Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி

Featured Replies

  • தொடங்கியவர்

எடுபடுமா எலானோ மந்திரம்: இன்று சென்னை–புனே மோதல்
நவம்பர் 10, 2014.

 

புனே: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் இன்று சென்னை, புனே அணிகள் மோதுகின்றன. இதில், எலானோவின் மந்திர ஆட்டம் கைகொடுக்கும் பட்சத்தில் சென்னை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.      

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரில், இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், கோல்கட்டா (12 புள்ளி), சென்னை (11), புனே (10) அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.      

 

இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, புனே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி தனது முதல் 6 லீக் போட்டிகளில் 3 வெற்றி, ஒன்றில் தோல்வி (டில்லி) அடைந்தது.      

கடைசியாக களமிறங்கிய கோல்கட்டா, வடகிழக்கு யுனைடெட் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும்  ‘டிரா’ தான் செய்தது. நட்சத்திர வீரர் எலானோ புளூமெர், இதுவரை 8 கோல்கள் அடித்து, சென்னை அணிக்கு கைகொடுக்கிறார்.      

மற்ற வீரர்கள் பெர்னார்டு மெண்டி, மென்தோஜா, இந்தியாவின் ஜீஜே, கவுர்மங்கி, பல்வந்த் சிங் என, பலர் இருந்தாலும், வெற்றிக்கு உதவாதது பின்னடைவு தான்.      

அனுபவ வீரர் மாட்டராசி, உள்ளிட்டோர் தங்கள் கோல் ஏரியாவுக்குள் கவனம் செலுத்தினால், எதிரணி கோல்களை தடுக்க முயற்சிக்கலாம்.  தடை முடிந்த நிலையில், முன்னணி கோல் கீப்பர் ஷில்டன் பால் இன்று களமிறங்குவது சற்று ஆறுதல்.     

 

சொந்தமண் பலம்: ஐ.எஸ்.எல்., தொடரை மந்தமாக துவக்கியது புனே அணி. இத்தொடரில் புனே (7) அணி அடித்த கோல் எண்ணிக்கை சென்னையை (13) விட, குறைவாக இருந்தாலும், கடைசியாக வடகிழக்கு யுனைடெட், கோல்கட்டா அணிகளை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. இத்துடன் சொந்தமண்ணில் களமிறங்குவதும் கூடுதல் உற்சாகம் தான். கொன்சாலஸ், கட்சொரானஸ், டிரஸ்குயட் ஆகியோருடன், இந்தியாவின் ராவணன், மேத்தா உள்ளிட்டோர் அசத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415633829/IndianSuperLeagueFootballChennaiPune.html

 

  • Replies 86
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சென்னை அணி மீண்டும் ‘டிரா’
நவம்பர் 11, 2014.

 

புனே: புனே அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியை 1–1 என்ற கோல்கணக்கில் ‘டிரா’ செய்தது சென்னை. கோல்கட்டா, வடகிழக்கு யுனைடெட் அணிகளுக்கு அடுத்து என, தொடர்ந்து மூன்றாவது போட்டியை சென்னை  ‘டிரா’ செய்துள்ளது.

முதல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் 28வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்த சென்னை (11), புனே (10) அணிகள் மோதின.

சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் 9 வது நிமிடத்தில் குராங் கொடுத்த பந்தை பெற்ற கட்ஸ்சொரானஸ், எவ்வித தவறும் செய்யாமல் கோலாக மாற்ற, 0–1 என, சென்னை அணி பின் தங்கியது.

 

எலானோ ‘வில்லன்’:

இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை அணி ‘ஹீரோவாக‘ இருந்த எலானோ (8 கோல்), நேற்று வில்லனாக மாறினார். எதிரணி வீரர் தவறு காரணமாக, 16வது நிமிடத்தில் சென்னை அணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. இந்த எளிதான வாய்ப்பை கோட்டை விட, சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தொடர்ந்து 21வது நிமிடம் மென்தோஜா அடித்த பந்து, கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது. முதல் பாதியில் கிடைத்த மூன்று வாய்ப்புகளும் வீணாக, சென்னை அணி தொடர்ந்து 0–1 என, பின் தங்கியிருந்தது.

 

மென்தோஜா நம்பிக்கை:

இரண்டாவது பாதியில் 58வது நிமிடத்தில், பல்வந்த் கொடுத்த ‘பாசை’ பெற்ற மென்தோஜா, எவ்வித சிரமும் இன்றி கோல் அடிக்க, ஸ்கோர் 1–1 என, சமன் ஆனது. இது இத்தொடரில் மென்தோஜா அடித்த மூன்றாவது கோல்.

இதன் பின் முன்னிலை பெற வேண்டும் என, இரு அணி வீரர்களும் எடுத்த முயற்சி வீணாக, முடிவில், 1–1 என்ற கோல் கணக்கில் போட்டி ‘டிரா’ ஆனது.

 

‘ஹாட்ரிக்‘ டிரா:

ஐ.எஸ்.எல்., தொடரில் கோல்கட்டா (1–1), வடகிழக்கு யுனைடெட் (2–2) அணிகளுக்கு எதிரான போட்டிகளை ‘டிரா’ செய்த சென்னை அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது ‘டிரா’ செய்தது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415727875/ChennayinFCPuneCityIndianSuperLeaguedraw.html

  • தொடங்கியவர்

வெற்றியைக் கோட்டைவிட்டது சென்னை
 

 

புனேவில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-புனே சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இலானோ கோட்டைவிட்டதால் வெற்றி வாய்ப்பை மட்டுமின்றி முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பையும் இழந்தது சென்னை அணி. அதேநேரத்தில் புனே கோல் கீப்பர் அரிந்தாம் சென்னையின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்து தனது அணியை காப்பாற்றினார்.

விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே கோல் அடித்தது. அந்த அணியின் மிட்பீல்டர் இஸ்ரேல் கூரங் கொடுத்த அற்புதமான கிராஸில் மிக எளிதாக கோலடித்தார் மற்றொரு மிட்பீல்டரான கோஸ்டாஸ் கட்சூரனிஸ்.

 

இதன்பிறகு 16-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை இலானோ வெளியில் அடித்தார். 8 கோல்களுடன் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கும் ப்ரீ கிக் ஸ்பெஷலிஸ்டான இலானோ பெனால்டியை கோலாக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்கள், அவர் அதை கோட்டைவிட்டபோது அதிர்ச்சியடைந்தனர்.

அதேநேரத்தில் சென்னை ஸ்டிரைக்கர் மென்டோஸா தொடர்ந்து கோலடிக்க கடுமையாக போராடினாலும் அவருடைய அனைத்து முயற்சிகளையும் முறியடித்தார் புனே கோல் கீப்பர் அரிந்தாம்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் கோலடித்து புனேவுக்கு பதிலடி கொடுத்தது சென்னை. பல்வந்த் சிங்கும், மென்டோஸாவும் இணைந்து புனே பின்கள வீரர்கள் 3 பேரை வீழ்த்தி பந்தை முன்னோக்கி கொண்டு வந்தனர். கோல் கம்பத்தின் அருகே சென்றபோது பல்வந்த் சிங், மென்டோஸாவிடம் கிராஸ் செய்ய, அவர் அதை கோலாக்கினார். இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article6588100.ece

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா-மும்பை ஆட்டம் டிரா
 

 

கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் இரு அணிகளுமே கோலடிக்காதது அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதேபோல் மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டை உள்ளிட்ட எதையும் நடுவர் பயன்படுத்தாத அளவுக்கு ஆட்டம் அழகாக அமைந்தது.

 

மும்பை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கேரளா 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணியும், கோவா எப்.சி. அணியும் மோதுகின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/article6593912.ece

  • தொடங்கியவர்

அட்லெடிகொ - சென்னை ஆட்டம் டிரா
 

 

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா-சென்னையின் எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. சென்னையில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் (1-1) முடிந்ததால் இரு அணிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டின. ஆனாலும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.

 

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்க கடுமையாகப் போராடியபோதும் கடைசி வரை கோல் விழவில்லை. இதனால் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிய சொந்த மண்ணில் தங்கள் அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றத்தோடு மைதானத் திலிருந்து வெளியேறினர்.

புள்ளிகள் பட்டியில் இரு அணிகளும் தலா 13 புள்ளிகளுடன் இருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் அட்லெடிகோ அணி முதலிடத்தில் உள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/article6602198.ece

 

 

  • தொடங்கியவர்

‘தல’ இல்லாமல் கால்பந்து...
நவம்பர் 16, 2014.

 

தோனி களமிறங்காமல் ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தால் எப்படி இருக்குமோ அதுபோல, இந்திய கேப்டன் சுனில் செத்ரி இல்லாமல், ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடப்பது வித்தியாசமாக உள்ளது.

இந்திய கால்பந்து உலகில் பாய்ச்சங் பூட்டியாவுக்கு அடுத்து மிகவும் பிரபலமானவர் சுனில் செத்ரி. இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்.

இவரது பெங்களூரு கிளப் அணி, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதேபோல, தாக்குதல் வீரர் ராபின் சிங், கோல்கீப்பர் கரன்ஜித் சிங்கும் இத்தொடரில் விளையாட அனுமதி கிடைக்கவில்லை.

 

இதுகுறித்து சுனில் செத்ரி அளித்த பேட்டி:

* ஐ.எஸ்.எல்., தொடர் சிறப்பாக துவங்கியுள்ளதா?

நான் பார்த்த வரையில் ஐ.எஸ்.எல்., தொடர் சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. அனெல்கா, டிரஸ்குயட், டெல் பியரோ என, பிரபல வீரர்கள் வருகை, மைதானம் நிரம்பி வழிவது, ‘மீடியாவும்’ சிறப்பான முறையில் செய்தி வெளியிடுவது நல்ல விஷயம்.

* நீங்கள் விளையாடாதது ஏமாற்றமா? அடுத்த தொடரில் பங்கேற்க முடியுமா?

பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை கடந்த முறை வெளிப்படுத்தி, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றேன். இதனால் பெங்களூரு சாம்பியன் ஆனது. ஆனால், இப்போதுள்ள ஒப்பந்தம் காரணமாக, ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதற்காக வருத்தம் கிடையாது. அதேநேரம், அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பது குறித்தும் எதுவும் யோசிக்கவில்லை.

