Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சியின் முடிவுக்கு விரோதமாக செயற்படமாட்டேன்: இராதாகிருஸ்ணன்

Featured Replies

DSC_0946(1).jpg
-டி.ஷங்கீதன்

'நான் என்றுமே கட்சியின் முடிவுக்கு விரோதமாக செயற்படமாட்டேன். இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவு.  அதுதான் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் கூட்டம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) ஹட்டன் கிருஷ்ண பவான் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டும் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டவன் அல்ல. அதனால்தான அரசாங்கத்தில் இருந்து அமைச்சு பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு பொது வேட்பாளரை ஆதரிக்க தீர்மானித்தேன். இந்த தீர்மானத்தை நான் தன்னிச்சையாக எடுக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எமது கட்சியின் செயற்குழு, ஹட்டனில் கூடி நான்கு மணிநேரம் கலந்துரையாடியது. 

பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரிப்பதே அனைவரினதும் ஏகமனதான தீர்மானமாக அமைந்தது. அதனை நாம் ஏற்றுக் கொண்டு எமது முடிவை அறிவித்தோம்.

ஆனால், இன்று ஒரு சிலர் ஜனாதிபதியை ஆதரிப்பதாக கூறுகின்றார்கள். அது அவர்களின் தனிப்பட்ட முடிவே தவிர இது மலையக மக்கள் முன்னணியின் முடிவு அல்ல. எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு இருப்பதன் மூலம் அது தெளிவாகின்றது.

எனவே ஒரு சிலரின் தனிப்பட்ட விடயங்களுக்காக கட்சியின் தீர்மானத்துக்கு அப்பால் சென்று செயற்;படுவது எந்தவிதத்தில் நியாயமானது என எனக்கு புரியவில்லை.

கட்சி பின்னடைவை சந்தித்திருந்தபோது, நான் இந்த கட்சியில் இணைந்து இந்த கட்சியின் முன்னேற்றத்துக்காக  செயல்பட்டேன். 

கட்சிக்கு உயிராக இருக்க வேண்டியவர்கள் இப்படி நடந்து கொள்வது மிகவும் கவலைக்குறியவிடயமாகும். அவருடன் சேர்ந்திருப்பவர்கள் அவர்களின் ஊழலை மூடி மறைப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் சரியான பதிலை மக்கள் 8ஆம் திகதி கொடுப்பார்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மலையக மக்கள் முனனணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், நிதிச்செயலாளர் அ.அரவிந்தகுமார், பிரதி செயலாளர் நாயகம் எஸ்.விஜேசந்திரன், உபதலைவர்களான எஸ்.ஜெயபாரதி, சரத் அத்துகோரள, எஸ்.விஸ்வநாதன், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சுப்பிரமணியம், நிர்;வாக செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உட்பட கட்சியின் அதரவாளர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்தும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
DSC_0951(1).jpg

DSC_0942(1).jpg

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/136314-2014-12-21-09-14-54.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.