Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி

Featured Replies

  • தொடங்கியவர்

கால்பந்து: சென்னை அணி டிரா
டிசம்பர் 09, 2014.

 

சென்னை: சென்னை, டில்லி அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 2–2 என ‘டிரா’ ஆனது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை அணி, டில்லியை சந்தித்தது. இதில் டில்லி அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

முதல் பாதியின் 16வது நிமிடத்தில் சென்னை அணியின் புருனோ பெலிசாரி (பிரேசில்) ஒரு கோல் அடித்தார். சில நிமிடத்தில் (28) இந்திய வீரரான ஜீஜீ லால்பெகுலா ஒரு கோல் அடித்து சென்னை அணியை வலுப்படுத்தினார். இப்படி முதல் பாதியில் அசத்திய சென்னை அணி 2–0 என முன்னிலை பெற்றது. இதற்கு மாறாக, இரண்டாவது பாதி முழுவதும் டில்லி அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதன் 53வது நிமிடத்தில் டில்லி அணிக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை சிறப்பாக பயன்படுத்திய டெல் பியரோ (இத்தாலி) கோல் அடித்து அசத்தினார். இத்தொடரில் இவர் அடிக்கும் முதல் கோல் இதுவாகும்.

 

வந்தார் மாட்டராசி:

சென்னை அணி பயிற்சியாளர் மற்றும் நட்சத்திர வீரரான மாட்டராசி (71வது நிமிடம்) மாற்று வீரராக களமிறங்க, ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதன் பின் டில்லி அணி வீரர் மோர்ட்டன் (டென்மார்க்), மாட்டராசியை பலமாக தாக்கியதால் ‘எல்லோ கார்டு’ பெற்றார். இதில் சிறியளவில் காயமடைந்த மாட்டராசி, அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் களத்திற்கு வந்தார். கடைசி கட்டத்தில் (88வது நிமிடம்) டில்லி அணியின் முல்டர் (நெதர்லாந்து) ஒரு கோல் அடிக்க, போட்டி 2–2 என ‘டிரா’ ஆனது.

 

அரையிறுதியில் கேரளா

கொச்சியில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் கேரளா அணி 1–0 என புனே அணியை வீழ்த்தியது. இதன் மூலம், கேரளா அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

http://sports.dinamalar.com/2014/12/1418147319/islsoccer.html

 

  • Replies 86
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கால்பந்து: கோல்கட்டா அணி கலக்கல்
டிசம்பர் 10, 2014.

கோல்கட்டா: கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியை 1–1 என ‘டிரா’ செய்த கோல்கட்டா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கோல்கட்டாவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோவா, கோல்கட்டா அணிகள் மோதின.

 

பிக்ரு அசத்தல்:

முதல் பாதியின் 27வது நிமிடத்தில் கோவா அணியின் எட்கர் மார்சிலோனா (போர்ச்சுகல்) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் கோவா அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் முரட்டு ஆட்டம் ஆடிய கோவா அணியின் (67வது நிமிடம்) புருனோ பின்கியரோ ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால், கோவா அணி 10 வீரர்களுடன் விளையாடியது. அடுத்த நிமிடமே (68) கோல்கட்டா அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில், நட்சத்திர வீரர் பிக்ரு கோல் அடித்து அசத்தினார். கடைசி வரை இரு அணி வீரர்களாலும் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் போட்டி 1–1 என டிரா ஆனது.

அரையிறுதியில் கோல்கட்டா

இதன் மூலம் கோல்கட்டா அணி 19 புள்ளிகள் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே சென்னை, கோவா, கேரளா உள்ளிட்ட மூன்று அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டன.

