Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்வனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வனம் இணைய இதழில் படித்தவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். முழுமையாகப் படிக்க:

இதழ்: 112

பெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு

வெங்கட் சாமிநாதன்

தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்துதான்.

- See more at: http://solvanam.com/#sthash.yCiza8q6.dpuf

செஞ்சிவப்புச் சிந்தனைகள்

பி.எஸ்.நரேந்திரன்

“சனிக்கிழமையன்று ரொட்டி என்னுடைய ஊருக்கு ரயிலில் வருகிறதென்றால் நாங்கள் வியாழக்கிழமையே ரயில்வே ஸ்டேசன் வாசலில் கியூவில் நிற்க ஆரம்பிப்போம்…பொதுவுடமை கொடுக்கும் பரிசு அது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், படித்த பிறகு எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கமே தீர்மானிக்கும். நீங்கள் மருத்துவத்திற்குப் படிக்கலாம். ஆனால் அரசாங்கம் உங்களை கிராமத்திற்கு அனுப்பி விவசாய வேலை பார்க்கச் சொன்னால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை…”

- See more at: http://solvanam.com/#sthash.yCiza8q6.dpuf

மறையீட்டியலும் கணிதமும்

பாஸ்கர் லக்ஷ்மன்

இது போல் ஒரு வருடம் தொடர்ந்தது. மூவருக்கும் ஒரு விதமான சோர்வு மனப்பான்மை ஆட்கொண்டது. அந்தச் சமயத்தில் மூவரும் பாஸ் ஓவர் (Passover) என்ற யூத விடுதலை நாளைக் ஒரு மாணவன் வீட்டில் Manischewitz வைன் சிறிது அதிகமாகவே குடித்து விட்டு நள்ளிரவில் அவரவர் இருப்பிடம் திரும்பினார்கள். ரிவேஸ்ட்டுக்கு தூக்கம் வரவில்லை. ஒரு கணிதப் புத்தகத்துடன் சோபாவில் அமர்ந்து கொண்டு சிந்தித்த போது, திடீரெனத் தான் தேடிக் கொண்டிருந்த கேள்விக்கான விடை உதித்தது. அன்றிரவே ஓர் அருமையான கணிதக் கட்டுரையை ரிவேஸ்ட் எழுதி முடித்தார். ஷமீர் மற்றும் அல்டெர்மென் உதவியுடன் பொதுத் திறவி மறையீட்டாக்கம் செயல்படுத்தும் முறை முழுமை பெற்றது. அதுதான் புகழ்பெற்ற RSA மறையீடக்கமாகும்.

- See more at: http://solvanam.com/#sthash.yCiza8q6.dpuf

புரிதல் பற்றிய சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

ஒரு இருட்டு குகை. அதனுள் ஒரு வெற்று சுவற்றை பார்த்துக்கொண்டு நிற்கும்படி விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள். பிறந்ததில் இருந்து அங்கேயே அடைந்து கிடக்கும் அவர்கள் வெளி உலகையே அறியாதவர்கள். இந்தக்கைதிகள் இருக்கும் இடத்திற்குப்பின்னால் எரிந்துகொண்டு இருக்கிறது ஒரு தீப்பந்தம். அந்த தீப்பந்தத்துக்கும் கைதிகளுக்கும் இடையே ஒரு குட்டிச்சுவர். அதன்பின் பொம்மலாட்டக்காரர்கள் போல் பலர் அட்டையால் செய்யப்பட்ட மனித, விலங்கு உருவங்களை குச்சிகளில் ஒட்டி தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு தலைக்குமேல் உயர்த்தியவாறு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

- See more at: http://solvanam.com/#sthash.yCiza8q6.dpuf

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் – 4

ரவி நடராஜன்

“சரி, முக்கோண மெஷ் முறை எப்படி வேலை செய்கிறது? நிறைய வளைவுகள் நிறைந்த ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளுங்கள். அதைச் சுற்றி ஒரு மெல்லிய ப்ளாஸ்டிக் உறையால் சுற்றுகிறீர்கள். எவ்வளவு இறுக்கமாக சுற்றுகிறீர்களோ, அவ்வளவு அந்த பொம்மையின் வடிவம், சுற்றியுள்ள ப்ளாஸ்டிக்கிற்கு வரும். வளைவான பகுதியை எடுத்துக் கொள்வோம். வளைவான பகுதியை சுற்றி வளையும் ப்ளாஸ்டிக் நூல்களால் சுற்றப்படுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ப்ளாஸ்டிக் நூலும் ஒரு கோட்டைப் போல. எவ்வளவு அதிகம் கோடுகள் இருக்கின்றனவோ அவ்வளவு அழகாக அந்த வளைவு உருவாக்கப்படலாம்.

- See more at: http://solvanam.com/#sthash.yCiza8q6.dpuf

தூரயியங்கி – பொழுதுபோக்கும் போராட்டங்களும்

பாஸ்டன் பாலா

பெங்களூரூவிற்கு அருகில் இருக்கும் சித்ரதுர்காவில் தூரயியங்கி கட்டுப்பாடு மையம் அமைந்திருக்கிறது. காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் போன்ற பிரச்சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் அத்துமீறலையும் சீனாவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இவற்றை இந்தியா உபயோகிக்கிறது. அது தவிர கடற்படையில் மீனவர்களைப் பாதுகாக்கவும் கடத்தல்களை வேவு பார்க்கவும் கேரளா, குஜராத் போன்ற எல்லை மாநிலங்களும் தூரயியங்கியை புழக்கத்தில் வைத்திருக்கின்றன.

