Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் எமது நிலைப்பாடு என்னவென்பதை விரைவில் அறிவிப்போம் : கூட்டமைப்பு தெரிவிப்பு

Featured Replies

அடுத்த ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிந்திப்பதாக பிரதான எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாடு என்னவென்பதை வெகு விரைவில் அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.
sri-lanka1.jpg
ஊவா மாகாண சபைத்தேர்தலின் பின்னர் வெகு விரைவில்  ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திட்டம்  அரசாங்கத்திற்கு இருப்பதாக  தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டினை  வினவியபோது பொது வேட்பாளரை களமிறக்கும் திட்டம் தொடர்பில்  ஆராய்வதாக தெரிவித்தனர். 
 
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில்,
 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய  தேசியக் கட்சியின் செயற்பாடுகள்  மும்முரமாக  அமைந்துள்ளது. அரசாங்கத்தின் சர்வாதிகார  ஆட்சி முறைமையினை  வீழ்த்த வேண்டிய தேவையும் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற  வேண்டிய தேவையும் ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகவும்  மூவின  மக்களை  ஒன்றிணைத்த முக்கியமான  கட்சி என்ற வகையில்  ஐக்கிய தேசியக்கட்சிக்கு தீர்மானமிக்க முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
பொது வேட்பாளர் ஒருவரை  நியமித்து சகல  கட்சிகளையும்  ஒன்றிணைத்து  அரசாங்கத்திற்கு  எதிராக பலமானதொரு  சக்தியை  உருவாக்குவதில்  ஐக்கிய தேசிய கட்சி  சிந்திக்கின்றது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியினை பலப்படுத்தி அதற்கமைய எதிர்க்கட்சியினை தயார்ப்படுத்துவதும்  ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏனைய கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பில் எமது செயற்குழுக் கூட்டத்தில் பேசி  தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
 
இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுகையில், 
 
அரசாங்கத்தின் பலம் தற்போது வீழ்ச்சிகண்டு வருகின்றது. ஜனாதிபதி மீதும் இந்த அரசாங்கத்தின் மீதும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது  நிச்சயமாக ஆட்சி மாற்றத்திற்கே வித்திடும். ஆயினும் அரசாங்கத்தை வீழ்த்தி மக்களாட்சியொன்றினை உருவாக்க  வேண்டுமாயின் பலமானதொரு எதிர்த்தரப்பினை உருவாக்க வேண்டும்.
 
கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு  எதிரான  பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பேசப்பட்ட போதும் ஐக்கிய தேசிய கட்சி பொது கொள்கையில் இருந்து  பின்வாங்கிக்கொண்டது.  இப்போது ஜே.வி.பி. தமக்கு  ஏற்ற வகையில்  பலமானதும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து எதிர்த்தரப்பினை உருவாக்க வேண்டும்.
 
மக்கள் விடுதலை முன்னணி  பொது வேட்பாளர் ஒருவரை  நியமிப்பதில் முரணாக செயற்படவில்லை. எனினும் அரசாங்கத்தினை எதிர்த்து போட்டியிடுபவர் ஜனாதிபதி முறைமையினை மாற்றியமைக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் ஜே.வி.பி. தெளிவான நிலையில் உள்ளது. தகுதியான மற்றும்  ஆட்சியினை மாற்றியமைக்கக்கூடிய  ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுமாயின் ஜே.வி.பி. பொது வேட்பாளர் தொடர்பில்  அக்கறை  செலுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் ஜனநாயக கட்சியின் தலைவர்  சரத் பொன்சேகா தெரிவிக்கையில்,
 
இந்த சர்வாதிகார ஆட்சியினையும் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் மோசடி ஆட்சியினையும் மாற்றியமைக்க வேண்டியநிலை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது.  மூவின மக்களும் அரசாங்கத்திற்கு  எதிராகவே  செயற்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி கொள்வதன் மூலம் நாட்டில் நல்லதொரு மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
 
மேலும் இந்த ஆட்சியினை மாற்றி புதியதோர் ஜனநாயக ஆட்சியினை  அமைப்பதற்கு  எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய  தேசிய கட்சி மற்றும் மக்கள்  விடுதலை  முன்னணியுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம். பொது வேட்பாளரை நிறுத்துவது ஆட்சி மாற்றத்திற்கு  சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்  தேசியக்கூட்டமைப்பு எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காது என சிங்கள  ஊடகமொன்றில் செய்தி  வெளியிடப்பட்டிருந்த நிலையில்  அது தொடர்பில்  கூட்டமைப்பினரிடம் வினவிய போது  கூட்டமைப்பு கருத்தினை முழுமையாக மறுத்துள்ளது.
 
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ்  பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் நிச்சயமாக  தீர்மானமெடுக்கும். நாட்டின் ஆட்சியினை  தீர்மானிக்கும் தேர்தலில் தமிழ் மக்களின் பங்கு அவசியமானது. எனவே  இதனை  கருத்திற்கொண்டு  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது என்பது தொடர்பில்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூடி  வெகுவிரைவில் முடிவெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.