Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த - மோடி நேற்று சந்திப்பு; 13 ஆவது திருத்தம் குறித்து இருவரும் எதுவும் பேசவே இல்லையாம்!

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நியூயோர்க்கில் நேற்று சந்தித்து உரையாடியுள்ள அதேவேளை இந்த சந்திப்பின்போது 13 திருத்தம் குறித்து ஏதும் பேசப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சந்திப்பின் பின்னர் பி.ரி.ஐ. செய்யதியாளர்களிடம் தெரிவித்தார் என்று கூறப்படுகின்றது.
 
இரு தரப்புக்கும் முக்கியமான பலவிடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமருடனான தமது இந்த இரண்டாவது சந்திப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றதாக சந்திப்பின் பின்னர் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா 13ஆவது திருத்தத்தை துரிதமாக அமுல்படுத்துமாறு அழுத்தம் கொடுத்து வருகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இந்த விடயம் குறித்து இந்த சந்திப்பின் போது ஆராயப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 

மகிந்தவும் மோடியும் அமெரிக்காவில் சந்தித்துப் பேச்சு

ஐநா பொதுச்சபை கூட்டத் தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சினேகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, இருநாட்டு நலன்கள் சார் விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாகவும், இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்தின் இணையதளம் கூறியுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கு இலங்கை அரசாங்கம் செய்துவரும் நிதியுதவிகள் குறித்தும், ஒன்றரை பில்லியன் ரூபா நிதி இதற்காக இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ நரேந்திர மோடியிடம் விளக்கமளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சனை தொடர்பில் பேசிய இருநாட்டுத் தலைவர்களும், இந்தப் பிரச்சனையை மிகக் கவனமாக கையாள்வதற்கு இணங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜெனிவாவிலுள்ள ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு அளித்துவரும் ஆதரவுக்காகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காகவும் மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறியதாகவும் இலங்கை அரசாங்கத்தின் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

'நாம் சேர்ந்திருக்க வேண்டும், அதனால் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்' என்று நரேந்திர மோடி கூறியதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/09/140928_us_mahinda_modi

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.