 

http://sports.dinamalar.com/2014/12/1418230243/Fikrusoccer.html

  • தொடங்கியவர்

இந்தியன் சூப்பர் லீக்: அரையிறுதியில் சென்னை-கேரளா இன்று மோதல்
 

 

கொச்சியில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் (முதல் லெக்) சென்னையின் எப்.சி. அணியும், கேரளா பிளாஸ்டரும் மோதுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் இரு சுற்றுகளாக நடத்தப்படுகின்றன. இரு அணிகளின் சொந்த ஊர் களிலும் தலா ஒவ்வொரு ஆட்டம் நடைபெறும். அதன்படி இப்போது முதல் சுற்று ஆட்டம் கொச்சியில் நடைபெறுகிறது. லீக் சுற்றில் இரு ஆட்டங்களிலும் சென்னையிடம் தோல்வி கண்ட கேரள அணி, இந்த முறை பதிலடி கொடுப்பதில் தீவிரமாக உள்ளது. எனினும் மிட்பீல்டர் இலானோவின் வருகையால் பலம் பெற்றுள்ள சென்னை அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. அதனால் கேரள அணி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

 

காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் விளையாடாத இலானோ, இந்த ஆட்டத்தில் விளையாடவிருப்பது சென்னை வீரர்களுக்கு மிகப்பெரிய நம்பிக் கையை தந்துள்ளது. சென்னை அணி நெஸ்டா, பெர்னாட் மென்டி, மிக்கேல் சில்வர்ஸ்டார் என பலம் வாய்ந்த பின்கள வீரர்களைக் கொண்டுள்ளது.

இலானோ, போயன் ஜோர்டிச், டென்சன் தேவதாஸ், ஹர்மான்ஜோத் கப்ரா ஆகியோர் நடுகளத்திலும், ஜேஜே, பல்வந்த் சிங் ஆகியோர் முன்களத்திலும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இவர்களில் இலானோ, கடந்த சில ஆட்டங்களில் விளையாடாதபோதும், அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் 8 கோல்களுடன் இன்னும் முதலி டத்தில் உள்ளார்.

 

ஜேஜே, பல்வந்த் சிங் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த 5 ஆட்டங்களில் இந்த இருவரில் யாராவது ஒருவர் கோலடித்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேரள அணி எந்த விஷயத்தில் எல்லாம் பலவீனமாக உள்ளதோ, அவையனைத்திலும் சென்னை அணி பலமாக உள்ளது.

கேரள அணிக்கு குருவிந்தர் சிங், ஹெங்பர்ட், ஜிங்கான் ஆகியோர் பின்களத்தில் பலம் சேர்க்கின்றனர். அந்த அணியின் முன்களத்தைப் பொறுத்தவரையில் இயான் ஹியூம் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். இதுவரை 4 கோல் களை அடித்துள்ள அவர், இந்தப் போட்டியிலும் கேரளாவுக்கு பலம் சேர்ப்பார் என்பதில் சந்தேக மில்லை. சென்னை-கேரளா மோதிய லீக் போட்டிக்கு 61 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். அதனால் இன்றைய போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு சிறப்பாக ஆடி வெற்றி பெற கேரளா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6688796.ece

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: சென்னையை பந்தாடியது கேரளா

 

கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் (முதல் லெக்) கேரளா பிளாஸ்டர்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் லீக் சுற்றில் சென்னையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள கேரளா, தனது இறுதிச்சுற்று வாய்ப்பையும் பிரகாசமாக்கிக் கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்கள் சென்னை ஆதிக்கம் செலுத்தியது. அதன்பிறகு ஆட்டம் கேரளா வசமானது. 27-வது நிமிடத்தில் விக்டர் கொடுத்த கிராஸில், கேரள வீரர் ஐஷ்ஃபாக் அஹமது கோலடித்துவிட்டு தனது டி-சர்ட்டை கழற்றி சுற்றினார்.

 

இதையடுத்து அவரை மஞ்சள் அட்டையால் எச்சரித்தார் நடுவர். முதல் கோல் விழுந்தபோது மைதானத்தில் இருந்த சுமார் 61 ஆயிரம் ரசிகர்களும் உற்சாகமாயினர். கேரள அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்குடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரும் மகிழ்ச்சி பெருக்கில் துள்ளிக்குதித்தார். முதல் கோலடிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள்ளாகவே அடுத்த கோலை (29-வது நிமிடம்) அடித்தது கேரளா. இந்த கோலை இயான் ஹியூம் அடித்தார்.

 

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் இலானோவுக்குப் பதிலாக புருனோ களமிறக்கப்பட்டார்.

