Jump to content

ஹிக்ஸ் போஸான்: சிறு விளக்கம்


Recommended Posts

higgs_2236908f.jpg

 

பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கமொன்றில் நடிகர்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர விழாவொன்று நடக்கவிருக்கிறது. திறந்தவெளி மைதானத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களும் ரசிகர்களும் கூடியிருக்கிறார்கள்.

 

ஒவ்வொரு நடிகராக விழாவுக்கு வர ஆரம்பிக்கிறார் கள். நட்சத்திர நடிகர்களும் வருகிறார்கள். பிரபலமற்ற உபநடிகர்கள் வரும்போது, ரசிகர்கள் அவர்களைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால், மிகச் சுலபமாகவும் வேகமாகவும் மேடை நோக்கி நடந்து, மேடையில் அமர்ந்துகொள்கிறார்கள்.

 

இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் உள்ளே வருகிறார்கள். நிலைமை மோசமாகிவிடுகிறது. அந்த உச்ச நட்சத்திரத்தைக் கூட்டம் சூழ்ந்து, அவரை ஆமைபோல நகரச் செய்கிறது. வழக்கமாக ஸ்டைலாக, வேகமாக நடக்கக் கூடியவர் இப்போது, ஆயிரம் மடங்கு எடை கூடியதுபோல மெல்ல மெல்ல மேடையை நோக்கி நகர்கிறார்.

அறிவியலின் ஒரு முக்கிய நிகழ்வொன்றைப் புரிய வைக்கவே இந்த உதாரணம். நடிகர்களை வைத்துச் சொன்னால் அறிவியல்கூட நமக்கு உடனே புரிந்துவிடுமல்லவா? இனி விஷயத்துக்கு வருவோம்.

 

கடவுள் துகள்

‘கடவுள் துகள்’ என்று பலராலும் அறியப்பட்ட ‘ஹிக்ஸ் போஸான்’ பற்றி விளக்குவதற்காகத்தான் மேற்கண்ட உதாரணம். லியோன் லேடர்மான் என்பவர்தான் ஹிக்ஸ் போஸானுக்கு ‘கடவுள் துகள்’ என்று பெயர்வைத்தார். இவர் எழுதிய ‘கடவுள் துகள்' (தி காட் பார்ட்டிக்கிள்) என்னும் புத்தகத்திலிருந்தே இந்தப் பெயர் பிரபலமானது. லியோன் லேடர்மான், நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர்.

 

ஹிக்ஸ் போஸான் என்பது, விண்வெளியில் இருக்கும் அடிப்படைத் துகள்களில் ஒன்று. விண்வெளியெங்கும் ஹிக்ஸ் போஸான்கள் அடர்த்தியாகப் பரவியிருக்கின்றன. அப்படி அவை பரவியிருப்பதை ‘ஹிக்ஸ் வெளி’ (ஹிக்ஸ் ஃபீல்டு) என்கிறார்கள். மிகமிகச் சிறியதான அடிப்படைத் துகள்கள், இந்த ஹிக்ஸ் வெளியினூடாக நகர்ந்து செல்லும்போது, அந்தத் துகள்களின் தன்மையைப் பொறுத்து, அவற்றுடன் ஹிக்ஸ் போஸான்கள் சேர்ந்துகொள்கின்றன.

அப்படி அவை சேர்வதால், அந்தப் பொருளுக்கு எடை கிடைக்கிறது. சில துகள்களை ஹிக்ஸ் போஸான்கள் கண்டுகொள்வதில்லையாதலால், அவை எடையற்று இலகுவாகப் பயணம் செல்கின்றன. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நான் மேலே சொன்ன உதாரணம் உங்களுக்கு உதவிசெய்யலாம்.

 

அடிப்படைத் துகள்கள்

திறந்தவெளி அரங்குதான் பேரண்டவெளி. அதில் நிரம்பியிருக்கும் ரசிகர்கள் கூட்டம்தான், ஹிக்ஸ் வெளி. ஒவ்வொரு ரசிகரும் தனித்தனியே ஒரு ஹிக்ஸ் போஸான். அங்கே நுழையும் நடிகர்கள்தான் ‘அடிப்படைத் துகள்கள்'. புகழில்லாத சாதாரண உபநடிகர்கள்தான், எடையில்லாத அடிப்படைத் துகள்கள். அதன் பின்னர் வரும் நடிகர்களின் பிரபலத்துக்கேற்ப அதாவது, அடிப்படைத் துகள்களின் தன்மைக்கேற்ப அவற்றுக்கு எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த வகையில்தான் ஹிக்ஸ் வெளியில் இருக்கும் ஹிக்ஸ் போஸான்கள் அடிப்படைத் துகள்களுக்கு எடையை அளிக்கின்றன.

 

அழிவா, ஆக்கமா?