 

* இந்திய வீரர்களுக்கு சர்வதேச ஜாம்பவான்களுடன் விளையாடும் வாய்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சர்வதேச வீரர்களுடன் பயிற்சி செய்வது, விளையாடுவது, ‘டிரசிங் ரூம்’ பகிர்ந்து கொள்வது என, இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும். இதில் நிறைய கற்றுக் கொள்ளலாம். ‘ஜாம்பவான்’ பயிற்சியாளர்கள், நமது வீரர்களுக்கு ‘கைடாக’ இருப்பது பெரும் பலம்.

* ‘ஐ–லீக்’ தொடரை விட, ஐ.எஸ்.எல்., சிறப்பாக உள்ளதா?

இரு தொடர்கள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. ஏனெனில், ஐ.எஸ்.எல்., இப்போது தான் துவங்கியுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1416127393/SunilChetrisoccer.html

  • தொடங்கியவர்

கேரளா அணிக்கு 3வது வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அபாரம்
நவம்பர் 16, 2014.

 

புதுடில்லி: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து லீக் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1–0 என்ற கோல் கணக்கில் டில்லி டயனமோஸ் அணியை தோற்கடித்து, மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.     

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. டில்லியில் நேற்று நடந்த லீக் போட்டியில், சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, டில்லி டயனமோஸ் அணியை சந்தித்தது.     

பரபரப்பான போட்டியின் முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கேரளா அணிக்கு 61வது நிமிடத்தில் பென் ஆர்ஜி (நைஜீரியா) முதல் கோல் அடித்தார். இதற்கு டில்லி அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.     

ஆட்டநேர முடிவில் கேரளா அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 9 போட்டியில் 3 வெற்றி, 3 ‘டிரா’, 3 தோல்வியை பெற்ற கேரளா அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடத்தில் தலா 13 புள்ளிகளுடன் கோல்கட்டா, சென்னை அணிகள் உள்ளன. நான்காவது தோல்வியை சந்தித்த டில்லி அணி, 7 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 4 ‘டிரா’) கடைசி இடமான 8வது இடத்தில் உள்ளது.     

 

http://sports.dinamalar.com/2014/11/1416160288/IndianSuperLeagueFootballKeralaDelhi.html

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல். கால்பந்து: மும்பை கோவா ஆட்டம் டிரா
 

 

நேற்று, நடந்த ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியில் மும்பை கோவா இடையே நடந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. நேற்று மும்பை சிட்டி எஃப்.சி. அணிக்கும் எஃப்.சி. கோவா அணிக்கும் இடையே நவிமும்பை டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் போட்டி நடந்தது.

ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தாலும் அது பலனளிக்கவில்லை. இறுதியில், கோல் எதுவுமின்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில், கொல்கத்தா நார்த்ஈஸ்ட் அணிகள் மோதுகின்றன.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/article6610662.ece

  • தொடங்கியவர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை
 

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி எப்.சி. அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 16 புள்ளிகளைப் பெற்ற சென்னை அணி அதிக கோலடித்ததன் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது.

உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய சென்னை அணிக்கு 3-வது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோல் கம்பத்தின் அருகில் வரை பந்தை எடுத்துச் சென்ற சென்னை ஸ்டிரைக்கர் மென்டோஸா, கோல் கம்பத்துக்கு மேலே தூக்கியடித்து ஏமாற்றினார்.

வழக்கம்போல் இந்த முறை யும் அசத்தலாக ஆடி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்திய இலானோ, கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 16-வது நிமிடத்தில் வெளியேறியது சென்னை அணிக்கு பின்னடை வானது. அவருடைய ஆட்டத் தைக் காண வந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இதன் பிறகு இலானோ இல்லாத குறையை தீர்க்க மென்டோஸா கடுமையாக போராட வேண்டி யிருந்தது. 35-வது நிமிடத்தில் மென்டி கொடுத்த பாஸை கர்மான்ஜோத் கப்ரா வீணடிக்க, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

 

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கோலடிக்க தீவிரம் காட்டியது சென்னை. 62-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரரான பல்வந்த் சிங்கிடம் பந்து செல்ல, அவர் மென்டோஸாவுக்கு பாஸ் செய்தார். அப்போது புனே கோல் கீப்பர் முன்னோக்கி வர, அவருக்கு மேலாக பந்தை தூக்கியடித்து அசத்தலாக கோலடித்தார் மென்டோஸா. அப்போது மகிழ்ச்சி பெருக்கில் மைதானத்துக்கு வெளியில் வந்த ரசிகர்களை ரெப்ரி உள்ளே செல்லுமாறு அழைத்தபோது அவரையும் கட்டிப்பிடித்து கொண்டாடினார் கேப்டன் போயன் ஜோர்டிச்.

 

இதன்பிறகு சென்னை வீரர் ஜெம்பா ஜெம்பா 70-வது நிமிடத்தில் ‘ஓன்’ கோலடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின. ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே புனேவுக்கு பதிலடி கொடுத்தார் புருனோ. அசத்தலாக அவர் அடித்த கோலால் சென்னை மீண்டும் முன்னிலை பெற்றது. தொடர்ந்து வேகம் காட்டிய சென்னை அணி இஞ்சுரி நேரத்தில் 3-வது கோலை அடித்தது. இந்த கோலை ஜேஜே லால்பெக்குலா அடித்தார். இதன்மூலம் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக டிரா செய்த சென்னை, இந்த ஆட்டத் தில் வெற்றி பெற்றதன் மூலம் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டி யலில் முதலிடத்தைப் பிடித்தது.

