Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்க கணக்கினை ஒப்புவிக்க வேண்டும் : த.தே.கூட்டமைப்பு கோரிக்கை

Featured Replies

பொது மக்களின் பொக்கிஷங்களை அரச தலைவர் சூறையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.  யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தங்கங்களை கொள்ளையடித்த, சொந்த நோக்கில் செலவு செய்த குற்றச் சாட்டினை ஜனாதிபதிக்கு முன் வைக்கின்றோம் என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்  அமைப்பில் தனக்கிருக்கும் அதிகாரத்தினை தவிர்த்து  விட்டு இந்த குற்றச்சாட்டிற்கு ஜனாதிபதி முகம் கொடுக்க வேண்டும் எனவும் சவால் விடுத்துள்ளது.

tna_11.jpg

அதிகாரத்தினை  பகிர்ந்து ஐக்கியப்படுத்தும்  அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து  பெற்றுக்கொள்ளப்பட்ட தங்கம் தொடர்பில்  பாராளுமன்றத்தில் வினவிப்பட்ட போது அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அதற்கான கணக்கினை தெரிவித்திருந்தார்.  அவை அனைத்தும் மக்களின்  ஆபரணங்கள் ஒவ்வொருவரது பெயர்களும் குறிக்கப்பட்டு பகுதி பகுதியாக வைக்கப்பட்டிருந்த  தங்க ஆபரணங்கள் அவற்றில் சிலவற்றினை ஜனாதிபதி தற்போது மக்களுக்கு கொடுக்கின்ற  நிலையில் ஏனைய  மக்களும் தமது ஆபரணங்கள் தொடர்பில் கேள்வி  எழுப்பியுள்ளனர். அரச வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டது. இத்தனைக்காலமும் அவை எங்கே என்ற கேள்வி இருந்தபோது தற்போது ஐந்தரை ஆண்டுகள் கழிந்து  ஒருசிலரின் ஆபரணங்களை ஜனாதிபதி கொடுத்திருக்கின்றார். இது எப்படி சாத்தியமாகும்  என்பது  மக்களுக்கும் எங்களுக்கும் புரியாத புதிராக உள்ளது. நாங்கள அரசாங்கத்திடம் கேட்கின்றோம். இப்போது நீங்கள் கொடுத்த தங்கம் இத்தனை  நாட்களாக யாருடைய கைகளில் இருந்தது?  எமது மக்களின் தங்கத்தை ஜனாதிபதியின் வீட்டிலேயே  வைத்திருந்தீர்களா? இவ்வளவு காலமும் இந்த தங்கத்தை எவ்வாறு உபயோகித்தீர்கள்? இது மிகவும்  பாரதூரமான தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு பொது மக்களின் பொக்கிஷங்களை வெள்ளையடிப்பதும், சொந்த நோக்கில் உபயோகிப்பதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.  அந்த குற்றச்சாட்டினை ஜனாதிபதிக்கு முன்னாள் வைக்கின்றோம். முடிந்தால் அவர் அரசியல் அமைப்பில்  இருக்கும் தனது பாதுகாப்பினை தவிர்த்து விட்டு இந்த குற்றச்சாட்டிற்கு அவரால் முகம் கொடுக்க முடியுமா என நாம் சவால் விடுக்கின்றோம்.

இது ஒரு சாதாரண விடயம் அல்ல. ஐந்தரை ஆண்டுகளாக ஒருவர்  தங்கப் பொக்கிஷத்தினை  தன்வசம் வைத்துள்ளார் எனின் அது சாதாரண விடயம்   அல்ல. ஏன் இதைத்திருப்பி கொடுக்கவில்லை. இன்றும்  எத்தனை பேரின் தங்கங்களை இவர் வைத்திருக்கின்றார் இதற்கான கணக்கு எங்கே இருக்கின்றது. என பல கேள்விகள் எழுகின்றன. எனவே நாட்டின் ஜனாதிபதியாக அவர்மேல் வழக்கு தொடர முடியாது என்ற காரணமாகவும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு  இருக்கின்ற காரணத்தினாலும் அவர் இக்குற்றத்தில் இருந்து  தப்பித்துக் கொள்ள முடியாது  இவற்றிற்கான கணக்கினை ஒப்புவிக்க வேண்டும். இது ஜனாதிபதியின் நல்ல செயல் அல்ல. இதற்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.  தனது அதிகாரத்தினை பலப்படுத்தாது  எமது கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? என நாம்  சவால் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://virakesari.lk/articles/2014/10/16/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.