- See more at: http://solvanam.com/#sthash.yCiza8q6.dpuf

Edited by கிருபன்

நாஞ்சில் நாடன் கட்டுரைகளை வாசிக்க மட்டுமே சொல்வனம் செல்வதுண்டு. இனிமேல் மற்ற கட்டுரைகளையும் இங்கு வாசிக்கலாம் போல.. :)

 

பகிர்வுக்கு நன்றி ..

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 113

வெண்முரசு – ஒரு பார்வை

வெ.சுரேஷ்

எத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்). ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளை பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது.

மேலும் படிக்க...» - See more at: http://solvanam.com/#sthash.144rZiOn.dpuf

தூக்கத்தைக்கெடுக்கும் சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

ஒரு விஷமக்கார விஞ்ஞானி நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்கள் மூளையை மட்டும் எடுத்து ஒரு ஜாடியில் ஏதோ ஒரு ஸ்பெஷல் திரவத்தில் உயிரோடு இருக்கும்படி மிதக்க விடுகிறார். அதன்பின் ஒரு சக்தி வாய்ந்த கணினியை உங்கள் மூளையுடன் இணைத்து சாதாரணமாக கண், காது, மூக்கு, இத்யாதி வழியாக உங்கள் மூளைக்குள் வந்து சேரும் அத்தனை செய்திகளையும் உங்கள் மூளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்களின் வழியாக அனுப்பி வைக்கிறார்! கணினி உங்கள் மூளைக்குள் அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் அந்த விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்…

- See more at: http://solvanam.com/#sthash.144rZiOn.dpuf

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் -5

ரவி நடராஜன்

2000 –வாக்கில் பல பல்கலைக்கழகங்கள் எப்படியாவது இந்த நிரலமைப்பை எளிமை படுத்த வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன. இதை ஒரு ஓடை போல (stream) பாவித்தல் அவசியம் என்று முடிவெடுக்கப் பட்டது. ஓடையில் சேரும் பல்வேறு சிறு நீரமைப்புகள் போல, பல்வேறு தரவுகள் மற்றும் அடிப்படை அமைப்புகள் (ஓடையில், தண்ணீர், கற்கள், மணல் பெரிய ஆறுடன் சேறுவதைப் போல) சேர்த்து விட்டால், ஓடை மற்றவற்றை பார்த்துக் கொள்ளும். அதாவது, கடல் வரை அந்த நீர், கற்கள், மணலை கொண்டு சேர்க்க வேண்டியது நதியின் பொறுப்பு. இவ்வகை சிந்தனையின் வெற்றி, nVidia –வின் CUDA மற்றும் AMD –யின் CAL போன்ற நிரலமைப்பு என்ற இன்றைய மென்பொருள் புரட்சி.

- See more at: http://solvanam.com/#sthash.144rZiOn.dpuf

இணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்

அருணா ஸ்ரீனிவாசன்

இப்படி இணையத் தமிழுக்கு முக்கியப் பங்காற்றியவர்களில், மறைந்த சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமி, பல வருடங்களாக ஸ்விட்சர்லாந்தின், லொஸான் (Lausanne) நகரில் பணியாற்றும் கல்யாணசுந்தரம், மலேஷியத் தமிழர் முத்து நெடுமாறன், மற்றும் தமிழக மென்பொருள் வல்லுனர்கள் பலரும் தமிழ் இணையச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நான் அந்த சமயம் சிங்கப்பூரில் இருந்ததால் நா. கோவிந்தசாமியுடன் நல்ல பழக்கம் இருந்தது. அவர் செய்யும் முயற்சிகளை எல்லாம் ஆர்வத்துடன் என்னுடன் பகிர்ந்து கொள்வார்

- See more at: http://solvanam.com/#sthash.144rZiOn.dpuf

ஃபீல்ட்ஸ் பதக்கம் – ஓர் எளிய அறிமுகம்

பாஸ்கர் லக்ஷ்மன்

1932 ஆம் ஆண்டு பீல்ட்ஸ் கணிதத்திற்கான பரிசைக் கொடுக்க பல நாடுகளின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்தப் பதக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றார். இதற்குக் காரணமாக “ஏற்கெனவே கணிதத்தில் செய்த சாதனைக்காகவும், பரிசு பெற்றவர்கள் எதிர்காலத்தில் ஊக்கத்துடன் செயல்படவும் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும் அமைய வேண்டும்” என்பதை முன் வைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஃபீல்ட்ஸ் 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீடீரென காலமானார். மரணப்படுக்கையில் இருக்கும்போது உயில் எழுதிய பீல்ட்ஸ்…

- See more at: http://solvanam.com/#sthash.144rZiOn.dpuf

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 114

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

வ.ஸ்ரீநிவாசன்

“ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.