 

ரவ்சன் இர்மாட்டோவ்

இந்தப் போட்டியின் பிரதான நடுவராக இருந்த ரவ்சன் இர்மாட்டோவ் இரு உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நடுவராக பணிபுரிந்தவர். உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த வரான இவர், தென் ஆப்பிரிக் காவில் 2010-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் தொடக்க ஆட்டம், காலிறுதி, அரையிறுதி உள்ளிட்ட 5 போட்டிகளிலும், இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதி உள்ளிட்ட 4 ஆட்டங்களிலும் நடுவராக செயல்பட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article6617456.ece

  • தொடங்கியவர்

கால்பந்து: கேரளா அணி வெற்றி
நவம்பர் 21, 2014.

கொச்சி: ஐ.எஸ்.எல்., தொடரின் லீக் போட்டியில் கேரளா அணி 2–1 என கோல்கட்டாவை வீழ்த்தியது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா, கோல்கட்டா அணிகள் மோதின. போட்டியின் 4வது நிமிடத்தில் கேரளா அணியின்  ஹியும்(கனடா) ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து கேரளா அணியின் பெட்ரோ கஸ்மாயோ (42வது நிமிடம்) ஒரு கோல் அடித்து அசத்தினார். இரண்டாவது பாதியில் கோல்கட்டாவின் நட்சத்திர வீரர் பிக்ரு (55) ஒரு கோல் அடித்தார். முடிவில், கேரளா அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/11/1416592128/islindia.html

  • தொடங்கியவர்

சென்னையை சமாளிக்குமா மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் மீண்டும் மோதல்
நவம்பர் 22, 2014.

 

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் இன்று சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில், பலம் வாய்ந்த சென்னை அணியை சமாளித்து, மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.           

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் கோல்கட்டா, புனே, கேரளா, வடகிழக்கு யுனைடெட் உள்ளிட்ட 8 அணிகள் ‘டபுள் ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் விளையாடுகின்றன. மும்பையில் இன்று நடக்கும், தொடரின் 39வது லீக் போட்டியில், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் மும்பை அணி, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், இந்திய அணி கேப்டன் தோனி உரிமையாளர்களாக உள்ள சென்னை அணியை சந்திக்கிறது.           

 

புளூமர் இல்லை: சென்னை அணி, இதுவரை விளையாடிய 9 லீக் போட்டியில் 4 வெற்றி, 4 ‘டிரா’, ஒரு தோல்வி உட்பட 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளை ‘டிரா’ செய்த சென்னை அணி, கடைசியாக புனே அணியை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இத்தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் சென்னையின் எலானோ புளூமெர் (8 கோல்), ஜான் மென்தோஜா (4) முதலிரண்டு இடங்களில் உள்ளனர். புனே அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த இவர்கள் இருவரும் இன்று விளையாடாதது பின்னடைவு. இதேபோல இந்திய வீரர் கவுர்மங்கியும் காயம் காரணமாக இன்று களமிறங்கமாட்டார். காயத்தில் இருந்து மீண்ட அனுபவ வீரர் மாட்டராசி, மைக்கேல் சில்வஸ்டர் அணிக்கு திரும்புவது பலம். பெர்னார்டு மெண்டி, ஜேஜே, பல்வந்த் சிங் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், ஐந்தாவது வெற்றியை பதிவு செய்யலாம்.           

 

பதிலடி வாய்ப்பு: மும்பை அணி, இதுவரை விளையாடிய 9 லீக் போட்டியில் 3 வெற்றி, 3 ‘டிரா’, 3 தோல்வி உட்பட 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மும்பை அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டியிலும் ஒரு கோல் கூட அடிக்காமல் ‘டிரா’ செய்தது. முன்னதாக சென்னையில் நடந்த இத்தொடரின் 15 லீக் போட்டியில், மும்பை அணி 1–5 என சென்னையிடம் தோல்வி அடைந்தது. இத்தோல்விக்கு, சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் பதிலடி கொடுக்க மும்பை அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இது எளிதான காரியமல்ல. பலம் வாய்ந்த சென்னைக்கு எதிராக பிரேசிலின் ஆன்ட்ரி பிரான்சிஸ்கோ மோரிட்ஸ் (3 கோல்), பிரான்சின் நிகோலஸ் அனேல்கா (2), இந்தியாவின் சுபாஷ் சிங் உள்ளிட்டோர் எழுச்சி காண வேண்டும்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416674582/IndianSuperLeagueFootballChennaiMumbaiElona.html

  • தொடங்கியவர்

மும்பைக்கு எதிராக இலானோ உள்ளிட்ட 3 பேர் விளையாட மாட்டார்கள்: சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸி
 

 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியின் மிட்பீல்டர் இலானோ, முன்கள வீரர் மென்டோஸா, மற்றொரு மிட் பீல்டர் கவுரமங்கி ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் என அந்த அணியின் பயிற்சியாளர் மெட்டாரஸி தெரிவித்தார். ஆனால் அவர்கள் எத்தனை போட்டிகளில் விளை யாடமாட்டார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றார்.

