Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருடாதே!

Featured Replies

14_2180400f.jpg
 

தமிழ் சினிமாவைப் பற்றி இன்று வெளியாகும் செய்திகளில், படத்தின் தரம், வணிக வெற்றி, திருட்டு டி.வி.டி போன்ற செய்திகளுக்குச் சமமான அளவில் படத்தின் கதை திருடப்பட்டது பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன.

 

முன்பெல்லாம் பாடலின் மெட்டு, கதைக் கரு போன்றவை எந்தப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இப்போது இணையமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிகரான பங்கு வகிக்கும் சமூக வலைதளங்களும் இந்தத் திருட்டுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாகவும் விரைவாகவும் ஆக்கிவிட்டன.

பல வங்காள, மராத்திக் கதைகள் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் படங்களாகியிருக்கின்றன. ஆங்கிலப் படங்களிலிருந்து கதையை எடுப்பது என்பதைப் பலரும் செய்திருக்கிறார்கள். தன் கலை, அரசியல் வாழ்க்கையையே மாற்றியமைத்த படமான ‘நாடோடி மன்னன்’ படத்தின் கதை, அதை எடுப்பதற்கு சுமார் 20 வருடம் முன்னால் தான் கொல்கத்தாவில் பார்த்த கால்மன் நடித்த ‘இஃப் ஐ வேர் கிங்’ படத்தின் கதையிலிருந்து உருவாக்கியதுதான் என்று எம்.ஜி.ஆர். கட்டுரையே எழுதியிருக்கிறார்.

 

 

திருட்டுகளின் புதிய முகம்

 

கடந்த இருபது வருடங்களில்தான் இரண்டு முக்கியமான திருட்டு முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஒன்று அசல் படத்தின் திரைக்கதை, காட்சியமைப்பு, ஷாட் டிவிஷன், லைட்டிங், அவ்வளவு ஏன் விளம்பர போஸ்டர் டிசைன்வரை எல்லாவற்றையும் காப்பியடிக்கும் போக்கு இளம் தலைமுறையால் அறிமுகமாகியிருக்கிறது.

 

இரண்டாவது திருட்டு, வாய்ப்புக்காக முயன்றுகொண்டிருப்பவரிடமிருந்து திருடுவதாகும். முதல் பாணி திருட்டுகள், இணையத்தின், சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பால் உடனுக்குடன் அம்பலமாகிவிடுகின்றன.

 

இரண்டாவது வகைத் திருட்டுதான் நம் உடனடி அக்கறைக்கும் கவலைக்கும் உரியது. இது நடப்பதற்கான சூழல் தமிழ் சினிமாவில் ஏன் இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். முழுப் படத்தின் ஸ்கிரிப்ட்டை முன்கூட்டியே எழுதிவைத்திருந்தால் அதை காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவுசெய்துவைக்க முடியும்.

 

அந்த ஸ்கிரிப்ட்டை ஒரு கார்பரேட் கம்பெனியிடம் கொடுத்தால், அதற்கான ஆதாரத்தை மின்னஞ்சல் வழியாகவே உருவாக்கிக்கொள்ள முடியும். இதெல்லாம் முறையாகச் செய்யாதபோதுதான் முழு ஸ்கிரிப்ட்டைக் கொடுத்ததை நிரூபிக்க முடியாமல் போகிறது.

பல சமயங்களில் கதைத் திருட்டோ சீன் திருட்டோ ஐடியா திருட்டோ நடந்ததா இல்லையா என்பதையே தீர்மானிக்க முடியாத குழப்பமான நிலையே நிலவுகிறது. இதற்குக் காரணம் இந்தப் புகார்கள் உதவி இயக்குநரிடமிருந்தோ, கதை விவாதத்தில் பங்கேற்றவரிடமிருந்தோ திருடப்பட்டதாகச் சொல்லப்படுபவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதெல்லாம் கண்டறியக் கடினமானவை.

 

கதைத் திருட்டின் ஊற்றுக்கண்

இப்படிப்பட்ட புகார்கள் இனியும் தொடருமே ஒழிய, குறையும் வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் தமிழ் திரையுலகில் பின்பற்றப்படும் தவறான அணுகுமுறைகள்தான். இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என்ற இரு பணிகள் இங்கே துல்லியமாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படாமல் இருப்பதே அடிப்படைச் சிக்கலாகும்.

