Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீட்டுக்கொடுக்க முடியாத நிலம், தரிசாகிக் கொண்டிருக்கும் வலிவடக்கு மக்களின் வாழ்வு

Featured Replies

Valli%20North1_CI.JPG

ஜுன் 15 ம் திகதியுடன் வலிவடக்கு மக்களின் பூர்வீக மண்ணுடனான தொப்புள் கொடி அறுக்கப்பட்டு 24 வருடங்கள் கழிந்து விட்டன. இன்றுவரை அவர்கள் நிலமற்ற ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீதில் யாரும் அக்கறை கொண்டு செயற்பாட்டுருவாக்கம் செய்வதாகத் தெரியவில்லை.

ஒரு நிரந்தர மண்ணில் நிலையாக வாழ்ந்த பூர்வீகக் குடியானது அந்த நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது அவர்களுடைய பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, மன ஆத்மார்த்தம், கனவு, எதிர்பார்ப்பு இப்படிப் பல்வேறு முக்கிய அம்சங்களும் பிரித்தெறியப்படுகின்றது. அவர்கள் வேறு எங்கு எவ்வளவு ஆடம்பரமாக வாழ நேர்ந்தாலும்கூட வெறும் நடைபிணங்களாகவே தம்மை உணர்கின்றார்கள். இன்னும் நிலமற்று, வாழ வழியற்று அன்றாடக் கூலிகளாக தமது வாழ்க்கையை இயக்கிக் கொண்டிருப்பவர்களின் நிலமையினை விளக்கவே தேவையில்லை.
 
சரி இந்தப்பூர்வீக நிலம் இன்றுவரை விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதனை நில அபகரிப்பாளர்கள் தெளிவாக இன்னும் குறிப்பிடவில்லை. ஆனால் வலிகாமத்தின் ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டும்கூட பலாலி, மயிலிட்டியில் ஒரு பகுதி, ஊறணி,காங்கேசந்துறை போன்ற வடக்குப் பிரதேசங்களும் வளலாய், தேனார்வெளி போன்ற பகுதிகளும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படாமல் இருக்கின்றது என்பதற்கான காரணங்களை இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால நில ஆக்கிரமிப்புச் செயற்றிட்டங்களுடன் சேர்ந்து யோசித்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
 
ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதிகளிலிருந்தே இலங்கை அரசாங்கமானது மிகவும் கவனத்துடன் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாட்டினை செய்துவருகின்றது. இதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.
 
1. தமிழர்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியமர்த்துவதன் மூலம் சிங்களப்பிரதிநிதியொருவரை தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொள்ளுதல். இது காலப்போக்கில் தமிழர்களின் சனத்தொகையைவிட சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிக்கும் போது. பெரும்பான்மை அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் எதிர்காலத் திட்டமிடலையும் கருத்தில் கொண்டதாக  அமையும்.
 
2. தமிழர்கள் வாழுகின்ற பூர்வீக நிலங்களின் விவசாய மற்றும் கடல்வளச் செழிப்பின் காரணமாக அந்த செழிப்பான வளத்தினை காய்ந்து வரண்டு போன பகுதியில் வாழ நேரும் சிங்களப்பகுதி மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களது ஜீவனோபாயத்தினை பெருக்கி கொள்ள முடியும்.
 
இந்த இரண்டு அடிப்படை அம்சங்களும் இன்றுவரையான குடியேற்ற எண்ணப்பாடுகளுடன் காணப்படுவதாக துணிந்து குறிப்பிட முடியும்.
 
சேனநாயக்கா 1930 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் தன்னையொரு பராக்கிரமபாகுவின் வழித்தோன்றலாக கற்பிதம் செய்து கொண்டு விவசாய நிலங்கள் தொடர்பான வள அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி என்பவற்றினை மேற்கொண்ட காலங்களில் வளமானபகுதி எங்கும் சிங்கள மக்களையே குடியிருந்த முனைந்தார் என்பது கடந்த கால வரலாற்றுப் பாடத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
 
இந் நிலமை மேலும் முற்றிப்போக தமிழர்களின் பாரம்பரியத் தாயக நிலங்களில் பலவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை நிலை நிறுத்தும் செயற்றிட்டம் துரிதமாகவும் பெரிய அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதனை நாம் கண்கூடாக அவதானிக்கவும் முடிகிறது. திருகோணமலை மாவட்டத்தில், அல்லை-கந்தளாய், யான் ஓயா குடியேற்றத்திட்டங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுருஓயா , முல்லைதீவு மாவட்டத்தில் வெளி ஓயா போன்ற பல திட்டங்கள் இதற்குரிய எடுத்துக் காட்டுக்களாகக் கொள்ள முடியும்.
 