மேலும் படிக்க...» - See more at: http://solvanam.com/#sthash.iRgKvqRF.dpuf

நற்றமிழ்ச்சுளைகள்

வளவ. துரையன்

12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது.

- See more at: http://solvanam.com/#sthash.iRgKvqRF.dpuf

சொல் மறைப்பதென்ன

கார்த்தி

உதாரணத்திற்கு கேரட். அதைப் பார்த்தவுடன் நம்மில் பலரைப் போல் அனிச்சையாக, அவரால் கேரட் என அடையாளம் கண்டு சொல்ல இயலவில்லை. மாறாக அதை ஒரு புதிய பொருளாக பார்க்கிறார். நீளமான, சற்று ஒல்லியான ஒரு பொருள், அதன் ஒரு முனையில் இழைக்கொத்து. என்னவாக இருக்க முடியும்? பெயிண்ட் பிரஷ் என தவறாக ஊகிக்கிறார்.

- See more at: http://solvanam.com/#sthash.iRgKvqRF.dpuf

கணிதசிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

ஹில்பர்ட் தனது கற்பனையில் கட்டிய விடுதியில் உள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை முடிவிலி! அதனால் விடுதியின் விளம்பர வாசகமே, “ஹில்பர்ட் ஹோட்டலில் இடமில்லையாவது..?” என்பதுதான். எங்கள் விடுதி நிரம்பி இருந்தாலும், வரும் விருந்தினர்களை எப்போதும் திருப்பி அனுப்ப மாட்டோம் என்பது அவர்கள் தரும் உத்திரவாதம். விடுதி இருக்கும் ஊரில் ஒரு பெரிய கணித மாநாடு நடப்பதால் ஒரு வாரம் அத்தனை அறைகளும் புக் செய்யப்பட்டு…

- See more at: http://solvanam.com/#sthash.iRgKvqRF.dpuf

தூரயியங்கி – டிரோன்களின் வருங்காலம்

பாஸ்டன் பாலா

இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’ தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள். நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை.

- See more at: http://solvanam.com/#sthash.iRgKvqRF.dpuf

யூடியூப்புடன் நான்கு வாரக் கடைசிகள்

ரவி நடராஜன்

புல்வெட்டும் எந்திரங்கள் சைனாவில் செய்து, வட அமெரிக்காவில் 400 டாலருக்கு சிரிக்கின்றன. ஒன்றை மறந்து விடக் கூடாது. சாதாரண காரில் சத்தியமாக இவற்றை ஏற்ற முடியாது. எடையும், வடிவமும் முற்றிலும் காருக்குச் சரிவராத மோசமான எந்திரம்! நானோ காரில் சுமோ குத்துசண்டைகாரர்களை ஏற்றுவதைப் போன்ற விஷயம் இது. இவ்வகை எந்திரங்களை பழுது பார்ப்பது புதிய எந்திரம் வாங்குவதை விட அதிக செலவாகும்.

- See more at: http://solvanam.com/#sthash.iRgKvqRF.dpuf

டால்ஸ்டாய் மொழிகள்

லியோ டால்ஸ்டாய்

tolstoy.jpg

1. “Everyone thinks of changing the world, but no one thinks of changing himself.”

“எல்லோரும் உலகை மாற்றவே நினைக்கிறார்கள், ஒருவரும் தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை”

2. “The strongest of all warriors are these two — Time and Patience.”

“வீரர்களிலேயே வலிமையானவர்கள் இவரிருவர் – காலம், பொறுமை”

3. “All happy families resemble one another, each unhappy family is unhappy in its own way.”

“எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் மகிழ்ச்சியில் ஒத்திருக்கிறார்கள், ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அவரவர் வழியில் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள்.”

4. “Honest work is much better than a mansion.”

“நேர்மையான வேலை மாளிகையைவிட பெரியது”

5. “The hero of my tale, whom I love with all the power of my soul, whom I have tried to portray in all his beauty, who has been, is, and will be beautiful, is Truth.”

“என் கதையின் நாயகன், என் ஆன்மாவின் எல்லா சக்தியுடனும் நான் நேசிப்பவன், அவனது முழுமையான அழகில் நான் சித்தரிக்க முயற்ச்சிப்பவன், இதுவரையிலும், இப்பொழுதும், இனியும் அழகாயிருப்பவன் -“உண்மை (அ) சத்தியம்.”

6. “The vocation of every man and woman is to serve other people.”

“ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் தொழில், மற்றவர்களுக்கு சேவை செய்வதே”

7. “In all history there is no war which was not hatched by the governments, the governments alone, independent of the interests of the people, to whom war is always pernicious even when successful.”

“எல்லா வரலாறுகளிலும், அரசுகளால் உருவாக்கப்படாத போர்களே இல்லை, அரசுகளால் மட்டுமே, மக்கள் நலனை சாராமல் உருவாக்கப்படுபவை, வெற்றியிலும் அரசுகளுக்கே தீங்கு விளைவிக்கும்.”

8. “The truth is that the State is a conspiracy designed not only to exploit, but above all to corrupt its citizens … Henceforth, I shall never serve any government anywhere.”

