Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியங்களின் பெறுமதியை கேள்விக்குறியாக்கும் மாதிரிப்படிவமும்; மூன்றாம் தரபுக்களின் தலையீடும்!

Featured Replies

 

Published on September 7, 2014-10:47 am   ·   No Comments

kirupakaran1.jpgஐ.     நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம்இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில்இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சிவிசேடமாகஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காகஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளதுமிக விசித்திரமானது.

 உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுதுஉள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும்சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுக்கிறது.

 இதற்கு ஓர் ஊதாரணத்தை இங்கு தருகிறோம். ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில்புலம் பெயர் தேசங்களில் – பல மாதிரி மனுக்கள்கடிதங்கள் யாவும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இவற்றை லட்சக்கணக்கான புலம் பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் உட்படமாற்று இனத்தவர்களும்அவர்கள் வாழும் நாட்டு அரசுகளுக்கும்ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைத்தனர்இவ் மனுக்களுக்கு இறுதியில் கிடைத்த பதில், “இவை யாவும்ஒரு குழுஓரு அமைப்பினால் தயாரிக்கப்பட்டு விநியோகிகப்பட்டவையே. ஆகையால் இவை சுயேட்சையான கருத்துக்களை கொண்டிருக்கவில்லை”.

 இவ் நிலை, ஐ. நா. விசாரணை குழுவிடம் தமது உண்மையான சாட்சியங்களை அனுப்புவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதை மனதில் கொண்டு>  இவ் பத்திரிகை செய்தியை நாம் வெளியிடுகிறோம்.

 

ஆகையால்> இப்படியான சர்ச்சைக்குரிய மாதிரிப் படிவங்களை கவனத்தில் கொள்ளாதுசாட்சியங்கள் அனுப்பும் ஓவ்வொருவரும் – தமது பெயர்விலாசம்தொலைபேசி இலக்கம் போன்றவற்றுடன், 10 பக்கங்களுக்கு குறைவாகதமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தாம் நேரில் பார்த்த அனுபவித்த உண்மை சம்பவங்களை> தமது சாட்சியத்தில் எழுதி> மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் மூலம் அனுப்புவதே> தனி நபருக்கு மட்டுமல்லாதுதமிழீழ மக்களுக்கு பலன் தரும் செயற்பாடாகும்.

 மின் அஞ்சல்                              :    OISL_submission@ohchr.org

 அஞ்சல் முகவரி      :  OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, 1211 Geneva 10, SWITZERLAND

 ஐ. நா. விசாரணைக்கு அனுப்பும் உங்களது சாட்சியம், 2002ம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதிக்கும், 2011ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி உட்பட்ட காலமாக இருக்க வேண்டும். இக் காலத்திற்கு முந்திய அல்லது பிந்திய காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய சாட்சியங்களை அனுப்புவதால் எந்த பிரயோசனமுமில்லை. உங்கள் சாட்சியத்தை2014 ஓக்டொபர் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

 இவ் சாட்சியங்களுக்கு ஓர் சமாதான நீதவனின் உறுதிப்படுத்தலோ அல்லது சத்திய கடுதாசி போன்று அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவற்றை செய்வதன் மூலம் உங்கள் சாட்சியத்தின் அந்தரங்கத்தை (ரகசியத்தை) நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதேவேளை இப்படியான விதிமுறைகளின் அடிப்படையில்> எந்த சாட்சியத்தையும் ஐ.நா. விசாரணை குழு உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

 உங்கள் சாட்சியங்களுக்கான படங்கள்வீடியோக்கள் போன்று ஏதும் ஆதாரம் இருப்பின்இவற்றை உங்கள் சாட்சியத்துடன் அனுப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள். உங்கள் சாட்சியங்களில் இவை உங்களிடம் உள்ளதாக எழுதினால்அவை தேவைப்பட்டால், ஐ. நா. விசாரணைக் குழு உங்களை தொடர்புகொள்வார்கள்

 எழுத்து மூலமான சாட்சியங்களின் வரவிலக்கணக்கம் என்பது - கீறிமினல் அல்லது விபத்துக்கள் பற்றிய வழக்குகள் விசாரணைகள் என்ற அடிப்படையில், சந்தர்பங்களை பொறுத்து மாறுபடும்.  ஐ.நா. விசாரணைக்களுக்கான சாட்சியத்தை பொறுத்தவரையில், “ஒருவர்ஓர் சம்பவத்தில் நேரில் பார்த்தவராகவோ அல்லது அது பற்றிய ஆதரங்களுடன் அறிந்தவராகவோஇருக்க வேண்டும். இவர்களின் சாட்சியம் என்பது உண்மைகளை அடிப்படையாக கொண்டதாக உள்ள அதேவேளை,அவர்களது அபிப்பிராயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

 இவ் அடிப்படையில் எப்படியாக எல்லா தமிழர்களும் ஐ. நா. விசாரணைக்கு சாட்சியம் கூற  முடியும்இப்படி செய்யுமாறு அழைப்பு விடுவது கபடம் நிறைந்து காணப்படுகிறது!

 மின் அஞ்சல் மூலம் தமது சாட்சியங்களை அனுப்புவது பாதுகாப்பு அற்றது என கருதுபவர்கள்கடிதம் (அஞ்சல்) மூலமாக அனுப்பலாம்.

 இலங்கைதீவிலிருந்து தமது சாட்சியங்களை அனுப்ப விரும்புபவர்கள்தமது சாட்சியங்களை வெளிநாடுகளில் உள்ளதமது உறவினர்கள் அல்லது தமக்கு மிக நம்பிக்கையான நண்பர்களுக்கு அனுப்பிஅவர்கள் மூலம் ஐ.நா. விசாரணை குழுவிற்கு சேர்பிப்பதே பாதுகாப்பானது.

 அல்லற்படும் தமிழீழ மக்களுக்கு நாம் செய்வதற்கு எந்தனையோ சேவைகள் இருக்கும் இவ் வேளையில்எல்லாவற்றிற்கும் கீரை கடை” போடுவதன் மூலம்அவர் அவரது கபட நோக்கங்களை யாவரும் இலகுவாக புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. ஐ.நா விசாரணை பற்றிய விடயத்தில் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும்சில அமைப்புக்கள் தம்மை மூன்றாம் தரப்பினர்களாக காண்பிக்க முயல்வதுசிறிலங்கா அரசு சாட்சியங்கள் யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுப்பதுடன்ஒருவரது உண்மை சாட்சியம் கேள்விக்குறியாக்கப்படும்.

 கடந்த 24 வருடங்களுக்கு மேலாக ஐ.நா. மனித உரிமை அமர்வுகளில் பங்கு பற்றுவதுடன்பல விதப்பட் விடயங்களை> மிக நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பல பிரிவுகளுக்கு சமர்பித்து வந்த தமிழர் மனிதர் உரிமை மையத்தினர் ஆகிய நாம்ஐ. நா. விசாரணைக்களுக்கு சாட்சியங்களை அனுப்புவர்களது பாதுகாகப்பு> நன்மை போன்றவற்றுடன்> தமிழீழ மக்களது நன்மையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு இவ் பத்தரிகை செய்தியை வெளியிடுகிறோம்.

 நன்றி

 ச. வி. கிருபாகரன்

பொதுச் செயலாளர்

தமிழர் மனிதர் உரிமைகள் மையம் - TCHR

பிரான்ஸ்

http://www.thinakkathir.com/?p=59887

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.