 

மும்பையில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணியும், சென்னையின் எப்.சி. அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் மெட்டாரஸி மேலும் கூறியதாவது:

காயமடைந்த 3 பேரும் விளையாடமாட்டார்கள். மற்றபடி கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இந்த ஆட்டத்தில் களமிறங்க தயாராக இருக்கிறார்கள். நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம் அல்லது முன்னேறாமல் போகலாம். ஆனால் நாங்கள் ஓர் அணியாக இருக்கி றோம் என்றார். மும்பை அணி பற்றி பேசிய மெட்டாரஸி, “மும்பை சிறந்த அணி என்பது எங்களுக்குத் தெரியும். நான் ஏற்கெனவே சொன்னது போல ஐஎஸ்எல்லில் மும்பை அணிதான் சிறந்த அணி. ஆனால் நாங்கள் மோசமான அணியல்ல. அதனால் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/மும்பைக்கு-எதிராக-இலானோ-உள்ளிட்ட-3-பேர்-விளையாட-மாட்டார்கள்-சென்னை-பயிற்சியாளர்-மெட்டாரஸி/article6625497.ec

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அபார வெற்றி
 

 

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்காத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது சென்னை.

சென்னை வீரர் ஜேஜே கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்த பந்தை மும்பை வீரர் பீட்டர் கோஸ்டா கோட்டைவிட, அதை சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார் சென்னை மிட்பீல்டர் பெலிசாரி.

 

இதன்பிறகு அபாரமாக ஆடிய சென்னை அணிக்கு 81-வது நிமிடத்தில் 2-வது கோல் கிடைத்தது. இந்த கோலை தனசந்த்ரா அடித்தார். இதைத்தொடர்ந்து 89-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி சென்னையின் மாற்று ஆட்டக்காரரான கிறிஸ்டியான் கோலடிக்க, சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை 19 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதுகின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6629347.ece

  • தொடங்கியவர்

டில்லி அணி வெற்றி

நவம்பர் 24, 2014.கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் டில்லி, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. இதில், 6வது நிமிடத்தில் டில்லி அணியின் சான்டாஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 14வது நிமிடத்தில் முல்டர் ஒரு கோல் அடிக்க, டில்லி அணி 2–0 என முன்னிலை பெற்றது. வடகிழக்கு தரப்பில் முடோங்கா(80வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். இறுதியில் டில்லி அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2014/11/1416844904/DelhiDynamosSoccerNortheastUnitedISL.html

 

  • தொடங்கியவர்

சென்னை அணிக்கு இரட்டை சிக்கல்
நவம்பர் 25, 2014.
 

 

சென்னை: காயம் காரணமாக எலானோ, பிரேசில் திரும்பியதை அடுத்து, சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஐ.எஸ்.எல்., தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (8) உள்ளவர் சென்னை அணியின் எலானோ, 33. புனே அணிக்கு எதிரான போட்டியில் கெண்டைக்கால் காயம் காரணமாக வெளியேறினார்.

இதில் இருந்து மீண்டு வருவதற்காக, எலானோ பிரேசில் சென்று விட்டார். அதேபோல, 4 கோல் அடித்த மற்றொரு சென்னை வீரர் மென்தோஜாவுக்கு, 22, (கொலம்பியா), தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இவருக்குப் பதில் வேறு வீரரை அணியில் சேர்க்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், மென்தோஜா ஐ.எஸ்.எல்., தொடரில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறாத நிலையில், இது பெரும் இழப்பு தான்.

http://sports.dinamalar.com/2014/11/1416931911/ElanohasgonetoBraziltorecuperatechennaiisl.html

 

  • தொடங்கியவர்

சென்னை அணியில் நெஸ்டா
நவம்பர் 26, 2014.

 

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., தொடரில் மீதமுள்ள போட்டிகளில், சென்னை அணிக்காக பங்கேற்கவுள்ளார் இத்தாலி வீரர் அலெக்சாண்ட்ரோ நெஸ்டா.

ஐ.எஸ்.எல்., தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதல் இரு இடங்களில் சென்னையின் எலானோ (8), மென்தோஜா (4) இருந்தனர். இவர்கள் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து, சென்னை அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதில், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால், தொடரில் இருந்து விலகிய, மென்தோஜாவுக்குப், 22, பதில், இத்தாலி முன்னாள் மத்திய பின்கள வீரர் அலெக்சாண்ட்ரோ நெஸ்டா, 38, சேர்க்கப்பட்டார். 2006 உலக கோப்பை வென்ற இத்தாலி அணியில் இடம் பெற்றிருந்த நெஸ்டா, வரும் டிச., 5ல் அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

 

இன்று மோதல்:

இதனிடையே, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் (19 புள்ளி) உள்ள சென்னை அணி (5 வெற்றி, 4 ‘டிரா’, 1 தோல்வி) தனது 11வது லீக் போட்டியில், கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ள வடகிழக்கு யுனைடெட் (2 வெற்றி, தலா 4 ‘டிரா’, தோல்வி) அணியை சந்திக்கிறது.

இதற்கு முன் இரு அணிகள் மோதிய லீக் போட்டி 2–2 என, ‘டிரா’ ஆனது. இம்முறை எலானோ, மென்தோஜா இல்லாத போதிலும் சென்னை அணி, எளிதான வெற்றிக்கு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1417021838/soccerchennai.html

  • தொடங்கியவர்

சென்னைக்கு இரண்டாவது தோல்வி
நவம்பர் 27, 2014.