சென்னை அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடினாலும், கடைசி வரை கோலடிக்க முடியவில்லை. இதனிடையே 90-வது நிமிடத்தில் கேரளத்தின் சுஷாந்த் கோலடிக்க, அந்த அணி 3-0 என அபார வெற்றி பெற்றது. வரும் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதி 2-வது சுற்றில் கேரளாவும், சென்னையும் மோதவுள்ளன. அதில் சென்னை அணி அதிக கோல் வித்தியாசத்தில் வென்றாலொழிய அரையிறுதிக்கு முன்னேற முடியாது. ஒருவேளை இரு அணிகளும் சமநிலை பெற்றால், இறுதிச்சுற்றை தீர்மானிக்க கூடுதல் நேரமும், பெனால்டி ஷூட் அவுட்டும் வழங்கப்படும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/article6690805.ece

  • தொடங்கியவர்

கோல்கட்டா – கோவா ‘டிரா’: ஐ.எஸ்.எல்., அரையிறுதியில் விறுவிறுப்பு
டிசம்பர் 14, 2014.

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில், கோல்கட்டா, கோவா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியின் முதல் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடருக்கான லீக் சுற்றுப் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்தன. முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த சென்னை (23 புள்ளி), கோவா (22), கோல்கட்டா (19), கேரளா (19) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிப் போட்டிகள், உள்ளூர், வெளியூர் என இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் அரையிறுதியில் சென்னை – கேரளா, இரண்டாவது அரையிறுதியில் கோல்கட்டா – கோவா அணிகள் விளையாடுகின்றன.

கோல்கட்டாவில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிக்கான முதல் போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி சக உரிமையாளராக உள்ள கோல்கட்டா அணி, இந்திய வீரர் விராத் கோஹ்லி சக உரிமையாளராக உள்ள கோவா அணியை சந்தித்தது. பரபரப்பான இப்போட்டியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுமின்றி ‘டிரா’ ஆனது.

 

வரும் 17ம் தேதி கோவாவில் நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணி எளிதாக பைனலுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இப்போட்டியும் ‘டிரா’வில் முடியும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்படும். இதிலும் முடிவு கிடைக்காத பட்சத்தில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.

 

http://sports.dinamalar.com/2014/12/1418576788/IndianSuperLeagueFootballSemiFinalGoaKolkata.html

 

  • தொடங்கியவர்

சென்னை அணிக்கு அக்னி பரீட்சை: இன்று கேரளாவுடன் மோதல்
டிசம்பர் 15, 2014.

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து இரண்டாவது கட்ட அரையிறுதியில் இன்று சென்னை அணி, கேரளாவை எதிர்கொள்கிறது. இதில், அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பைனலுக்கு முன்னேற முடியும்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற சென்னை, கோவா, கோல்கட்டா, கேரளா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.            

 

ஒவ்வொரு அரையிறுதியும், உள்ளூர், வெளியூர் என இரண்டு கட்டமாக நடக்கும். முதல் கட்ட அரையிறுதியில் சென்னை அணி, கேரளாவிடம் (0–3) வீழ்ந்தது.

இன்று நடக்கும் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட அரையிறுதியில் சென்னை, கேரளா அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.           

இமாலய வெற்றி: கொச்சியில் நடந்த முதல் கட்ட அரையிறுதியில் நட்சத்திர வீரர் எலானோ களமிறங்கிய போதும் சென்னை அணியால் முழு வேகத்தில் செயல்பட முடியவில்லை. இது கேரளாவுக்கு சாதகமாக அமைந்தது. இன்று சென்னையில் போட்டி நடப்பது ஆறுதலான விஷயம். உலக கோப்பை வென்ற இத்தாலி அணியில் இடம் பெற்ற அலெக்சாண்ட்ரோ நெஸ்டா விளையாட இருப்பது கூடுதல் பலம்.           

பயிற்சியாளர் மாட்டராசி கூறுகையில்,‘‘கால்பந்து போட்டியில் முடியாதது என்று எதுவும் இல்லை. இன்றைய போட்டியின் முதல் பாதி (45 நிமிடம்) எங்களுக்கு மிகவும் முக்கியமானது,’’ என்றார்.           