“உண்மை என்னவென்றால், தேசம் என்பது சுரண்டுவதற்கு மட்டுமல்லாமல், குடிகளை கெடுக்கவும் உருவாக்கப்பட்ட சதி.. இனி நான் எந்த அரசிலும் எங்கிருக்கும் அரசிலும் சேவை புரிய மாட்டேன்.”

9. “Pure and complete sorrow is as impossible as pure and complete joy.”

“தூய்மையான முழுமையான சோகம் என்பது தூய்மையான முழுமையான சந்தோஷத்தைப்போலவே சாத்தியமற்றது.

.- See more at: http://solvanam.com/?p=35809#sthash.nWJyJCFz.dpuf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 115

சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஸ்ரீதர் நாராயணன்

ஆனந்தவிகடன் கதைகள் உறவுகளில் உள்ள ஏய்ப்புகள் பற்றியும், உடலை மையப் படுத்திய உறவுகளில் உள்ள ஏமாற்றங்கள், சோகங்கள் பற்றியுமான கதைகள். வாழ்க்கையைப் பற்றி மெத்தவும் அறிந்த ஒரு பெண் எழுதுவது போன்ற கதைகள். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்து விட்டதுபோல் நினைப்பதும் ஒரு வித முதிர்ச்சியற்ற குழந்தைத்தனம்தான்.

இந்தக் கதைகள் பிரபலமான பத்திரிகைகளின் நடையை ஒட்டியே இருந்தன. கருத்துகள் சிறிதே மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் வளரும்போது இருந்த இலக்கியத்திலும் சினிமாவிலும் படித்த, நாகரீகமான பெண், படித்த ஆனால் பழமை விரும்பியான, பண்பாட்டைக் காப்பாற்றும் பெண்ணுக்கு எதிர்மறையாகவே பார்க்கப்பட்டாள். அந்த வகையில் என் கதையின் பெண்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், குரல் இழக்காதவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் பெண்களை ஒடுக்கும் பல விஷயங்களுக்கான ஆதரவு இருந்தது.

- See more at: http://solvanam.com/#sthash.I8GXahVO.dpuf

நந்துவின் பிறந்தநாள்

குமுதினி

அந்தக் காலண்டரின் சீட்டில் தேதிக்கு அடியில், ‘திரயோதசி’, ‘அசுவினி’, ‘சதுர்த்தசி’, ‘பரணி’ என்று இம்மாதிரி எழுதியிருக்கும். அதில் ஒவ்வொரு சீட்டாகத் தூக்கித் தூக்கிப் பார்த்ததில் ஏழாம் தேதி அன்று ‘திருவோணம்’ என்று இருந்தது. “அட! திருவோணமா! அன்னிக்குத்தானே நேக்குப் பொறந்தநாள்?” என்று நந்து சொன்னான். அவன் சொன்னதை ஒருவரும் கவனிக்கவில்லை. அக்கா மாத்திரம், ‘பாவம், தன் பிறந்தநாளைத் தானே பார்த்துக் கொள்ளுகிறது!’ என்று நினைத்துக் கொண்டாள்.

- See more at: http://solvanam.com/#sthash.I8GXahVO.dpuf

பெண்ணிய பயங்கரம்!

ரஞ்சனி கிருஷ்ணகுமார் - தமிழில்: மித்திலன்

இவை பெண்களின் கதைகள், பெண்கள் அதி-இயற்கையைச் சாதிக்கும் கதைகள் – ஆனால் ஒவ்வொரு கதையும் திகில் கதையாக ஆவது அதில் ஓர் ஆவி இருப்பதால் அல்ல, மாறாக அவை, நாம் வாழ்வில் ஏதோ சில கட்டங்களில் கேள்விப்பட்டிருந்த அல்லது அடைந்த அனுபவங்களை வினோதமான ஒரு வகையில் ஒத்திருக்கின்றன என்பதால்தான். ….”எனக்கு உருவங்களில்தான் கதை துவங்குகிறது. நான் ஒரு ஓவியராக இருப்பதால் இப்படி இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். வரிசையாக சில உருவங்களைப் பார்க்கிறேன், இவை கிளர்வூட்டி என்னைச் சிந்திக்கத் தூண்டுன்றன. அதன்பின் அவற்றுக்குள் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் கதை எழுதத் துவங்குகிறேன். ஆனால் கதை எழுதும்போது, இதை மட்டும்தான் செய்ய வேண்டும். உனது நோக்கம், உனது பெண்ணிய வாதையைப் போகவிட வேண்டும்- உனக்குள் இருக்கும் கதைசொல்லிக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும்.”

- See more at: http://solvanam.com/#sthash.I8GXahVO.dpuf

ஆண்/பெண் சிக்னல்

அட்வகேட் ஹன்ஸா

ஏன் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எதாவது லடாய்?ஆண் பெண்ணிற்கும் பெண் ஆணிற்கும் அளிக்கும் விருப்ப சிக்னலில் ஏதும் குழப்பமா? புரிந்து கொள்ள முடியாமல் போயிற்றா? ஏன்? எதனால்? மிருகங்களுக்கு இது போன்ற குழப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லையே? மிருகங்களில் எதிர்பாலினத்திற்கு அளிக்கும் சிக்னல் பிரச்சினை இல்லாததற்குக் காரணம்… அவை எதிர்பாலினத்தை காமத்திற்காக மட்டுமே எதிர்பார்க்கின்றன. மனிதன் அப்படி இல்லை. காமம் மட்டும் அவன் தேவை இல்லை, பேரண்டல் பர்டனின் நீண்ட காலத் தேவையினால் மற்றவர் உடனிருக்க, காதல் எனும் பட்டுத்துணி தேவை.