இப்போது ஹிக்ஸ் போஸான் என்றால் என்னவென்றும், அதன் செயல்பாடு என்னவென்பதையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டீவன் ஹாக்கிங் சொன்ன கருத்தொன்றை மையப்படுத்தி ஹிக்ஸ் போஸான்கள் பற்றி இப்போது மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் சொன்ன கருத்தின் அடிப்படை என்னவென்றால், “சுவிஸ் நாட்டின் செர்ன் நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘மிகப் பெரிய துகள் தாக்குவிப்பான்’ (லார்ஜ் ஹாட்ரான் பார்ட்டிக்கிள் கொலைடர்) என்னும் நிலத்தடிப் பரிசோதனை வட்டப்பாதையில், ஹிக்ஸ் போசான் என்னும் அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கச் செய்யப்படும் பரிசோதனைகளின் மூலம், பேரண்டமே கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அழிந்துவிடும் பேராபத்து நேர்ந்துவிடலாம்” என்பதுதான்.

 

அழிவு என்றதும் நமக்கு எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிவிடுவது சாதாரணமானதுதான். 2012-ம் ஆண்டில்கூட உலகமே அழிந்துவிடும் என்னும் பயமும் பதற்றமும் உலகமெங்கும் பரவியிருந்தன. ஆனால், இங்கு சொல்லப்பட்டது பேரண்டத்தின் அழிவென்பதால் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும். அறிவியலில் நாட்டமுள்ள வெகுசிலர் ஆங்காங்கே பதற்றப்படுகிறார்கள்.

 

எஞ்சியவர்களுக்குப் பதற்றப்படுவதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஹிக்ஸ் போஸான் தொடர்பான ஆராய்ச்சி ஹாக்கிங் சொன்னதுபோல ஆபத்தானதா, இல்லையா என்ற முடிவு இன்னும் சரியாகத் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும், செர்ன் நிலத்தடி வட்டப்பாதை பரிசோதனையை எதிர்ப்பவர்களுக்கு இது அவலாகிப்போனது. இந்த வட்டப்பாதை பரிசோதனையே தவறானது என்ற கருத்தும் நிலவுகிறது.

 

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே இது போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. பெருவெடிப்பின் (பிக் பேங்) ‘மாதிரி' வெடிப்பை இந்தப் பரிசோதனைகளில் செய்துபார்க்கப்போகிறார்களென்றும், அப்படியொரு பரிசோதனை நடைபெற்றால் ஒட்டுமொத்த பூமியோ பேரண்டமோ வெடித்துச் சிதறும் என்றும், இல்லையென்றால் பரிசோதனையில் உருவாகும் கருந்துளை (பிளாக் ஹோல்) அனைத்தையும் உள்வாங்கி அழித்துவிடும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு, எதிர்ப்புகள் கிளம்பின.

 

செர்ன் மட்டுமல்ல

செர்ன் வட்டப்பாதை கொஞ்சம் பெரியதுதான். கிட்டத் தட்ட 27 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள வட்டப்பாதை அது. சுமார் 175 மீட்டர் ஆழத்தில் அது அமைக்கப் பட்டிருக்கிறது. ‘இப்படி நிலத்தடி வட்டப்பாதை அமைத்து, உப அணுத்துகள்களை மோத விடும் பரி சோதனைச் சாலை செர்னில் மட்டும்தான் இருக்கிறதா?' என்று கேட்டால், அதற்கு ‘இல்லை' என்றே பதில் சொல்ல வேண்டும்.

 

இதுபோலப் பெரிய நிலத்தடி வட்டப் பாதையொன்று அமைக்கப்பட்டு, முறையாகப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இன்னுமொரு பரிசோ தனைச் சாலையொன்று அமெரிக்காவிலும் இருக்கிறது. அதை ‘ஃபெர்மி லாப்' என்பார்கள். இது சிகாகோ மாகாணத்தில் உள்ள இல்லிநாய்ஸில் இருக்கிறது. இந்த ஃபெர்மி லாப் மூலம் பல அடிப்படைத் துகள்களை ஏற்கெனவே கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஃபெர்மி லாபின் நிர்வாகத் தலைவராக இருந்தவர்தான், ஹிக்ஸ் போஸானுக்கு ‘கடவுள் துகள்' என்னும் பெயரைச் சூட்டிய லியோன் லேடர்மான்.

 

பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியம்தான். ஆனாலும், பிரபஞ்சத்தின் முடிவுக்கு அவையே காரணமாக ஆகிவிடுமோ என்று பொதுமக்களைப் போலவே விஞ்ஞானிகளும் அஞ்சும்போது அந்த அச்சத்தை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது!

 

- ராஜ்சிவா, ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழர், 
‘எப்போது அழியும் இந்த உலகம்?’ உள்ளிட்ட அறிவியல் நூல்களின் ஆசிரியர். 
தொடர்புக்கு: rajsivalingam@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6670499.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

இப்போதுதான் பேஸ்புக்கில் பார்த்தேன். நல்ல இயல்பான மொழி.  உயிர்மையில்  வெரோனிக்காவின் முக்காடு என்று ஒரு கட்டுரை எழுதுகிறார். நல்ல கட்டுரை. மதம் மீதான கட்டுரையானாலும் எந்த ஒருவரது மனதினையும் நோகடிக்காமல் நகர்த்தும் பாங்கு அருமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.   வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351   ##################  ##################    ###################     மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!   இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 #################  ##################    ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
    • ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. https://athavannews.com/2024/1400368
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.