 

ரசிகர்கள் பலம்: முதல் கட்ட போட்டியில் கொச்சி மைதானத்தில் திரண்டிருந்த 60 ஆயிரம் ரசிகர்கள் ஆதரவு, கேரளாவுக்கு பெரும் பலமாக இருந்தது. இரு நிமிட இடைவெளியில் இரு கோல் அடித்து, 3–0 என, வென்றது. மீண்டும் இப்படி எளிதாக வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம் தான்.            

யாருக்கு வாய்ப்பு: இன்று சென்னை அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேறலாம். மாறாக, கேரளா அணி வென்றால் அல்லது ‘டிரா’ செய்தால் பைனலுக்குள் நுழைந்து விடும்.

 

http://sports.dinamalar.com/2014/12/1418660169/IndianSuperLeagueFootballChennaiKeralaSemiFinalSecondLeg.html

  • தொடங்கியவர்

சென்னை கனவு தகர்ந்தது *பைனலில் கேரளா அணி
டிசம்பர் 16, 2014.

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது சென்னை அணி. பரபரப்பான இரண்டாவது கட்ட அரையிறுதியில் அசத்திய கேரளா பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று சென்னையில் நடந்த இரண்டாவது கட்ட அரையிறுதி சென்னை, கேரளா அணிகள் மீண்டும் மோதின.

 

கொச்சியில் நடந்த முதல்கட்ட அரையிறுதியில் 0–3 என, தோற்றிருந்ததால், பெரியளவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களம் கண்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னை பயிற்சியாளர் மாட்டராசி, நேற்று களமிறங்கினார். போட்டி துவங்கியது முதல் பந்து சென்னை அணி கட்டுப்பாட்டில் இருந்தது.

 

இரண்டு ‘எல்லோ’:

28வது நிமிடத்தில் சென்னை வீரர் மென்டி காலைப் பிடித்து இழுத்துவிட்ட மெக்லைசர், இரண்டாவது முறையாக ‘எல்லோ கார்டு’ பெற்றார். இதனால், உடனடியாக ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற, கேரளா அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

41வது நிமிடம் ‘பிரீ கிக்’கில் மாட்டராசி அடித்த பந்தை சில்வஸ்ட்ரே தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க, சென்னை அணி முதல் பாதியில் 1–0 என, முன்னிலை பெற்றது.

 

‘சேம் சைடு’ கோல்:

இரண்டாவது பாதியில் சென்னை அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை (48வது நிமிடம்) வீணாக்கினார் மாட்டராசி. 76 வது நிமிடம் கேரளாவின் சந்தேஷ் ‘சேம்சைடு’ கோல் அடிக்க, சென்னை அணி 2–0 என, முந்தியது.

கடைசி நிமிடத்தில் (90வது) மென்டி அடித்த பந்தை பெற்ற ஜீஜே, தனது தோள்பட்டையால் அடித்து கோலாக மாற்றினார். முடிவில் சென்னை அணி 3–0 என, வெற்றி பெற்றது.

 

கூடுதல் நேரம்:

இருப்பினும், முதல்கட்ட அரையிறுதியில் கேரளா அணி ஏற்கனவே 3–0 என, வென்றிருந்தது. இரண்டு கட்ட அரையிறுதி போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் 3–3 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. இதனால், பைனலுக்கு செல்லும் அணியை முடிவு செய்ய, போட்டி கூடுதல் நேரத்துக்கு (தலா 15 நிமிடம்) சென்றது.

இதில் இரண்டாவது முறையாக ‘எல்லோ கார்டு’ பெற்ற மாட்டராசிக்கு, அநியாயமாக ‘ரெட் கார்டு’ காட்டப்பட, சென்னை அணியும் 10 வீரர்களுடன் விளையாடியது. கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் கேரள வீரர் பியர்சன் (117வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, சென்னை ரசிகர்களின் கனவு தகர்ந்தது.

முடிவில், 3–1 என, சென்னை வென்ற போதும், இரு அரையிறுதி போட்டியிலும் அடித்த கோல்கள் அடிப்படையில் 4–3 என, முன்னிலை பெற்ற கேரளா அணி, பைனலுக்கு முன்னேறியது.

 

லீக் சுற்றில் தொடர்ந்து அசத்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி, அரையிறுதியுடன் நடையை கட்டியது. 