அதே நேரம் தமிழர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டும் தமிழர்கள் கொல்லப்பட்டும் அவர்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டும் அப்பகுதியை சிங்களவர்கள் தமக்குரிய வாழ்விடப்பூமியாக மாற்றிக் கொண்டனர். புல்மோட்டைக்கு அருகேயுள்ள தென்னைமரவாடிக் கிராமத்தை தாக்கி 163 வீடுகளையும், 07 கடைகளையும் எரித்து 147 குடும்பங்களைச் சார்ந்த 749 தமிழர்களை இடம் பெயரச் செய்து கிராமத்தைத் தமதாக்கிக் கொண்டனர். அதேபோல வெலியோயா என 1988 ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட மணலாறு மாவட்டத்தில் டொலர் பாம், கென்ற் பாம் உட்பட 12 பண்ணைகளினை தமதாக்கிக் கொள்ளும் நோக்குடன் சிங்கள அரசு 48 மணிநேரத்திற்குள் அங்கிருந்த 42 கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை வெளியேற்றி சிங்கள மக்களிளைக் குடியேற்றியிருந்தார்கள் இவ்வாறு வலுக்கட்டாயமாகச் சுவீகரிக்கப்பட்ட காணிகள், வாழ்விடங்கள் எப்போதும் மீள அதற்குரிய சொந்த மக்களிடம் கையளிக்கப்படவில்லை. என்பது இங்கு கவனத்தில்  கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.
 
இந்நிலமைதான் இன்றுவரையில் காணப்படுகின்றது.
 
இவை எவற்றினை எடுத்துக் காட்டுகின்றது என்றால் சிங்கள அரசியல் அதிகாரவர்க்கத்தினரால் நம்பப்படும்.“இது புத்தனின் தேசம்” என்ற தீவிர நம்பிக்கை முக்கியமானது. “எல்லாம் சிங்கள தேசம் அங்கு சிங்கள மக்கள் வாழ்வதற்கும் வாழ்விடத்தை தமதாக்கிக் கொள்வதற்கும் யாரையும் கேட்கத் தேவையில்லை” என்ற மனப்பாங்கு தீவிரத் தன்மையுடன் செயற்படுவதாக நம்ப முடிகிறது. இதன் இன்னொரு வடிவமாகவே நாவற்குழிப்பகுதியில் சிங்களக் குடியேற்றத் திட்டம், வலிகாமம் அரசின் சுவீகரிப்புத் திட்டம் என்பவற்றையும் குறிப்பிடமுடியும்.
 
உண்மையில் சிங்கள ஆதிக்கவாதிகள் வளமற்ற பகுதிகளினை எப்போதும் தீண்டிப் பார்ப்பவர்கள் அல்லர்வலிகாமத்தின் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டதானது அவர்களுக்கு அங்கு பெறுவதற்கு அதிகம் எதுவும் இல்லை என்பதும் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கும் பகுதியில் பெறுவதற்கு அதிகம் உண்டு என்பதனையும் எடுத்துக் காட்டுகின்றது.
 
மயிலிட்டி, காங்கேசந்துறை, ஊறனி, பலாலி போன்ற கரையோரப்பிரதேசங்கள் கடல் தொழிலில் ஒரு காலம் கோலோச்சிக் கொண்டிருந்த பகுதிகளாகும். கடல் வளம் அங்கு நிறையவே உள்ளது. அதே போல பலாலியின் கிழக்குப் பகுதி மிகவும் முக்கியமான விவசாய நிலமாக தேனார்வெளிவரை நீண்டு கிடக்கிறது. ஒரு காலத்தில் பலாலி மரக்கறி என்றால் அதற்கு ஒரு மவுசு உண்டு. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் உண்மையில் செழிப்புள்ள வளமான வாழ்க்ககையையே வாழ்ந்தும் வந்திருந்தார்கள். ஒரு காலத்தில் பலாலிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழிலுக்கு கஸ்டப்பட்டார்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த அளவில் அங்கு தொழில் விஞ்சிப்போய்க்  கிடந்தது. இத்தகைய வளமான பகுதிகள் இப்போது இராணுவத்தின் வசமாகவுள்ளது. இது தொடர்ந்தும் அவர்கள் வசமாகவே இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது.  அரசு முன்னைய தமது குடியேற்ற நடவடிக்கைகளுக்கு  அமைவாக வளமான பகுதியில்வாழத் தகுதியானவர்களும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களும் என நம்பும் சிங்கள மக்களிடம் கையளிக்கப்படவும் கூடும். இதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்பதும், மீறி யாருமே எதுவும் செய்துவிடவும் முடியாது என்பதும் கடந்த காலக் குடியேற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் அவர்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
 
