Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனையுடனேயே இ.தொ.கா., மு.கா., வை இணைக்க வேண்டும் : ஹரீன் பெர்னாண்டோ

Featured Replies

நாட்டில் எதிர்காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் இ.தொ.கா., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே. கட்சியுடன் இணைய விரும்பினால் நிபந்தனைகளுடனேயே இணைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்த ஊவா மாகாணசபைக்குத் தெரிவான உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் நான்கு தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டே மயிரிளையில் வெற்றி பெற்றது. ஆனால், ஐ.தே. கட்சி தனித்துப் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
harin2.jpg
 
பிட்டகோட்டேயிலுள்ள சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஊவா மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
 
எனது எம்.பி. பதவியை துறந்து ஊவா மாகாண சபையில் போட்டியிட்டதன் மூலம் எமது கட்சியை ஒன்றுமைப்படுத்த முடிந்துள்ளது மட்டுமன்றி கட்சியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முடிந்துள்ளது.
 
எனவே, இது எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இனி எமது ஒற்றுமையை பாதுகாத்துக் கொண்டு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும்.
 
இதன்போது, ஜே.வி.பி. மற்றும் சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிகளுக்கு எம்மோடு இணைவதற்கான அழைப்பை விடுக்க வேண்டும்.
 
அதேவேளையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் இ.தொ.கா. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எம்மோடு இணைந்து போட்டியிட விரும்பினால் முன்னைய காலங்களை போன்று இணைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டே இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
 
ஐ.தே. கட்சி தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே, கட்சியின் செயற்குழு இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
 
 
ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தனித்து போட்டியிடவில்லை. மலையக பெருந்தோட்ட மக்களோடு தொடர்புபட்ட தொழிற்சங்கங்களான இ.தொ.கா. மலையக மக்கள் முன்னணி, திகாம்பரத்தின் கட்சி,  சரேஷ் வடிவேலின் கட்சி என நான்கு கட்சிகளை இணைத்துக் கொண்டே போட்டியிட்டது.
 
இதன் காரணமாகவே மலையக பெருந்தோட்டங்களில் தமிழர்களின் வாக்குகளுடன் அரசு வெற்றி பெற்றது. இத்தேர்தலில் மலையக பெருந்தோட்டங்களில் எனது பிரசாரம் பெருமளவில் இடம்பெறவில்லை இதுவும் ஒரு காரணமாகும். அவ்வாறானதொரு நிலையில் எனக்கு ஒரு இலட்சத்திற்கு மேல் மக்கள் வாக்களித்தனர்.
 
ஐ.தே. கட்சி தனித்து போட்டியிட்டே இவ்வாறான வாக்குகளை பெற்றதோடு எமது வாக்குகளும் 100க்கு 45 வீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை அரசாங்கத்தின் வாக்குகள் பாரியளவில் குறைந்துள்ளதோடு வீழ்ச்சி கண்டுள்ளது.
 
இன்று நாட்டில் மக்கள் தனி நபரின் வசீகரிக்கும் தோற்றத்தை பார்த்தே வாக்களிக்கின்றனர். ஜனாதிபதிக்கும் இவ்வாறே வாக்குகள் கிடைக்கின்றன.
 
இந்நிலை மாறவேண்டும். நாட்டையும் மக்களையும் உயர்விக்கக் கூடிய அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய வேலைத்திட்டங்களை கொண்டவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.
 
எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினது தலைமைத்துவம் நாட்டுக்கு தேவை. அதேபோன்று சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவம் கிராமத்திற்கு தேவை அந்த மாற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
 
ரணிலுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது. ஆனால், சர்வதேச ஒத்துழைப்பை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அந்த இலக்கு கொள்கை தலைவரிடம் உள்ளது.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்.எமது தலைவர் ரணிலை மக்கள் நிராகரிப்பதாக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
ஊவா மாகாணத்தில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் வாக்குகள் கிடைத்தது. ஆனால் இதன் போது ஐ.தே. கட்சி தலைவராக ரணிலே இருக்கின்றார்.
 
ஐ.தே. கட்சிக்கும் வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அரசின் தர்க்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.