு அந்த மக்களுக்கு ஒரு நிறைவான வாழ்வைக் கொடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Super singer -Anusiya

http://youtu.be/5ygFXi97c8k

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10922730_10155060572060133_8368334408426

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.