கடந்த கால கட்டாயக் குடியேற்றங்களுக்கான எதிர்ப்புக்குரல்கள் அதிகம் எழாமல் இருந்ததும் எழுந்த குரல்களும் இலகுவாக அடக்கிவிடக்கூடிய பலமற்ற தமிழ் அரசியல்வாதிகளின் குரல்கள்என்பதனையும் அவர்கள் நன்றாகவே தெரிந்தும் வைத்திருக்கிறார்கள். அது அவர்களின் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்திச் செல்வதற்கு ஏதுவானதாகவும் இருந்தது.
 
இந்த நிலமை தொடர்ந்தும் காணப்பட்டால் யாழ்ப்பாணத்தின் வளமான பெரும்பகுதியினை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு வரண்ட பகுதிகளில் தமிழர்கள் குடியேற வேண்டிய மிகத்துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படும் அபத்தமும் உண்டு. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாக அண்மையில் வலிகாமப்பகுதி மக்களை காய்ந்து வறண்ட பகுதியான வளலாய்ப்பகுதியில் குடியமர்த்தும் திட்டத்திணை இராணுவம் முன்னெடுத்து வருவதனைக் குறிப்பிடலாம். 
 
மீட்டுக்கொடுக்க முடியாத நிலம், தரிசாகிக் கொண்டிருக்கும் வலிவடக்கு மக்களின் வாழ்வு
 
ஜுன் 15 ம் திகதியுடன் வலிவடக்கு மக்களின் பூர்வீக மண்ணுடனான தொப்புள் கொடி அறுக்கப்பட்டு 24 வருடங்கள் கழிந்து விட்டன. இன்றுவரை அவர்கள் நிலமற்ற ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீதில் யாரும் அக்கறை கொண்டு செயற்பாட்டுருவாக்கம் செய்வதாகத் தெரியவில்லை.
 
ஒரு நிரந்தர மண்ணில் நிலையாக வாழ்ந்த பூர்வீகக் குடியானது அந்த நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது அவர்களுடைய பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, மன ஆத்மார்த்தம், கனவு, எதிர்பார்ப்பு இப்படிப் பல்வேறு முக்கிய அம்சங்களும் பிரித்தெறியப்படுகின்றது. அவர்கள் வேறு எங்கு எவ்வளவு ஆடம்பரமாக வாழ நேர்ந்தாலும்கூட வெறும் நடைபிணங்களாகவே தம்மை உணர்கின்றார்கள். இன்னும் நிலமற்று, வாழ வழியற்று அன்றாடக் கூலிகளாக தமது வாழ்க்கையை இயக்கிக் கொண்டிருப்பவர்களின் நிலமையினை விளக்கவே தேவையில்லை.
 
சரி இந்தப்பூர்வீக நிலம் இன்றுவரை விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதனை நில அபகரிப்பாளர்கள் தெளிவாக இன்னும் குறிப்பிடவில்லை. ஆனால் வலிகாமத்தின் ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டும்கூட பலாலி, மயிலிட்டியில் ஒரு பகுதி, ஊறணி,காங்கேசந்துறை போன்ற வடக்குப் பிரதேசங்களும் வளலாய், தேனார்வெளி போன்ற பகுதிகளும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படாமல் இருக்கின்றது என்பதற்கான காரணங்களை இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால நில ஆக்கிரமிப்புச் செயற்றிட்டங்களுடன் சேர்ந்து யோசித்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
 
ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதிகளிலிருந்தே இலங்கை அரசாங்கமானது மிகவும் கவனத்துடன் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாட்டினை செய்துவருகின்றது. இதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.
 
1. தமிழர்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியமர்த்துவதன் மூலம் சிங்களப் பிரதிநிதியொருவரை தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொள்ளுதல். இது காலப்போக்கில் தமிழர்களின் சனத்தொகையைவிட சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிக்கும் போது. பெரும்பான்மை அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் எதிர்காலத் திட்டமிடலையும் கருத்தில் கொண்டதாக  அமையும்.
 
2. தமிழர்கள் வாழுகின்ற பூர்வீக நிலங்களின் விவசாய மற்றும் கடல்வளச் செழிப்பின் காரணமாக அந்த செழிப்பான வளத்தினை காய்ந்து வரண்டு போன பகுதியில் வாழ நேரும் சிங்களப்பகுதி மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களது ஜீவனோபாயத்தினை பெருக்கி கொள்ள முடியும்.
 
