Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தம் நடந்த பகுதியை கடற்படை சுவீகரிக்க முயற்சி

Featured Replies

5400_content_mullivaaikkala%20map%20(2)%

 

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை முழுமையாக உள்ளடக்கி பொதுத் தேவைக் கென அடையாளப்படுத்தி கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை மேற்படி பகுதியை அளவீடு செய்ய மாவட்ட நில அளவைத் திணைக்களம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் நில உரிமையாளர்கள் குறித்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கப்போவதாகவும் கூறினார்.

 

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்றிருந்தது. யுத்தம் நடைபெற்ற பகுதியை முழுமையாக உள்ளடக்கி ஏ-32 வீதிக்கு வலது பக்கமாகவுள்ள 617 ஏக்கர் மற்றும் 3றூட் 34பேர்ச் அளவுள்ள பொதுமக்களின் நிலத்தை பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்போவதாக கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி பிரிவு 2 பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. இப்பிரசுரத்தில் நிலம் சுவீகரிக்கப்படுவதற்குக் காரணம் பொதுத் தேவை எனவும் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்கெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் நிலத்தின் உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் குறித்த பிரசுரம் ஒட்டப்பட்டதன் பின்னர் நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை,கரைதுறைப்பற்று பிரதேச செயலருக்கும் கடற்படையினருக்கும் நேரடியாக காண்பித்து தங்களுடைய நிலத்தை விடுவிக்குமாறு கோரியபோதும் அது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மேற்படி 617 ஏக்கர் நிலத்தையும் இன்று செவ்வாய்க்கிழமை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யவுள்ளதாக நில அளவைத்திணைக்களம் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.  

 

இது தொடர்பாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பகுதியில் 90 வீதமானவை பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம். மேலும் இந்த 617 ஏக்கர் நிலமும் சுமார் 40 தொடக்கம் 45 குடும்பங்களுக்குச் சொந்தமானவை. அதற்கான ஆவணங்களையும் மக்கள் வைத்திருக்கின்றார்கள். ஆனால் பிரிவு 2 பிரசுரத்தில் நிலத்தின் உரிமையாளர்களை அடையாளம் காணமுடியவில்லை என கூறியிருக்கின்றார்கள். விடயம் தொடர்பாக நான் வடக்கு மாகாண சபையிலும் பேசியிருக்கின்றேன். முதலமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கின்றேன்.

 

மேலும் கடற்படையினர் உயர்மட்டத்தினருடனும் பேசியிருக்கின்றேன். ஆனால் முடிவு காணப்படவில்லை.  இன்று செவ்வாய்க்கிழமை குறித்த 617 ஏக்கர் நிலத்தையும் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யப்போவதாக மாவட்ட நில அளவைத் திணைக்களம் நில உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் அவ்வாறு அவர்களை சுலபமாக அளவீடு செய்வதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை. எங்களுடைய நிலத்திற்கு ஆவணங்கள் இருக்கின்றன. உரிமையாளர்கள் நாங்கள் இருக்கின்றோம். ஆனால் உரிமையாளர்களை இனங்காண முடியவில்லை. பொதுத்தேவை என மிக கபடத்தனமான வார்த்தைகளைப் பாவித்து எங்களுடைய காணிகளை அபகரிப்பதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.

 

எனவே  இன்று காலை 9 மணிக்கு நில அளவையாளர்கள் எங்கள் நிலத்தை அளவீடு செய்யப்போவதாக கூறியிருக்கின்றார்கள். எனவே நில உரிமையாளர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் சென்று குறித்த நில அளவீட்டு நடவடிக்கையினை கடுமையாக எதிர்ப்போம். இதில் எமக்கு என்ன நடந்தாலும் அது குறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

 

 இதேவேளை மேற்படி பகுதியில் யுத்தம் நடைபெற்ற  பல யுத்தக்குற்றங்கள், மற்றும் மனிதத்துவத்திற்கு மாறான குற்றங்கள் நடைபெற்றதாக  பகுதியில் சர்வதேச நாடுகள், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலைலேயே குறிப்பாக இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியை முழுமையாக சுவீகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.  

 

 

http://thinakkural.lk/article.php?local/zqxcrteymh86535c16b0d099227064ftlffd16c49462fb3c951b3ebfnumqt#sthash.UtYxHN6X.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.