 

‘வில்லன்’ மாட்டராசி

நேற்று சென்னைக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில், மாட்டராசி முதலில் கோல் அடித்தார். ஆனால், மற்றொரு சென்னை வீரர் மாரிசும் பந்தை அடிக்க ஓடி வந்ததாக கூறி, நடுவர் இதை ஏற்க மறுத்து, மீண்டும் வாய்ப்பு தந்தார். இம்முறை பந்தை கோல் போஸ்ட்டுக்கு இடது புறமாக வெளியே அடித்து வீணடிக்க, சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/12/1418750909/ISLChennailosesecondSemifinalkerala.html

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: இறுதிச்சுற்றில் கொல்கத்தா
 

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி 2-வது சுற்றில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் கோவா அணியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது அட்லெடிகோ டி கொல்கத்தா. வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் கேரளத்தை சந்திக்கிறது கொல்கத்தா.

கோவா மாநிலம் பட்ரோடாவில் நடந்த அரையிறுதி 2-வது சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் மோதின. இதன் பிறகு முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிய, பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ஸ்டிரைக்கர் லூயிஸுக்குப் பதிலாக ஜோப்ரே களமிறக்கப்பட்டார். இஞ்சுரி நேரத்தில் கொல்கத்தாவுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணி வீணடிக்க, ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

 

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கொல்கத்தா வென்றது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article6703840.ece

  • தொடங்கியவர்

எஸ்.எல்., கால்பந்து: பைனலில் கோல்கட்டா, கேரளா மோதல்
டிசம்பர் 19, 2014.

 

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலில் இன்று, சச்சினின் கேரளா, கங்குலியின் கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாதித்து முதல் கோப்பை வெல்லப் போவது யார் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்தின் முதல் தொடர் இந்தியாவில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெற்ற சென்னை, கோவா அணிகள் அரையிறுதியுடன் நடையை கட்டின.

 

இதையடுத்து 3, 4வது இடம் பிடித்த சச்சினின் கேரளா, கங்குலியின் கோல்கட்டா அணிகள், இன்று நடக்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பொதுவாக இந்தியாவில் மேற்கு வங்கம், கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு கேரளா, கோல்கட்டா அணிகள் தகுதி பெற்றது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோல்கட்டா அணி லீக் சுற்றில் துவக்கத்தில் அசத்தினாலும், கடைசியில் 4 வெற்றி 7 ‘டிரா’, 3 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று, மூன்றாவது இடம் தான் பெற்றது.

கோவா அணிக்கு எதிரான இரண்டு கட்ட அரையிறுதியிலும்கோல் அடிக்காத இந்த அணி, ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ (4–2) வெற்றி பெற்றது. இத்தொடரில் மொத்தம் 16 கோல்கள் அடித்துள்ள கோல்கட்டா அணிக்கு பிக்ரு முன்னணி வீரராக திகழ்கிறார்.

இதுவரை 5 கோல் அடித்த இவர், அரையிறுதியில் பங்கேற்கவில்லை எனினும் பைனலில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொன்சாலஸ், கார்சியா, மண்டல், பல்ஜித் சாக்னியும் அசத்த காத்திருக்கின்றனர்.

 

கடைசியில் மிரட்டல்:

கேரளா அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் தட்டுத் தடுமாறியது. இத்தொடரில் மொத்தம் 13 கோல்கள் தான் அடித்தது.

கடைசி கட்ட போட்டிகளில் இயான் ஹியும் (5 கோல்) கைகொடுக்க, 5 வெற்றி, 4 ‘டிரா’, 5 தோல்வியுடன் (19 புள்ளி) ஒரு வழியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இரு கட்டமாக நடந்த அரையிறுதியில், வலிமையான சென்னை அணியை, மொத்தம் 4–3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது.