 

கவுகாத்தி: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் சென்னை அணி, இரண்டாவது தோல்வியை பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், வடகிழக்கு யுனைடெட் அணியிடம் வீழ்ந்தது.     

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், சென்னை அணிகள் மோதின. சொந்த மண்ணில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய வடகிழக்கு யுனைடெட் அணிக்கு 10வது நிமிடத்தில் துர்கா முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய வடகிழக்கு அணியின் மசம்பா, 21, 23வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்தார். இதற்கு சென்னை அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 3–0 என முன்னிலை வகித்திருந்தது.     

 

இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 0–3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.     

இதுவரை விளையாடிய 11 லீக் போட்டிகளில் 5 வெற்றி, 4 ‘டிரா’, 2 தோல்வி உட்பட 19 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் நீடிக்கிறது. மூன்றாவது வெற்றியை பதிவு செய்த வடகிழக்கு யுனைடெட் அணி, 11 போட்டியில் 3 வெற்றி, 4 ‘டிரா’, 4 தோல்வி உட்பட 13 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது.

 

http://sports.dinamalar.com/2014/11/1417107026/IndianSuperLeagueFootballChennaiNortheastUnited.html

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறுமா சென்னை? - கேரளா பிளாஸ்டருடன் இன்று மோதல்
 

 

கொச்சியில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் முதல் அணியாக அரையிறுதியை உறுதி செய்துவிடும்.

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி, இதுவரை 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகள் வரிசையிலும் முதலிடத்தில் உள்ளது.

 

ஆரம்பம் முதலே அபாரமாக ஆடி வந்த சென்னை அணி, முன்னணி வீரர்களான இலானோ, மென்டோஸா உள்ளிட்டோர் காயமடைந்ததால் பின்னடைவை சந்தித்துள்ளது. அதனால் கடந்த ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியிடம் படுதோல்வி கண்டது.

மென்டோஸா இந்த சீசனில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்ட நிலையில், இலானோவும் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப் பில்லை. ஐஎஸ்எல் தொடரில் அதிக கோலடித்திருக்கும் இலானோ, கடைசி லீக் போட்டி வரை விளை யாடமாட்டார் என தெரிகிறது. எனினும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் ஆட்டம் என்பதால் சென்னை வீரர்கள் உற்சாகத் தோடு ஆடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இலானோ, மென்டோஸா இடத்தை நிரப்புவது கடினம் என்பதால் சென்னை அணி கடுமையாகப் போராட வேண்டி யிருக்கும்.

 

கேரள அணி இதுவரை உள்ளூரில் நடைபெற்ற போட்டியில் தோற்றதில்லை என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் கேரள அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறுவதிலும், அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்வதிலும் தீவிரமாக உள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6648547.ece

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணி 5வது ‘டிரா’
நவம்பர் 29, 2014.

 

புனே: புனே, கோல்கட்டா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று புனேயில் நடந்த லீக் போட்டியில், புனே சிட்டி, அத்லெடிகோ டி கோல்கட்டா அணிகள் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கோல்கட்டா வீரர் ஜகுப் பொடானி (செக்குடியரசு) முதல் கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய புனே அணிக்கு ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45 + 1வது நிமிடம்) கோஸ்டாஸ் கட்சவுரானிஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலை வகித்தது.

பின் இரண்டாவது பாதியில் போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என்ற கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

இதுவரை விளையாடிய 11 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 ‘டிரா’, 2 தோல்வி உட்பட 17 புள்ளிகளுடன் கோல்கட்டா அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. புனே அணி, 13 புள்ளிகளுடன் (3 வெற்றி, 4 ‘டிரா’, 4 தோல்வி) 7வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சென்னை அணி (19 புள்ளி) உள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1417282031/islsoccer.html

  • தொடங்கியவர்

அரையிறுதியில் சென்னை அணி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்
நவம்பர் 30, 2014.

 

கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை தோற்கடித்தது.     

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கொச்சியில் நேற்று நடந்த லீக் போட்டியில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், இந்திய கேப்டன் தோனி உரிமையாளர்களாக உள்ள சென்னை அணி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.     

 

பரபரப்பான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்க முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. பின், இரண்டாவது பாதியிலும் ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 86வது நிமிடம் வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இந்நிலையில் 87வது நிமிடத்தில் சென்னை அணியின் புரூனோ பெலிஸ்சாரி முதல் கோல் அடித்தார். இதற்கு கேரளா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.  

   

ஆட்டநேர முடிவில் சென்னை அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 12 லீக் போட்டிகளில் 6 வெற்றி, 4 ‘டிரா’, 2 தோல்வி உட்பட 22 புள்ளிகள் பெற்ற சென்னை அணி, முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஐந்தாவது தோல்வியை பதிவு செய்த கேரளா அணி 15 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 17 புள்ளிகளுடன் கோல்கட்டா அணி நீடிக்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/11/1417367542/IndianSuperLeagueFootballChennaiKerala.html

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து - இந்தியா உலகக்கோப்பைக்கு தகுதிபெறும்: ஹன்ஸ் முல்டர்
 

 

இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் வெற்றியால், கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய அணி இடம்பெற வாய்ப்புள்ளது என்று டெல்லி டைனமோஸ் அணியின் கேப்டன் ஹன்ஸ் முல்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக ஹன்ஸ் முல்டர் கூறியபோது: “எதுவுமே சாத்தியம். இந்திய அணி, கால்பந்து உலகக்கோப்பையில் பங்குபெற அதிகம் வாய்ப்புள்ளது. அடுத்த சில வருடங்களுக்கு இந்தியன் சூப்பர் லீக் போட்டியை நன்றாக நடத்தினால் அது நிச்சயம் இந்திய கால்பந்துக்கு உதவும்.