- See more at: http://solvanam.com/#sthash.I8GXahVO.dpuf

நெடுந்தூர ஓட்டக்காரி

க்ரேஸ் பே(ய்)லீ - தமிழில்: என்.கல்யாணராமன்

க்ரேஸ் பேலி நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் மற்றும் அரசியல் போராளி. தன் வாழ்நாளில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட க்ரேஸ் பேலி சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை விரிவாக்கியவர் என்று கொண்டாடப்படுகிறார். பெண்களின் உலக இருப்பைப் பற்றிய நுட்பமான, ஆழமான பார்வை பேலியின் சிறுகதைகளில் பிரமிக்கவைக்கும் ஒளியுடன் வெளிப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகவும் போர்களுக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த க்ரேஸ் பேலி, எளிய மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே தன் படைப்புகளைக் கட்டமைத்ததார். இந்த இயல்புகளை ‘நெடுந்தூர ஓட்டக்காரி’ சிறுகதையிலும் காணலாம்.

- See more at: http://solvanam.com/#sthash.I8GXahVO.dpuf

பெண்ணியல் சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் தேர்வுகள் நடத்தி, பின்லாந்து நாட்டில் இருந்து ஜான் என்ற ஒரு ஆணும், தாய்லாந்தில் இருந்து ஜாய் என்ற ஒரு பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் இருவரையும் தனித்தனியே ஒரு விண்கலத்தில் அமர்த்தி செவ்வாய் கிரகத்துக்கும், வீனஸ் கிரகத்துக்கும் அனுப்பி வைக்கிறோம். விண்கலங்களில் தேவையான பிராணவாயு, தண்ணீர், எக்கச்சக்கமாக சாப்பாடு, தங்களை தாங்களே குளோனிங் செய்துகொள்ள தேவையான இயந்திரங்கள்…

- See more at: http://solvanam.com/#sthash.I8GXahVO.dpuf

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 116

‘பெண்களின் விடுதலை’ – யதுகிரி அம்மாள்

“நீங்கள் என்ன சொன்னாலும் பெண்களால் தான் இந்த தேசம் நின்றிருக்கிறது. நீங்கள் மில் வேஷ்டி உடுத்துகிறீர்கள். நாங்கள் தறியில் நெய்த புடவையை உடுத்திக் கொள்கிறோம். வழக்கங்கள், பண்டிகைகள், ஆசாரங்கள், பிரபந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் எல்லாம் எங்களால் தான் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இங்கிலீஷ் பண்டிதர்களான உங்களுக்கு அவைகளை படித்துப் பார்க்க வேளை எங்கு இருக்கிறது? யாரவது ஒரு வெள்ளைக் காரன் சொன்னால் அப்போது தான் உங்கள் தாயார்களை, “பாராயண புஸ்தகம் இருக்கிறதா? என்று கேட்பீர்கள்” என்று இந்தியப் பெண்களின் பெருமையை எடுத்துச் சொன்னேன். பாரதியார்: பலே! ஐயர் சொன்ன பிரசங்கத்தை அப்படியே விழுங்கி விட்டிருக்கிறாயே! பரவாயில்லை.குழந்தைகளிடம் தோற்றாலும் சந்தோஷமே. குரு சிஷ்யனிடம் தோற்பது ஒரு பெருமை. அதை நம் தேசத்தில் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

- See more at: http://solvanam.com/#sthash.ytM1ImnI.dpuf

ஜீவனாம்சம் – ஆண், பெண் சம உரிமை

அருணா ஸ்ரீனிவாசன்

மேலை நாடுகளில் பணக்கார மனைவி கணவனுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகை எலிசபெத் டெய்லர் மாதா மாதம், பெரும் தொகையை ஜீவனாம்சமாக தன் முன்னாள் கணவர் லேரி ஃபொர்டென்ஸ்கிக்கு (Larry Fortensky) கொடுக்கிறார். மேலை நாடுகளில் இது வழக்கம் என்று ஒதுங்கிவிடுவோமே தவிர, நம் மூக்குக்கு கீழ் ஆசியாவில் நடக்கும் என்று நினைக்க மாட்டோம். ஆனால்…

- See more at: http://solvanam.com/#sthash.ytM1ImnI.dpuf

உலகமே ஆத்ம வடிவம்தான்

தி. இரா. மீனா

அப்படியானானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன்? இறப்பு ஒருநாள் என்னை விழுங்கும் என்றால் உலகின் நிலையாமை என்னை பயமுறுத்தும் என்றால் எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும் எங்களுக்கு நல்லதைத் தர முடியும் ? மதிப்புடையதாக இருக்க முடியும்? திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?