இன்று ஹியுமுடன் மெக்தாப் ஹொசைன், பியர்சன், கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ், அனுபவ மைக்கேல் சோப்ரா மீண்டும் எழுச்சி காணும் பட்சத்தில், முதல் கோப்பை வென்று சாதிக்கலாம். இவர்களுக்கு நிர்மல் செத்ரி, குர்விந்தர் சிங், சந்தேஷ் என, இந்திய வீரர்களும் கைகொடுப்பர் என நம்பலாம்.

http://sports.dinamalar.com/2014/12/1419009905/keralasoccer.html

 

  • தொடங்கியவர்

ஐ.எஸ்.எல்., கால்பந்து: கோல்கட்டா அணி சாம்பியன்
டிசம்பர் 20, 2014.

 

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை கோல்கட்டா அணி தட்டிச் சென்றது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் கேரளாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் கடந்த 2 மாதங்களுக்கு மேல் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில், சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, கங்குலியின் அத்லெடிகோ டி கோல்கட்டா அணியை சந்தித்தது.

 

ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் கேரளா அணியின் நிர்மல் செத்ரிக்கு ‘மஞ்சள் அட்டை’ வழங்கப்பட்டது. அப்போது கிடைத்த ‘பிரீ –கிக்’ வாய்ப்பை கோல்கட்டாவின் ஜகுப் பொடானி வீணடித்தார். பின், 35வது நிமிடத்தில் கோல்கட்டா வீரர் அர்னலின் கோலடிக்கும் முயற்சியை கேரள அணி கோல் கீப்பர் டேவிட் பெஞ்சமின் ஜேம்ஸ் அருமையாக தடுத்தார். கேரளா அணிக்கு 39வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ–கிக்’ வாய்ப்பை இயான் ஹியும் வீணாக்கினார்.

 

இதனையடுத்து முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய கேரளாவின் ஹியும், பியர்சன், மைக்கேல் சோப்ரா ஆகியோரது கோலடிக்கும் முயற்சிகளை கோல்கட்டா கோல் கீப்பர் இடெல் சாமர்த்தியமாக தடுத்தார். தொடர்ந்து போராடிய கோல்கட்டா அணிக்கு ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+4வது நிமிடம்) ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதில், பொடானி அடித்த பந்தை முகமது ரபிக் தலையால் முட்டி ‘சூப்பராக’ கோலடிக்க, கோல்கட்டாவின் வெற்றி உறுதியானது.

 

ஆட்டநேர முடிவில் கோல்கட்டா அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் முதன்முறையாக கோப்பை வென்ற அணி என்ற பெருமை பெற்றது.

 

நிறைவு விழா

முதலாவது ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான நிறைவு விழா மும்பையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிகள் பைனல் போட்டி துவங்குவதற்கு முன் நடத்தப்பட்டது. இத்தொடரில் பங்கேற்ற எட்டு அணிகளின் ‘லோகோ’ இடம் பெற்ற கொடிகள் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன. ‘டிரம்ஸ்’ கலைஞர்கள் இசையில் மைதானமே அதிர்ந்தது. பின், நடன கலைஞர்கள் கால்பந்தை வைத்து சாகசம் புரிந்தனர். ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கபட்ட ‘மெகா சைஸ்’ கால்பந்து ஒன்று மைதானத்தை சுற்றி வந்தது. பின், பந்து ‘கோல் போஸ்ட்’ அருகே தரையிறங்கியதும், வானவேடிக்கையில் மைதானமே ஔிர்ந்தது. மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த சாம்பியன் கோப்பைக்கு அருகே, ‘பாலிவுட்’ நடிகர் அபிஷேக் பச்சன், சச்சின், கங்குலி உள்ளிட்ட எட்டு அணிகளின் உரிமையாளர்கள், கோல்கட்டா, கேரளா அணி வீரர்கள், போட்டி நடுவர்கள், தொடரின் ஒருங்கிணைப்பாளர் நிடா அம்பானி உள்ளிட்டோர் அணி வகுத்து நின்றனர். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின், இரு அணி வீரர்களும், 8 அணிகளின் உரிமையாளர்கள், நிடா அம்பானியிடம் வாழ்த்து பெற்றனர். இத்துடன் நிறைவு விழா முடிவுக்கு வந்து, போட்டி நடந்தது.