 

ஆரம்பத்தில், எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால், இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். கடுமையாக உழைத்து சரியான வழியில் செல்கிறார்கள். இவர்கள் 2-3 மாதங்களில் வளர்ச்சி காணும்போது அடுத்த சில வருடங்கள் கழித்து இந்திய கால்பந்தின் வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்’’ என்றார்.

 

அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ள அணிகளில் டெல்லி அணியும் ஒன்று. இதுகுறித்து ஹன்ஸ் முல்டர் கூறும்போது: “ஆரம் பத்தில் டெல்லி அணி மோசமாக ஆடினாலும் பிறகு சிறப்பாக ஆடி வருகிறது. அடுத்த சில ஆட்டங் களில் நன்றாக ஆடினால் டெல்லி அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். டெல்லி அணியில் விளையாடும் இந்திய வீரர் அன்வர் அலி திறமையுடன் விளையாடுகிறார்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article6654468.ece

  • தொடங்கியவர்

புனே அணிக்கு நான்காவது வெற்றி
டிசம்பர் 03, 2014.

 

புனே: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் புனே அணி நான்காவது வெற்றியை பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. புனேயில் நேற்று நடந்த லீக் போட்டியில் புனே சிட்டி, மும்பை சிட்டி அணிகள் மோதின.

பரபரப்பான இப்போட்டியின் முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. பின், இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட புனே அணிக்கு 66, 80வது நிமிடங்களில் டுடு ஒமாக்பெனி இரண்டு கோல் அடித்து கைகொடுத்தார். இதற்கு மும்பை அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் புனே அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முன்னதாக மும்பையில் நடந்த போட்டியில், மும்பையிடம் கண்ட தோல்விக்கு புனே அணி பதிலடி கொடுத்தது.

இதுவரை விளையாடிய 12 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 4 ‘டிரா’, 4 தோல்வியை பெற்ற புனே அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. ஆறாவது தோல்வியை பெற்ற மும்பை அணி, 12 புள்ளிகளுடன் கடைசி இடமான 8வது இடத்தில் உள்ளது. இதனால் மும்பை அணியின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் சென்னை (22 புள்ளி), கோவா (18), கோல்கட்டா (18) அணிகள் உள்ளன.

 

http://sports.dinamalar.com/2014/12/1417622937/IndianSuperLeagueFootballPuneMumbai.html

  • தொடங்கியவர்

சென்னையை சமாளிக்குமா கோவா
டிசம்பர் 04, 2014.

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதுகி்ன்றன.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் கோல்கட்டா, புனே, கேரளா உள்ளிட்ட 8 அணிகள் ‘டபுள் ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் விளையாடுகின்றன. சென்னையில் இன்று நடக்கும் லீக் போட்டியில், ‘பாலிவுட்’ நடிகர் அபிஷேக் பச்சன், இந்திய கேப்டன் தோனி உரிமையாளர்களாக உள்ள சென்னை அணி, இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி இணை உரிமையாளராக உள்ள கோவா அணியை சந்திக்கிறது.

இதுவரை விளையாடிய 12 லீக் போட்டிகளில் 6 வெற்றி, 4 ‘டிரா’, 2 தோல்வி உட்பட 22 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள சென்னை அணி அரையிறுதிக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தது. மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் முதலிடத்தில் நீடிக்கலாம். நட்சத்திர வீரர்களான எலானோ (8 கோல்), மென்தோஜா (4 கோல்) காயம் காரணமாக விலகியது பின்னடைவு. இதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக உள்ள மாட்டராசி, மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவுக்கு எதிராக கடைசி நேரத்தில் கோலடித்து வெற்றிக்கு வித்திட்ட பிரேசில் வீரர் புரூனோ பெலிஸ்சாரி மீண்டும் கைகொடுக்கலாம். இந்தியாவின் ஜேஜீ (2 கோல்), பல்வந்த் சிங் (1 கோல்) ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

 

பதிலடி வாய்ப்பு:

கோவா அணி, இதுவரை விளையாடிய 12 லீக் போட்டிகளில் 5 வெற்றி, 3 ‘டிரா’, 4 தோல்வி உட்பட 18 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இதனால் கோவா அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. தவிர, கடைசியாக விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் கோவா அணி வென்றுள்ளது. முன்னதாக கோவாவில் நடந்த லீக் போட்டியில், கோவா அணி, சென்னையிடம் தோல்வி கண்டது. இதற்கு பதிலடி கொடுக்க கோவா அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பலம் வாய்ந்த சென்னை அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல என்பதால், கடினமாக போராட வேண்டும்.

 

http://sports.dinamalar.com/2014/12/1417712348/soccerchennai.html

 

  • தொடங்கியவர்

சென்னை அணி தோல்வி: அரையிறுதியில் கோவா
டிசம்பர் 05, 2014.