 

இந்த அவலத்தின் ஊற்றுக் கண் டிஸ்கஷன் என்ற வடிவம். தமிழ் சினிமாவில் மட்டுமே இருக்கும் இம்முறை இந்தி சினிமா உலகில் இல்லை. இயக்குநரின் ஒரு வரிக் கதையை டிஸ்கஷனில் விவாதித்து சீன் சொல்லி அதை வளர்த்துச் செழுமைப்படுத்த டிஸ்கஷன் ஸ்பெஷலிஸ்ட்டுகள் பலர் அழைக்கப்படுகிறார்கள்.

 

இவர்களில் பல ரகத்தினர் உள்ளனர். சுவையாகப் பேசவும், பல மின்னல் கீற்று போன்ற பளிச் ஐடியாக்களை சொல்லிவிட்டுப் போகவும் மட்டுமே திறமையுடையவர்கள் ஒரு ரகம். ஒரு நாள் தானும் இயக்குநராவோம் என்ற கனவுடன் நிறைய சீன் ஐடியாக்களை மட்டும் மனதில் உருவாக்கிக்கொண்டே இருப்போர் இன்னொரு ரகம்.

 

இவர்களில் சொந்தமான கற்பனைகளைச் செய்பவர்கள் சிலர். படித்த நாவல், சிறுகதை, பார்த்த உலக சினிமா இதிலிருந்தெல்லாம் ரெஃபரென்ஸ் எடுத்து அதற்குக் கண் காது மூக்கு வைத்து சீன் பண்ணுகிறவர்கள் சிலர்.

 

இப்படியானவர்களெல்லாம் இயக்குநர் நடத்தும் டிஸ்கஷனில் விதவிதமான ஐடியாக்களை உதிர்க்கிறார்கள். அவற்றைத் தனக்குத் தெரிந்த அளவில் தொகுத்து ஒழுங்குபடுத்தி திரைக்கதை வசனம் எழுதிக்கொள்வதே இயக்குநரின் ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணியென்றாகிவிடுகிறது.

 

முழுப் படம் வெளிவரும்போது அதில் எந்த டிஸ்கஷனில் யார் உதிர்த்த எந்த ஐடியா சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்பதைப் பொறுத்து, அவருடைய சந்தை வேல்யூவும் கூடலாம். அல்லது அவர் தன் கதைதான் திருடப்பட்டுவிட்டது என்று கூட நிஜமாகவே நம்பலாம். படத்தின் கிரெடிட் கார்டில் இந்த டிஸ்கஷன் டீமின் பலரின் பெயர்கள் எந்தப் பிரிவிலும் வராது. வரும் சில பெயர்கள் உதவி இயக்குநர் பட்டியலில் இருக்கலாம்.

 

தேவை அங்கீகாரம்

 

ஸ்கிரிப்ட்டைத் தானே எழுதும் திறமையுடைய இயக்குநர்கள் எந்த மொழியிலும், டிஸ்கஷனில் உட்கார்வதே இல்லை. முழு ஸ்க்ரிப்டும் முடிந்த பிறகு அதைப் படத்தின் முக்கியமான டெக்னீஷியன்களுடன் உட்கார்ந்து விவாதிக்கும் டிஸ்கஷன் முறையே இந்தி சினிமாவில் பின்பற்றப்படுகிறது. டிஸ்கஷனில் இருந்துதான் கதையும் திரைக்கதையும் உருவாக வேண்டும் என்ற நிலை தமிழில் மட்டுமே இருக்கிறது.

 

இந்த முறையைக் கைவிட முடியாதென்றால், குறைந்தபட்சம் இந்த டிஸ்கஷன் டீமுக்கு ஒரு முறையான அங்கீகாரம் தேவை. திரைக்கதை இலாகா என்று பட்டியலிடலாம். அதற்குரிய பணத்தை முறையாகக் கொடுக்கலாம். எழுபதுகள்வரையில் இருந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் என்ற பிரிவை மறுபடியும் புதுப்பித்து மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஜெமினி, தேவர் பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் போன்றவை தமக்கெனக் கதை இலாகாவை வைத்திருந்தன. அவற்றில் திரைக்கதை அறிவுடையவர்கள் இருந்தார்கள்.

