Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஜப்பான் நாடு கடத்தியமைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஜப்பான் நாடு கடத்தியமைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
20 டிசம்பர் 2014
Japan_CI.jpg
26 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஜப்பான் நாடு கடத்தியுள்ளது. புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த இந்த இலங்கையர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களினதும் விண்ணப்பங்கள் இரண்டு தடவைகள் பரிசீலனை செய்யப்பட்டு இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் மேலும் ஆறு வியடம்நாம் புகலிடக் கோரிக்கையாளர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமைக்கு மனித உரிமை ஆர்வலர்களும், சட்டத்தரணிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜப்பானிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மனிதாபிமானமற்ற செயற்பாடு என குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மேன்முறையீடு செய்து புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை மீளவும் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்களுக்கு அவ்வாறு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சொந்த நாடுகளில் தண்டிக்கப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114607/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.