Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள்

Featured Replies

1(253).jpg
-ரஸீன் ரஸ்மின்

'பல்கலைக்கழகத்தில் படிச்சுக்கொண்டிருந்த எனது மகனை 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிடிச்சுக்கொண்டு போனார்கள். இன்று வரைக்கும் எதுவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. என்னுடைய மகன் இருக்கிறானா அல்லது இல்லையா இரண்டில் ஒரு முடிவைச் சொல்லுங்கள்' என முல்லைத்தீவு முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வுகள், ஞாயிற்றுக்கிழமை (02), முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றன.
இதன்போது, ஆணைக்குழு முன் முறைப்பாடுகளை பதிவு செய்யும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னுடைய மகள் பாமதேவனை கடந்த 2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிடித்துக்கொண்டு போகும் போது, மகனுக்கு வயது 27ஆகும். மகனை எங்கு கொண்டு போனார்கள் என்ற விபரம் தெரியாது. சில நாட்களுக்குப் பின்னர் கிளிநொச்சி வைத்தியாசலையில் மகன் இருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கு சென்று பார்த்த போது உண்மையில் காயப்பட்ட நிலையில் மகன் இருப்பதை கண்டேன். பின்னர் அவனுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் கிளிநொச்சி வைத்தியாசலையில் சென்று பார்த்த போது மகனை காணவில்லை.

அதுபற்றி வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களிடம் கேட்டதற்கு, மூங்கிலாறு இயக்கத்தின் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என்றனர். அங்கு போய் பார்த்தபோதும் அங்கு மகன் இருக்கவில்லை.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் மகன் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அரச சார்பற்ற அமைப்புக்கள், அரசு உள்ளிட்டவர்களிடம் மகனை தேடிக் கொடுக்குமாறு மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. எமக்கு எதுவும் வேண்டாம். எமது பிள்ளையை மட்டும் கொடுங்கள் என கண்ணீரூடன் கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/131840-2014-11-03-07-51-45.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
முல்லையில் 2ஆம் நாள் சாட்சியப்பதிவு; சாட்சியமளித்தவர்கள் இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு - 
 
 

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட இரண்டாம் நாள் அமர்வு  ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்றைய சாட்சியப் பதிவுக்காக ஆணைக்குழுவில் இருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பகுதிகளில் இருந்து 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

IMG_9314%281%29.jpg

 

IMG_9320.jpg



இதுவரை சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் இராணுவத்திற்கு எதிராகவே அமைந்துள்ளன.அத்துடன் கடற்படை மற்றும் வெள்ளை வானில் கடத்தி சென்றவர்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் மன் வைக்கப்பட்டன.

IMG_9352.jpg

 

IMG_9318.jpg



அத்துடன் இராணுவத்தில் வட்டுவாய்க்காலில் சரணடைந்தவர்கள் , நேரடியாக இராணுவத்திடம் கையளித்தவர்கள், பாதிரியார் பிரான்சிஸ்சுடன் சரணடைந்தவர்கள், மணலாற்றுக்கு சண்டைக்கு சென்ற மகன் காணாமல் போனார், தொழிலுக்கு போகும் போது காணாமல் போனார்கள், இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்ததை உறவினர்கள் கண்டனர் என்றும் வவுனியாவிற்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை என்றும் ஓமந்தையில் வைத்து பிள்ளைகளை பிரித்து எடுத்துச் சென்றனர் போன்ற சாட்சியங்களை உறவினர்கள் ஆணைக்குழு முன் வைத்தனர்.

மேலும் தங்களுக்கு அரச உதவிகள் எவையும் வேண்டாம் என்றும் தங்களுடைய உறவுகளை தேடித் தருமாறும் கண்ணீர் விட்டு கதறியழுதனர். 