 

ஹர்பஜன் – பயஸ் வருகை

கேரளா, கோல்கட்டா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியை காண, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் வந்தார். கேரளா அணியின் ‘டி–சர்ட்’ அணிந்திருந்த இவர், சச்சின், அஞ்சலி ஆகியோருடன் அமர்ந்து போட்டியை பார்த்தார். இதேபோல கங்குலியுடன், இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், கோல்கட்டா ‘டி–சர்ட்’ அணிந்து போட்டியை ரசித்தார்.

 

எலனோ முதலிடம்:

இம்முறை அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், சென்னை அணியின் எலானோ புளூமர் முதலிடம் பிடித்தார். இவர், 11 போட்டியில் அதிகபட்சமாக 8 கோல் அடித்தார். இதன்மூலம் இவர், ‘கோல்டன் பூட்’ விருதை வென்றார். இவரை அடுத்து மிரோஸ்லவ் ஸ்லெபிக்கா (கோவா), பிக்ரு (கோல்கட்டா), கஸ்டவோ மார்மென்டினி (டில்லி), இயான் ஹியும் (கேரளா) ஆகியோர் தலா 5 கோல் அடித்துள்ளனர்.

 

சென்னை ஆதிக்கம்

இத்தொடரில் மொத்தம் 129 கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் சென்னை அணி முதலிடத்தை கைப்பற்றியது. 16 போட்டியில் 27 கோல் அடித்தது. இதனை தொடர்ந்து கோவா (21 கோல்), கோல்கட்டா (17), டில்லி (16), கேரளா (13), புனே (12), மும்பை (12), வடகிழக்கு யுனைடெட் (11) அணிகள் அதிக கோலடித்தன.

* இதேபோல அதிக கோல் வழங்கிய அணிகளுக்கான பட்டியலிலும் சென்னை அணி முதலிடம் பிடித்தது. மொத்தம் 24 கோல் வழங்கியது. இதனை அடுத்து, மும்பை (21 கோல்), புனே (17), கேரளா (15), டில்லி (14), கோல்கட்டா (13), வடகிழக்கு யுனைடெட் (13), கோவா (12) அணிகள் கோல்கள் வழங்கின.

 

‘ஹாட்ரிக்’ நாயகன்

இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மும்பை அணியின் பிரேசில் வீரர் ஆன்ட்ரி மோரிட்ஸ் படைத்தார். இவர், புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். இப்போட்டியில் மும்பை அணி 5–0 என வென்றது.

 

ஜீஜே முன்னிலை

அதிக கோலடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சென்னை அணியின் ஜீஜே முதலிடம் பிடித்தார். இவர், மொத்தம் 4 கோல் அடித்தார். இவரை அடுத்து கோவா அணியின் ரோமியோ பெர்ணான்டஸ் (3 கோல்), கோல்கட்டாவின் கவின் லோபோ (2), பால்ஜித் சாஹ்னி (2) அதிக கோலடித்தனர்.

 

ரூ. 8 கோடி பரிசு

ஐ.எஸ்.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணிக்கு, வெற்றிக் கோப்பையுடன், ரூ. 8 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பைனல் வரை முன்னேறிய கேரளா அணி ரூ. 4 கோடி பெற்றது. அரையிறுதி வரை வந்த சென்னை, கோவா அணிகளுக்கு தலா ரூ. 1.5 கோடி வழங்கப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/12/1419099306/islsoccercup.html

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: கடைசி நிமிடத்தில் கோலடித்து சாம்பியன் ஆனது கொல்கத்தா
 

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி இஞ்சுரி நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இதன்மூலம் ஐஎஸ்எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையும் அந்த அணிக்கு கிடைத்துள்ளது.

முகமது ரபீக் கோலடித்து வெற்றி தேடித்தந்திருந்தாலும், கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது அதன் கோல் கீப்பர் எபோலா இடெல்தான். அவர், கேரளாவின் 3-க்கும் மேற்பட்ட கோல் முயற்சியை மிக துல்லியமாக தடுத்தார். இல்லையெனில் கேரளா அபார வெற்றி பெற்றிருக்கும்.

 

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் கேரள வீரர் அஹமதுவின் கோல் முயற்சியை கொல்கத்தா கோல் கீப்பர் இடெல் தகர்த்தார். 26-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் முகமது ரபியை கீழே தள்ளியதற்காக கேரள வீரர் நிர்மல் யெல்லோ கார்டு பெற்றார். இதன்பிறகு 35-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் அர்னால் லிபெர்ட்டின் கோல் முயற்சியை அற்புதமாக தடுத்தார் கேரள கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ்.

