Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கு துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்

Featured Replies

5460_content_c.v.jpg

 

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார். வடபகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த சட்டமா அதிபர் வடக்கு முதல்வருடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நல்லெண்ணச் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

 

இத்தருணத்தில் சிறைச்சாலையில்  நீண்டகாலமாக விசாரணையின்றி வாடும் தமிழரசியல்  கைதிகளின் துன்பநிலை குறித்து வடக்கு முதல்வர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளார். யுத்தத்தில் அதிகளவுக்கு சம்பந்தப்பட்டிருந்தவர்கள் அமைச்சர் பதவி உட்பட உயர் பதவிகளை வகித்துவரும் நிலையில் சிறிய அளவில் சம்பந்தப்பட்டவர்கள்  நீண்டகாலமாக சிறையில் இருப்பதையும் அவர்களின் குடும்பத்தவர்களின் அவல நிலைமையும் வடக்கு முதல்வர் எடுத்துரைத்ததுடன் இந்தப் பிரச்சினைக்கு துரித தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதற்கு தம்மால் முடிந்த அளவுக்கு நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகளுடனான சந்திப்பின்போது அவர்களும் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக வியாழன் காலையில் யாழ்.மாவட்ட நீதிமன்றத்துக்கும் சட்டமா அதிபர் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார். வடமாகாண நீதிபதிகள் ,சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளை அவர் யாழ்.நூலக கேட்போர்கூடத்தில் சந்தித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article.php?local/slrvs6ghsb1912ff7d0f525b9284dmivj3be596a51fb919492c099cpubwe#sthash.Ht72o92M.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.