 

IMG_9322.jpg

 

IMG_9328.jpg

 

IMG_9325.jpg

 

IMG_9327.jpg

 

IMG_9333.jpg

 

IMG_9330.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=117133604303384055#sthash.n0PgoGKW.dpuf

 

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்

முல்லையில் காணாமல் போனவர்களைத் தேடி கண்ணீரோடு சாட்சியங்கள் 2ஆம் நாள் அமர்வில் 38 பேர் சாட்சியம்

 

புதிதாக 67 பேர் புதிய முறைப்பாடு:-

Mullaittivu_CI.jpg

 முல்லையில் காணாமல் போனவர்களைத் தேடி கண்ணீரோடு சாட்சியங்கள்  2ஆம் நாள் அமர்வில் 38 பேர் சாட்சியம்; புதிதாக 67 பேர் புதிய முறைப்பாடு

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்திலும் யுத்த முடிவின் பின்னர் சரணடைந்தும் காணாமல் போனவர்களைக் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சியப்பதிவுகள் நேற்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

அதற்கமைய இரண்டாம் நாள் அமர்வான இன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 57 பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டனர். காலை 9மணிக்கு ஆரம்பமாகிய அமர்வு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

அதுவரையில் 38 பேர் மாத்திரமே தங்களது உறவுகள் குறித்த சாட்சியங்களை முன் வைத்திருந்தனர் .மீதமானவர்கள் சமுகமளிக்கவில்லை. அத்துடன் தங்களுடைய உறவுகளையும் தேடி தருமாறு மேலும் 67 பேர் இன்று புதிய விண்ணப்பங்களை ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளனர் .

இன்றைய சாட்சியங்களிலும் விடுதலைப்புலிகளால் தங்களுடைய அமைப்பில் சேர்க்கப்பட்ட உறவுகள் இறுதிக்கட்ட போரில் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்றும் அதற்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் சாட்சியமளித்தனர்.

மேலும் பலர் இராணுவ கட்டுப்பாட்டில் கண்டதாக உறவினர்கள் கூறினர் ஆனால் எமது உறவுகள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாது என்றும் கதறினர். தொழிலுக்கு கடலுக்கு போன போது கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் இன்னமும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாது எனவும் ஆணைக்குழு முன்னால் சாட்சியம் வழங்கினர். 

இன்றைய சாட்சியப்பதிவிலும் இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களே அதிகமாக முன்வைக்கப்பட்டன. இதேபோல நேற்றைய அமர்விலும் இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களே அதிகமாக காணப்பட்டிருந்தது. 

நேற்றைய அமர்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 57 பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்ட நிலையில் 44 பேர் வரையில் சாட்சியமளித்திருந்தனர். 

இதேவேளை மூன்றாம் நாளான நாளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 67 பேர் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 4ஆம் நாள் அமர்வும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
எங்கள் கண்முன் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே ; உறவுகள் கேள்வி  

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தவர்களை சரணடையுமாறு வட்டுவாகலில் வைத்து இராணுவம் அறிவித்துக் கொண்டிருக்கும் போது  எனது மகனை பாதிரியார் பிரான்சிஸ் அவர்களுடன் சரணடைய வைத்தோம். அதில் சரணடைந்த எனது மகன்  உட்பட பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என ஆணைக்குழு முன்னால் மகனைக் காணாது தவிக்கும் தாயொருவர் இன்று சாட்சியமளித்தார். 

அவர் மேலும் சாட்சியத்தில் தெரிவித்ததாவது, 

எனது மகன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நீண்டகாலமாக இருந்தவர். அவருக்கு ஷெல் பட்டு காயம் ஏற்பட்டதால் கிளச்சஸ் உதவியுடன் தான் நடப்பார். 

போர் ஓய்ந்த பின்னர் 2009.05.17 ஆம் திகதி நாங்கள் எல்லோருமாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் சரணடையுமாறும் அவ்வாறு சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டிருந்தது.

அதன்போது எனது மகனும் பாதிரியார் பிரான்சிஸ்சின் உதவியுடன் சரணடைந்தார். நாங்கள் வட்டுவாகலில் நின்று பார்க்கும் போது எனது மகன்  அங்கிருந்த பஸ் ஒன்றில் இராணுவம் கூட்டிச் சென்று ஏற்றியது. அதனை நான் என்  கண்ணால் கண்டேன்.