 

இதைத் தொடர்ந்து 40-வது நிமிடத்தில் கேரளாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் பந்தை உதைத்த கேப்டன் இயான் ஹியூம், கோல் வலையின் இடது பகுதியில் துல்லியமாக பந்தை செலுத்தினார். ஆனால் அதிவேகமாக பாய்ந்த கொல்கத்தா கோல் கீப்பர் இடெல் மிகத்துல்லியமாக முறியடித்து தனது அணியை காப்பாற்றினார்.

இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் மற்றொரு கோல் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டது கேரளா. இதன்பிறகு 83-வது நிமிடத்தில் கேரளத்தின் மற்றொரு கோல் வாய்ப்பை இடெல் முறியடித்த நிலையில், இஞ்சுரி நேரத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் போடி கோல் கம்பத்தை நோக்கி பந்தை கிராஸ் செய்தார். அப்போது கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்த மாற்று ஆட்டக்காரர் முகமது ரபீக் தலையால் முட்டி கோலடிக்க, கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article6712764.ece

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணிக்கு உற்சாக வரவேற்பு
டிசம்பர் 21, 2014.

 

கோல்கட்டா: இந்திய கால்பந்து அரங்கில் புரட்சி ஏற்படுத்திய ஐ.எஸ்.எல்., தொடர் மகத்தான வெற்றி பெற்றது. இதில், முதல் சாம்பியனாக மகுடம் சூடிய கோல்கட்டா அணியினருக்கு, சொந்த ஊரில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்த முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நடந்தது. மும்பையில் நடந்த பைனலில், கங்குலியின் கோல்கட்டா, சச்சினின் கேரளா அணிகள் மோதின. இதில், கடைசி நேரத்தில் அசத்திய முகமது ரபீக் ஒரு கோல் அடிக்க, கோல்கட்டா அணி 1–0 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. இதன்மூலம் ஐ.எஸ்.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமை பெற்றது.  

    2e22lh1.jpg

சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணியினர், நேற்று சொந்த ஊரான கோல்கட்டா திரும்பினர். இவர்களுக்கு, பல்லாயிரக்கணக்கான  ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கோல்கட்டா அணியினர், விமான நிலையத்தில் இருந்து ‘பஸ்’ மூலம் பார்க் சர்க்கஸ் என்ற இடத்தில் உள்ள பிரபல ‘ஷாப்பிங் மாலுக்கு’ அழைத்து வரப்பட்டனர். பஸ்சில் இருந்து கேப்டன் கார்சியா, பயிற்சியாளர் அன்டோனியோ ஹபாஸ் இணைந்து கோப்பையை எடுத்து வந்தனர். இவர்களுக்கு பின், உரிமையாளர்கள், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மாலுக்குள் நுழைந்தனர். பின், வெற்றிக் கோப்பை ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அப்போது ரசிகர்  ஒருவர், ‘‘இந்த ஆண்டு கிரிக்கெட் (ஐ.பி.எல்., கோல்கட்டா நைட்ரைடர்ஸ்) மற்றும் கால்பந்து (ஐ.எஸ்.எல்., அத்லெடிகோ டி கோல்கட்டா)  தொடர்களில் கோல்கட்டா தான் சாம்பியன்,’’ என கூறினார்.  

   

கங்குலி நன்றி: கோல்கட்டா அணி உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறியது: முதலாவது ஐ.எஸ்.எல்., தொடரில் கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி. இத்தொடருக்கான கோல்கட்டா அணியின் பயணம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் துவங்கியது. தற்போது கோல்கட்டா அணி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பெருமையாக உள்ளது.     

 

கோல்கட்டாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இது ஆரம்பம் தான். வரும் காலங்களில் கோல்கட்டா அணி நிறைய கோப்பைகள் கைப்பற்றும் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு கூடுதல் பலத்துடன் கோல்கட்டா அணி களமிறங்கும்.     

இவ்வாறு கங்குலி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419180463/SouraGangulyIndianSuperLeagueFootballKolkataChampion.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.