- See more at: http://solvanam.com/#sthash.ytM1ImnI.dpuf

கரடி வேட்டை

லியோ டால்ஸ்டாய் - தமிழில்: எம்.ஏ.சுசீலா

தனக்குத் தீங்கு செய்யாமல் ஒதுங்கிப் போன பிறகும் கூட மூர்க்காவேசத்துடன் விரட்டி விரட்டி அந்த மிருகத்தை அழித்துத் தீர்த்த பிறகே அடங்கும் அவனது வெறியை அப்பட்டமாக முன் வைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதியிருக்கும் ‘கரடி வேட்டை’என்னும் சிறுகதை. விலங்கு – மனிதன் என்னும் இரு நிலைகளை எதிரெதிரே வைத்து உண்மையில் யார் விலங்கு என்னும் தேடலுக்குள் இட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய். இந்தப் படைப்பில் விவரிக்கப்படும் சம்பவம், டால்ஸ்டாய் தன் வாலிபப் பருவத்தில் நேரடியாகவே கண்டுணர்ந்த வேட்டை அனுபவம் எனவும் இது நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் வேட்டையாடுவதை அவர் நிறுத்தி விட்டார் என்றும் குறிப்புக் கிடைக்கிறது.

- See more at: http://solvanam.com/#sthash.ytM1ImnI.dpuf

இயற்பியல் சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

ஒரு இரும்புப்பெட்டி. பெட்டிக்குள் ஒரு பூனை. அதே பெட்டிக்குள் ஒரு கண்ணாடிக்குடுவையில் கொஞ்சம் விஷம். தனியாக இன்னொரு பாத்திரத்தில் கதிரியக்கத்தன்மை உள்ள ஒரு சமாச்சாரம் அது ஒரே ஒரு அணுவாகக்கூட இருக்கலாம். அடுத்த ஒரு ஒரு மணிநேரத்தில் அந்தப்பெட்டிக்குள் கதிரியக்கம் நிகழும் சாத்தியக்கூறு 50 சதவீதம். கதிரியக்கம் நிகழ்ந்தால் அதை உணர ஒரு உணர்வி (Geiger Counter). கதிரியக்கம் நிகழ்ந்து விட்டால், அந்த உணர்வி இயங்கி ஒரு சுத்தியலால் அந்த விஷக்குடுவையை உடைத்து விடும். எனவே விஷம் பெட்டிக்குள் பரவி பூனை பரலோகம் போய்ச்சேரும்.

- See more at: http://solvanam.com/#sthash.ytM1ImnI.dpuf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 117

ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்?

அட்வகேட் ஹன்ஸா

இரவு வரை வெளி வேலை செய்ய முடியாமல் போதல் என்பது அவளது ’முடியாமல் போதல்’ அல்ல. அதாவது அது அவளது disability அல்ல. குரங்கு மரம் தாவும் அது நம்மால் முடியாது என்பது போன்றது அல்ல. தாவ மரமே இல்லை அதனால் முடியாது என்பது போன்ற சூழல் சார்ந்த ஒன்று. அல்லவா? அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள்? பிள்ளைப் பேற்றுக்கான விடுமுறை எனில் அது அவள் பிள்ளை மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலம்..இதைப்பற்றி ஒவ்வொரு உற்பத்தியாளரும் கவனித்துக் கொண்டிருக்க இயலாது எனில் அரசுதான் கவனிக்க வேண்டும். அந்த அரசும் அதைச் செய்யாத போது..பெண் இந்த முடிவை நோக்கித் தள்ளப் படுகிறாளோ?

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.dpuf

கம்போடிய அங்கோர் வாட்டில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம்

அருணா ஸ்ரீனிவாசன்

1992 ம் வருடம் கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற புராதன கோவிலான அங்கோர் வாட்டில் பழுது பார்த்து சரி செய்யும் பணியை இந்திய தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி ஒரு தினசரி என்னிடம் கேட்டிருந்தது.

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.dpuf

வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

இந்த நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கை உள்ள, தர்மநியாயத்தை கடைபிடிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, படித்த, சமூகத்தில் நல்ல மதிப்புள்ள ஒரு பெண் என்றெல்லாம் தன்னை கூறிக்கொள்ளும் ஒரு போட்டியாளர், சற்றே பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும் எதிராளியான ஒரு ஆணிடம், “என்னை பார்த்தாலே தெரியவில்லையா? கடவுள் மீதும், என் குழந்தைகள் மீதும் சாட்சியாக நான் “பிரி” பந்தைதான் எடுக்கப்போகிறேன். எனவே நீங்களும் “பிரி” பந்தையே தயவு செய்து தேர்ந்தெடுங்கள். நாம் பரிசுத்தொகையை பிரித்தெடுத்துக்கொண்டு…

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.dpuf

மிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.

ஆனந்த்ஜி

நம் முன்னோர்கள் விளைநிலங்களில் மரபணு மாற்றம் செய்து தங்கள் விவசாய நிலங்களிலும் பயிர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து இல்லை. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் இருந்தன. தற்போது உலகம் முழுமையும் சில நூறு வகைகள் இருந்தாலே அதிகம். இந்தியாவில் அரிசி விதைகளுக்காகக் கூடும் சந்தை ஒன்றில், அடுத்த தலைமுறை விதையைத் தராத செடியைக்கூட நீங்கள் பார்க்கலாம்.