பின்னர் நாங்கள் முகாமிற்கு வந்துவிட்டோம்.மகன் இன்று வரை எம்முடன் வந்து இணையவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த முன்னாள் போராளியின் மனைவி  சாட்சியமளிக்கையில், 

நான் நோய் வாய்ப்பட்டு இருந்தமையால் ஏற்கனவே  இராணுவ கட்டுப்பாட்டிற்குள்  வந்து 2009.05..16 ஆம் திகதி வலையம் 4 நலன்புரி முகாமிற்கு போய் விட்டேன். எனது கணவர் சரணடையும் போது மாமி ஆட்கள் தான் பக்கத்தில் நின்றுள்ளார்கள். 

எனக்கு நம்பிக்கை இருக்கின்றது எனது கணவர் யுத்தத்தில் காயப்படவோ அல்லது இறந்து போகவோ இல்லை அத்துடன் இராணுவத்திடம் உயிருடன் சரணடைந்தமையால் கணவர் உயிருடன் தான் இருக்கிறார்.

நாங்கள் முகாமில் இருக்கும் போது எங்களுக்கு தெரிந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர்  முகாமில் வைத்து உங்களது கணவர் குணசேகரம் சிறிகாந்தன்  உயிருடன் இருப்பதாகவும் தான் எதுவித பிரச்சினையும் இன்றி வந்து சேர்ந்துவிட்டேன் என்று எங்களிடம் கூற சொன்னதாக  எங்களிடம் கூறினார். எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று தெரிவித்தார். 

இதேவேளை , மேலும் இருவர் வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்ததாக ஆணைக்குழு முன்னால்  சாட்சியமளித்திருந்தனர்.  முதலில் தந்தை ஒருவர் சாட்சியமளிக்கையில் 2009. 05. 17 ஆம் திகதி நாங்கள் குடும்பமாக வட்டுவாகல் பாலம் கடந்து இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தோம். 

அப்போது எனது மகன் ஜெயபாஸ்கர்  இராணுவத்திடம் சரணடைந்தார். என் மகனை எனது கையால் தான் இராணுவத்திடம் கொடுத்தேன். கூட்டி வந்து முகாமில் தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் இன்று வரை எனது மகன் எங்கே என்று தெரியாது என மிகுந்த சோகத்துடன் சாட்சியமளித்தார்.

அதேபோல் எனது கணவர் கிருஷ்ணகுமார் வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தார். நாங்களும் நின்றோம். நம்பிக்கையுடன் சரணடைந்தார். ஆனால் இன்று எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியாது என கணவனைக் காணாது தவிக்கும் மனைவியொருவர் சாட்சியம் அளித்தார். 
 
கணவரை விலங்கிட்டு வெள்ளைவானில் ஏற்றிச் சென்றனர்; எங்கே எங்கள் உறவுகள் ?

ஆயுதங்களுடன் சிவில் உடையில் வீட்டுக்கு  வந்த ஆறு பேர் எனது கணவருக்கு விலங்கிட்டு இழுத்துச் சென்று வெள்ளை வானில் ஏற்றிச் சென்றனர். நான் கேட்காத இடம் இல்லை போகாத இராணுவ மற்றும் பொலிஸ் நிலையங்கள் இல்லை என கணவரை காணாது தவிக்கும் இளம் பெண்ணொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்தார். 

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் பெண்ணொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். 

அவர் மேலும் சாட்சியமளிக்கையில், 

நாங்கள் வவுனியாவில் இருக்கும் போது 2009.05.12 ஆம் திகதி பகல் 2 மணிக்கு வீட்டுக்கு சிவில் உடையில்  ஆயுதங்களுடன் வந்தவர்கள் சிங்களத்திலேயே பேசினார்கள். எனக்கு சிங்களம் தெரியாது அதனால் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

விலங்கிட்டு இழுத்துக் கொண்டு சென்று வீட்டிற்கு வெளியில் நின்ற வெள்ளை வானில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர். நான் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவத்தைக் கூறினேன். அங்கும் அவர்கள் தங்களுக்குள் சிங்களத்தில் ஏதோ கூறினர். 