 

இன்றும் நம்மிடையே வாழும் ஆரூர் தாஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பின்னர் இயக்குநரான தர், பாலசந்தர், வி.சி.குகநாதன் போன்றோரும், இயக்குநராகாமல் ரைட்டராகவே தொடர்ந்து பணியாற்றிய ஜாவர் சீதாராமன், பாலமுருகன், தூயவன், ஏ.எல்.நாராயணன் என்று இன்னும் பலரும் உண்டு.

 

சிறுகதை, நாவல் எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளரை ஸ்கிரிப்ட் ரைட்டராக்கிவிட்டால் இந்தப் பிரச்சினை தீரும் என்பது தவறான கருத்து. வணிக சினிமாவின் தேவைக்கேற்பத் தங்களை நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டர்களாகச் செதுக்கிக்கொண்ட விதிவிலக்குகள் பாலகுமாரனும் சுஜாதாவும் மட்டுமே.

 

அதே சமயம் மேலே சொன்ன வெற்றிகரமான ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் யாரும் சிறுகதையோ நாவலோ எழுதி வெற்றி பெற்றவர்களே அல்ல. ஆனால் திரைக்கதை என்ற அமைப்புக்குள் படத்தின் இயக்குநர் தேவைக்கேற்ப எழுதும் திறமையுடையவர்கள் அவர்கள். இன்று தமிழ் சினிமாவுக்கு அப்படிப்பட்ட ஸ்கிரிப்ட் ரைட்டர்கள்தான் மிக அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற சினிமா பாடல், இன்று அதே துறைக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. தன் வழிமுறைகளை தன் அணுகுமுறைகளை தானே திருத்திக்கொள்ள வேண்டிய பெரும் கட்டாயத்தில் தமிழ் சினிமாஇருக்கிறது. அதில் ஒன்றுதான் ஸ்க்ரிப்ட் திருட்டை ஒழிப்பதற்கான வழிமுறை.

gnani_2180950a.jpg

தொடர்புக்கு:

gnanisankaran@gmail.com

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/article6550234.ece?widget-art=four-rel

 

 

கவிஞர் மகுடேசுவரன்
அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் என். ஆர். தாசன் என்ற எழுத்தாளரின் கதை. எழுபது எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் அவர். அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநரைத் தொடர்புகொண்டபோது முறையான பதில் கூறப்படவில்லை. இத்தனைக்கும் என்.ஆர். தாசன் அரசுத்துறையில் உயரதிகாரி. பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நெடுநாள் நடந்தது.
 
இடையில் இதுதொடர்பாக இருதரப்புக்குமிடையில் பேச்சு வார்த்தை நடத்த முயன்றவர் மறைந்த நாடக இயக்குநர் கோமல் சுவாமிநாதன். என். ஆர். தாசனுக்குச் சார்பாகவே தீர்ப்பு வந்தது. ஏற்கனவே வெளியான புத்தகத்தில் வந்த கதையைப் படமாக்கினால் தப்பிக்கவா முடியும் ? வழக்கு முடிவில் எதிர்த்தரப்புக்கு அபராதம் ஆயிரம். படத்தில் அவர் பெயரைச் சேர்க்க வேண்டும். பணத்தையோ பெயரையோ அவர் எதிர்பார்க்கவில்லை, நீதிக்காக அந்த வழக்கை நடத்தினார்.
 
முதல் மரியாதை’ திரைப்படக்கதையின் மையம் (ஒன்லைன்) என் நண்பரும் எழுத்தாளருமான சுப்ரபாரதிமணியனுடையது. ‘கவுண்டர் கிளப்’ என்ற தலைப்பில் சுப்ரபாரதிமணியன் எழுதிய சிறுகதையின் விரிவாக்கமே அத்திரைப்படம். அந்தக் கதையில் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலின் அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. அது தொடர்பாக கி.ராஜாநாராயணனிடம் பேசவந்த பாரதிராஜாவின் உதவியாளர் சிறுதொகையைக் கொடுத்து ‘ஒப்புக்கொண்டீர்கள் எனில் படத்தில் உங்கள் பெயர் வரும். இல்லையென்றால் உங்கள் பெயரில்லாமல் படம் வரும்’ என்றாராம். வேறு வழியில்லாமல் கி. ராஜநாராயணன் ஒப்புக்கொண்டார் என்பார்கள். படத்தில் அவர் பெயர் வந்ததைக் கீழே இணைத்திருக்கிறேன்.
 