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.dpuf

வால்விழுங்கி நாகம்

பிரசன்னா

எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ஆகவே அது கடலாகவோ காடாகவோ இருந்துவிடாமல், மனித குடியிருப்புகளின் மிக அருகில் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். குஜராத்தில் லோத்தல் கிராமத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பெயர் போன இடம், வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் இடம். ஊருக்குள் கோபால் ஒரு வெளிநாட்டு வர்த்தகர் என்று சொல்லிக்கொண்டு நுழைவதாக ஏற்பாடு. அந்தக் காலத்தில் மதிப்பு நிறைந்ததாகக் கருதப்படும் செம்பு, தங்கம் போன்றவற்றைக் கொடுத்தனுப்புகிறார்கள். அதனுடன் ஒரே ஒரு துப்பாக்கி.

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.dpuf

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 118

காளிங்க நர்த்தனம்

நரோபா

kaaliya-2.jpg

மாணிக்கத்திற்கு முப்பதோ முப்பதைந்தோ வயதிருக்கலாம். இந்திரா சவுந்தரராஜன் கதைகளின் வழியாக சித்தர்களின் உலகம் அவனுடைய பதின்ம வயதுகளில் பரிச்சயமானது. அங்கிருந்து கோடு பிடித்தாற்போல் மேலேறி ஜோசியம், சித்த மருத்துவம், யோகம், தியானம், யக்ஷி வசியம், ரசவாதம் என எதையெதையோ எங்கெங்கோ சென்று பயின்று வந்தான். புத்தகங்களைப் படித்து அவனே என்னென்னவோ முயன்றும் பார்த்தான். மண்டையோடுகளை வீட்டுக்குள் கொண்டு வந்தவன் ஏதோ வலிப்பு நோய்க்கு பற்பம் செய்கிறேன் என்று கிளம்பியது வரை ராமலிங்கப் பிள்ளை அவனை பெரிதாகக் கண்டித்ததில்லை

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.6Mxwtnd0.dpuf

பாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ.

பி.எஸ்.நரேந்திரன்

எஸ்.பொ. என்று தமிழிலக்கிய உலகில் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமில்லை. நான் மட்டுமன்ன? ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்? அல்லது அறிந்திருப்பார்கள்? எஸ். பொ. ஏதாவது தமிழ் சினிமாவில் தலை காட்டியிருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.6Mxwtnd0.dpuf

பொருளாதார சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஆக்ஸில்ராட், நீதி, நியாயம் என்றெல்லாம் சமூகம் நமக்கு போதிப்பதை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் பூர்வமாக வாழ்வில் நாம் எப்படி நடந்து கொள்வது லாபகரமானது என்று ஆய்ந்து பார்க்க முடிவெடுத்தார். இந்த ஆய்வுக்காக 1980 வாக்கில் அவர் ஒரு போட்டியை அறிவித்தார்.

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.6Mxwtnd0.dpuf

ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…

எம்.ஏ.சுசீலா

அரசியல்வாதிகள் அப்படி என்றால் நாளிதழ் போன்ற அச்சு ஊடகங்கள் , திரைக்கலைஞர்களின் மறைவுக்கு ஒதுக்கும் மிகுதியான இடத்தைக்கூட ராஜம் கிருஷ்ணனின் மறைவுச்செய்திக்கு ஒதுக்க முன் வரவில்லை என்பது வேதனையளிப்பது. அச்சு ஊடகங்களிலும் இணைய அஞ்சலிகளிலும் வெளியான ஒரு சில கட்டுரைகளிலும் கூடராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் துன்பங்கள் முன்னிறுத்தப்படும் அளவுக்கு அவரது வாழ்நாள் சாதனைகள் அதிகமாக நினைவுகூ̀றப்படுவதில்லை.

- See more at: http://solvanam.com/#sthash.uhcNKuld.6Mxwtnd0.dpuf

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 119

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

வ.ஸ்ரீநிவாசன்

தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.

- See more at: http://solvanam.com/#sthash.ixIkWQxc.dpuf

மதங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றன –சுரண்டலில்

அட்வகேட் ஹன்ஸா

எது மனித சமூகத்திற்கு அதன் நீட்சிக்கு உதவியாக இருந்ததோ அதை தெய்வமாக நினைத்திருக்கலாம். பெண் அங்கே முன்னிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதற்கு ஒரே காரணம் அவளின் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்யும் திறன். அதை ஒட்டியே பெண் தெய்வங்கள் தோன்றி இருக்க வேண்டும். ஆதி தெய்வம் என பெண் போற்றப்பட அதுவே காரணமாக இருந்திருக்க முடியும். இப்படியாகத்தானே பெண் தெய்வமாகி இருக்க முடியும்? பின் எப்போதிருந்து ஆண் உச்ச தெய்வமாகவும் அவன் மனைவியாக தொழுபவளாகப் பெண் தெய்வங்கள் என்றாயிற்று?