பின்னர் தாங்கள் பிடிக்க வில்லை என்று கூறி என்னை அனுப்பி விட்டனர். இதேவேளை எனது கணவருக்கு முன்னர் சுற்றிவளைப்பில் பிடிபட்டவர் என்பது தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்கு ஒன்று இராணுவத்தினால் போடப்பட்டு இருந்தது.

எனினும் கணவர் 12 ஆம் திகதி பிடித்துச் செல்லப்பட்டார். அவரது வழக்கு 19 ஆம் திகதி நீதிமன்றில் இருந்தது. அதற்கு நாங்கள் சென்றோம் . எனது கணவரை பிணையில் எடுத்தது எனது சிறிய தந்தையார். அப்போது நீதிமன்றில் பிணையாளிக்கு விடுதலை என்றும் வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது என்றும் நீதவானால் மன்றில் உத்தரவிடப்பட்டது.

எனினும் கணவர் கடத்தப்பட்டதன் பின்னர் எவ்வாறு வழக்கு முடிவுக்கு வரும்? எனது கணவரான நவரட்ணராசா விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களுக்கு மேசன் வேலை, மர வேலைகள் சம்பளத்திற்கு செய்து கொடுக்கின்றது மட்டும்  தான். எல்லா இடமும் தேடிவிட்டேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்றும் அவர் மேலும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து வவுனியாவிற்குச் சென்றவரை இராணுவம் கைது செய்து சென்றது இதுவரை தகவல் இல்லை என  மேலும்  ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். 

நாங்கள் முல்லைத்தீவில் தான் இருந்த நாங்கள். வீடு கட்டுவதற்கு என பொருட்கள் வாங்குவதற்கு  2008.08.31 ஆம் திகதி வவுனியாவிற்கு போனவர். அங்கு மாமி வீட்டில் தங்கியிருக்கின்றார். பின்னர் இராணுவம் பிடித்துச் சென்றுவிட்டதாக மாமி தகவல் அறிவித்திருந்தார்.ஆனால் இன்று வரை எங்கே என்று தெரியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் இன்றைய அமர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இரண்டு படகில் வலைஞர் மடத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு கடற்றொழிலுக்கு சென்ற வேளை கடற்படை பிடித்துச் சென்று விட்டது. என சகோதரிகள் மூவர் தங்களுடைய கணவர் மாரைக் காணவில்லை என்று ஆணைக்குழு முன் சாட்சியமளித்தனர். 

தற்போது மிகவும் கஸ்ரப்படுகின்றோம் என்றும் கடற்கரைக்கு சென்று கருவாடு போட்டும் சமைத்துக் கொடுத்தும் தான் வாழ்ந்து வருகின்றோம் என்றும் கண்ணீர் மல்க சாட்சியமளித்தனர். 

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த எனது மகன் கமல்ராஜ் மணலாறு சண்டைக்கு போன வேளை காணாமல் போய்விட்டார் . பின்னர்2008.03.01 அன்று இதய வீணை நிகழ்ச்சியில் தான் உயிருடன் இருப்பதாகவும் இராணுவத்திடம் சரணடைந்து விட்டதாகவும் எனது மகன் பேட்டியளித்து இருந்தார்.

அதற்குப் பின்னர் திருகோணமலை வைத்தியசாலையில் இருப்பதாக அறிந்தேன். சென்று பார்க்க விடுதலைப்புலிகள் அனுமதி வழங்கவில்லை. 2009 முகாமிற்கு போன பிறகு தேடினேன் இன்றும் இல்லை என்றும் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113214/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது : மனைவி ஆணைக்குழுமுன் மன்றாட்டம்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148436-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86/

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.