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில், சென்னை அணி மூன்றாவது தோல்வியை பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், கோவா அணியிடம் வீழ்ந்தது. இதன்மூலம் கோவா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், இந்திய கேப்டன் தோனி உரிமையாளர்களாக உள்ள சென்னை அணி, இந்திய வீரர் விராத் கோஹ்லியின் கோவா அணியை சந்தித்தது.

போட்டி துவங்கியதில் இருந்து கோவா வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கோவா வீரர் ரோமியோ பெர்ணான்டஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய கோவா அணிக்கு 41வது நிமிடத்தில் ஆன்ட்ரி சான்டோஸ், ஒரு கோல் அடித்தார். இதற்கு சென்னை அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் சென்னை அணி 0–2 என பின்தங்கி இருந்தது.

 

இரண்டாவது பாதியில் எழுச்சி பெறுவார்கள் என நினைத்த சென்னை வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் கோவா அணியின் மிராஸ்லாவ் ஸ்லெபிக்கா ஒரு கோல் அடித்து, வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+3வது நிமிடம்) சென்னை அணியின் ஜீன் மாரிஸ் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.

ஆட்டநேர முடிவில் கோவா அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 13 லீக் போட்டிகளில் 6 வெற்றி, 3 ‘டிரா’, 4 தோல்வியை பெற்ற கோவா அணி, 21 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. தவிர, முன்னதாக சென்னையிடம் கண்ட தோல்விக்கு கோவா அணி பதிலடி கொடுத்தது. மூன்றாவது தோல்வியை பதிவு செய்த சென்னை அணி, 22 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

 

http://sports.dinamalar.com/2014/12/1417799582/goasoccer.html

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் அரையிறுதியில் கோவா: சென்னை அணியை பந்தாடியது
9acll3.jpg

 

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் அந்த அணி 21 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

சென்னை அணி சொந்த மண்ணில் முதல்முறையாக தோற்றுள்ளது. ஏற்கெனவே அரையிறுதியை உறுதிசெய்துவிட்ட சென்னை அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்திருக்கும். எனினும் சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

 

பெர்னாட் மென்டி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது. 2-வது நிமிடத்தில் சென்னையின் பின்கள வீரர் சுவாரஸும் , மிட்பீல்டர் கொன்ஸாலெஸும் இணைந்து 18 யார்ட் பாக்ஸ் அருகே பந்தைக் கடத்த, அதை வாங்கிய புருனோ பெலிஸாரி இடது காலால் கோல் கம்பத்தை நோக்கியடித்தார். ஆனால் அதை கோவா கோல் கீப்பர் ஜேன் ஸீடா தகர்த்ததால் ஆரம்பத்திலேயே கோல் வாங்குவதில் இருந்து தப்பியது கோவா.

14-வது நிமிடத்தில் கோவா வீரர் ஆன்ட்ரே சான்டோஸை மென்டி தள்ள, அவருக்கு யெல்லோ கார்டு கொடுத்தார் நடுவர். இதையடுத்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொன்ஸாலெஸும் யெல்லோ கார்டால் எச்சரிக்கப்பட்டார். இதன்பிறகு இரு அணிகளும் ஆக்ரோஷம் காட்ட, 18-வது நிமிடத்தில் கோவா வீரர் ஹாரூன் யெல்லா கார்டு வாங்கினார்.

 

23-வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்து ஹாரூன் அடித்த பந்தை சென்னை கோல் கீப்பர் ஷில்டான் பால் தடுக்க முயன்றார். ஆனால் அவர் கையில் பட்ட பந்து பின்னர் கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு வெளியேறியது. அப்போது வலதுபுறத்தில் இருந்து முன்னோக்கி வந்த கோவா மிட்பீல்டர் ரோமியோ கோலடித்தார்.

தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா 41-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. மிரோஸ்லாவ் ஸ்லெபிகா உதவியுடன் இந்த கோலை அடித்தார் ஆன்ட்ரோ சான்டோஸ். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சென்னை அணியின் கோல்வாய்ப்பை கோல் கம்பத்தின் நுனியில் நின்று தகர்த்தார் கோவா முன்கள வீரர் புருனோ பெலிப்.

 

இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் சென்னை அணியில் ஜேயேஸ் ரானேவுக்குப் பதிலாக பல்வந்த் சிங் களம்புகுந்தார். தொடர்ந்து 50-வது நிமிடத்தில் ஜெம்பா ஜெம்பாவுக்கு காயம் ஏற்பட்டதால் போயன் களமிறங்

கினார். 62-வது நிமிடத்தில் கோவா வீரர் நாராயண் தாஸிடம் பந்து செல்ல, அவர் கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அப்போது சென்னை கோல் கீப்பர் அதைத் தடுக்க, அவருடைய கையில் இருந்து நழுவிய பந்து கோவா வீரர் மிரோஸ்லாவிடம் சென்றது. அதை சரியாகப் பயன்படுத்திய அவர் கோவாவின் 3-வது கோலை அடித்தார்.

இதன்பிறகு பல கோல் வாய்ப்புகளை வீணடித்த சென்னை அணி கடைசி நிமிடத்தில் ஒரு கோலடித்து ஆறுதல் தேடிக்கொண்டது. இந்த கோலை மவுரிஸ் அடித்தார். சென்னை பின்கள வீரர்களின் ஆட்டம் படுமோசமாக அமைந்தது. மொத்தத்தில் சென்னை ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article6665930.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.