இந்த இரண்டு அடிப்படை அம்சங்களும் இன்றுவரையான குடியேற்ற எண்ணப்பாடுகளுடன் காணப்படுவதாக துணிந்து குறிப்பிட முடியும்.
 
சேனநாயக்கா 1930 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் தன்னையொரு பராக்கிரமபாகுவின் வழித்தோன்றலாக கற்பிதம் செய்து கொண்டு விவசாய நிலங்கள் தொடர்பான வள அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி என்பவற்றினை மேற்கொண்ட காலங்களில் வளமானபகுதி எங்கும் சிங்கள மக்களையே குடியிருந்த முனைந்தார் என்பது கடந்த கால வரலாற்றுப் பாடத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
 
இந் நிலமை மேலும் முற்றிப்போக தமிழர்களின் பாரம்பரியத் தாயக நிலங்களில் பலவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை நிலை நிறுத்தும் செயற்றிட்டம் துரிதமாகவும் பெரிய அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதனை நாம் கண்கூடாக அவதானிக்கவும் முடிகிறது. திருகோணமலை மாவட்டத்தில், அல்லை-கந்தளாய், யான் ஓயா குடியேற்றத்திட்டங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுருஓயா , முல்லைதீவு மாவட்டத்தில் வெளி ஓயா போன்ற பல திட்டங்கள் இதற்குரிய எடுத்துக் காட்டுக்களாகக் கொள்ள முடியும்.
 
அதே நேரம் தமிழர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டும் தமிழர்கள் கொல்லப்பட்டும் அவர்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டும் அப்பகுதியை சிங்களவர்கள் தமக்குரிய வாழ்விடப்பூமியாக மாற்றிக் கொண்டனர். புல்மோட்டைக்கு அருகேயுள்ள தென்னைமரவாடிக் கிராமத்தை தாக்கி 163 வீடுகளையும், 07 கடைகளையும் எரித்து 147 குடும்பங்களைச் சார்ந்த 749 தமிழர்களை இடம் பெயரச் செய்து கிராமத்தைத் தமதாக்கிக் கொண்டனர். அதேபோல வெலியோயா என 1988 ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட மணலாறு மாவட்டத்தில் டொலர் பாம், கென்ற் பாம் உட்பட 12 பண்ணைகளினை தமதாக்கிக் கொள்ளும் நோக்குடன் சிங்கள அரசு 48 மணிநேரத்திற்குள் அங்கிருந்த 42 கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை வெளியேற்றி சிங்கள மக்களிளைக் குடியேற்றியிருந்தார்கள் இவ்வாறு வலுக்கட்டாயமாகச் சுவீகரிக்கப்பட்ட காணிகள், வாழ்விடங்கள் எப்போதும் மீள அதற்குரிய சொந்த மக்களிடம் கையளிக்கப்படவில்லை. என்பது இங்கு கவனத்தில்  கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.
 
இந்நிலமைதான் இன்றுவரையில் காணப்படுகின்றது.
 
இவை எவற்றினை எடுத்துக் காட்டுகின்றது என்றால் சிங்கள அரசியல் அதிகாரவர்க்கத்தினரால் நம்பப்படும்.“இது புத்தனின் தேசம்” என்ற தீவிர நம்பிக்கை முக்கியமானது. “எல்லாம் சிங்கள தேசம் அங்கு சிங்கள மக்கள் வாழ்வதற்கும் வாழ்விடத்தை தமதாக்கிக் கொள்வதற்கும் யாரையும் கேட்கத் தேவையில்லை” என்ற மனப்பாங்கு தீவிரத் தன்மையுடன் செயற்படுவதாக நம்ப முடிகிறது. இதன் இன்னொரு வடிவமாகவே நாவற்குழிப்பகுதியில் சிங்களக் குடியேற்றத் திட்டம், வலிகாமம் அரசின் சுவீகரிப்புத் திட்டம் என்பவற்றையும் குறிப்பிடமுடியும்.
 
உண்மையில் சிங்கள ஆதிக்கவாதிகள் வளமற்ற பகுதிகளினை எப்போதும் தீண்டிப் பார்ப்பவர்கள் அல்லர்வலிகாமத்தின் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டதானது அவர்களுக்கு அங்கு பெறுவதற்கு அதிகம் எதுவும் இல்லை என்பதும் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கும் பகுதியில் பெறுவதற்கு அதிகம் உண்டு என்பதனையும் எடுத்துக் காட்டுகின்றது.
 