- See more at: http://solvanam.com/#sthash.ixIkWQxc.dpuf

சின்னச்சின்ன சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

ஒரு கிராமத்தில் சில நூறு ஆண்கள் வாழ்வதாகக்கொள்வோம். அதில் பலர் தங்கள் முகத்தை தாங்களே சவரம் செய்து கொண்டு விடுகிறார்கள். மற்றவர்கள் சவரம் செய்துகொள்ள அதே கிராமத்தில் வாழும் நாவிதரை நாடுகிறார்கள். கிராமத்தில் இருப்பவர் ஒரே ஒரு ஆண் நாவிதர்தான். அவர் தனக்குத்தானே சவரம் செய்து கொள்கிறார். இப்போது நாவிதரிடம் சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும், தாங்களே சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும் பிரித்தால், நாவிதரை எந்த அணியில் சேர்க்க வேண்டும்?

- See more at: http://solvanam.com/#sthash.ixIkWQxc.dpuf

கெட்ட வார்த்தை பேசுவோம்

கிருஷ்ண பிரபு

“கெட்ட வார்த்தை பேசுவோம்” – தொகுப்பில் “ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, உறுப்புகள் புணரும்போது பொருள்படும் வழக்கிலுள்ள ஒற்றைச் சொல்லின் பெயர்கள்” எனப் பல சொற்களையும் – கூத்துக்கலை முதற்கொண்டு, சங்க இலக்கியத்தில் அச்சொற்களின் பயன்பாடுகள் என்று நுட்பமாக அணுகிச் சமூக யதார்த்தத்தில் அதன் பயன்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த கேள்வியை எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

- See more at: http://solvanam.com/#sthash.ixIkWQxc.dpuf

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ்: 120

குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

அரவிந்தன் நீலகண்டன் - தமிழில்: கிருஷ்

வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன. ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.

- See more at: http://solvanam.com/?issue=120#sthash.OxeJPWiW.dpuf

காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.

பதிப்புக் குழு

எனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ )ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது…

- See more at: http://solvanam.com/?issue=120#sthash.OxeJPWiW.dpuf

இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 1

ரவி நடராஜன்

பலரைப் போல, நானும், இன்றிருக்கும் அணு அளவு சிந்தனை, உயிர் தொழில்நுட்ப துறையில் பல்லாண்டு காலமாக இருந்து வந்ததாக நம்பி வந்தேன். சொல்லப் போனால், உலகின் முதல் பல்துறை விஞ்ஞானம் என்று உயிரியல் தொழில்நுட்பத்தைச் சொல்லலாம். இன்று, நாம் பாட புத்தகங்களில், எளிமையாக சொல்லி தரப்படும் அணு அளவு உயிரியலுக்குப் (microbiology) பின்னால் உள்ள ஆரம்ப கால போராட்டங்களை, அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை.

- See more at: http://solvanam.com/?issue=120#sthash.OxeJPWiW.dpuf

இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்

சுந்தர் வேதாந்தம்

பூமி ஒரு உருண்டையான கோளாக இல்லாமல் ஒரு கன வடிவத்தில் (Cube Shaped) இருந்தால் எப்படி இருக்கும் என்று பலர் கேட்டிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பூமியின் மேல் நடக்கும்போது நாம் தட்டையான ஒரு தளத்தின் இறுதிவரை நடந்து சென்றபின் 90 டிகிரி கோணத்தில் உள்ள அடுத்த பக்கத்திற்கு தாவ முடியுமோ?

- See more at: http://solvanam.com/?issue=120#sthash.OxeJPWiW.dpuf

துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு – ஜாரேட் டயமண்ட் : மிகச் சுருக்கமான அறிமுகம்

ஷைன்சன் அனார்க்கி

அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் நிலவிய இன்கா, அஸ்டெக் பேரரசுகள் பெருநிலப்பரப்பை ஆண்டாலும் பழமையான கருவிகளைக் கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விவசாயப் பழங்குடிகளாகவும், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடித் தன்மை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இந்த தொழில்நுட்ப, அரசியல் வேறுபாடுதான் ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு அடித்தளமிட்டது; இன்றைய சர்வதேச சமத்துவமின்மைக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் இவ்வேறுபாடு எப்படி ஏற்பட்டது?

- See more at: http://solvanam.com/?issue=120#sthash.OxeJPWiW.dpuf

தேநீர் மகாத்மியமும் ஜப்பானியர்களும்

அருணா ஸ்ரீனிவாசன்

காலையில் எழுந்ததும் பில்டர் காபியுடன் செய்தித்தாளில் தலையை மூழ்கி வெளிவந்தால்தான் நம்மவர்களுக்கு அன்றைய பொழுது ஒழுங்காக ஆரம்பித்தது என்று ஆகும். இந்த இரண்டில் எது ஒன்று சரியாக இல்லையென்றாலும் பிரளயமே வந்தாற்போல் இருக்கும். நம் ஊர் பக்கம் இப்படியென்றால் வட இந்தியாவில் காபி இடத்தை தேநீர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது ஒரு முறை ஜப்பானில் தேநீர் போடும் முறைகள், தேநீர் ரகங்கள், மற்றும் அதற்கு உபயோகிக்கப்படும் உபகரணங்கள் என்று ஒரு கண்காட்சியைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த சமயத்தில்தான் சென்னையில் பரவலாக டீ மட்டுமே குடிக்கும் வட இந்திய தகவல் தொழில் நுட்ப இளைஞர்களும் அதிகமானார்கள்.

- See more at: http://solvanam.com/?issue=120#sthash.OxeJPWiW.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.