Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாத்தா குறும்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப் போரின் இறுதி நாளை மையப்படுத்திய கதையுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு. சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு. ஒரு முழுப்படம் செய்யக் கூடிய (என்னால்) சொந்தப் பணம் முழுதையும் அள்ளி இறைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் இப்படி ஒரு கனவுப் படைப்போடு காத்திருக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
குறிப்பு - போரின் வலி ஒரு தனி மனிதனை எந்தளவுக்கு பாதிக்கும் என்ற கருப் பொருளைக் கொண்ட எந்த அரசியலாளர்களையும் சார்ந்தோ/எதிர்த்தோ உருவாக்கப்படாத படைப்பாகும். போர் என்பது இந்த உலகத்தில் இருந்தே விரட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
(இந்த வருட இறுதிக்குள்ளாவது வெளியிட நினைக்கும் இப்படைப்பு தொடர்பான விபரங்களை அறிய இப்பக்கத்துடன் இணைந்திருங்கள்)
https://www.facebook.com/thaththashortfilm

 

10847703_709637839155414_309257838102036

 

 

வணக்கம் உறவுகளே உங்களால் முடிந்தால் இந்த வளர்ந்து வரும் கலைஞனுக்கு உதவுங்கள்!

Edited by புலிக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

என் தடங்கிப் போன திரைப்பயணம் ஒன்றுக்காக பிச்சை கேட்கிறேன்....

 
10428599_687493738037646_372608716004583

என் தடங்கிப் போன திரைப்பயணம் ஒன்றுக்காக பிச்சை கேட்கிறேன்....

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இம் மடலானது உங்களிடம் நேரடியக முதன் முதல் மனம் விட்டுக் பிச்சை கேட்கும் ஒரு விடயம் தொடர்பானதாகும்.
இதுவரை 10 குறும்படங்களை இயக்கியதுடன் 23 குறும்படங்களில் பணியாற்றியுமிருக்கிறேன். நான் இயக்கிய 6 குறும்படங்கள் இ்த தொடுப்பில் உள்ளது. இதுவரை நான் எடுத்த 10 குறும்படத்தில் 2 குறும்படங்களுக்குத் தான் தயாரிப்பாளர்கள் இரந்திருக்கிறார்கள் ஏனையவை என் சொந்தப்பணமும் என் குழவின் உழைப்பும் ஒருங்கிணைந்ததே.
தொடுப்பு - http://www.mathisutha.com/p/blog-page.html

கடந்த 2010 ம் ஆண்டு போரின் அத்தனை வலிகளையும் தாங்கியிருந்த காலப்பகுதியில் ஒரு போர் முனைக்கதையை உருவாக்கியிருந்தேன். அக்கதைக்காக இறுதிப் போர் நடந்த இடத்திற்கொப்பான களம் ஒன்றைத் தேடி கிட்டத்தட்ட ஏழு எட்டு இடம் அலைந்து ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து 2012 ம் ஆண்டு அக்கதையை படமாக்கி முடித்திருந்தேன். இப்பக்கத்தில் சென்று களங்களின் படமும் படம் தொடர்பான தரவேற்றங்களும் உள்ளன.
தொடுப்பு - https://www.facebook.com/thaththashortfilm

வெவ்வேறு நாட்களாக 5 நாட்கள் படப்பிடிப்புடன் காட்சிகள் நிறைவுக்கு வந்தது. இப்படைப்புக்காக இதுவரை ஒட்டு மொத்தமாக 30 பேர் அர்ப்பணிப்பாக உழைத்திருக்கிறார்கள்.

இப்படைப்புக்காக என் சொந்த கைக்காசில் இருந்து 72,350 ரூபாய்கள் இட்டிருக்கிறேன். (தேவைப்படுபவருக்கு கணக்குத் தரத் தயாராக இருக்கிறேன்.)

எந்தவொரு தரப்புக்கு சாப்பாகவோ அல்லது எதிராகவோ எதுவுமில்லாமல் 3 மனிதர்களுக்கிடையிலான உணர்வுப் போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கலப்பற்ற ஒரு படைப்பாகும். இதற்கான முழு ஒளிப்பதிவையும் லோககாந்தன் முடித்துக் கொடுத்திருந்தாலும் இப்படைப்பை முடிவுக்கு கொண்டு வர படத்தொகுப்பு (சன்சிகன் ) , கணணி வரைகலை (மதுரன்) , இசை (சுதர்சன்) மற்றும் வெளியீட்டு செலவு என post production வேலைகளுக்கான பணம் தேவைப்படுகிறது. சில வேலைகளை இலவசமாகச் செய்ய அவர்கள் தயாராக இருந்தாலும் அதற்கான கணனி மேம்படுத்தலுக்கு hard ware பொருட்கள் வாங்கி கொடுக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு மேல் இப்படைப்புக்குள் என்னால் பணம் இட முடியவில்லை. அதனால் தங்களிடம் மனம் விட்டு பிச்சையாகவே கேட்கிறேன். தயவு செய்து நீங்கள் உங்கள் வாழ்க்கைச் செலவுப் பணத்தில் இருந்து எனக்குத் தர வேண்டாம். உங்கள் ஒரு நேரச் சாப்பாட்டை எனக்காக தாருங்கள். ஒரு ரூபாய் (1/-) தந்தாலும் ஏற்றுக் கொள்வேன். ஒரு ரூபாய் இட்டாலும் நீங்கள் இக்குறும்படத்தின் தயாரிப்பாளர் தான் என்பதை படத்தின் தலைப்புக்கள் மூலம் உறுதிப்படுத்துவேன்.

இப்படைப்பின் நோக்கம் ஒரு போர் ஒரு தனிமனிதனை எந்தளவுக்கு பாதிக்கும். இந்த போா் என்ற சோல்லே உலகத்துக்கு தேவையா இல்லையா என உணர வைக்கும்.

என்னுடைய தொடர்புக்கு - 
mathisutha56@gmail.com
www.facebook.com/actormathisutha
0094773481379

கணக்கிலக்கம் - 
Thillaiampalam suthakaran
8108048249
commercial bank
nelliady.

dialog eZ cash மூலமும் மேற்குறிப்பிட்ட இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். பணம் அனுப்புபவர்கள் தனிப்பட்ட ரீதியில் தெரியப்படுத்த தவற வேண்டாம்.

100/- என்றால் கூட தயங்க வேண்டாம் அப்படி 50 பேர் தந்தாலும் என்னால் இசை மற்றும் ஒலியமைப்பை செய்யக் கூடியதாக இருக்கும். நிங்களும் தயாரிப்பாளர்கள் தான்.

இக்குறும்படம் தொடர்பான தரவேற்றங்களை பெற இப்பக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.
தொடுப்பு - https://www.facebook.com/thaththashortfilm

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவவும்.

http://www.mathisutha.com/2014/12/thaththa-short-film.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.