மயிலிட்டி, காங்கேசந்துறை, ஊறனி, பலாலி போன்ற கரையோரப்பிரதேசங்கள் கடல் தொழிலில் ஒரு காலம் கோலோச்சிக் கொண்டிருந்த பகுதிகளாகும். கடல் வளம் அங்கு நிறையவே உள்ளது. அதே போல பலாலியின் கிழக்குப் பகுதி மிகவும் முக்கியமான விவசாய நிலமாக தேனார்வெளிவரை நீண்டு கிடக்கிறது. ஒரு காலத்தில் பலாலி மரக்கறி என்றால் அதற்கு ஒரு மவுசு உண்டு. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் உண்மையில் செழிப்புள்ள வளமான வாழ்க்ககையையே வாழ்ந்தும் வந்திருந்தார்கள். ஒரு காலத்தில் பலாலிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழிலுக்கு கஸ்டப்பட்டார்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த அளவில் அங்கு தொழில் விஞ்சிப்போய்க்  கிடந்தது. இத்தகைய வளமான பகுதிகள் இப்போது இராணுவத்தின் வசமாகவுள்ளது. இது தொடர்ந்தும் அவர்கள் வசமாகவே இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது.  அரசு முன்னைய தமது குடியேற்ற நடவடிக்கைகளுக்கு  அமைவாக வளமான பகுதியில்வாழத் தகுதியானவர்களும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களும் என நம்பும் சிங்கள மக்களிடம் கையளிக்கப்படவும் கூடும். இதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்பதும், மீறி யாருமே எதுவும் செய்துவிடவும் முடியாது என்பதும் கடந்த காலக் குடியேற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் அவர்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
 
கடந்த கால கட்டாயக் குடியேற்றங்களுக்கான எதிர்ப்புக்குரல்கள் அதிகம் எழாமல் இருந்ததும் எழுந்த குரல்களும் இலகுவாக அடக்கிவிடக்கூடிய பலமற்ற தமிழ் அரசியல்வாதிகளின் குரல்கள்என்பதனையும் அவர்கள் நன்றாகவே தெரிந்தும் வைத்திருக்கிறார்கள். அது அவர்களின் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்திச் செல்வதற்கு ஏதுவானதாகவும் இருந்தது.
 
இந்த நிலமை தொடர்ந்தும் காணப்பட்டால் யாழ்ப்பாணத்தின் வளமான பெரும்பகுதியினை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு வரண்ட பகுதிகளில் தமிழர்கள் குடியேற வேண்டிய மிகத்துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படும் அபத்தமும் உண்டு. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாக அண்மையில் வலிகாமப்பகுதி மக்களை காய்ந்து வறண்ட பகுதியான வளலாய்ப்பகுதியில் குடியமர்த்தும் திட்டத்திணை இராணுவம் முன்னெடுத்து வருவதனைக் குறிப்பிடலாம். 
 
இவ்வாறான குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புக்குரல்கள் முன்னைய காலங்கள் போலவே இப்போதும் ஓங்கி ஒலிக்கவில்லை என்பதே வேதனையாகவுள்ளது. இதில் கட்சி பேதங்கள் அற்று தங்களைப் பதவிக்கு கொண்டு சென்ற  தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வுக்கும் அவர்களது பண்பாடு, உரிமை, வாழ்வாதாரம் நம்பிக்கை, ஆத்மார்த்த மன அமைதி அனைத்தும்  பேணப்படுவதற்குமான ஒருமித்த குரலில் பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து எதிர்ப்பினைப் பேரொலியாக  உயர்த்த வேண்டும்,வளமான பகுதிகளில் மீண்டும் பூர்வீகத்தார் ஏர் எடுத்து விவசாயம் பண்ணவும், கப்பல் கட்டி மீன் பிடிக்கவும் வழி செய்து தமது நன்றிக்கடனை அவர்களுக்கு செலுத்த வேண்டும் இல்லையென்றால் வாழக்கதியற்று அபலைகளாகத் திரியும் தமிழ் மக்களின் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க முடியாத தமிழர்களின் பிரதிநிதிகள் இருந்தார்கள் என்று பின்னொரு வரலாறு பழிக்கும் மிகத் துர்ப்பாக்கியமான நிகழ்வு நடந்தேறக் காத்திருக்கின்றது என்பதனை மனதில் கொள்ள வேண்டும். என்பதோடு தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தங்களைச் தாங்களே சொல்லிக்கொள்ள எவருக்கும் உரிமையோ, அருகதையோ இல்லாமல் போய்விடும் என்பதனையும் தெளிவாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும
 
தானா விஷ்ணு:-

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111887/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.