ஆனால், சுப்ரபாரதிமணியனை யாரும் அணுகவில்லை. அப்போது அவர் வளரும் எழுத்தாளர், புதியவர், இளைஞர். படம் வெளிவந்ததும் சுப்ரபாரதிமணியன் வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பினார். அந்த வக்கீல் நோட்டீஸ் முதல் மூன்று முறை பெற்றுக்கொள்ளாமல் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. நான்காவது முறை பெற்றுக்கொள்ளப்பட்டதாம். பெற்றுக்கொண்டதன் பின் சுப்ரபாரதிமணியனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்ததாம். ‘யார் நீ ? இந்தக் கதையை எழுதியதாகச் சொல்லும் சுப்ரபாரதிமணியனுக்கும் இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருக்கும் R.P. சுப்ரமணியனுக்கும் என்ன சம்பந்தம் ? இருவரும் ஒருவரே என்று உம்மால் நிரூபிக்க முடியுமா ? அப்படியென்றால் ஏன் வேறு பெயரில் கதை எழுதவேண்டும் ? அதன் உள்நோக்கம் என்ன ?’ என்பது அந்த வக்கீல் நோட்டீசின் சாரம்சம்.
 
சுப்ரபாரதிமணியனின் இயற்பெயர் R.P. சுப்ரமணியன். தம்பெயர்க்கு நடுவில் ‘பாரதி’யைச் சேர்த்துக்கொண்டதைத்தான் ‘பாரதி-ராஜா’ கேள்வியெழுப்புகிறார். ஓர் எழுத்தாளனுக்கு அந்த இடத்தில் எப்படி இருந்திருக்கும் ? அப்போது அவர் செகந்தராபாத்தில் பணி நிமித்தமாக வசித்திருக்கிறார்.
 
இது தொடர்பாக சுப்ரபாரதிமணியன் என்.ஆர்.தாசனை முன்னனுபவஸ்தர் என்ற வகையில் தொடர்புகொண்டு கேட்டபோது அதிலுள்ள ‘இடையூறுகளை’ விவரித்தாராம். ‘நான் மெட்ராஸ்ல இருந்தேன். கேஸ் நடத்தினேன். வழக்கறிஞரும் வேண்டிய நண்பர். எப்படியோ கஷ்டப்பட்டு நடத்திட்டேன். ஆனா, நீங்க எங்கேயோ இருக்கீங்க. மாசத்திற்கு இரண்டு தடவை வரணும். வருஷக்கணக்கில இழுக்கும். தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தாலும் அது ஆயிரம் இரண்டாயிரம் அபராதமா இருக்கலாம். நல்லா யோசிச்சிக்குங்க...’ என்று அறிவுறுத்தியிருக்கிறார். நன்கு யோசித்துப் பார்த்து வழக்குத் தொடரும் முடிவை சுப்ரபாரதிமணியன் கைவிட்டுவிட்டார்.
 
அண்மையில்கூட அவர் எழுதிக்கொடுத்த ‘காஞ்சிவரம்’ என்ற திரைக்கதை அவர்க்கே தெரியாமல் பல கைகளுக்கு மாறி, இறுதியில் ப்ரியதர்சன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வெளியாகி தேசிய விருதுகள் பெற்றது. அதற்கெதிராகவும், அவர் கதையைப் பெற்றுச் சென்றவர்களிடம் (கனிமொழி, தங்கர்பச்சான்) முறையிட்டுப் பார்த்தார். விளைவு ஒன்றுமில்லை. இவையெல்லாம் அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்டவை, நானாக வருவது வரட்டுமென்று பொறுக்கமுடியாமல் சொல்கிறேன். அறிவுலகமே, மனசாட்சியுள்ளோரே... இதற்கு என்ன சொல்கிறீர்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.